ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
ஈழத்தமிழருக்கான தனித்துவமான திரைப்படத்துறையை சிறப்புற கட்டிஎழுப்புவதட்காக கலேஞ்சர்களையும் அவர்களின் படைப்புகளையும் அவை குறித்த செய்திகளையும் மற்றும் தொடர்புகளையும் ஒரு இணையத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கமிக்க செய்வதின் மூலம் ஊக்குவித்து மக்கள் மையபடுத்தி தொழில்மயமாக்கல் http://www.eelamcinema.com/ Diaspora cine artists initiate web project to promote Eezham Cinema [TamilNet, Thursday, 20 May 2010, 12:21 GMT] A web-based project to launch a bilingual database and news services related to Eezham Cinema has been initiated by some Tamil diaspora film artists. The move was launched on 18 May, the Gencidal War Crimes Day against Eezham Tamils, and the f…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம…
-
- 15 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண்டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது. நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகையற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப்பாடுகள்தாம். ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜகமும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக்கப்படும் விவகாரங்களாகிவிட்டன. இலங்கை ஆட்சி அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தொடரவுள்ளதாக கூறினார். நேற்றுக்காலை தெஹிவளை பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உலகில் எல்லா நாடுகளிலும் அந்நாட்டின் தேசிய மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இ…
-
- 9 replies
- 1.5k views
-
-
எம் மக்களின் வாழ்க்கையை நினைக்க அழுவதா,சிரிப்பதா? என்ன சொல்லி புரியவைக்க? இலட்சக்கணக்கான மக்கள் எம் தாயகத்தில் இடம்பெயர்ந்து மரநிழல்களிலும்,காடுகளிலும்,வ ிஷஜந்துக்களுடன் ஒருநேர உணவே கனவாக இருக்க, விமானக்குண்டு வீச்சிலும்,எறிகணை மழையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை தினம்தினம் பறிகொடுத்திக்கொண்டு நாளைய விடியலே நிச்சயமற்று வாழ்ந்துகொண்டிருக்க புலம்பெயர் மண்ணில் எம்மில் பல உறவுகள் ஐயோ! எல்லா இடத்தையும் ஆமிக்காரன் பிடிக்கிறான் இனி என்ன எங்களையும் அந்தந்த நாட்டுக்காறன் திருப்பி அனுப்பப்போறான் சே....அங்கை போய் என்னத்தை செய்ய? இந்த வாழ்க்கை அங்கை கிடைக்குமா என்று இப்பவே கதைக்குதுகள். என்ன கொடுமை? அங்கே சாவது எம் சொந்த உறவுகள் என்பது புரியாத புதிரோ இல்லை நாகரீகமா…
-
- 2 replies
- 1.5k views
-
-
மேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூ…
-
- 5 replies
- 1.5k views
-
-
வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க Digital News Team 2022-07-20T12:41:23 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது . இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்ல…
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கும் முயற்சியில், குறைந்தது இன்னும் 100,000 இராணுவர்கள் சிறிலங்கா இராணுவப் படையில் இணைக்கப்படவுள்ளார்கள். வெளிநாடுகளில் எஞ்சியிருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் புதுத் தலைமையின் கீழ் மீண்டும் உயிரூட்டப்படலாம் என்ற கவலை எழுந்ததாலேயே சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்பப்படவுள்ளதாக, இராணுவக் கட்டளை அதிகாரி சரத் பொன்சேகா, திங்கட்கிழமை, தொலைக்காட்சி செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இராணுவப்படை 200,000 ஆக உள்ளது என்றும், விரைவில் அது 300,000 ஆக மாறும் என்றும், அப்போது புலிகளால் முன்புமாதிரி தங்களை மீளக் கட்டியெழுப்ப சுலபமாக இருக்கமுடியாது என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu…
-
- 2 replies
- 1.5k views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவிப்பு 15 மே 2011 ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் திட்டமிட்ட வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவது நியாயமானது என தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும், நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் சுவிட்சர்லாந்து க…
-
- 12 replies
- 1.5k views
-
-
:arrow: [url=http://www.thinakkural.com/news/2006/9/19/images/news/front-S.jpg]முகமாலை மோதல்களின் போது லொறிகள் சேதமடைந்த நிலையில்... கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை பகுதியில் ஏற்பட்ட மோதல்களின் போது பொருட்களுடன் இராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ். வர்த்தகர்களுக்கு சொந்தமான லொறிகள் சேதமடைந்த நிலையிலும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையிலும் நிற்பதைக் காணலாம். ...
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
சகல மட்டங்களிலும் இராணுவ மயம் – பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும் இராணுவ பயிற்சி! Published on May 26, 2011-8:46 am · No Comments சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் பொது நிர்வாக மட்டங்களில் இராணுவ ஆட்சியே இருக்கின்ற நிலையில் முழுநாட்டின் நிர்வாகத்தையும் இராணுவ மயப்படுத்தவதற்கும், சகல மட்ட நிர்வாகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒரு அங்கமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சியை ஆரம்பித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கட்டமாக பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சியை வழங்க உள்ளது. பாடசாலை அதிபர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சியினை வழங்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ் பெண்ணை கொலை செய்த இவனை தெரிகிறதா August 01, 20154:18 pm கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். http://www.jvpnews.com/srilanka/118947.html
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?SEP 13, 2015 | 1:38by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக நிபுணர்களான மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் வழிகாட்டலில், சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அரசாங்கத்திடம், இந்த அறிக்கையின் நீர்எழுத்து முத்திரையிடப்பட்ட இரண்டு பிரதிகள் கையளிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
எட்டியாந்தோட்டை கித்துல்கல, புளத்கொவ்பிட்டிய, அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு பறந்த மர்ம விமானம் குறித்து முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக கேகாலை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வில்பர்ட் மஹாநாம தெரிவித்துள்ளார். களணி கங்கையில் இறக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விமானம் வெளிச்சமற்ற இரவு வேளைகளிலும் கொழும்பின் எந்த இடத்திற்கும் ரகசியமான முறையில் பறந்து செல்ல கூடியது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை தாம் கடந்த ஒருவருடமாக கேட்டுள்ளதாகவும் காவற்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரபாகரனின் குண்டுகளை விடவும் விலை அதிகரிப்பு அபாயகரமானது வீரகேசரி நாளேடு வாழ முடியாது மக்கள் தூக்கமருந்து குடிக்கின்றனர் என்கிறார் சரத் ரணவக்க எம்.பி. மக்கள் அரசாங்கம் என்று கூறி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் மக்கள் மீது நாளுக்கு நாள் பொருளாதார சுமையை ஏற்றிக்கொண்டே செல்கிறது. பொருட்களின் விலை அதிகரிப்பானது பிரபாகரன் வீசுகின்ற குண்டுகளை விடவும் அபாயகரமானது என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நா…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சீனர்களின் கலாசார நிகழ்வு சீனாவின் கலாசாரத்தை பறைசாற்றும், ஹுபேய் கலாசார நிகழ்வுகள் கிளிநொச்சியில் வெகு விமர்சையாக இடம்பெற்றன. கலாசார சுற்றுலா வாரத்தின் நிகழ்வுகளாக ஹுபேய் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. சீனாவின் கலை, கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையிலும், சீன-இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க, கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சீன கலாசாரத்தை எடுத்து இயம்பும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையிலும்…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
திரு.நடேசன், திரு.புலித்தேவன் ஆகியோருடன் 300 சிவிலியன்களும் சரணடைந்துள்ளனர் இணைய-பதிப்பு மலேசிய நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் சரணடைதல் மற்றும் அவர்கள் சிங்களப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிபுணர் அறிக்கையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் பீடம் 300 பொதுமக்களுடன் நிபந்தனையற்ற முறையில் சரணடைய விடுப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த செய்தியினை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம் ஆகியோருக்கு தெரிவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை சரணடைதல் பற்றிய செய்தியினை இலங்கை அமைச்சர் பசில் இராஜபக்ஷ மற்றும் பாதுக…
-
- 0 replies
- 1.5k views
-
-
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதிய…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிறது பாபநாசம். (படங்கள் இணைப்பு) தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் வித…
-
- 0 replies
- 1.5k views
-
-
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய் [14 - May - 2008] பழ.நெடுமாறன் "இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடே உலகம் முழுவதும் உணவுத் தானியங்களின் விலையேற்றத்திற்கு முதன்மையான காரணம்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிரொலித்திருக்கிறார். "இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் 35 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். செல்வம் பெருகும்போது சிறந்த உணவு வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து வேண்டும் என்று கேட்கத் தொடங்குவார்கள். இதனால், தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிப்பதால் …
-
- 1 reply
- 1.5k views
-
-
திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் தீவிபத்து 4 மீன் பிடி படகுகள் நிர்மூலம் நிஷாந்தி திருகோனமலை கொட்பே துறைமுகத்துக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது 4 ஆழ்கடல் மீன்பிடிப்ப்டகுகளில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை இப்ப்டகுகளில் தீவிபத்தையடுது அங்கே நின்ர கடற் படையினருக்கும் பொலிஸருக்கும் வேறு படகுகளிற்கு தீ பரவவிடாமல் கட்டுப்படுத்தியதாக திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் கீத் ஸ்ரீ தயானந்தா தெரிவித்தார். வீரகேசரி
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியிலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக பொருட்களை சேகரித்து தமது சொந்த தேவைகளுக்கு கருணா குழுவினர் பயன்படுத்திவருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக் களுக்கு கல்முனைப்பிரதேச மக்களிடம் வீடுவீடாகச் சென்று பொருட்களை சேகரிப்பதற்காக கல்முனையிலுள்ள அனைத்து கழக உறுப்பினர்களையும் இன்று (30-04-2009) காலை தமது அலுவலகத்துக்கு வரும்படி கருணாகுழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர். கருணா குழுவினரின் உள்நோக்கத்தைப் புரிந்த கொண்ட கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சமுகமளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கருணாவின் நம்பிக்கைக்குரிய இனியபாரதியின் வலதுகையும் கல்…
-
- 1 reply
- 1.5k views
-