ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
யுத்த காலங்களில் கல்விக்கூடங்களை பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது. [Wednesday, 2012-11-21 06:33:31] இலங்கை உட்பட 24 நாடுகளில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கல்விக்கூடங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகளை படைத்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுத போராட்டம் நடைபெற்ற நாடுகளிலேயே அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுதக் களங்…
-
- 0 replies
- 292 views
-
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு 30 January 2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புர…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் அரசியலுக்கு திரும்பியிருந்தால் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ள விடங்கள் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்ப…
-
- 1 reply
- 505 views
-
-
கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, சிங்கள நடிகர்கள் நாளை கொழும்புவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, கடந்த மாதம் 19 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இதனையடுத்து, தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர், நடிகையர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதேபோல, சின்னத்திரை கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, இலங்கையில், அந்நாட்டு நடிகர், நடிகையர் போட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின மைதாணத்தில் இந்தப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிரியா இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறதாம். அறிவித்துவிட்டார்கள். ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய்கிறார்களாம்.பலஸ்தீனர்களுக்கு "காதில் பூ" வைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் தேர்தல் முடிந்துவிட்டது. சிரியாவிற்குப் படையெடுப்பு ஆரம்பித்து, ஈரானை இலக்கு வைக்கப் போகிறார்கள். யாராலும் தடுக்க முடியாதபடி மனித குலத்திற்கான அடுத்த பேராபத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். WASHINGTON (AP) — The White House and its allies are weighing military options to secure Syria's chemical and biological weapons, after U.S. intelligence reports show the Syrian regime may be readying those weapons and may be desperate enough to use them, U.S…
-
- 0 replies
- 411 views
-
-
தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்பின் போர் வெறியினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காக வட நெதர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து தமிழ் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தமது ஒருநாள் நிதியை துயர் துடைப்புக்காக வழங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 678 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர். 2006 முதல் 2008 வரையான காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வகை தொகையற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பல இளைஞர்கள் யுவதிகள் தமது உயிரை காத்துக்கொள்ள இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்திருந்தனர். அத்தகைய சூழல் திரும்பியிருப்பதான மனோ நிலை யாழில் திரும்பியுள்ளமையே இச்சரணடைதல் மூலம் வெளிப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலக இணைப்பதிகாரி கனகராஜ் இவ்வாறு…
-
- 0 replies
- 377 views
-
-
’பொதுக்கூட்டம் நடந்தால் கொவிட் மீண்டும் வரும்’ பொதுக்கூட்டங்கள் கூட்டப்படுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், இதுபோன்ற பொதுக்கூட்டங்களை, அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொவிட்-19இன் பதிவுகள் குறைந்து வரும் நிலையில், சிலர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக, அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்துவதன் மூலம், சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டு…
-
- 1 reply
- 584 views
-
-
வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு – நரம்பியல் மாநாட்டில் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் நெகிழ்ச்சி 05 Mar, 2026 | 04:43 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃ…
-
- 3 replies
- 205 views
- 1 follower
-
-
அரசாங்கம் வெளியேறச்சொன்னால் இரட்டிப்பான பலத்துடன் வெளியேறத் தயாராக இருப்பதாக கூறுகிறார் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2490&cat= மலையக மக்கள் முன்னணியின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்க முடியாது அரசாங்கம் தம்மை வெளியேற்றினால் தாம் வெளியேறுவதற்கு தயாராகவே உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார். கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய தேவை தனக்கு ஏற்படவில்லை. அதே வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் தற்போதைக்கு ஏற்பட வில்லை எனக் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 979 views
-
-
பொலிஸ் வேடமிட்டு கொள்ளையிட்ட அதிபயங்கர கொள்ளையர்கள் சிக்கினர் பொலிஸ் சீருடை அணிந்து கொண்டு தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று கூறி பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்றை நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கொடமுள்ள பகுதியில் வீடொன்றுக்கு காரொன்றில் பொலிஸ் சீருடையில் சென்ற நால்வர் தங்களை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்தி கொரோனா நோய்த் தொற்று சந்தேக நபர்களை குறித்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக க…
-
- 0 replies
- 288 views
-
-
எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை Published By: Vishnu 16 Mar, 2026 | 04:49 AM இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது! யாழ்ப்பாணம் – நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக 7 பேர் கொண்ட குழு இளைஞரது வீடு தேடி மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது. இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், குறித்த குழுவை விரட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்கு உள்ளாகியதால் இரண்டு பேர் சிக்கினர். குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக…
-
- 0 replies
- 391 views
-
-
வடகிழக்கு கடற்பரப்பில் மீண்டும் தாழமுக்கம் வெள்ளி, 05 டிசம்பர் 2008, 00:36 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] தாயகப் பகுதியான கிழக்கு கடற்பரப்பில் 750 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும், சுழல்காற்றும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சிறிலங்காவின் மேற்கு. வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாகவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கரையோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 801 views
-
-
சங்ககிரி அருகே பூமியில் பிளவு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் பிளவு ஏற்பட்ட பகுதியை நூற்றுக் கணக்கான மக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான இருகாளூர், அரியாம்பாளையம் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் பூமியில் நேற்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு பென்சில் நுழையும் அளவிற்கு அகலத்துடனும் இரண்டு அடி ஆழத்துடனும் காணப்படும் இந்த பிளவு சுமார் 60 அடி தூரத்திற்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையிலிருந்து பத்தடி தூரத்திற்கு இப்பிளவு ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் இந்த பிளவினை பார்த்து அதிர்ச்சி…
-
- 1 reply
- 1k views
-
-
Nimirvu தமிழ்மக்களை தமிழ் அரசியல்வாதிகளில் பலர் கூட சிறுபான்மை இனம் என்றே விழிக்கும் நிலை காணப்படுகின்றது. சம்பந்தன் ஐயா கூட பல இடங்களில் சிறுபான்மை இனம் என சொல்லிக் கொண்டு வந்தார். உண்மையிலே தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை இனமாக கொள்வதா அல்லது தேசிய இனமாக கொள்வதா என்கிற விவகாரம் 70 களிலேயே தீர்க்கப்பட்ட விவகாரம். என நிமிவுக்கு கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த அரசியல் கூட்டமொன்றில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரை அவர்கள் பேசும் போது "தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம். அவர்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள்" என்று குறிப்பிட்டார். அதற்கடுத்து பேசி…
-
- 0 replies
- 382 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் அடைந்து வரும் வெற்றியை திசை திருப்புவதற்காகவே கரு ஜெயசூரிய ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் விரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – போராளி சாட்சியம். வெளிவரும் கொடூரங்கள். இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் முன்பாக புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு சாட்சியம் அளித்தார். மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் போனதற்…
-
- 4 replies
- 709 views
-
-
ரிஆர்ரி வானொலியின் சமூகப்பணியும் சுயநல அரசியல் நோக்கங்களும் புறக்கணிக்கப்படும் மக்களும்! Published on December 30, 2012-6:58 pm · பிரான்ஸில் உள்ள ரிஆரி வானொலியின் சமுகப்பணியின் கீழ் மனிதாபிமான உள்ளம் கொண்ட நேயர்களின் நிதி உதவியுடன் குழந்தைகளுக்கான பால்மா பிஸ்கற் வகைகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவின் கீPழ் உள்ள நேரியகுளம் கந்தசாமிகுளம் கிறிஸ்தவகுளம் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னப்பண்டிவிரிச்சான் பெரியபண்டிவிரிச்சான்; பரப்புக்கடந்தான் ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கினார். ரிஆர்ர…
-
- 1 reply
- 513 views
-
-
இந்தியா செல்கிறது இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழு இலங்கை– இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு செல்வதற்கு முன்னதாக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சிலரை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாத இறுதிக்குள் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மீனவப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் அமைச்சர் மஹிந்த அமரவீரரை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். …
-
- 0 replies
- 177 views
-
-
வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் எங்களுக்கே :மகிந்த ராஜபக்ஷ. வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எதிர் கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் எம்மை கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு – கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவை …
-
- 0 replies
- 368 views
-
-
வெற்றியா? தோல்வியா? திகதி: 20.12.2008 // தமிழீழம் // த.தமிழ்நேசன் 2008.09.12ம் நாளிலிருந்தே அதிர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி - பூநகரி - பரந்தன் சாலையிலும் சூடு பறக்கிறது. வன்னியின் கிழக்கே அளம்பில் வரைக்கும் வந்து விட்டது சிங்களப்படை. மாங்குளம் ஒலுமடு என்றொல்லாம் பரவியுள்ளனர். முகமாலையிலும் முறுகல் நிலையே நிலவுகிறது. இதுதான் இன்றைய களநிலவரம். எத்தனையும் மறக்க வேண்டிய தேவையில்லை. மறைப்பதானால் விளையப்போகும் நலன்களுமில்லை. உள்ளதை உள்ளபடியே உரைப்பதன் மூலம் உண்மைநிலையை உணர்ந்து கொள்வோம். சிங்களப்படையின் வலுமிகு படைப்பிரிவுகள் களத்தில் நிற்கின்றன. சிறப்புக் கமாண்டோக்கள், கெமுனுகோவா, கஐபா போன்ற சிறப்புப் பயிற்சி பெற்ற அணிகளே களத்தில் நிற்பதை காண முடிகிறது.…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா,பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத…
-
- 1 reply
- 1.3k views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார்கள் எனவும், தமிழ் இளைஞர்களைப் போன்றே சிங்கள இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிலர் சிங்கள இளைஞர்கள் பற்றி மட்டுமே பேசுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயிரக் கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையக் கண்டறிந்துகொள…
-
- 0 replies
- 215 views
-