ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
தந்தை செல்வாவை வணங்கும் ராஜபக்ச 16 அக்டோபர் 2013 புகைப்படம்: மயூரப்பிரியன் யாழ்ப்பாணத்தில் கண்டி வீதியில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு சதுக்கத்திற்கு முன்னால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கை துகூப்பி வணங்கும் படியான பாரிய பாதகை ஒன்றை அரச ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். தந்தை செல்வாவின் சிலை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து குறித்த பதாகையை பார்க்கும்பொழுது ஈழத் தமிழர்களின் அரசியல் தந்தை எனப்படும் தந்தை செல்வாவை வணங்குவதைப்போல காணப்படுகின்றது. இந்தப் பதாகை கடந்த அக்டோர் 11 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவி ஏற்பில் ஈடுபடும்பொழுதே அமைக்கப்பட்டிருந்தது. புகைப்படம்: மயூரப்பிரியன் http://www.globaltamilnews.net/…
-
- 0 replies
- 418 views
-
-
வடக்கு அமைச்சு செயலாளர்களின் பொறுப்புகளிலும் மாற்றங்கள் வடக்கு மாகாண சபைக்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து அமைச்சுச் செயலாளர்களின் பொறுப்புக்களும் மாற்றப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் கல்வி, விவசாய அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்த இரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் முதலமைச்சரால் புதிதாக சர்வேஸ்வரன், அனந்தி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதன்போது அனந்தியின் அமைச்சில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அமைச்சர் அனந்தியின் அமைச்சுச் செயலாளராக நிய…
-
- 0 replies
- 238 views
-
-
செல்வ நகரில் சிரமதானம் செய்யப்பட்டது கர்பலா கிராம முஸ்லிம் மையவாடிக் காணியல்ல: பிரதேச சபை செயலாளர் 21 அக்டோபர் 2013 2ஆம் இணைப்பு:- ஆரையம்பதி செல்வ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சிரமதானம் செய்யப்பட்ட காணி கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியல்ல என ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி. கே. ஜே. அருள்பிரகாசம் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதி செல்வ நகர் கிழக்கு கிராமத்திலுள்ள காணியொன்றை கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியெனக் கூறி கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிலர் அத்து மீறி நுழைந்து சிரமதானத்தில் ஈடுபட்டதாகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (21.10.13) திங்கட்கிழமை கருத்து தெரிவித்த அ…
-
- 0 replies
- 337 views
-
-
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்! தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதன்போது விகிதார முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சீர்திருத்தம் – பொது நிலைப்பாடு 1)பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்க…
-
- 0 replies
- 143 views
-
-
சிறீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போத…
-
- 1 reply
- 1.6k views
-
-
புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக இன்று (திங்கட்கிழமை) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை நாளை புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள காணியொன்றும் கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் …
-
- 1 reply
- 310 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் தேவையில்லையென யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்.அரச அதிபர் அனுப்பிய செய்திக் குறிப்பில், "இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த 'கிளியரன்ஸ்' நடைமுறை இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடி…
-
- 0 replies
- 582 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். இம்மூன்று குழந்தைகளையும் குறித்த தாய் நேற்று வியாழக்கிழமை பிரசவித்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பிரதேசத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் சபேஸ்கலா எனும் தாயே மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். இம் மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் எனவும் இக்குழந்தைகள் மற்றும் தாய் தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் மேலும் தெரிவித்தார். கடந்த மாதமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலி…
-
- 0 replies
- 279 views
-
-
ஐ.நாவுடன் அரசாங்கத்துக்கு அகங்கார மோதல் கிடையாது ஆர்.நிர்ஷன் ஐ.நாவுடன் முரண்படும் நோக்கம் கிடையாது என்றும், ஐ.நாவுடனான செயற்பாடுகள் இராஜதந்திர முறையிலேயே முன்னெடுக்கப்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கம், நேற்று (19) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐ.நாவுடன், பிரச்சினைகளை ஏற்படுத்தினால், என்ன நடக்குமென, கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் கண்டுகொண்டோம் என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி…
-
- 2 replies
- 311 views
-
-
இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவன் வேலும் மயிலும் சுதன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைம் பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். வேலும்மயிலும் சுதன், பரீட்சையில் தான் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ""நான் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவேன் என எதிர்பார்த்திருந்தேன். எனினும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கின்றது. தமிழ், கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் "ஏ' சித்தியினையும் வரலாறு பாடத்தில் "பி' சித்தியினையும் பெற்று மாவ…
-
- 0 replies
- 610 views
-
-
குவைட்டுக்குச் சென்ற 51 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர் வேலை வாய்ப்புக்காக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில்,அங்கு பல்வேறான துன்புறுத்தலுக்கு உள்ளான பணிப்பெண்கள் 51 பேர் விசேட விமானத்தின் மூலம் இன்று (25) இலங்கையை வந்தடைந்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/குவைட்டுக்குச்-சென்ற-51-பணிப்பெண்கள்-இன்று-நாடு-திரும்பினர்/175-201307
-
- 0 replies
- 282 views
-
-
தேவார முதலியின் திருவிளையாடல்கள் வணக்கமுங்கோ பொது நலவாயம் பொதுநலவாயம் எண்டு அதுவும் முடிஞ்சு போட்டுதுங்கோ. ஆனா யாழ்ப்பாணத்தில கமரூன காய்ச்சல் தானுங்கோ இன்னும் தீரேல்லயுங்கோ. அதுதானுங்கோ பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்துபோனவருங்கோ. அந்த கொண்டாட்டத்தில இருந்து யாழ்ப்பாணம் இன்னும் மீளேல்லயுங்கோ. கமரூனோட குறூப் போட்டா எடுக்கிறதில இருந்து கமரூன்ர குறூப் பிறேமுக்குள்ள தங்கண்ட மூஞ்சையும் தெரியவேணும் எண்டு திரிஞ்ச ஆக்கள் வரைக்கும் ஒரே அமர்க்களமுங்கோ. உதுக்குள்ள இன்னுமொரு கூத்தும் நடந்ததுங்கோ. கமரூன் பேப்பர் வாசிக்கிறமாதிரி படம் எடுத்து அத பேப்பறில போட்டு சில ஆக்கள் வியாபாரம் செய்தவயுங்கோ. உவயள் பாருங்கோ பிரபாகரன் படத்த முன்பக்கத்தில …
-
- 1 reply
- 921 views
-
-
கடற்படையினர் மீது தாக்குதல் ; 5 பேர் கைது யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22543
-
- 0 replies
- 258 views
-
-
ஊழல் மோசடிகள் அம்பலமாவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா? – எதிர்க்கட்சி நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை இந்த குழுக்களில் நியமிக்க கூடாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் கு…
-
- 0 replies
- 260 views
-
-
புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயன்ற போது சிறிலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக அந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று ‘இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வி எழுப்பி உள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 2 replies
- 883 views
-
-
காலியில் நாளை ஆரம்பமாகவுள்ள, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி பங்கேற்கவுள்ளார். காலி கலந்துரையாடல் என்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கை சிறலங்கா கடற்படை தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் நடத்தவுள்ளது. நாளை தொடக்கம் இரண்டு நாட்கள், காலியில் உள்ள வெளிச்சவீட்டு விடுதியில், நடக்கவுள்ள இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். இந்தநிலையில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷியும் இதில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தரங்கில், இந்தியக் கடற்படைத் தளபதி, ‘ஆசிய பசுபிக்கில் வளர்ந்து வரும் கடல்சார் ஆர்வங்கள்:…
-
- 2 replies
- 833 views
-
-
எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக எமது இணையத்தளத்திற்கு நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமான…
-
- 6 replies
- 1.6k views
-
-
வடமாகாண சபை செய்யாத பலதை வணிகர் கழகம் செய்தது என கடும் விமர்சனங்களை முதலாவது உ ரையில் ஜெயசேகரம் முன்வைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் அணிதிரண்டு தங்களது பலத்தைக் காட்டி இந்த மாகாணசபையை தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் பல எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்த சபை தவறியுள்ளது. என வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனத்தில் ஒன்று அயூப் அஸ்மீனுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்…
-
- 2 replies
- 614 views
-
-
‘உன்னிடம் இரண்டு விடுகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக்கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு புது உடைகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘இல்லை கொடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உண்மையிலேயே இரண்டு புது உடைகள் இருக்கின்றன.” இதுதான் இன்றைய 80 வீதமான தமிழர்களின் மனநிலை. போராட்டம்,வாக்கெடுப்பு, தமிழீழம் என்று பெரிதாகக் கதைப்பார்கள். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால்...அப்படிப் பின்நிற்பது பராவாயில்லை. ஏன் இவற்றில் பங்குகொள்ளவில்லை என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்கள் கூறும் பதில்தான் மிகவும் பயங்கரமானது. தங்கள் போக்கை நியாயப்படுத்துவத…
-
- 0 replies
- 826 views
-
-
காணாமற்போனோர் அலுவலகத்தை திறக்க இன்னும் வழியைக் காணோம் வேண்டும் என்றே தாமதிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் சீற்றம் காணாமற்போனோர் தொடர்பான அலுவல கத்தை அமைப்பதற்கான பணிகள் மேலும் தாமதம டைந்து வருவது மனித உரிமைகள் செயற்பாட் டாளர்களை விசனம் அடைய வைத்துள்ளது. இது வேண் டும் என்றே செய்யப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் அவர்கள் சீற்றம் காட்டி னர். இந்த அலுவலகத்தை நல் லிணக்க அமைச்சுக்குப் பாரப்படுத்தும் வர்த்த மானி அறிவித்தல் விடுக் கப்பட்டபோதும், அலுவ லகத்தை அமைப்பதற் கான வர்த்தமானி அறி வித்தல் அந்த அமைச்சின் அமைச் சர் என்ற வகை யில் அரச தலைவரால் இன்னும் விடுக்க…
-
- 0 replies
- 168 views
-
-
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசர…
-
- 4 replies
- 746 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவுக்கே இந்த நிலை? தேர்தல் ஆணைக்குழுவின் உறுப் பினரான என்னையே பொலிஸார் மிக மோசமாக நடத்தும்போது சாதாரண தமிழ் மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். பொலிஸார் தெற்கில் பொதுமக் களை கெளரவமாக நடத்துகின்ற அதேவேளை வடக்கில் அவர்கள் வேறுவிதமாகச் செயற்படுகின்ற னர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத் துள்ள கடிதத்தில், தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் ரட்ணஜீ வன் கூல் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடி ஆணையைக் காட்ட…
-
- 0 replies
- 646 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநா…
-
- 4 replies
- 675 views
-
-
பத்திரிகைகளின் கண்ணோட்டம் 24-08-2017
-
- 0 replies
- 128 views
-
-
நோர்வேயில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் மற்றும் அதற்கான தேர்தல் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் ஞாயிறு (24.01.2010) இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒஸ்லோ Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsrd Mathisens vei 27) மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நோர்வே செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இப்பொதுக்கூட்டத்தில், செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவினால் தமிழர் திருநாளன்று வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கை அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு, கருத்துப்பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சட்டம…
-
- 0 replies
- 567 views
-