ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
மதவாச்சிய கெபித்திகொல்லேவைக்கிடையிலா
-
- 9 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோரை எதிர்வரும் 16 ஆம் நாளுக்குப் பின் சுட்டுப் படுகொலை செய்யப்போவதாக சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா அரசு இன்று இந்தியா சென்று வழங்கியுள்ள பொய்யான வாக்குறுதிகளை தமிழ முதல்வரும் நம்பியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பதவி விலகல்கள் இடபெற மாட்டாது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கடந…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு [Thursday November 16 2006 01:14:40 PM GMT] [யாழ் வாணன்] நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உர…
-
- 2 replies
- 1.7k views
-
-
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…
-
- 11 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த…
-
- 17 replies
- 1.7k views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை. தற்போது ஈழமண்ணில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையைச் சர்வதேசங்கள் எவ்விதம் கணிக்கின்றதோ தெரியாது ஆனால் ஈழத்தின் இளைய சமூகம் புலத்திலும் புலத்திற்கு வெளியிலும் சிறிலங்காவின் இனப்படுகொலையாகவே உள்வாங்கி…
-
- 0 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார். இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவி…
-
- 11 replies
- 1.7k views
-
-
2009ம் ஆண்டின் இறுதிவரை யுத்தம் தொடருமென இராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி வடபகுதி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மஹிந்த மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்த கொண்ட விஷேட பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே பொன்சேகா மஹிந்தவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரிவு செய்யபட்ட 1500 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் களமுனைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் சுமார் 3000 புலிகள் எதிர்வரும் ஆகஸ்ட மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டு விடுவார்களெனவும் இவ்வருட இறுதியில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விடுமெனவும் இவர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழ் ஈழம் பற்றி பேச தடை கிடையாது : திருமாவளவன் தமிழ் ஈழம் பற்றி பேச எந்தவித தடையும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பெரியாரின் 35-வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவு நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், தமிழ் ஈழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் ஈழம் பற்றி பேச எந்தவித தடையும் கிடையாது. ராஜீவ்காந்தி கூட விடுதலைப்புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று ஒரு காலத்தில் கூறினார். ஆனால் அவர்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நட…
-
- 1 reply
- 1.7k views
-
-
செப்டம்பர் 13,2008, ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில்…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவில் நம்பிக்கை இல்லை என்ற கருத்தை இதுவரை தெளிவாக பதிவு செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா தூதுவர் ராப்பிடம் கருத்துரைத்த முல்லைத்தீவு மக்கள் இந்தியாவை நாம் நம்பவில்லை என்று தெட்டத் தெளிவாக உரைத்து அரசியல் நகர்வில் முக்கிய காலடி பதித்துள்ளார்கள். இது குறித்து வெளியான செய்தி வருமாறு.. நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர். இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட…
-
- 26 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டமேசை மாநாடு ஜனநாயக ஆட்சிகள் நடக்கும் வட்டமேசை மாநாடு என அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.7k views
-
-
வன்னிப் படை நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை கடந்த வாரம் வடபகுதி முழுவதும் பருவமழை என்றும் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்து மிகப்பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் இடம்பெயரச் செய்து அல்லல்பட வைத்துவிட்டது. வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற கடும் மழைக்கு மத்தியிலும் படைநடவடிக்கையானது ஓய்ந்துவிடவில்லை என்பதற்கு வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமானத் தாக்குதல்களும், வன்னியின் மூன்று புறமும் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுத் தாக்குதல்களும் சான்றாகின்றன. இவ்வாறு இடைவிடாத மழையும், படைநடவடிக்கையும் வன்னி மக்களை என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக பாதித்திருக்கின்றது. பருவ காலத்திற்கேற்ற பயிர்ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
முதலமைச்சரின் நிலைப்பாடு எமது தேர்தலில் எந்தவிதமான ஆதிக்கத்தையும் செலுத்தாது:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் திம்பு கோட்பாட்டையும் மிஞ்சியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எப்ப எங்கே சொன்னாங்கள் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று. சர்வதேச விசாரணையை தவிர வேற எதனையும் எந்த காலத்திலும் ஆதரிப்போம் என்று சொன்னதது கிடையாது. அந்த நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகும் தொடரும் வேறு எவரின் நிலைபாட்டிலும் ஐயப்பாடு இருக்கலாம். ஆனால் எமது மனதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. சனல் 4 க்கு கசிந்த ஆவணம் உண்மையானது இ…
-
- 9 replies
- 1.7k views
-
-
வெள்ளி 17-02-2006 20:15 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] இரவில் நடமாடும் இந்த மர்ம மனிதன் யார்? யாழ்ப்பாணம் கரம்பன் உசன் குடியிருப்புப் பகுதிகளில் இரவு வேளைகளில் மர்ம மனிதன் ஒருவரின் நடமாட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் அவதானித்ததுள்ளனர். இதனால் இரவு வேளைகளில் வெளியில் வர மக்கள் அஞ்சுவதாகவும் இரவில் இரணுவத்தினரின் அச்சம் ஒருபுறம் இம்மனிதனின் நடமாட்டம் இன்னொரு புறம் என்பதால் அச்சத்துடனேயே மக்கள் இரவைக் கழிக்கின்றனர். இம் மர்ம மனிதனை இரவு 9மணிக்கு பின்னர் அவதானித்த அப்பகுதி இளஞர்கள் சிலர் இவரை கைதுசெய்ய எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த உருவம் நிர்வானக் கோலத்தில் கிறிஸ் போன்ற வழுவழுப்பான பதார்த்தம் பூசியிருப்பதாகவும் ஒருதடவை பிடிப்பதற்காக துரத்தி சென்ற வே…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்று எனக்கு பஸ்ஸிலிலும் செல்ல முடியாதுள்ளது. விமானத்திலும் செல்ல முடியாதுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் இந்த நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தமையே. நான் இன்று ஒரு போத்தலுக்கு அடைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறேன். என்னால் முழுமையாகச் சாப்பிடவும் முடியாதுள்ளது. சாப்பிடும்போது யாராவது ஒருவர் வந்து அதன் ஒரு பகுதியினைப் பறித்துக் கொண்டு செல்கிறார். மேற்கண்டவாறு தெரிவிப்பது வேறு யாருமல்ல.. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே… கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைக் கழக மாணவர்களால் ஜனாதிபதியின் படமொன்று போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் நினைவுப் பரிச…
-
- 3 replies
- 1.7k views
-
-
செம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு February 18, 2019 குளோபல் தமிழச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு அகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின்…
-
- 7 replies
- 1.7k views
-
-
சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்' [21 - July - 2007] ஏ.ரஜீவன், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான பொது இணக்கப்பாட்டை எட்டாவிட்டால் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்தால் நாடு மறக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கொழும்பில் சுதந்திரசதுக்கத்தில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மோதல் போக்கு தென்பட்டதாகவும் நாட்டின் தலைவர் ஒருவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனங்கள், தொழிற்துறையின் சங்கம், கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
மூலம் பதிவில் இருந்து: http://www.pathivu.com/news/6159/54/.aspx மாத்தறை மாவட்டதின் தவளம பிர தேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிரா மத்தில் கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இங்குள்ள சுமார் 50 மாணவர்கள் வீரபாண கனிஷ்ட வித்தியா லயமான சிங்களப் பாடசாலையில் சிங் கள மொழியிலேயே கல்விகற்றுவருகின்ற னர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 450 சிங்களக் குடும்பங்களும், 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் வாழும் இப்பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரு சிங்களப் படசாலையான இப்பாடசா லையிலும் போதிய வசதிகளின்றி மாண வர்களின் கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் விசனிக்கப்படுக…
-
- 15 replies
- 1.7k views
-
-
இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம். மார்ச் 26 ஆம் நாள் அதிகாலை இரண்டு பற்றலியன் சிறப்புப்படை அணிகளைக் கொண்ட 1,200 விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் தரையிறங்கியிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி மற்றும் 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் உட்பட 15,000 இராணுவத்தினர் ஆனையிறவில் இருக்க, 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள், 51, 52 ஆவது படையணிகள் மற்றும் 55 ஆவது படையணியின் சில பற்றலியன்கள் என ஏறத்தாழ 25,000 துருப்புக்கள், இதற்றுக்குப் பின்னால் இருக்க 1,200 விடுதலைப் புலிகள் நடுவில் தரையிறங்கிய துணிச்சல் தென் ஆசியாவை ஒருகணம் உறை…
-
- 1 reply
- 1.7k views
-