Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளிவந்த காட்சிகள் கிளிநொச்சி நகரும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியாகி காணொளிக் காட்சிகள் http://www.pathivu.com/news/5260/54/.aspx

  2. ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் ஆர்வம் காட்டிய யாழ்ப்பாண முதியோர் 2010-01-27 00:02:48 நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ். குடாநாட்டில் முதியோர்கள் அதிக எண்ணிக்கை யில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி யதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், ஜன.27 நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ். குடாநாட்டில் முதியோர்கள் அதிக எண்ணிக்கை யில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி யதை அவதானிக்க முடிந்தது. வயோதிபர்கள் ஓட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வாக்களித்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றதைக் காணமுடிந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் முதியோர்கள் இவ்வாறு அக்கறை காட்டாத போதும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் அதிக அக்கறை காட்டி வாக்களிப்ப…

    • 2 replies
    • 1.2k views
  3. சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவு. தமிழர் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்கள ஜனாதிபதியை தேர்வு செய்ய என்றும் போரின் பின்னர் ஜனநாயகம் மலரச் செய்யப்படுகிறது என்ற உலக நாடுகளின் ஆர்ப்பரிப்போடும் திணிக்கப்பட்ட தேர்தலில் வெறும் 20% இற்கும் குறைவான மக்களே வாக்களித்துள்ளனர். சிறீலங்காவின் இதர பகுதிகளில் 70 சதவீதமான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணி வாக்கில் நிறைவுக்கு வந்துள்ளது. வவுனியா யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடந்த கைக்குண்டு வீச்சுக்களைத் தவிர தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்ததாக தேர்தல் தொடர்பான செய்திகள் கூறுகின…

    • 10 replies
    • 1.4k views
  4. யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு! யாழ் வலிகாமம் கோப்பாய் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன. போர்ஓய்வுக் காலப்பகுதியில் தெய்வீகத் தன்மையுடன் ஆலயம் போன்று வலிகாமம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது பற்றைகளும், செடிகளும் படர்ந்து பாழடைந்த இடம் போன்று காட்சியளிப்பதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu…

    • 5 replies
    • 1.7k views
  5. யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச் சந்தை [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 05:04 GMT ] கொழும்பு பங்குச் சந்தையின் கிளை ஒன்று அடுத்த மாதம் யாழப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மக்களின் வருமானம் அதிகமானதாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெருந்தொகைப் பணம் கிடைப்பதாகவும் கொழும்பு பங்குச்சந்தை மேலாளர்கள் கூறியுள்ளனர். அதனால், அந்த வருமானங்களை முதலீடு செய்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தமது கிளையொன்றை அங்கு அமைக்கத் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது மாத்தறை, கண்டி, குருணாகல, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் பங்குச் சந்தையின் கிளைகள் இயங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் புதிய கிளையை அமைப்பதற்க…

  6. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இலங்கையில் இயங்கும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. லங்காஈநியூஸ், இன்போலங்கா உள்ளிட்ட சில இணையத்தளங்கள் இணைய வழங்குநர்களால் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை இந்த நடவடிக்கை பெரிதும் பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankamam.com

  7. எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பெனர்சேகா வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த அதே விஹாரைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டே பகுதியில் அமைந்துள்ள நாக விஹாரைக்கே இருவரும் செல்ல முற்பட்டதாகத் தெரியவருகிறது. பௌத்த விஹாரையின் பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் கோதபாய ராஜபக்ஷ வேறும் விஹாரைக்குச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த விஹாரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாதுகாப்;புச் செயலாளர் வழிபாடுகளில் ஈடபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு பௌத்த தேரர்கள் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த குளறுபடிகளினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண…

    • 7 replies
    • 1.6k views
  8. மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான காணொளியொன்றை இந்தியா ருடே இணையம் வெளியிட்டுள்ளது. மேலும் அறிய... http://indiatoday.intoday.in/site/Video/80947/43/New+video+of+Lanka+war+crimes.html

  9. [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள் http://meenakam.com/?p=4159

  10. இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும். தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்…

  11. தமிழர் வாக்குகள் இன்று சிறிலங்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் முடிவை எடுக்கும் பலத்தை கொண்டிருக்கின்றது. இன்று மட்டுமல்ல கடந்த தேர்தலிலும் இவ்வாறாகவே அமைந்தது. சந்திரிக்காவும் கூட தமிழர் வாக்குகளாலேயே தேர்வானார். கடந்த 30 வருடங்களாக ஆயுதபலத்தில் தமிழர் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை இன்று பெரிய அவலத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் எமக்கு ஆயுதபலம் தேவையா? அல்லது அரசியல் பொருளாதார பலம் தேவையா? என்ற கேள்வி எழுகிறது.

  12. தமிழீழத்தை மீட்க! உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! சுதந்திரமாக வாழ ஆசைப்படும் தமிழனால் தமிழீழத்தை மீட்க முடியாதா? தமிழீழத்தை மீட்க! உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது நேற்றைய இதழில் தெரிவித்துள்ளது. சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்க…

  13. ஈழத்தமிழர்களுக்கு 2010 ஒரு சாபக்கெடுவா??? சாபக்கேடா??? அனைவருக்கும் வணக்கமெங்க! தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் என்னை ஏளனமாகப் பார்ப்பது புரிகிறது, இருந்தும் சில விடயங்களை பகிரவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் இருப்பதினாலும், நானும் ஒரு பங்காளி என்ற உரிமையிலும் சில விடயங்களை கிறுக்க விரும்புகின்றேன். முக்கியமாக 2009ம் ஆண்டின் அந்த அவல நிலையைப்பற்றி இயன்றளவு இங்கு முன்னிலைப்படுத்தாது, இன்று இடம்பெறும் அரசியல் பித்தலாட்டங்கள் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தமிழீழத்தின் நிலை என்ன? வடக்கு, கிழக்கு, வன்னி இப்படி ஒவ்வொரு பகுதிகளையும், அங்குள்ள மக்களின் மனநிலைகள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், இப்படி ஒவ்வொரு விடயத்…

  14. இதுவரை காலமும் அமைதியாகவிருந்த யாழ் தேர்தல்களம் இறுதிநாளான இன்று சூடுபிடித்துள்ளது. இன்று இரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகமும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இரவு 9 மணியளவில் 2 வான்களில் வந்த சிலரே இத்தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. கற்களால் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதால் ஓடுகள் மற்றும் கண்ணாடி என்பன உடைந்து சிதறியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை அச்சுவேலி , வடமராட்சி, ஆவரங்கால் பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்களது சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

    • 18 replies
    • 2.6k views
  15. புதினம் தளத்தில் முன்னர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி. எமது தாய்த் தளமான புதினம் தளத்தில் முன்னர் அவர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி. உண்மை எப்போதும் இனிப்பானதாக இருந்துவிடாது; கசப்பானதாக இருப்பதெல்லாம் பொய்யாகவே இருந்துவிட வேண்டும் என்றும் இல்லை. நடைமுறை யதார்த்தம் நாம் விரும்புகிற ஒன்றாக இருந்துவிடாத போதும் அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும். விரும்புகிற தகவல்களை மட்டுமே வடித்து உள்ளே எடுப்பதும், விரு…

  16. இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடு முழுவதிலும் உள்ள 11 ஆயிரத்து 98 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை 7:00 மணிக்கு விறுவிறுப்பாக ஆரம்பமாகியது. இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தத் தேர்தலையும் விட மக்கள் காலையிலேயே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் என களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமைபோன்று இன்று பிற்பகல் 4:00 மணிக்கு வாக்களிப்பு முடிவடையும். 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சையாக ஐவருமாக மொத்தம் 22 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணிசார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடு…

  17. இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது, ஆனால் srilankaguardian எனும் இலங்கையில் இருந்து வரும் ஆங்கில இணையம் முக்கிய செய்தியாக இதனை இப்போது பிரசுரித்துள்ளது சாராம்சம்: மகிந்த தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராகப் போய்விடும் என்று அஞ்சி இந்தியாவின் இராணுவ தலையீட்டைக் கோரி இன்றிரவு விசேட விமானத்தின் மூலம் டெல்லி நோக்கி பயணமாகின்றார். ஆனால் இதனை மகிந்தவின் வட்டாரங்கள் மறுத்து அவர் விசேட பூசை ஒன்றுக்காகவே டெல்லி போகின்றார் என்று குறிப்பிட்டனர் President Mahinda fly to Delhi (January 25, Colombo, Sri Lanka Guardian) According to information reaching through reliable sources confirm, President Mahinda Rajapakse is now flying to Delhi in a special jet. It is u…

  18. விஜித்த ஹேரத் எம்.பி கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இராணுவத்தினர் தடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் ஊடகப் பேச்சாளர் எமக்குத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜனாதிபதி வேட்பாளர் சன்ன ஜானக சுகத்சிறி கமகே மற்றும் தேர்தல் முகவர்கள் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளை பார்வையிடச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.. மேலிடத்தில் வந்த உத்தரவினடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிப்பதாக மக்கள் விடுதல…

    • 0 replies
    • 725 views
  19. [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 20:08 GMT ] புதினப்பலகை-யின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து நாளை செவ்வாய்க்கிழமை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது 'புதினப்பலகை.' ஒரே பாதை; ஒரே உணர்வு... ஜனவரி 26, 2010-ஐ நாம் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. www.puthinappalakai.com

    • 2 replies
    • 1.3k views
  20. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது.பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு முற்போக்கான தேசியவாத நிலைப்பாடோ அல்லது வர்க்கம் கடந்த தூய்மையான தேசியமோ அல்லது இரண்டிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடோ எதுவித பங்கினையும் வகிக்கவில்லை. தமிழர் தரப்பினைப் பொறுத்தவரை, முக்கிய தமிழர் அரசியல் பங்காளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை தக்க வைக்கும் நகர்வுகளையே காணக் கூடியதாக இருக்கிறது. ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட்டமைப்பு இயங்க முடியாத நிலை நிலவியது. அதன் மூன்று நாடாளுமன்ற அங்கத்தவர்கள், ஆயுதக் கு…

  21. லங்கா ஈ நீயூஸ் ஊடகவியலாளரை காணவில்லை லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரதீத் எக்நாலிகொட என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காணவில்லை என காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. இவர் நேற்று இரவு தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/news/5239/54//d,view.aspx

  22. இலங்கைத் தேர்தலில் நடக்கப்போவது என்ன? ராஜபக்ச அல்லது சரத் இருவரும் ஓரணியில் நின்று தமிழரை உயிரோடு கொழுத்த எரித்தவர்கள் தான். ஒருவர் சொன்னார்.: இது சிங்கள பௌத்தநாடு. இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை. அடிமைகள் தான். பொர் நடந்த வேளை சொன்னது. மற்றவர் சொன்னார். புலிகள் கதை முடிந்ததது. தமிழர் பிரச்சனையைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இனிஆமல் இல்லை என்று மோதகம் கொழுக்கட்டை ஆனால் என்ன? கொழுக்கட்டை மோதகம் ஆனால் என்ன? இரண்டின் சுவையும் ஒன்றுதான். தமிழர்களுக்கு வடிவம் தாக் மாறுகின்றது. சுவை ஒன்றுதான் ஆனால் தமிழர்களின் வாக்கு முக்கியம். தமிழர்கள் தங்கள் வாக்குகளை ஒருவருக்கு ஒட்டு மொhத்தமாக அளிப்பதன் மூலம் பல செய்திகளை உலகுக்கு உணர்த்தலாம். தமிழர் வாக்குகள் தான…

    • 9 replies
    • 1.6k views
  23. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய, அமெரிக்கப் பார்வைகள்..! இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது. பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாட்டுடன் இணைந்த ஒன்றாக இலங்கையின…

    • 0 replies
    • 847 views
  24. 2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ஷ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. 2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங…

  25. யாழ்.குடாநாட்டு வீதிகளின் புனரமைப்பு சீனாவின் கைகளில் யாழ்ப்பாணத்தில் நான்கு பிரதான வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் சீனாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ் - பலாலி வீதி, யாழ் - காங்கேசன்துறை வீதி, யாழ் - பருத்தித்துறை வீதி, புத்தூர் - மீசாலை வீதி ஆகிய வீதிகளைப் புனரமைப்பதற்கு சீன அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. 87 கி.மீ நீளமான இந்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கையில்; உள்ளுர் ஒப்பந்தகாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, சீன நிறுவனங்களே நேரடியாக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புனரமைப்பு வேலைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.