Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனேடிய ஆலோசகர் - யாழ்.மாவட்ட அரச அதிபர் சந்திப்பு கனேடிய ஆலோசகர் ஜெனிபர் ஹாட் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு குறித்து தெரியவருவது, யாழ்.மாவட்டத்திற்கு ஏதேனும் தேவைப்பாடுகள் இருக்கின்றனவா?அவ்வாறு தேவைகள் ஏற்படின் தமது அரசால் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட அரச அதிபரிடம் கனேடிய ஆலோசகர் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=242564073708647118#sthash.rlLF9XOD.dpuf

  2. ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு இளைஞரொருவர் மரணம் வீரகேசரி இணையம் ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து வெளிநாட்டு இளைஞரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். 17 வயதுடைய சுவீடன் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக இத் தொடர்மாடிக்கு குறித்த இளைஞன் வந்துள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  3. New Sri Lanka war-crime evidence: judgesThe Australian arm of an international group of judges says it has damning new photographic evidence of war crimes by the Sri Lankan army. The president of the International Commission of Jurists' Australian chapter, John Dowd QC, announced on Wednesday that photographs had been mailed to him. They contained evidence of execution and degradation of female victims as the bloody fighting to came an end in 2009 and had been sent by an Australian union official two weeks ago, he said. Mr Dowd said he had sent the evidence to the Australian Federal Police (AFP). "(The evidence) deals with executions, it deals with suc…

  4. ஆட்கடத்தல்கள் குறித்து டக்ளஸ், பிள்ளையான், கருணாவிடம் விரைவில் விசாரணை! [saturday 2015-06-13 20:00] கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால், தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமை வகிப்பதுடன், பெண் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றார். இவர்கள் நாளை மறுதினம் காணாமல் போனோர் குறித்து விசாரணைச் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடக…

    • 1 reply
    • 1.2k views
  5. பாராளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை அமைக்க திட்டமிடும் ரணில்! பாராளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது. பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென ராஜபக்ச தரப்பு அழுத்தம் கொடுத்திருந்தபோதும் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். இதனாலேயே ரா…

  6. இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உதவிகளை வழங்க பொதுநல அமைப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  7. சிலைகளை உடைப்பதன் மூலம் எமது விடுதலை உணர்வை அடக்கிவிட முடியாது – யோகேஸ்வரன் எம்பி! Published on November 1, 2011-4:42 am தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவரும், என்றும் தனது உடல், உயிர் யாவற்றையும் தமிழுக்காக அர்ப்பணித்து இறைபதம் அடைந்த ஈழத் தமிழ் மக்களின் ஆரம்ப தலைவரான தந்தை செல்வாவின் நினைவாக திருமலை மாவட்டத்தில் தாபிக்கப்பட்டிருந்த அவரின் உருவச் சிலையை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் உடைத்துள்ள கயவர்களை தான் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்திலும் உடைக்கப்படாத இச்சிலை தற்போது தமிழ் மக்களின்…

  8. இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 24 பேர் பலி [ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 11:12.43 AM GMT ] நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளுவென்சா எச்.1 என்1 வைரஸ் காரணமாக இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் இது தாய், சேய் மரணம் எனவும் அவர் கூறியுள்ளார். காய்ச்சலுக்கான நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சகல கர்ப்பிணி தாய்மாருக்கும் எச்.1என்1 எதிர்க்கும் வைரஸ் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இதனை வைத்தியசாலையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 458 views
  9. March 4, 2019 சர்வதேச காவற்துறையால், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட, சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் சர்வதேச காவற்துறையிடம் முன்வைத்த மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இன்டர்போல் எனும் சர்வதேச காவற்துறையின் மேன்முறையீட்டுச் சபை இந்த மேன் முறையீடுகளை நிராகரித்துள்ளதாக இலங்கை காவற்துறைத் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில் குற்றப் புலனய்வுப் பிரிவு பணிப்பாளரின் கீழ் இயங்கும் சர்வதேச கா…

  10. இத்தாலியில் முதன்முதலாக அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவப் பட்டம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார் ஈழத்துத் தமிழ்ப் பெண் ஒருவர். யாழ்.தீவகப் பகுதியான ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த ஞானசீலன் பிரியா (வயது-25) என்பவரே இச் சாதனையைப் புரிந்துள்ளார். பலேர்மோ மாநகரத்தின் மருத்துவத்துறையின் ஓர் பிரிவான Tecniche di Radiologia Medica per immagini e Radioterapia வில் அதிக புள்ளியான 110/110 lode பெற்று மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை தான் இத்தாலியில் தமிழ் மாணவர்களுக்கு நடனம், தமிழ் மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்து வருவதுடன், தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றவுள்ளதாகவும் எமது செய்திச் சேவைக்கு ஞானசீ…

  11. ஒரே நேரத்தில் தமிழரசுக் கட்சி 5 மாவட்டங்களில் வேட்புமனு வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட …

  12. கூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் சிறிலங்கா வருகை சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன. Indo-Pacific Endeavour 2019 திட்டத்தின் கீழ், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் அவுஸ்ரேலிய கடற்படை கூட்டுப் பயிறிகள் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிறிலங்கா வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் 30 ஆம் நாள் வரை இங்கு தரித்து நின்று சிறிலங்கா கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இதற்கமைய, HMAS Canberra மற்றும் HMAS Newcastle ஆகியன, கொழும்புத் துறைமுகத்துக்கும், HMAS Success மற்றும், HMAS …

    • 0 replies
    • 271 views
  13. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் மூவர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 692 views
  14. ஈராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை நினைவு கூருமுகமாக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பெயரை தற்போது மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ''சதாம் ஹுசைன் கிராமம்'' என்ற அந்த கிராமத்தின் பெயரை ''ஈராக் கிராமம்'' என்று மாற்றுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு அரசாங்க அதிபரின் நடவடிக்கைக்காக அது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1978ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியின் தாக்குதலுக்கு இலக்கானது. சூறாவளித் தாக்குதலுக்கு இலக்கான ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத…

  15. முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி பிரதேசத்தில் லெப். கேணல் புலேந்திரன் நினைவான முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 711 views
  16. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபரை நோக்கி தண்ணீர்ப் போத்தலை வீசியவர் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஐதேக உறுப்பினர்கள் 'வெட்கம்' என்று எழுதப்பட்ட அட்டையை உயர்த்தியபடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தின் போது ஆளும்கட்சி தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக அருகில் விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மகிந்த ராஜபக்ச மீதும் கொட்டியத…

  17. புங்குடுதீவில் மாணவியைக்காணவில்லை. Written by Seran - Oct 16, 2007 at 05:00 PM யாழ் தீவகம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் காணமற் போயுள்ளார். காணமற்போனவர் 21,அகவையுடைய துளசிகா பத்மலிங்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்று வரும் இவர் வழமை போன்று கல்வி நிலையித்திற்கு சென்ற வேளையே காணமற் போயுள்ளார். குறித்த மாணவியின் வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும் இடையே சிறிலங்கா கடற்படை முகாம் ஒன்று இருப்பதாகவும் கடற்படையினரே இவரைக் கடத்தியிருக்கலாம் எனத் தெரிவி;த்து அவரது பெற்றோரால் யாழ் மனித உரிமைகள் ஆனணக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...49&Itemid=1

  18. வடமாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு அரசு விடுத்த வேண்டுகோளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறீரங்கா நிராகரித்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு ஆளுங்கட்சியின் அமைச்சர் ஓருவரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்ப்பட்ட சூழ்நிலையில், ஆளுங் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், சிறீரங்காவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர். இதனடிப்படையில் இந்த விடயம் குறித்து ஆளுங் கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் சிறீரங்காவுடன் தொடர்பு கொண்டு விரிவாகக் கலந்துரையாடினர் எனத் தெரிகிறது. எவ்வாறாயியும் அரசின் இந்தக் கோரிக்கையை அவர் நிராகரித்திரக்கிறார் என அறிய முடிகிறது. http://www.eelampres.../2011/12…

  19. அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு, இணக்கப்பாட்டுடன் ஒற்றையாட்சி ஆட்சியின் கீழ் அதியுச்ச அளவில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (23) விகாரமாதேவி திறந்தவெளியில் வெளியிடப்பட்டது. இதில் உரையாற்றும்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தத் தேர்தல் வாக்குறுதிளை அளித்தார். பொருளாதாரத்தை மேம்படுத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகள் மற்றும் கல்வித் துறையை மேம்படுத்தல் ஆகிய ஐந்து பிரதான கொள்கைகளை முதன்மைப்படுத்தி ''60 மாதங்களில் புதிய நாடு'' என்ற கருப்பொருளில…

    • 0 replies
    • 344 views
  20. யாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது! யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டவர்களில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் மற்றும் தமிழ் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். யாழ். பொலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக, நல்லூர் பின் வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் சந்தேகிக்கப்படும் வகையில் நடமாடுபவர்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகிக்கப்படும் வகையில் அங்கு நீண்டநேரமாக நடமாடியவர்களை விசாரணை செய்துள்ளனர். இதன்போது, குறித்த 3 பேரு…

  21. Published By: VISHNU 26 MAY, 2024 | 07:18 PM இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராஜகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …

  22. கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்…

    • 4 replies
    • 2.3k views
  23. Rajapakse accepts Court summons, asks US to confer immunity [TamilNet, Saturday, 17 December 2011, 19:35 GMT] After avoiding service for more than 9 months, and despite statements by Colombo that Sri Lanka's President Mahinda Rajapakse is not answerable to US Courts, Rajapakse-appointed counsel from the lobby firm of Patton Boggs filed a motion with the District Court of District of Columbia for "enlargement of time to respond to the complaint" related to the legal action, 11-cv-00235, by three Tamil plaintiffs sponsored by Tamils Against Genocide (TAG), a US-based activist group. Legal observers expressed surprise at the filing, which, in addition to effecting waiver…

  24. விடுதலைப்புலிகளை கூண்டில் ஏற்ற ஆணை கேட்கிறது கூட்டமைப்பு!? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அதாவது அவ் அமைப்பு தனது கொள்கைகளையும் எதிர்கால வேலைத்திட்டங்களையும் முன் வைத்து தமிழ் மக்களிடம் அவர்களின் ஆணையைக் கோரியுள்ளது.தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இன்றைய போராட்டத்தின் தலைமை சக்தியாகவே எதிர்பார்க்கின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இலட்சிய உறுதி கொண்டதாகவும், நேர்மையானதும் தூய்மையானதுமாக இருக்கவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கியமான தமிழ் ம…

    • 2 replies
    • 439 views
  25. தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவருமான அப்துல் கபூர் முகமது ரிஸ்வின் (வயது 38) கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர். இன்று காலை காத்தான்குடி 2 ஆம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.