Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்தை அமைக்க உதவுங்கள் அமைச்சரவையில் இணைந்து கொள்ளுங்கள்- தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சம்பிக்க அழைப்பு July 30, 2020 நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆங்கில நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஒற்றையாட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்சவுடன் இணைந்து போட்டியிடுகின்றவர்கள் ஜனநாயக சக்திகள் இல்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க மகிந…

  2. அரசாங்கத்தை ஆதரிப்பது பிழை என்றால் எது சரி - பிரபா கேள்வி October 21, 2012 03:14 pm அரசாங்கத்தை ஆதரித்து நின்று இன்று பல தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முடிந்துள்ளது. ஏதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து இதனை செய்திருக்க முடியுமா என முகத்துவாரம் இந்து கல்லூரியின் கணித விழாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பினார். மேலும் தனது உரையில், இன்று கொழும்பு மாவட்டத்தில் பல தமிழ் பாடசாலைகளின் கட்டிடங்கள் என் மூலம் கட்டப்பட்டு தளபாட பற்றாக்குறை நீக்கப்பட்டு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு அபிவிருத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தையும் செய்யக் கூடியதற்கான காரணம் நான் அரசாங்கத்த…

  3. ஜெனரல் சரத் பொன்சேக்கா அதிகாரத்திற்கு வந்தால் முழு நாடும் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதியும், அவரது ஊடகப் பரிவாரங்களும் பிரசாரம் செய்துவருகின்ற போதிலும், கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டின் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தியது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக நிறுத்துவது என அந்தக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து அறிவிப்பதற்காக இன்று மதியம் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சேவினால் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இராணுவ…

  4. அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு ஐயாவுக்கு சங்கரி ஐடியா இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு (ஐயா) நேற்று (27) அவர், கடிதமொன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள், தங்க…

  5. In இலங்கை June 18, 2020 1:44 pm GMT 0 Comments 1114 by : Vithushagan தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர்.அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய…

    • 2 replies
    • 651 views
  6. அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது பிர­தி­ய­மைச்சர் இரான் விக்­ர­ம­ரட்ன நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன் நாட்டில் ஜன­நா­யகம், பொரு­ளா­தாரம் என சகல துறை­களும் வலு­வ­டைந்து வரு­வதன் மூலம் அர­சாங்கம் ஸ்திர­ம­டைந்­துள்­ளது. எனவே அடிப்­ப­டை­வா­தத்தை மேலெ­ழச்­செய்து அதி­கா­ரத்தைக் கைப்­பெற்ற எதிர்த்­த­ரப்­பினர் முயற்­சிக்­கின்­றனர். எனினும் இந்த அர­சாங்­கத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­போதும் ஆட்சி கவிழ்க்க முடி­யாது என பிர­தி­ய­மைச்சர் இரான் விரக்­ர­ம­ரட்ன தெரி­வித்தார். வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அந்த செவ்­வியின் விபரம் வரு­மாறு, கேள்வி : 2017 ஆம் ஆண்­டுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட…

  7. அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கிறார் ரணில்..!: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் தேசிய பொருளாதாரம் பாதாளத்தில் விழும் (எம்.மனோசித்ரா) ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டடும் என முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பிடிவாதத்துடன் செயற்பட்டு ஜி.எஸ்.பி. சலுகை இழக்கப்படுமாயின் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் தேயிலைக்கு காணப்படும் வாய்ப்ப்ப…

    • 4 replies
    • 731 views
  8. அரசாங்கத்தை கவிழ்க்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய அமைச்சர்? மேல் மாகாணத்தின் மாவட்டம் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சர் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். எதிர்வரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்த்து, புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இந்த அமைச்சர் திட்டமிட்டுள்ளார். எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக…

  9. அரசாங்கத்தை கவிழ்க்க சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன – பிரதமர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பது யதார்த்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முதலீட்டு உடன்படிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…

  10. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கவும், அரசாங்கத்தை ஏற்படுத்தவும் பொது பல சேனா அமைப்பால் முடியும் என அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க பொது பல சேனா அமைப்புக்கு எந்த தேவையும இல்லை. பொது பல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் முடிந்தால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அமைச்சர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் சிலர் முஸ்லிம் சகோதரத்துவத்தை பயத்திற்கு உள்ளாக்கி வைத்திருப்பதாகவும் இவர்கள் பொது பல சேனாவுடன் மோதி முஸ்லிம் மக்கள் முன்னிலையில் எதிர்ப்பு போல் காட்டி வருகின்றனர். மேலும் அமைச்சர் வாசுதேவ நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக கூறி வருகின்…

    • 1 reply
    • 313 views
  11. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் - சாணக்கியன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்த…

  12. அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெர…

  13. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்காது ஜெயராஜ் பெர்னாண்டோ [sunday December 09 2007 08:27:53 PM GMT] [யாழினி] ஆளும் தரப்பிலிருந்து எவர் எதிர்த்தரப்புக்கு மாறினாலும் வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதி. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்காது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை எவராலும் அசைக்க முடியாது. வரவு செலவு திட்டத்தை வெற்றி கொண்டு எமது ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எத…

  14. அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே எனவும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்த கனவு வெறும் கனவாகவே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2017ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில்…

  15. நீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள். என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை …

    • 4 replies
    • 901 views
  16. அரசாங்கத்தை கவிழ்ப்பேன் - ரணில் சூளுரை ! [Friday, 2014-03-14 20:17:19] 2001ம் ஆண்டைப் போன்றே இந்த தடவையும் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார். அவிசாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தொழி…

  17. 'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ…

    • 10 replies
    • 1.3k views
  18. எதற்­காக இரு­த­ரப்பி­ன­ருக்­கி­டை­யே புதி­தாக பேச்­சு­வார்த்­தைகள் : வாசு­தேவ நாண­யக்­கார இலங்­கையின் ஒற்­றை­யாட்­சியை கைவி­டு­வது தொடர்பில் அர­சாங்கமும் தமிழ்த் தேசிய்க கூட்­ட­மைப்பும் இண­கக்­கப்­பாட்டை ஏற்­ப­­டுத்திக் கொண்­டுள்ள நிலையில் எதற்­காக இரு­த­ரப்பி­ன­ருக்­கி­டை­யே புதி­தாக பேச்­சு­வார்த்­தைகள் எனக் கேள்வியெழுப்பும் மஹிந்த ஆத­ரவு எம்.பி. வாசு­தேவ நாண­யக்­கார, இந்­தி­யாவை மீறி புலம்பெயர் அமைப்­புக்­களின் தேவையை நிறை­வேற்ற கூட்­ட­மைப்பு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்­டியுள்ளார். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­­­சே­ன­வுடன் ரணில் விக்­கி­ர­மசிங்கவு­­டனும் இர­க­சி­ய­மான பேச்­சு­வார்த்­தை­களை தமிழ்த் தேசிய…

    • 4 replies
    • 668 views
  19. 20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்க வேண்டும்:- ஹரின் பெர்ணாண்டோ - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊவா:- ஊவா மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சர் பதவியை கூட எதிர்;க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக துறக்க தயார், ஆளும்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சசீந்திர ராஜபக்ச ஊவாமக்களின் தேவைகளை ப+ர்த்தி செய்ய தவறிவிட்டார், சிறிய விடயங்களை கூட சரிசெய்ய தவறிவிட்டார். அவர் சிறிய விடயங்களில் ஆரம்பித்திருக்கவேண்டும்- உதாரணத்திற்க்கு சிறுவர்களுக்கு சிறியளவு பாலை வழங்குவது- அதனால் மக்க…

  20. அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது – ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிர்கட்சிகளின் முயற்சிகளை தோற்கடிப்பது எவ்வாறு என ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தோற்கடிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். முழுமையான அமைச்சரவை இன்னமும் பதவியேற்காத போதிலும்- பிரதமர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் நிதியமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி …

  21. சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும் பன்மொழி வித்தகரான சுவாமி விபுலானநந்த அடிகளார் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் இறுதி நாளான நேற்றைய தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ…

  22. இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து எனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். அதனால், எனது கணவரை ஒப்படைத்தது போலத் திருப்பித் தரும்படி காணாமற்போன இராசையா இராத்தனன் என்பவரின் மனைவி சுபத்திரா ஞாயிற்றுக்கிழமை (06) சாட்சியமளித்தார். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை (05) முதல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக சனிக்கிழமை(5) 25 பேர் சாட்சியமளித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (6) சாட்சியமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன்போதே சுபத்திரா என்பவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

    • 0 replies
    • 566 views
  23. அரசாங்கத்தை பலப்படுத்த பல்முனை ’டீல்’ ஆர்.யசி அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் தற்போது புதிய அமைச்சரவை ஒன்றினை உருவாக்கிக்கொள்வதில் அவர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார். இந்நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் முலமாக இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களை தொடர்புகொண்டு இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அராஜக நிலைமை மற்றும் அவசரகால சட்டத்தை பிறப்பித்து மக்களின் வன்முறை செயற்பாடுகளை கட்…

  24. அரசாங்கத்தை பாதுகாக்கிறது கூட்டமைப்பு! எப்படியான சவால்கள் வந்தாலும் நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருட்டுத்தனமாக கடன் பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள மகிந்த ராஜபக்ச, திருட்டுத்தனமாக கடனை வழங்கும் நாடுகள் இருக்கின்றனவா என கேள்வி எழுப்பியுள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…

  25. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்... நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.