ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமானது- செல்வம் எம்.பி. by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/08/Selvam-Adaikkalanathan-2.jpg வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள்…
-
- 1 reply
- 450 views
-
-
விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து தப்பி வரும் அப்பாவி பொதுமக்களை சோதனையிடுவதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 945 views
-
-
பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
சர்வதேச சட்டமீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்துவது அவசியம்! - டேவிட் கமரூன் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலுத்துவரும் நிலையில், மனிதாபிமான சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக இலங்கை முறையான விசாரணைகளை மேற்கொண்டு இவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்தவேண்டும் என்று பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரச்சினைகளிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயற்படுமாறு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்றுப் புதன்கிழமை உலகத் தமிழர் பேரவைய…
-
- 0 replies
- 584 views
-
-
ஈழத்தில் அப்பாவி தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மக்கள் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
ததேகூ வடக்கு மக்களுக்காக ஒரு கல்லையாவது பெற்றுக் கொடுத்தார்களா ? பஷில் ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லை கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியுமா என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று அமைச்சர் சூளுரைத்தார். மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட…
-
- 4 replies
- 387 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீள ஆரம்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மாணவர்கள் பகிஸ்கரித்தனர். இந்நிலையில், ம…
-
- 0 replies
- 181 views
-
-
தனியார் வகுப்புக்களுக்கு வருகின்ற மாணவிகளுடன் நீண்ட நாட்கள் சேஷ்டை புரிந்து வந்த இளைஞர் குழுவினர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் ஒன்றை நடத்திய சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் தமிழ் மொழி மூலமான உயர்தரவகுப்புகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பிரத்தியோகமாக ஆசிரியர்களாலும் நடத்தப்படுவதால் கொழும்பு நகரின் பல இடங்களிலும் இருந்து தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவ மாணவிகள் வெள்ளவத்தைக்கு அதிகளவு வருகின்றனர். இதனால் இந்த மாணவர்கள் வகுப்புக்கள் முடிந்து திரும்பி வரும் போதும் பஸ் நிலையத்தில் நிற்கும் போதும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக நடந்துவந்தனர். சில மாணவிகள் மீது இவர் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார்…
-
- 6 replies
- 943 views
-
-
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை-இரா.சம்பந்தன்
-
- 3 replies
- 272 views
-
-
நல்லாட்சியில் தமிழர் வைத்த நம்பிக்கை வீழ்ச்சியடைகிறது-கூட்டமைப்பு எச்சரிக்கை புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்திருந்தனர் எனினும் அவர்கள் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை வீழ்ச்சிகண்டு வருவதாக அரசாங்க த்தை எச்சரித்தார் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்து ள்ளார். வடக்கு, கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடு விக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றபோதும் இராணுவம் உட்பட அரச படைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் செல்வம் அடைக்கல …
-
- 4 replies
- 412 views
-
-
கனடாவில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கைகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு பாராளுமன்ற குடிவரவுக் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலவரம் மிகவும் மோசமாகக் காணப்படுவதகாவும், இதனால் இலங்கைப் பிரஜைகளை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாறாக, கனடாவில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அனுசரணை நடைமுறைகள் துரிதப்படுத்த வேண்டுமென லிபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜயனிஸ் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamils…
-
- 0 replies
- 1.3k views
-
-
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார…
-
- 5 replies
- 510 views
-
-
குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை அறிவிப்பு! கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கல்வி சேவைக்கான நேர அட்டவணை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை இந்த கல்வி சேவை ஒளிபரப்பாகும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. 3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொலைக்கா…
-
- 0 replies
- 322 views
-
-
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசனிற்கு தமிழரசுக்கட்சி வாழ்த்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட வானதி ஸ்ரீனிவாசனிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக முன்னெடுத்த நீண்டகால விடுதலைப் போராட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக பெண்களே உள்ளனர்.எமது மக்களிற்கான, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுடைய மறுவாழ்விற்கு தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கையை எதிர்பார்த்தவர்களாக நாம் உள்ளோம்.அத்தோடு இலங்கை தமிழ் மக்களின் அரசியல…
-
- 2 replies
- 626 views
-
-
என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.Image ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்க…
-
- 8 replies
- 2.6k views
-
-
90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விருப்பம் 90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை. மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பி…
-
- 0 replies
- 465 views
-
-
தடையின்றி இயங்கும் துமிந்தசில்வாவின் முகநூல் பக்கம் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது மரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை சட்டப்படி வெளி உலகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்க அனுமதிக்கப்படமாட்டார். எனினும், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்களில் புதிய பதிவுகள் இடம்பெற்றுவருவது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், துமிந்த சில்வா வின் முகநூல் பக்கங்…
-
- 0 replies
- 173 views
-
-
வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியுள்ளார். அவர்களின்(புலிகள்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் …
-
- 0 replies
- 561 views
-
-
பௌத்த அமைப்புக்களின் செயற்பாடு தவறானது மட்டு.சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருத்து (ஆர்.யசி) எந்தவொரு நபருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சமய வழிபாடுகளிலோ அல்லது சுற்றுலா நடவடிக்கைகளிலோ ஈடுபட சகல உரிமையும் உள்ளது. ஆனால் மத நிந்தனைகளில் ஈடுபடுவதாக கூறி அங்குள்ள மக்களை பழிவாங்கவோ அல்லது குழப்பங்களை ஏற்படுத்தவோ முனைவது தவறான செயற்பாடாகும். இத்தகைய பெளத்த அமைப்புகளின் செயற்பாடு தவறானது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இலங்கையில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய தேசிய கொடிக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 172 views
-
-
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் போலிப்பிரசாரம் செய்கிறார் : 'டைம்ஸ் ஒப் இந்தியா' வில் இலங்கை தூதரகம் கண்டனம் வீரகேசரி இணையம் 4/1/2009 10:59:49 AM - நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத
-
- 0 replies
- 654 views
-
-
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (15) இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழில் இன்று மட்டும் 19 பேருக்கு தொற்று! - கிடுகிடுவென எண்ணிக்கை…
-
- 7 replies
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் தார்மீக போராட்டங்கள் வீண்போகமலிருக்க எல்லா நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட வலுவான ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ் அமைப்பு நேரடியாக ஜ. நா சபையின் செயலாளரையும் மற்றும் பிரதிநிதிகளைச் சந்திக்க கூடிய வகையில் இதில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு வலுவான அமைப்பு உருவாக்கப்பட்டு பின்வரும் விடயங்கள் கருத்திலெடுக்கப்பட வேண்டும். 1. எல்லா நாடுகளிலும் மக்கள் போராட்டங்களில் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு உரியவர்களுக்கு சென்றடையும் வகை செய்ய வேண்டும். 2. வன்னியி;ல் இடம் பெறும் மனிதப் பேரவலங்கள் காணொளியாகவும் படங்களாகவும் தொக…
-
- 1 reply
- 879 views
-
-
யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இராணுவம் வெளியேறுமா ? தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுபாட்டில் உள்ள யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையினுள் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். யாழ்ப்பாண கோட்டையானது ஆசியாவிலையே சிறந்ததொரு கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தற்போது கோட்டையுள்ள பகுதியில் முதலில் போர்த்துக்கேயர்கள் கோட்டையை வடிவமைத்தனர். அதன் பின்னர் ஒல்லாந்தர் 1658 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி போர்த்துக்கேயர்களிடம் இருந்து கோட்டையை கைப்பற்றிய மறுநாள் அக் கோட்டையை இடித்தழித்து விட்டு தற்போது உள்ள ஐங்கோண வடிவிலான கோட்டையை நிர்மாணித்தனர். ஒல்லாந்தர் கால…
-
- 0 replies
- 596 views
-
-
போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகா…
-
- 0 replies
- 842 views
-