Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை கல்முனையில் படையினர் மீது தாக்குதல் : நான்கு பேர் பலி. அம்பாறை மாவட்டம் கல்முனையில் வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் அதிரடிப்படை சார்ஜண்ட் ஒருவர் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது வீதிரோந்தில் அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதினால் அதிரடிப் படையின் சார்ஜண்ட் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. . - சூரியன்

  2. அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரி.எம்.வி.பியைச் சேர்ந்த இரண்டு பேர் மீது இன்று காலை 7:30 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சம்பவத்தை சம்மாந்துறை பொலிசாரும் உறுதிசெய்துள்ளனர், சம்பவத்தில் காயமடைந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  3. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முதல் நாள் அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 862 views
  4. அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ....... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4928.html

    • 0 replies
    • 1.4k views
  5. அம்பாறை சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 80 குடும்பங்களுக்கு நேசக்கரம் நிதியுதவியுடன் உலர் உணவு பொருட்களை வழங்கப்பட்டது. பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்தில் 80 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர். இக் குடும்பங்களுக்கு அரசா அரசசார்பற்ற நிறுவனங்களினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படாத நிலையில், நேசக்கரம் தொடர்பாளர்கள் மேற்படி பிரதேசத்திற்குச் சென்று நிலமைகளை அறிந்து உதவிகளை வழங்கியுள்ளனர். இவ் நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட சம்மன்கண்டி மக்கள் பாதிக்கபபட்டு மூன்று தினங்களாக ஒரு நேர உணவை மட்டும் பெறக்கூடியதாக …

    • 2 replies
    • 733 views
  6. அம்பாறை சிறப்பு அதிரப்படை முகாம் மீது தாக்குதல்: இருவர் பலி, நால்வர் காயம். அம்பாறை திருக்கோவில் பகுதியில், அண்மையில் சிறப்பு அதிரடிப்படையினரால் நிறுவப்பட்ட முகாம் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு தங்கவேலாயுதபுரம் சங்கர் மலையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் நான்கு படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலின் போது முகாம் முற்றாக சேதமடைந்துள்ளது. -Pathivu-

  7. அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுகிறது தடுக்க திராணியற்று இருக்கும் மாகாண சபை காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும் ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடசாலை சிங்கள வலயத்திற்குள் இருப்பதனாலேயே இந்த நிலை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கும் தெரிவிக்கபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கல்வி செயற்பாடுகள் யாவும் மாகாண சபை நிர்வாகத்திற்குள் இருப்பதனால் ஏன் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்…

    • 3 replies
    • 1k views
  8. அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர். இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க…

  9. அம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது என்று குறித்த தேர்தல் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சயனொளிபவன் தெரிவித்தார். நாவிதன்வெளியில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலிலே…

  10. அம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020 அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு த…

  11. அம்பாறை தாக்குதல் மேலதிக விசாரணை – சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைப்பு:- அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்கூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு …

  12. அம்பாறை திருக்கோவில்-4, மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடற்று வாழ்ந்து வந்த ஐந்து குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கனடா குமரன் விளையாட்டு கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒரு வீடு 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. பயனாளிகளுக்கான காணி, பிரதேச செயலக காணிப்பிரிவு ஊடாக வழங்கப்பட்டது. வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து கொண்டு, அடிக்கல்லினை நாட்டினார். உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிராம சேவகர் எஸ்.ச…

  13. தமிழீழ விடுதலைபுலிகளின் இலங்கையில் பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணி PFLT அம்பாற்றை மாவட்டதில் 17 தேர்தல் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதுக்காக மனுத்தாக்கல் செய்து உள்ளார்கள் எண்று BBC சிங்கள சேவை செய்தி வெளியிட்டு உள்ளது அம்பாறை அரச அதிகாரியான(GA) சுனில் கன்னன்கரா தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணியினர் 17 வேட்பாளர் விண்ணப்பமனுக்களை சமர்பித்து உள்ளார்கள் எண்றும், அந்த விண்ணப்பங்களில் அந்த கட்ச்சியின் பொது செயலாளர் நாயகம் "யோகரட்ணம் யோகி" அவர்கள் கையொப்பம் இட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.. 17 மனுக்களில் 14 மனுக்களில் தேசிய அடயாள அட்டை இலக்கங்கள் குறிக்கப்ப…

    • 5 replies
    • 1.8k views
  14. 1 Min Read April 27, 2019 அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. #Ampara #srilanka #Nintavur #eastersundayattacklk http://globaltamilnews.net/2019/119657/

  15. மட்டக்களப்பு - கல்முனை வீதியில் உள்ள நீலாவணைப் பிரதேசத்தில் சிறிலங்கா அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 837 views
  16. அம்பாறை பகுதியில் குடும்பப் பெண் சுட்டுக்கொலை நேற்று திங்கட்கிழமை இரவு 7.35 அளவில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் 48 அகவையுடைய பரமேஸ்வரி லீலாவதி என்ற குடும்பப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் குறிப்பிட்ட ஆயுததாரிகள் அவரது 25 வயது மகனை தேடி வீட்டிற்கு சென்றதாகவும் அவர் வீட்டில் இல்லாததால் அவரது தாயாரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 897 views
  17. அம்பாறை பக்கி மிட்டியாவில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 4 அதிரடி படையினர் காயம் வீரகேசரி இணையம் அம்பாறை பக்கியாமிட்டியவில் இன்று புதன்கிழமை முற்பகல் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நிலக் கண்ணி வெடித் தாக்குதல் இடம் பெற்றுள்ளது . இதில் 4 விசேட அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . காயமடைந்த அதிரடிப்படை வீரர்கள் அம்பாறை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை பக்கிமிட்டியா , கோவில் சந்தியில் இராணுவத்தினர் பயணித்த பவள் வாகனத்தை இலக்கு வைத்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்லது . இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…

    • 3 replies
    • 2.5k views
  18. அம்பாறை பாணமை பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியிலுள்ள பாணமையில் லவுக்கல பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சியகள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள். இப்படுகொலைகளை சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பினர் 13 விடுதலை புலிகளை சுற்றிவளைப்பு தேடுதலின் போது சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கின்றனர். இம்மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலை புலிகளின் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டதாகவும், தாக்குதலின் போது விசேட அதிர…

  19. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் பிரிந்து பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு விடும் என்று கூறப்படும் நிலையில் த.தே.ம.முன்னணி தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைப்பதற்காக கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை முற்றாக கைவிட்டிருந்ததுடன் தமிழ் மக்களின் கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டுவிட்ட கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்த்தரப்பிடமும் அம்பாறையில் தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் ஓர் பகிரங்க வ…

    • 3 replies
    • 490 views
  20. அம்பாறை பிரதிநிதித்துவம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. ஃபேரியல் அஷ்ரப் தோல்வி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன…

    • 14 replies
    • 1.7k views
  21. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் October 9, 2024 அம்பாறை மாவட்டத்தை ‘வே….வெத்திலை பெட்டியாக’ பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது. அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உ…

  22. அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரீ.கலையரசன் இதனைத் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பிக்கு ஒருவர் பாரிய அளவான தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்துள்ளார். அங்குள்ள தொட்டச்சுருங்கிவட்டை மற்றும் மலையடிவட்டை பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் அவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த காணிகள் பௌத்த விகாரைக்கு மாற்றப்பட்டு சிங்கள குடியேறிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விடுவித்துக் கொள்ள சம்பந்தன் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/41025…

    • 5 replies
    • 542 views
  23. அம்பாறை மத்திய முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் மூவரால் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆஜராகுமாறே அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் தொடர்பில் மரண விசாரணை நடத்திய அன்றிருந்த அம்பாறை முன்னாள் நீதவான் மற்றும் மரண விசாரணை மேற்கொண்ட அன்றிருந்த அம்பாறை நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆகிய இருவருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மத்திய முகாமின் பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவத்தினத்தன்று கடமையில் இருந்த காமினி குமாரச…

  24. அம்பாறை மத்தியமுகாம் கிராமத்தில் குண்டுதாக்குதல் 5பேர் காயம் எழுதியவர் R.Thurai Sunday, 07 January 2007 அம்பாறை சென்ரகாம் நகரில் இன்று 10.30மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. விவசாய பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரு சிங்களவர் இரு முஸ்லீம் ஒரு தமிழர் என மொத்தம் 5பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கல்முனை அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை நகரிலிருந்து மேற்காக 20கிலோ மீற்றருக்கு அப்பால் இக்கிராமம் அமைந்துள்ளது. நூறுவீதம் தமிழர்களை கொண்ட இப்பகுதி 1981,1983,1990 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்களாலும் ஸ்ர…

    • 0 replies
    • 860 views
  25. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் வௌ்ளம் [ பிரசுரித்த திகதி : 2011-02-02 05:37:25 AM GMT ] அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்றிரவு தொடக்கம் இன்று காலைவரை பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதனால் மீண்டும் ஒரு சில இடங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக எமது மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறான காலநிலை நீடிக்குமானால் மீண்டும் ஒருசில குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இங்கினியாகல குளக்கட்டின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.