Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார். http://uyarvu.com/

  2. "20" நிறை­வே­றி­யதும் ஒரு வரு­டத்தில் தேர்தல் உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு அறி­வித்தார் சட்­டமா அதிபர் (எம்.எப்.எம்.பஸீர்) 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வரு­டத்­திற்குள் அனைத்து மாகாண சபை­க­ளிலும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த முடியும் என சட்­ட­மா­திபர் ஜயந்த ஜய­சூ­ரிய உயர்­நீ­தி­மன்றில் நேற்று தெரி­வித்தார். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 விஷேட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் நேர­டி­யாக உயர் நீதி­மன்றில் ஆஜ­ராகி அரசின் நிலைப்­பாட்டை மன்­றிற்கு அறி­வித்து சட்­ட­மா­ அதிபர் மேற்கண்டவாறு தெரி­வித்தார். மேலும் ஏதா­வது ஒரு மாகா­ண­சபை …

  3. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1005

  4. தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்களை அனுப்பிவைக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். மரபணு பரிசோதனையின் மூலம் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு த…

  5. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு உழியர்களால் இன்று தமிழ் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்தபடி தமிழர் திருநாளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதேவேளை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களால் தைப் பொங்கல் பொங்கப்பட்டது. கடந்த பல வருடங்களின் பின்னர் மாணவர்கள் வளாகத்தில் பொங்கல் கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பாகைகள் அணிந்து தமிழர் பண்பாட்டு அடையாளங்களுடன் மாட்டு வண்டிகளில் வந்த மாணவர்கள் தைப் பொங்கல் கொண்டாடினர். குளோபல் தமிழ் செய்தியாளர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/1…

  6. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் போட்டியிடும் திரு கஜேந்திரன் (02.03.2010) http://www.yarl.com/articles/files/100302_kajendran.mp3

  7. பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை வெளியிட்டிருக்கின்றார். அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும் இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே கோடிகாட்டு கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும் தவறிழை…

    • 2 replies
    • 1.4k views
  8. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தின் போது பொதுமக்கள் உயிரிழந்தமைக்கான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடுமையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கு இல்லை என அவர்…

  9. அயலக கொள்கையில் இலங்கைக்கு என்றும் முதலிடம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் (இராஜதுரை ஹஷான்) 'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 5ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் முன்னேற்றகரமான…

  10. தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி புரளியைக் கிளப்பினார் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவீடனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று டுபாயிலிருந்து சுவீடன் நோக்கிப் பயணம் செய்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தின் விமானிகள் அறைக்குள் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியவாறு நுழைய முயன்றுள்ள நிலையில் இவர், மடக்கிப் பிடிக்கப்பட்டு; வயர்களால் கைகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்ட நிலையில் குறித்த விமானம் ஆலண்ட் விமான நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் சுவீடனின் ஸ்டொக்கொம் அர்லான்டா விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட…

  11. குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர். ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய கருத்துரை ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழம் உள்ளடங்கியதான அனை…

  12. பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றது அரசாங்கம்? நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்…

  13. தமிழ், சிங்கள மக்கள் திட்ட மிடப்பட்ட வகையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என கல்முனை ஸ்ரீ சுபத்திர ராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் கல்முனைப் பிரதேசத்தில் மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் இங்குள்ள தமிழ் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அபிவிருத்தித்திட்…

  14. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.…

  15. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு... சதொசயில், நிவாரணப் பொதி! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குவதோடு, இந்த நிவாரணப் பொதி ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையைவிட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து. http…

  16. 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' கிளிநொச்சி நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் பயணித்த இளம் பெண்னை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்க முற்பட்ட படைச்சிப்பாய் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது. சிவில் உடையில் சென்ற குறி;த்த இராணுவச்சிப்பாய் தனது கைகளால் குறித்த யுவதியினை கிள்ளியுள்ளார். ஆதனை பொறுக்காத குறித்த யுவதி ஆவேசத்துடன் 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' என்றவாற…

  17. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…

  18. இந்திய நிதி உதவியின் கீழ்... மருந்து பொருட்களை, கொள்வனவு செய்ய நடவடிக்கை! இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை…

  19. தமிழ் கட்சிகளை ஒன்று பட்டு செயற்பட சம்பந்தன் அழைப்பு - காரணம் தெரிவிக்கவில்லை வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010 வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன என்று கூறியுள்ள சம்பந்தன் தேர்தலிற்கு முன்னர் ஒற்றுமை தொடர்பில் பல கலந்துரையாடல்களை செய்வதற்கு அழைத்த போதும் சுகயீனம், வசதியீனம் காரணமாக வரமுடியவில்லை சமூகம் கொடுக்கவில்லை என்று வெட்டியோடிய சம்பந்தர் இப்போ ஒன்று படுவோம் என்று கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதில் கேள்விக்குறியே அத்துடன் சட்டவாளர் சுமந்திரன் தயாரித்த திட்டட்தின் படி செயற்படவா? அல்லது புதிய திட்டம் தயாரிக்கவ…

  20. கிளிநொச்சியில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி செல்கின்றனர் -சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று(22-02-2014) முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் போதே மேற்படி கவலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் மதுபானம்,புகைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அண்மைக்கா…

  21. ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட... உயிரிழப்பு, ஒரு கொலையே – எதிர்க்கட்சி ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான கே.டி.லக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனை மோதலில் உயிரிழந்த நபர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கேகாலையில் இன்று ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. …

  22. தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அரசுடன் முரண்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது ஒரேயோரு தேசியப் பட்டியல் ஆசனமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தமக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முதலில் முடிவு செய்திருந்ததாகவும் எனினும் செயற்குழு கூடி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதெனத் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. SOUrce: http://www.eelamweb.com

  23. மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

    • 22 replies
    • 2.7k views
  24. பல பொருட்களுக்கு... தட்டுப்பாடு: அச்சம் காரணமாக, பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !! பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குவிந்துள்ளனர். சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் குவிந்தனர். https://athavannews.com/2022/1278433

  25. சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே ஆபத்து ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கே அரசாங்கம் ஜெனிவா அமர்வை பயன்படுத்த முனைகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தம்மை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதெல்லாம் முட்டாள்தனம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, எவரையேனும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.