ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009ம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ‘ஆபதன்போஸ்தன்’ வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான க…
-
- 0 replies
- 704 views
-
-
அமெரிக்காவின் எதிர்காலத் திட்டம் – ரிச்சர்ட் ஆர்மிரேஜ் விளக்கம்SEP 10, 2015 | 2:11by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொண்டுள்ள அவர், சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான எதிர்கால உறவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம், சிறிலங்காவில் ஜனநாயகத்தின் அற்புதத்தை காண முடிந்தது. அமெரிக்காவின் பார்வையில், நாம் இப்போது தென்கிழக்காசியாவின் மீது கவனம் செலுத்தவுள்ளோம். ஆசியாவிலும் கூட அதற்கான தேவை உள்ளது. ஏனென்றால் நாம் பாரிய ப…
-
- 3 replies
- 739 views
-
-
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பலுக்காக இந்த கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/248655
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக. ஐ.நா மற்றும் பிரான்சுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய தயான் ஜெயதிலக, இது தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுகையில், “இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்காப் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி, 'நடுநிலையற்றது'. விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம் இது. சாதாரண இராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக…
-
- 0 replies
- 268 views
-
-
Published By: VISHNU 06 APR, 2025 | 07:48 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன…
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் கடுமையான எதிர்ப்பை நேரில் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஜே ராப் வடக்கில் மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிட்ட கருத்துகள் மற்றும், இரணைப்பாலை. சென்.அந்தனீஸ் மைதானத்தை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதல் என்ற டுவிட்டரில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்டவற்றுக்கே சிறிலங்கா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனும், வெளிவிவகாரச் செயலருடனும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார் ஸ்டீபன் ஜே ர…
-
- 3 replies
- 377 views
-
-
அமெரிக்காவின் கருத்துக்கள் தவறானது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் பண்புகள் ஏனைய நாடுகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சகல குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை எனவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் கருத்து பிழையானத…
-
- 4 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் விமானங்களை வாங்கும் சிறிலங்கா அமெரிக்க அரசாங்கத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான, Rosoboronexport நிறுவனம் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், 2014ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க திறைசேரியினால் கருப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் மூலமே சிறிலங்கா விமானப்படைக்கான விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஐ-171 உலங்குவானூர்திகள…
-
- 0 replies
- 222 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் விசா விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக அவரது பெயர்அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதால்தான் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டடிருக்கின்றது. அமெரிக்காவின் கலிபேர்னியா நகரில் இடம்பெறும் சர்வதேச உடற்பயிற்சிப் போட்டி ஒன்றில் பங்குகொள்வதற்காக இலங்கையின் சார்பில் பங்குபெறவிருந்த குழுவினரது விண்ணப்பமும் கருணாவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் நிராகரிக்கப்பட்டிருக்க…
-
- 2 replies
- 1.6k views
-
-
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க திடீரென அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக லலித் வீரதுங்க ஜெனிவா சென்றிருந்தார். நேற்று அவர் அங்குள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார். இந்தநிலையில், அவர் திட…
-
- 7 replies
- 667 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவுக்கு சிறிலங்கா வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்ட…
-
- 6 replies
- 5.6k views
-
-
அமெரிக்காவின் குற்ற சாட்டை ஒரு பொருட்டாக இலங்கை மதிக்கவில்லை - ரம்புக்வெல வவுனியா நிருபர் சனிக்கிழமை , மார்ச் 13, 2010 அமெரிக்காவின் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்ற சாட்டினை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என ரம்புக்வெல கூறியுள்ளார். கடந்த புதன் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சின் மனித உரிமை திணைக்களம் தனது மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை அப்பட்டமான மனித உரிமை மீறல்களை போரின் இறுதி கட்டத்தில் செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்ற சாட்டினை இலங்கை அரசாங்கம் சார்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமெரிக்கா இவ்வாறான கருத்தினை கடந்த நான்கு வருடங்களாக கூறிவருகின்றது. ஆனால் இது அவர்களின் வழமையான நடவடிக்கை. தமது நிறுவ…
-
- 2 replies
- 493 views
-
-
22 NOV, 2024 | 11:01 AM இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களில் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் …
-
- 1 reply
- 190 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்…
-
- 6 replies
- 994 views
-
-
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம் நிலவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் ரொபர்ட் ஓ பிளெக் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அகதி முகாம் நிலவரங்களை நேரில் பார்வையிட்டவர் என்ற வகையில் இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஏனைய உயர் ராஜதந்திரிகள் அகதி முகாம் …
-
- 1 reply
- 766 views
-
-
அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சிக்கு மரைன் கொமாண்டோக்களை அனுப்பியது சிறிலங்கா அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர். 26 நாடுகள் பங்கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி, எதிர்வரும், 27ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 2ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து, அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம், ஹொனொலுலு, மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது. இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மரைன் படைப்பிர…
-
- 0 replies
- 128 views
-
-
அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த சிறீலங்கா மார் 11, 2013 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டுப் பிரேஇரணையொன்றை (Joint Resolution) சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சிறீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரியவருகிறது. இதனால், ஜெனிவா இராஜதந்திர சமர்க்களத்தில் கொழும்பு அரசு கடும் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாமென அறியமுடிகின்றது. அதேவேளை, தமது கோரிக்கைக்கு சிறீலங்கா பச்சைக்ெகாடி காட்ட மறுத்ததாலேயே அந்த நாடு மீது தமது போக்கை அமெரிக்க வல்லரசு ஜெனிவாவில் இறுக்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பிரேரணையொன்றைத் தாக்கல் செய்வதற்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் - கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்க…
-
- 0 replies
- 629 views
-
-
அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இதுபோன்ற அடிபணிவு பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்காவின் அரசாங்கங்களுக்கு அதிகாரமில்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். அதிகாரபூர்வமாக ஒரு இராணுவத் தளம்…
-
- 0 replies
- 658 views
-
-
இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் 50 நாடுகளைச்சேர்ந்த சுமார் 102இ000 படையினர் ஆப்கானிஸ்தானில் கடமையில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படை அறிவித்துள்ளது. பல வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2004 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறுவதற்கு தீர்மானித்திருந்தன. ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற படையில் 68,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58316-2013-02-05-04-13-55.html
-
- 1 reply
- 584 views
-
-
அமெரிக்காவின் சித்திரவதைத் திட்டங்களுக்கு சந்திரிக்கா அரசாங்கம் உதவியது? 06 பெப்ரவரி 2013 அமெரிக்காவின் சித்திரவதைத் திட்டங்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அசராங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினரால் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு இலங்கை உள்ளிட்ட 54 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசிய சிறைச்சாலைகள், பயங்கரவாதிகளை போக்குவரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு…
-
- 1 reply
- 597 views
-
-
அணு விடயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள ஈரான், இலங்கையில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்கிறது. 106 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் 180,000 குடும்பங்களுக்கு மின் விநியோகிக்கப்படவுள்ளது. ஈரானின் SUNIR என்ற நிறுவனத்துடன் 2009ம் ஆண்டு அப்போதைய இலங்கை மின்துறை பிரதி அமைச்சர் சாகல ரத்நாயக்க "RE8," என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் நிறுவனம் மின் உற்பத்தி திட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதற்கான காப்புறுதியை ஈரான் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வழங்குகிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாதென இலங…
-
- 1 reply
- 641 views
-
-
முக்கியச் செய்தி25/02/2009, 17:06 [ செய்தியாளர் சத்தியன் ] அமெரிக்காவின் செனட் சபையின் இலங்கை நிலவரம் குறித்த கவனம் செலுத்தப்பட்டது - வொய்ஸ் ஒப் அமெரிக்கா அமெரிக்காவின் செனட் சபையின் இலங்கை நிலவரம் குறித்து வெளிவிவகார குழு முன்னிலையில் கவனம் செலுத்தப்பட்டதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை செனட் சபை உறுப்பினர் பொப் கேஷியின் தலைமையில் நடவடிக்கைகைள் ஆரம்பமாகிய போது அமெரிக்க அதிகாரம் வாய்ந்த செனட் சபையில் இலங்கை நிலவரம் குறித்து வெளிவிவகார குழு முன்னிலையில் கவனம் செலுத்தப்பட்டுதுடன் முன்னாள் தூதுவருட்பட மூவர் சாட்சியமளித்துள்ளனர். சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் காப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்…
-
- 0 replies
- 707 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவுள்ள அமெரிக்காவின் செயலை ஒரு பாடசாலை மாணவனுடன் மல்யுத்த வீரர் ஒருவர் யுத்தத்திற்கு போவது போல உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'ஒரு தீர்மானம் தேவையற்றது. அவர்களிடம் சான்று இருப்பின் அவர்கள் அதை எம்மிடம் தந்திருக்க வேண்டும்' எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டு ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்ற நிலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிக…
-
- 0 replies
- 262 views
-
-
சிறிலங்கா போரின் பின்பகுதிக் கட்டங்களை அமெரிக்கா இராணுவ செய்மதிகள் இரகசியமாக கண்காணித்துள்ளன. அமெரிக்கா அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான சாட்சிகளை இச்செய்தமிப்படங்களில் ஆராய்ந்து கொண்டுள்ளனர் என த ரைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச் செய்மதிப்படங்கள் உள்ளதிலேயே மிக உயர் பிரிதிறனாக உள்ளன என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு சிறிலங்கா தொடர்பாக அடுத்த கிழமை கூடும்போது இச்செயமதிப் படங்கள் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை வழக்கை வலிமையாக்கும் என்றும் அச் செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது. போர்க்குற்றங்களை விசாரிக்கும் அலுவலகமானது சிறிலங்காவை விசாரித்துக் கொணடிருப்பதாகவும், போர் நடந்த இடங்குளுக்குச் செல்ல ஒருவருக்கும் அனுமதி இல்லாமல் இருந்ததால், இச்செய்மதிப்…
-
- 0 replies
- 1.1k views
-