Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூரண விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்- சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கம்! Published on May 23, 2011-2:12 pm · No Comments யுத்தத்தின் இரண்டாவது வருட நிறைவில் யுத்தம் முடிந்து வி;ட்டது என்று நாம் சந்தோஷப்படலாம். ஆனால் யுத்தத்தின் கடைசி வாரங்களில் இடம்பெற்றவை கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் பெரும் துன்பியலாகும். நடந்தவற்றை நியாயப்படுத்துவதை விட பூரண விசாரணை நடத்துவதும் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ளுதலுமே நல்லிணக்கம் காணுவதை சாத்தியமாக்கும் என சிறிலங்காவின் சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கத்தின் தலைவர் எட்வேர்ட் மோர்டிமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தும் படி அழ…

  2. கைவிடப்பட்டார் கனகரத்தினம்! மைத்திரிக்கு ஆதரவளிக்க முடிவு? கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சியின் முல்லைதீவு மாவட்ட அமைப்பாளருமான கனகரத்தினம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடத்திற்கு இறுதி யுத்த சாட்சியமான வைத்தியர் சண்முகராசா நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரி பக்கம் மாறிய அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நட்பு கொண்டிருந்தமை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடாமை ஆகியவற்றின் அடிப்படையில் மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினது அறிவுறுத்தலையடுத்தே கனகரத்தினம் கழற்றிவிடப்பட்டுள்ளார். இதையடுத்து கனரத்தினம் தனது ஆதரவை மைத்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூட்டமைப…

  3. மட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை!! கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சற்றுலா சேவை, மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் திருமதி பல்தசார், மட்டக்களப்பு வர்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  4. May 27, 2011 இந்தியா, பாகிஸ்தான் உட்பட 85க்கும் அதிகமான ஜனநாயக நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் சுதந்திரம் இலங் கையில் செல்லாக்காசாகியுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட ஜனநாயக விரோத சர்வதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவால் அரசாங்கத்துக்கு தலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக விழுமியங்களாக கருதப்படும் தகவல் சுதந்திரம் தொடர்பாக ஐ.தே.க முன் வைத்த தனிநபர் திருத்தச் சட்டமூல யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ஜனநாயக விரோத ஆட்சியை அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்…

  5. சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்! சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனைய…

    • 26 replies
    • 2.6k views
  6. Wednesday, June 1, 2011, 12:28சிறீலங்கா தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பியை நேற்று (31-05-2011) பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன. தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய போல் மேர்பி, தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் …

  7. இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ´நான் மைத்திரிபாலவை தொலைபேசியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்´ என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36781/57//d,article_full.aspx

    • 0 replies
    • 366 views
  8. புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…

    • 20 replies
    • 1.6k views
  9. நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்கிறார் சம்பந்தன் மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதற்கு எங்களுடைய எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை - திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்த…

  10. அரசின் தலையாய கடமை எது? [27 - March - 2007] இலங்கையில் ஒரு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவது அவசியமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மூத்த ஐ.நா. அதிகாரிகள் மற்றும் பல தேசிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் இலங்கை அரச தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. ஆட்கடத்தல்கள், பலவந்தமாக காணாமற் போதல்கள், கொலைகள் செய்யப்படுதல் அடங்கலான பல்வேறு மனித உரிமை மீறல்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பது கண்கூடு. எவ்வாறாயினும், அவை அரசாங்கத்திற்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்கு மிகைப்படுத்தப்பட்டும் சோடிக்கப்பட்டும் வருவதாக அரசாங்க முக்கியஸ்தர்கள் வாதிட்டு வருகின்றனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீது மட்டும…

  11. [ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 13:00 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மே 30 அன்று, ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அதில் ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்த சம்பவமானது மகிந்தவின் அரசாங்கம் அது நாள் வரையில் ஓரளவு பேணிப் பாதுகாத்திருந்த ஒட்டு மொத்த கௌரவத்திற்கும் பாரிய இழுக்கு ஏற்பட வழிவகுத்தது. இவ்வாறு மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவை தளமாகக்கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath சிறிலங்கா பற்றி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத…

    • 1 reply
    • 1k views
  12. விடுவித்த காணியை மீண்டும் பிடிக்க முயற்சி – CSDயினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தில் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிர…

  13. இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் பொய்யுரைத்துள்ளார் என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜன…

  14. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை நீக்கும் பணிகள் இன்று (22) கொழும்பில் இருந்து ஆரம்பமாகிகப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய அனர்த்த முகாமைத்துவ, பொதுசனத் தொடர்பு மற்றும் கிறிஸ்தவ விகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முசாமில் ஆகியோரின் தலைமையில் இந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. http://tamil.srilankamirror.com/news/item/1310-2015-01-22-02-25-21

  15. Published By: DIGITAL DESK 3 04 JUL, 2023 | 02:50 PM முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் சமூக கௌரவத்துக்கு உரியவர்கள். தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக விதையானோர் வரலாற்றுக்குரியவர்கள் மட்டுமல்ல அவர்களே எதிர்கால வரலாற்றினை உயிராகவும், உயிர்பாகவும் வைத்திருப்பவர்கள் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. …

  16. அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என் மீதும், என் தந்தை மீதும் அதைச் செய்யுங்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை. திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன். எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன…

  17. பேருந்து விபத்து பொதுமக்கள் 17 பேர் பலி. - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 10:30 காலியில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது கெண்டைனர் ஒன்றுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியமையால் ஏற்ப்பட்டதாகும். இது தொடர்பான மேலதிக விபரம் தெரியவரவில்லை. சங்கதி

  18. பசில் ராஜபக்ஷவே எனது தெரிவு: ஆனால் மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கோட்டா அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவேண்டுமென தாம் விரும்புவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதிமுடிவை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தாம் நினைக்கவில்லை எனவும் கோட்டா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று பேசியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். http://athavannews.com/பஸில்-ராஜபக்ஸவே-எனது-தெர/

  19. இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத…

    • 1 reply
    • 498 views
  20. [ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:59 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜுலை 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்க…

  21. பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடி…

  22. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் போராட்டம் written by adminJuly 31, 2023 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது https://globaltamilnews.net/2023/193522/

  23. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் சேர்ந்தால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் அதுதான் இலங்கை போன்ற நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய மறுக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார் நீதி அமைச்சர் ஹக்கீம். . ஆசிய ஆபிரிக்க சட்டமன்றத்தின் 50ஆவது அமர்வில் மேற்கூறப்பட்டது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஹகீம் கூறியுள்ளார். இதேவேளை, ஆசிய ஆபிரிக்க சட்ட மன்றத்தில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான விளக்கத்தினை வழங்கும் முகமாக அடுத்த வாரம் மலேசியாவில் பயிற்சி பட்டறையொன்றை சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார். சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச வர்த்தக சட்டம், சட்டவிரோத ஆட்கடத்தல், பெண் மற்றும் சிறுவர் துஷ்பிர…

  24. சிறீலங்காவுக்கா நிதியினை நிறுத்துக: யப்பானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து சிறீலங்காவுக்கான யப்பானியத் தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மாருவெலப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மட்டக்களப்பில் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்வதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு யப்பான் வழங்கும் அபிவிருத்தி நிதி யுத்த தளபாடத்திற்கே பயன்படுவதாகவும் எனவே சிறீலங்கா அரசுக்கு வழங்கும் நிதியினை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

    • 0 replies
    • 701 views
  25. விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் இலங்கை அரசை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ, புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தின் விளைவுகள் இலங்கை அரசை இப்போது மீள முடியாத மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. புலிகளின் கதை முடிந்தது’ என்று கொக்கரித்த மஹிந்த ராஜபக்ஷேவை ‘சேனல் -4’ வடிவத்தில் இப்போது புலிகளின் ஆவி வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வன்னியில் 2009 ம் ஆண்டு மே மாதம் பெரிய முள்ளிவாய்க்காலுடன் விவகாரத்தை முற்றிலும் தீர்த்தாகி விட்டது என்று பெருமூச்சு விட்ட இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு இப்போதுதான் உண்மையான சோதனைக் களம் திறந்திருக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்ற ஐ.நாவின் அறிக்கை ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதாரத் தடை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.