ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142957 topics in this forum
-
இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆங்கில ஊடகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. உரிய அங்கீகாரமில்லாமல் இவர்கள் தொழிலாளர்களாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் பரிசாரகர்களாகவும் பணிபுரிவதாகவும் பல்வேறு நகரங்களிலுள்ள உணவுச் சாலைகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புள்ளி விபரம் "உத்தியோகபூர்வ மதிப்பீடு" என்று கூறியுள்ள அந்த ஊடகம் அதேசமயம் உண்மையான தொகையை நாட்டின் குடிவரவுத்துறைத் தலைவர் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. "நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் தொடர்பாகக் குறிப்பிட்ட சோதனைகளை நாம் …
-
- 1 reply
- 605 views
-
-
3வது தடவையாக மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்போம்.! இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆரம்பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் சுமத்தி வருகின்றனர். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடாக மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு …
-
- 0 replies
- 239 views
-
-
கோட்டா... நாடு திரும்புவது குறித்து, தெரியாது – ரணில்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com…
-
- 0 replies
- 205 views
-
-
வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 04:25 GMT ] [ புதினப்பலகை - வவுனியா செய்தியாளர் ] அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை சிறிலங்கா அரசாங்கம் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா பணியகத்தின் பொறுப்பதிகாரியான மேரிஸ் லிமோனார் என்ற பெண்மணி தனது வாகனத்தின் பின்புறமாகச் சென்று குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 இருசக்கர உழவு இ…
-
- 9 replies
- 1.4k views
-
-
WHO இலங்கைக்கு நிதியுதவி! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான மருந்துவத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=164916
-
- 0 replies
- 312 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதி சபை கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே.ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாள்கின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டு…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கில்... சீனாவின் ஆதிக்கத்தை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம் அடைக்கலநாதன். வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம். அந்தவகையிலே வடக்கில் ச…
-
- 1 reply
- 355 views
-
-
பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற மாத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவர் இரண்டு வருட ஒப்பந்த காலம் உட்பட ஐந்து வருடங்கள் கடந்தும் நாடு திரும்பவில்லை. அத்துடன் இவர்பற்றிய தகவலும் இல்லாதிருப்பதாக யுவதியின் தாயார் மேரி நவஜீவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரபாஜினி என்ற 34 வயது நிரம்பிய யுவதியே இவ்வாறு டுபாய் நாட்டுக்குச் சென்று தகவல் இல்லாதுள்ளவராவார். தனது மகளின் தகவல்களைப் பெற்றுத்தருமாறும் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
- 0 replies
- 251 views
-
-
சேவலும், மொட்டும் இணைந்தது நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தேர்தல் வெற்றியின் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார். சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்…
-
- 1 reply
- 382 views
-
-
"உண்மையைக் கண்டறியும், ஆணைக்குழு"வை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக... புதிய சட்டம்! இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் எனTk; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டிய…
-
- 0 replies
- 117 views
-
-
மன்னாரில் ஐந்து தமிழர்கள் கைது வீரகேசரி இணையம் 11/13/2010 12:10:33 PM மன்னார் பேசாலைப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் உட்பட 05 தமிழர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அவர்களுடைய வீட்டில் வைத்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்தச்செல்லப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை வானில் சாதாரண உடையில் வந்த அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செபஸ்ரியன் சீலன் குரூஸ், எஸ்.ஏ. மரியந்தா, எஸ்.ஜெனிபர் குரூஸ், எஸ். பெனோ பெல்ரானோ, எஸ். மசன்ற் குரூஸ் ஆகிய ஐவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைகளின் பின் இவ…
-
- 0 replies
- 465 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்…
-
- 15 replies
- 1.4k views
-
-
வடக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி !! வடக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி !! வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என்று மாகாண தொழில்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாணத்தில் தும்பு, நெசவுக் கைத்தொ…
-
- 1 reply
- 582 views
-
-
' ஸ்போர்ட்ஸ் சைன் ' மென்பொருள் மூலம் 800 கோடி ரூபா பண மோசடி : ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை By VISHNU 13 SEP, 2022 | 01:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் சுமார் 800 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஐவரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மென் பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தின் பிரதானிகள் ஐவரின் வெளிநாட்டு பயணங்களையே இவ்வாறு தடை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திளகரத்ன உத்தரவிட்டார். மஹரகமவை சேர்ந்த அமித் விக்ரமசிங்க, குருணாகல் பகுதியைச் சேர்ந…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந் துன் நெத்தி மீது யாழ்ப்பாணத்தில் வைத்து இனந் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று சக்தி வானொலி தெரிவித்தது. இவர்கள் இருவரும் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரான மொஹமட் ஹொடெக் மற்றும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கடந்த 14ஆம் திகதி மாலை ஞாயிற்றுக்கிழம…
-
- 0 replies
- 302 views
-
-
தமிழரசுக்கட்சிப் பொறுப்பினை ஒப்படைக்க விரும்புகிறேன் – சம்பந்தன்! அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து, துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்…
-
- 4 replies
- 792 views
-
-
யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்காக நிதி வழங்கியுள்ள நோர்வே அரசு யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது இலட்சம் ரூபா செலவில் பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகல…
-
- 3 replies
- 513 views
-
-
குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே போதுமானது. பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட,…
-
- 0 replies
- 238 views
-
-
புதிய அரசமைப்பு: கருவில் கலையும் சிசு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்குச் சாதகமாக வெளிவரத் தொடங்கியவுடனேயே, எழுந்த முதலாவது கேள்வி, கூட்டு அரசாங்கம் தொடருமா என்பதல்ல. கூட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடருமா என்பதாகவே இருந்தது. கூட்டு அரசாங்கம் தொடராது என்பது, தேர்தலுக்கு முன்னரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கூறி வந்த ஆரூடமாகத்தான் இருந்தது. ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களும் கூட, தனித்து ஆட்சியமைக்குமாறு தமது தலைமைக்கு நச்சரித்துக் கொண்டிருந்தனர். எனவே, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பாதகமாக…
-
- 0 replies
- 235 views
-
-
"தேசிய பேரவை" நாளை மறுதினம், முதல் தடவையாக.. கூடவுள்ளது – சபாநாயகர். தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன்படி, டக்ளஸ் …
-
- 0 replies
- 232 views
-
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் எண்ணம் இப்போதைக்கு இல்லை! புலிகளின் இராணுவப் பேச்சாளர் தகவல் http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள ஐ.நா அலுவலகங்களை மூட சிறீலங்கா அரசு திட்டம் * Tuesday, December 7, 2010, 3:31 வடக்கில் கிளிநொச்சி மற்றும் கிழக்கில் திருமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களை மூடுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மற்றும் திருமலை ஆகிய பிரதேசங்களில் இயங்கிவரும் யுனிசெஃப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் ஆகியவற்றின் அலுவலகங்களை இந்த வருட இறுதிக்குள் மூடுமாறு சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் நிர்வாக அலுவலகங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு வெளியில் மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவ…
-
- 1 reply
- 437 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை ஒழுங்கு முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் (எம்.நியூட்டன்) ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை ஒழுங்கு முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டால் ஒருங்கிணைப்பின் மூலம் எதனையும் செய்ய முடியாது எனத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இவ்வாறான விடயங்களை நான் கூறுவதனால் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். சபையின் 118 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர்…
-
- 0 replies
- 85 views
-
-
பதவிகளை ஏற்காது மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - சஜித் By NANTHINI 20 OCT, 2022 | 05:08 PM (எம்.மனோசித்ரா) பதவிகள் எதனையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கு அரசாங்கம் மக்கள் மீது பிரயோகிக்கும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மஹரகம பல் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்க…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
இலங்கையின் வடமாகாணத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுடைய உணவு பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாகவும் அவர்கள் தங்களது வருமானத்தின் 65 வீதத்தை உணவுக்காக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது. உலக உணவு திட்டம், யுனிசெப் மற்றும் இலங்கையின் மருத்துவ ஆய்வு நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்திய ஆய்வு ஒன்றிலேயே இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களில் 1755 குடும்பங்களிடையே அவசர நிலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமை தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டிரு…
-
- 1 reply
- 639 views
-