ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் நாட்டு மக்களை தொடர்ச்சியாக தவறாக வழிநடத்துவதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் துறைமுகத்தின் ஆகக் கூடிய ஆழமான 17 மீற்றர், பெரிய சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்குவதற்குப் போதுமானதாக இல்லை என்பது தொடர்பாக ஐதேக சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சீனாவின் நிதி உதவியில் 1.4 பில்லியன் டொலரில் கட்டப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தென்பகுதியை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டங்களில் முதன்மையானதாக விளங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவ…
-
- 1 reply
- 632 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தா?- பிரதமர் தெரிவித்தது என்ன? இலங்கையின் தென்பகுதி கடல் ஊடாக ஊருடுவல் இடம்பெறும் என இலங்கை அரசாங்கம் கவலையடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சில நாட்களிற்கு முன்னர் கொழும்பில் பிரதமர்ஆற்றிய உரை குறித்து தெளிவுபடுத்தும் விதத்தில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் தங்கள் தென்பகுதிக்கான கட்டளைபீடத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதால் அச்சமடையதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். பிரத…
-
- 0 replies
- 335 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாட்டுக்கு முதலீடுகளே தேவைப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை. கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் இடமளிக்கவில்லை. முடிந்தளவு கடன்களையே பெற்றுக்கொண்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால், அரைவாசி துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். tamilwin.com
-
- 1 reply
- 475 views
-
-
சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது அவற்றை பாதுகாப்பதற்கான அனைதத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் - இந்தியா தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk
-
- 1 reply
- 297 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும், போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்…
-
- 0 replies
- 258 views
-
-
ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல முன்னர், சிறிலங்கா கடற்படையின் ‘சமுத்ர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன் இணைந்து, ஜப்பானிய போர்க்கப்பலான அமகிரி பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. பாதுகாப்பு அணி II இன் தளபதி கப்டன் கோகே சாய்டோ தலைமையிலான ஜப்பானிய கடற்படை அணி,சிறிலங்கா கடற்படையுடன் நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில…
-
- 0 replies
- 350 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நாளை வரப்போகும் முதலாவது கப்பலை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை பிரதி அமைச்சர் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள வைபவத்தில் முதலாவது கப்பல் வரவேற்கப்படும் என்று துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டைய பட்டுப் பாதையை நினைவுகூரும் வகையில் பிரித் பாராயணத்துடன் ஒரு வழிகாட்டிப் படகு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும். இதையடுத்து முதலாவது கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும். ஜெட் லைனர் கப்பல் மற்றும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மற்றொரு கப்பல் என்பனவும் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும். …
-
- 3 replies
- 638 views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்ட செலவு 30 மில்லியன் ரூபாய்கள்! அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழாவை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (24) தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே அரச தரப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்டது. அதனை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன், சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. இந்த தொகையில் 18 மில்லி…
-
- 1 reply
- 795 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை என்ன செய்யப் போகின்றோம்? விளக்குகிறது சீன நிறுவனம் Share பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம், துறைமுக அதிகாரசபையுடன் உடன்பாடு செய்து கொண்டது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்…
-
- 0 replies
- 167 views
-
-
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யொமுரி சிம்புன் நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கப்பல் போர்க்கப்பல் என்ற பிரிவிற்குள் வரவில்லை,அது ஆராய்ச்சி கப்பல் என்ற பிரிவிற்குள் வருகின்றது அந்த கப்பல் அம்பாந்தோட்டை வருவதற்கு நாங்கள் அவ்வாறே அனுமதி வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை- ஜனாதிபதி | Virakesar…
-
- 0 replies
- 242 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வேண்டினாலும், நான் பதவிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் பறிப்பேன் என மகிந்த சூளுரைத்துள்ளார். மத்தல மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்களை கையகப்படுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டிபோடுகின்றன. இது பற்றி பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எனது ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான, மத்தல, அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களையும் கொள்வனவு செய்வதற்கு சீன, இந்தியா முதலீட்டாளர்கள் முயற்சித்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், எமது ஆட்சியில் அவையனைத்தையும் மீண்டும் எமது அரசாங்க…
-
- 10 replies
- 736 views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா அமைத்துவரும் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்த சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா அமைத்துவரும் துறைமுகப்பணிகளை விரைவுபடுத்த சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவுடன் அனைத்துலக சமூகம் பகைமை கொண்டுள்ளது எனக்கூறுவது கனவு. சீனாவும், ஜப்பானும் சிறிலங்காவில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சிறிலங்காவில் சீனா மூன்று பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நுரைச்சோலையில் அமைக்கப்படும் அனல் மின்நிலையமும் சீனாவின் முதலீடாகும். …
-
- 2 replies
- 758 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவிடம் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக, ஜப்பானிய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இட்சுனோரி ஒனோடெரா தமது உயர்மட்டக் குழுவுடன், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சுக்களை நடத்தினார். சிறிலங்கா பாதுக…
-
- 0 replies
- 424 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெ…
-
- 2 replies
- 900 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த கருத்துக்களை நிராகரித்தது சீனா இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கும் சீனாவின் முயற்சிகளின் பின்னால் இராணுவ நோக்கங்கள் உள்ளன என ஊடகங்களில் வெளியான செய்திகளை சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் நிராகரித்துள்ளார். திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த செய்திகளிற்கு உள்நோக்கம் கொண்ட சிலரே காரணம் என லூ காங் கருத்து தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்தின் அபிலாசைகளின் வெளிப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக கொள்கைள் மற்றும் சமத்துவம் பரஸ்பர நன்மைகள் அடிப்படையில் இலங்கையுடன் அம்பாந்தோட்டைதுறைமுக திட்டத்தில் ஈடுபடு…
-
- 0 replies
- 231 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் - ஜனாதிபதி Published By: Rajeeban 27 Mar, 2023 | 09:17 AM அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும்இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்…
-
- 0 replies
- 653 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் நாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை ரோக்கியோவில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ஜப்பானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் கடந்த ஞாயிற்றுக…
-
- 0 replies
- 161 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கடன் பொறியில்லை என்பதை நிரூபிக்கப்போகின்றேன் – ஜனாதிபதி கருத்து அம்பாந்தோட்டைதுறைமுகம் கடன்பொறியில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்கவிரும்புவதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பல பூகோள அரசியல் அவதானிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கையை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதற்கான சீனாவின் கடன்பொறி என அர்த்தப்படுத்துகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது உண்மையில்லை என்பதை நிருபிக்க விரும்புகி;ன்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த பாரிய திட்டம் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற…
-
- 0 replies
- 320 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டு குத்தகை க்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வொசிங்டன் எச்சரிக்கையுடன் செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. “நாம் மிகக் கவனமாக கண்காணிப்போம். இவை நீண்டகால நோக்கில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்” என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரி…
-
- 1 reply
- 379 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு மத்தள வானூர்தி நிலையம் இந்தியாவுக்கு இலங்கையின் சமாளிப்பு வியூகம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகாலப் பகுதிக்கு சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவைச் சமாளிப்பதற்காக துறைமுகத்தை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துக்கு மத்தல வானூர்தி நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் வானூர்திப் போக்குவ…
-
- 8 replies
- 583 views
-
-
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சன் குகவரதன் தெரிவித்தார். இதனால் மண்சரிவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வேறு இடங்களில் காணிகளை உடனடியாக வழங்கி அங்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சன்குகவரதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறை முகத்த…
-
- 0 replies
- 550 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையங்களுக்கு 300 கோடி டொலர் முதலீடு சனிக்கிழமை, 16 மார்ச் 2013 18:08 அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு 300 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60852-----300----.html
-
- 3 replies
- 1.3k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழலே சீனாவின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனா இடையிலான கடல்வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த டிசம்பர் மாதம் சீனா கையெழுத்திட்டது. இது தவிர, அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் சீனா எண்ணியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஜனவரி 7ஆம் திகதி…
-
- 0 replies
- 261 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம்!! சீனாவின் எரிச்சல்! அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இப்போது சீனாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டிஜி போட்டியில் சீனா தனது முதலாவது கடல் கடந்த தளத்தை நிறுவிய பின்னர் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மேலும் பல தளங்களை சீனா நிறுவப் போவதாக ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் பசுபிக் தீவான வனாட்டுவில் சீனா கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வனாட்டுவில் சீனாவின் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கும் பெரும் அ…
-
- 1 reply
- 643 views
-
-
அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 3 replies
- 405 views
-