ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க செனட் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஆன்னா நெய்ஸ்ரெட், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக வழங்கியுள்ள தகவல்கள் தொடர்பாக சிறிலங்கா அரச மட்டத்தில் அதிர்ச்சியற்றிருப்பதாகத் தெரியவருகிறது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தேன் செனட்சபையில் ஆன்னா எனக் கூறியிருந்தார். ஆயினும், இவர் எவ்வாறு அனுமதி பெறாது இலங்கை வந்து வவுனியா சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தார் என்பது பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவுக்குச் சென்று வைத்தியசாலையிலுள்ள மக்களைச் சந்தித்ததாகவும், ஆனாலும் இடை…
-
- 3 replies
- 3k views
-
-
அமெரிக்கத் தடையினால், ஈரானிடம் எண்ணெய் கொள்வனவை சிறிலங்கா இடைநிறுத்தியுள்ளதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் விரிசல் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா பலநோக்கு நீர் மின் அணைக்கட்டு அமைக்கும் திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உமாஓயா திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள இரு ஈரானிய நிறுவனங்களின் தவணை கடந்த கொடுப்பனவு மற்றும் ஏனைய நாடுகளிடம் இருந்து எண்ணெயை வாங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவு போன்ற காரணங்களினாலேயே ஈரானின் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 ஏப்ரலில் ஈரானிய அதிபர் மொகமட் அகமட்நியாட் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களில், 450 மில்லியன் டொலர் செலவிலான உமா ஓ…
-
- 2 replies
- 570 views
-
-
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
அமெரிக்கத் தலையீட்டினால் சிறிலங்காவுக்கு அநீதிகள் – நவீன் திசநாயக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் சிறிலங்கா பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டது என்று ஐதேகவின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ஐதேக தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், சிறிலங்காவும் விலக வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார். “இது ஒரு அர்த்தமற்ற கருத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் நாங்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டோம். ஆனால் இந்தச் சவால்…
-
- 0 replies
- 160 views
-
-
''சில அமெரிக்கத் தலைவர்கள் அவர்கள் இழைத்த அட்டூழியங்களுக்காக - குறிப்பாக மத்திய கிழக்கில் இழைத்தவற்றுக்காக - கொல்லப்படவேண்டும்" இவ்வாறு கூறியிருக்கின்றார் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க. கண்டியில் ஒரு பொது நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ' 'ஈராக்கும் லிபியாவும் அந்த நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்து, அவற்றுக்குள் புகும்வரை நன்றாகத்தான் இருந்தன. ''ஈராக் தலைவர் சதாம் ஹுசைனிடம் சில பின்னடைவுகள் இருந்தாலும் அவர் ஈராக்கை நல்லதாக மாற்றியமைத்தார். ''சதாமிடம் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கத் தலைவர்கள் அதைவிட மோசமான குறைபாடுகளை உடையவர்களாக இருந்தனர். ''அது சீனியர் புஷ்ஷாகவோ அல்லது யூனியர் புஷ்ஷாகவோ இருக்கலாம். அவர்கள் தாக்கப்பட்…
-
- 1 reply
- 627 views
-
-
வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளை முழு வசதிகளையும் கொண்டதாக புனரமைக்க, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வைத்த திட்டத்தை, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி பெண்கள் பாடசாலை, மன்னார் மாவட்டத்தில், முசலி மகா வித்தியாயம் ஆகியவற்றை முழுவசதிகளுடன் புனரமைத்துத் தர அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வந்திருந்தது. வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் சிறிலங்கா கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட இந்த யோசனையை, சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீ்ர்மானம் கொண்…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்கத் தீரமானம் ஐதேகவுக்கும், கூட்டமைப்புக்கும் பெருத்த ஏமாற்றம்! – நகைக்கிறார் அஸ்வர். [Friday, 2014-03-07 09:54:39] இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஆளும்கட்சி எம்.பி, ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகல விதமான எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட ஏக…
-
- 3 replies
- 597 views
-
-
அனைத்துலக விசாரணை என்ற பதம், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான விரைவில் இல்லை என்பதற்காக அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான முன்வரைவில் அடங்கியுள்ள விசாரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது. அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துலக சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. அதேவேளை, தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல்தீர்வு, வடக்கு,கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டு…
-
- 2 replies
- 448 views
-
-
அமெரிக்கத் தீர்மானத்தால் அரசாங்கத்துக்கே பாதிப்பு ஏற்படும் என்கிறார் சரத் பொன்சேகா! [Wednesday, 2014-03-19 10:03:22] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம், நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் எந்த ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அமெரிக்காவும், ஏனைய நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே யோசனையை முன்வைக்கின்றன. எனவே அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இலங்கைப் படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை.ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் போது அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அதில் இருந்து அவர்கள் தப்பிக்…
-
- 0 replies
- 400 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்திற்கு எதிராக, ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று முதற்கட்டமாக வெல்லம்பிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் கையெழுத்துகளைப் பெற்று, அதன் பிரதி ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடந்தமுறை பத்து இலட்சம் கையெழுத்துக்களை ஜெனிவாவுக்கு அனுப்பும் போராட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102960&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 301 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொணடு வரும் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஹுணுப்பிட்டிய கங்காராமய விகாரையில் இருந்து அமெரிக்கத் தூதரகம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், மேல் மாகாண பிரிவேனாக்களில் கல்வி கற்கும் சுமார் 2500 பிக்குகள் வரை கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து இன்று கொழும்பில் மிகப்பெரிய பேரணி ஒ…
-
- 4 replies
- 879 views
-
-
அமெரிக்கத் தீர்மானத்துக்கு நியூசிலாந்து அனுசரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் சபையில் கடந்த 1ம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.இதையடுத்து இந்த மாதம் 16ஆம் திகதி வரை இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேலும் 26 நாடுகள், இணை அனுசரணை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. இதனால் இணை அன…
-
- 0 replies
- 273 views
-
-
அமெரிக்கத் தீர்மானத்தை அவுஸ்ரேலியா ஆதரிக்காது! – வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவிப்பு. [Friday, 2014-03-21 18:47:23] ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது. புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு அளித்தல் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின…
-
- 0 replies
- 623 views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரிநாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்த பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா முயற்சி! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Tuesday 2015-09-22 20:00] அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் முயற்சிப்பதாக மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் ஆரம்ப திட்ட வரைபு தொடர்பாக ஆராயும் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடாவுக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்புரை ஆற்றியுள்ளார். நேற்று விஜயம் செய்த சுமந்திரன் எம்பி, பெரிய சிவன் கோவில் அரங்கில் திரு குகதாசன் (ததேகூ கனடா கிளை) தலைமையில் நடைபெற்ற “கலப்பு குற்றவியல் விசாரணை கோரி, அமெரிக்கா – இலங்கை கூட்டாக ஐநா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்” பற்றி சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமக்குரிய சந்தேகங்களை கேள்வி பதில் ஊடகவும் தீர்த்துக் கொண்டனர்.
-
- 5 replies
- 867 views
-
-
அமெரிக்கத் தீர்மானம் - ஜெனிவாவில் இன்று முக்கிய கலந்துரையாடல்! [Monday 2015-09-21 07:00] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் …
-
- 1 reply
- 745 views
- 1 follower
-
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டாக ஒப்பமிட்ட அறிக்கை அறிக்கை ஒன்று நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு- அமெரிக்கா, பிரிட்டன் முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு நாடான மொண்டினிகாரோ, மெஸிடேனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வை ஒட்டி இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள பிரேரணையின் நகலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாக பரிசீலனை செய்தது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் கௌரவம், சமத்துவம், நீதியுடன் வாழக்கூடிய …
-
- 2 replies
- 413 views
-
-
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் இலங்கை மக்களுக்கு எதரானதல்ல என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கா ஆயத்தமாகி வருகின்றது. இந்த தீர்மானமானது இலங்கையின் மக்களுக்கு எதிரானதல்ல என உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த குற்றச் செயல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசாங்கத்திற்கு எதிரானதே தவிர, நாட்டு மக்களுக்கு எதிரானதல்ல. என இம்முறை …
-
- 0 replies
- 455 views
-
-
வணக்கம் பாருங்கோ கொஞ்ச நாளா எங்கட தொப்புள்கொடி உறவுகள் தமிழகத்தில அமெரிகவுற்க்கு எதிர நல்ல போராட்டங்களை செய்து கொண்டு வருகினை . இது பிடிக்காமல் எங்கட நாடுகடந்த அரசாங்கம் போராடுற பொடியளுக்கு தொலைபேசி எடுத்து நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை இப்படி எரிக்கபுடது , கிழிக்க கூடாது நாங்கள் அந்த தீர்மானத்தை கொண்டுவர இரவுபகல வேலை செய்கிறம் வெளிநாட்டில [அப்ப நீங்கள் சொலுற வேலை குடிச்சு போட்டு கும்மாளம் அடிக்கிறது ] எண்டு சொல்லுகினை அது பத்தாது என்று தமிழகத்தில் சில வால் பிடிகளை வைசிருகினை அவை என்னடா நாக்கறுந்த நாடுகடந்த அரசாங்க அமைசர்கள் என்று தங்களை தானே சொளுரவையோட நேரடி தொடர்ப்பம் . இந்த வால் பிடிகள் தமிழ் நாட்டில் மாணவர்களுக்கு சொல்லுறது உருத்திரகுமார் [ உளுந்தூர் பேட்டை உருத்திரகு…
-
- 0 replies
- 338 views
-
-
'நாங்களும் தீர்மானத்தை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை கைகழுவி விட்டுவிடும்': சம்பந்தன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். அமெரிக்காவின் பிரேரணை முன்வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தலைவர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே…
-
- 1 reply
- 690 views
-
-
அமெரிக்கத் தீர்மானம் ஜனநாயகம் அற்றதாம்! Published on July 22, 2011-9:43 pm இலங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான ரத்தக்களறிகள் தொடர்பாக பொறுப்புடைமையை வெளிப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்கா இத்தகைய தடையை கொண்டுவந்தால், அது அவர்கள் போதிக்கும்…
-
- 3 replies
- 830 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்படவில்லை என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையையே வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசு தான் அமைக்கும் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு பொதுநலவாய நாடுகளினதும், வெளிநாடுகளினதும் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வார்த்தைப் பிரயோகம் சர்வதேச விசாரணையை அன்றி வேறு எதனை வலியுறுத்துகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ம…
-
- 0 replies
- 226 views
-
-
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 12:32.10 PM GMT ] ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தீர்மானத்தில், இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேர…
-
- 0 replies
- 473 views
-
-
அமெரிக்கத் தீர்மானம்: சமரசத்துக்கு இன்னமும் வாய்ப்புள்ளது என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான மசோதா விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சமரசம் ஏற்பட இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா…
-
- 12 replies
- 958 views
-