ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
ஐ.நா விசாரணையை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும்! - என்கிறார் ஐதேக எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல. [Wednesday, 2014-04-09 09:37:24] அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நேற்று நாடர்ளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும்.அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாராக உள்ளதா? விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதல…
-
- 0 replies
- 266 views
-
-
அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு - அமைச்சர் தினேஷ் குணவர்தன தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தர…
-
- 8 replies
- 383 views
- 1 follower
-
-
இலங்கைத் தூதரகங்களை இந்தியாவில் அகற்ற வேண்டும் : திருமாவளவன் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இலங்கை அரசு…
-
- 0 replies
- 442 views
-
-
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்றுத் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப்பொருள்களை வழங்கும் நோக்குடன் இவ்விரு ஆயர்களும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அமைச்சும் உரிய அனுமதியை வழங்கியிருந்தது. இதன்படி நேற்றுக் காலை தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அநுராதபுரம் சென்று, அங்குள்ள ஆயரையும் அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வதற்க…
-
- 1 reply
- 324 views
-
-
வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் மறுத்திருந்தமை தெற்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வி அமைச்சர் நேற்றுக் கலந்துகொண்ட நிகழ்வில் எந்தக் கொடியும் ஏற்றப்படவில்லை. நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அந்த இடத்திலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட…
-
- 1 reply
- 333 views
-
-
(ஜே.ஜி. ஸ்டீபன் - ப. பன்னீர்ச்செல்வம்) ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த சபையில் சவால் விடுக்கின்றோம். நாம் தயாராகவே இருக்கின்றோம். எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை. ஐ.தே.க உரிய நேரத்தில் மஹிந்தவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவோம். இதற்கு அரசாங்கம் தயாரா என ஐ.தே.க எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா இன்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டம் மீதான இரண்டாம் மூன்றாம் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்து கேள்வியும் எழுப்…
-
- 2 replies
- 252 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 22 பேர் கைது ! சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட, 22 பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்தே, புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மன்னார், புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை…
-
- 1 reply
- 299 views
-
-
வடக்கிலிருந்து இராணுவத்துக்கு 1,000 தமிழர்கள் இணைப்பு - இராணுவப் பேச்சாளர் தகவல் 2007ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய இது இராணுவத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குறிப்பிடுகிறார். அதேவேளை இந்தக் காலப்பகுதியில் வட மத்திய மாகாணத்தில் ஆயிரத்தில் இரண்டு பேர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மேல் மாகாணத்தில் 0.7 வீதமான பெண்களே துஷ்பிரயோகத்திற்கு உள்ளனதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் ஆயிரத்தில் ஒர பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதன…
-
- 1 reply
- 411 views
-
-
தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் மேர்வின் சில்வா தான் மனைவிக்கு ஓய்வு வழங்குவதற்காக தான் அயல் வீடுகளில் செய்த வேலைகளையும் அதன் காரணமாக உருவான தனது வாரிசுகளைப் பற்றியும் தேவையேற்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ‘இந்த விடயத்தில்’ உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பௌத்தம் பௌத்தம் என வாய் கிழியப் பேசும் இன்றைய சிறிலங்கா அமைச்சர்களில் பெரும்பாலானொரின் நிலை இது தான் என்ற போதிலும் இதனை மேடை போட்டுப் பேச ஒரு அமைச்சர் துணிந்திருக்கிறார் என்பதும் இதனைக் கேட்டு கரகோசம் செய்து மகிழ மக்கள் இருக்கிறார்கள் என்பதும் பௌத்தத்தை கட்டிக் காக்கும் தேசத்தின் அழகை உணர்த்துகிறது. அநாகரீகத்தின் உச்சமான இந்த வீடீயோவைப் பார்க்க….. http://funnycric.blogspot.com/2010/…
-
- 4 replies
- 1.7k views
-
-
எட்டாம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.! வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று மற்றும் நாளைய தினத்தில் வீசும் நிலையுள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல் வோர், சுழியோடிகள், கடல்பயணங்களை மேற்கொள்வோர் எவரும் கடலுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் பிரேம லால் தெரிவித்தார். இலங்கையை சுற்றி வீசும் கடுங்காற்றினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படப் போகும் அசாதாரண நிலைமையை எதிர்கொள்ள அவ…
-
- 0 replies
- 465 views
-
-
வவுனியா செட்டிக்குளத்தில் தாக்குதலில் 2 காவல்துறை வீரர் பலி. வவுனியா செட்டிக்குளம் 17 வது காவல்துறை சோதனை சாவடியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் காவல்துறை உறுப்பினர்கள் இருவர் பலியாகினர். சேவைக்கு சமுகமளிக்காத காவல்துறை உறுப்பினர் அது தொடர்பில் தமது பரிசோதகரான உயரதிகாரியுடன் முரண்பட்டமை காரணமாக காவல்துறை உறுப்பினர் உயரதிகாரியின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர் தமக்கு தாமே துப்பாக்கி சூட்டை நடத்தி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் மூலம்- பதிவு
-
- 0 replies
- 993 views
-
-
கொக்குவில் பிரம்படிப் பகுதியில் படையினர் பாதுகாப்புடன் சிங்கள வர்த்தகர்கள் வியாபாரம் திகதி:20.08.2010 கொக்குவில் பிரம்படி ஸ்ரேசன் றோட் பகுதியில் நேற்று இராணுவப் பாதுகாப் புடன் சிங்கள வர்த்தகர்கள் திடீர் நடை பாதை வியாபாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக்காலை தொடக்கம் மாலை வரை 6 இற்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து மலிவு விலைகளில் பொருள் களை விற்றுள்ளனர். இவர்களது வியாபாரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அந்தப் பகுதியில் இராணுவத்தினரும் கடமையில் இருந்த தாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற வாள் வெட்டுச் சம்ப வத்தின் பின்னர் கொக்குவில் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் சோதனை,காவல் நடவடிக்கையி…
-
- 3 replies
- 722 views
-
-
அதிகளவில் புண்ணியங்களை சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம்! - ஜனாதிபதியின் வெசாக் செய்தி. [Wednesday, 2014-05-14 09:32:20] புத்த பெருமானின் போதனைகள் முழு உலகிற்கும் சாந்தியைப் பெற்றுக்கொடுப்பவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வெசாக் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரி நிர்வாணமடைதல் போன்ற மூன்று நிலைகளையும் நினைவு கூரும் வெசாக் பண்டிகை இவ்வருடம் பூரண அரச அனுசரணையுடன் நாடு முழுவதும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுகிறது.இந்த வெசாக் உற்சவம் பெளத்த மக்களாகிய எமக்கு மட்டுமன்றி உலகத்தில் வாழும் அனைத்து பெளத்த மக்களாலும் போற்றப்படுகின்ற புண்ணிய மகோற்சவமாக கருதப்படுகி…
-
- 8 replies
- 787 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த... 3 நிறுவனங்கள் தம்மிக்கவுக்கு..! – விசேட வர்த்தமானி வெளியீடு. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான, அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனம் செலந்திவ முதலீட்டு நிறுவனம் மற்றும் ஹொட்டல் டெவலப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் என்பன அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையிலான முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1290176
-
- 0 replies
- 189 views
-
-
காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர். அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த ம…
-
- 0 replies
- 525 views
-
-
பின்னால் யாருமில்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ்ஜின் பின்னணியிலேயே வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம் .கே சிவாஜிலிங்கம் வெளியிட்ட கருத்தில் எவ்வித உண்மையுமில்லை. அவரோ அல்லது வேறு எவருமோ எம் பின்னாலில்லை என வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகைப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் கட்டியுள்ள சுயேட்சைக் குழுவின் தலைவரும் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவருமாகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 355 views
-
-
மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய்! செலவு கட்டுபடுத்தப்பட்டிருந்தால் வன்னி மக்களுக்கு ‐ 1500 வீடுகள் அடங்கிய ஒரு கிராமத்தையே அமைத்திருக்கலாம் ‐ GTNசெய்தியாளர் இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதியாக 2006ம் ஆண்டு மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனாதிபதியின் பாவனைக்காக இருந்த வாகனங்களின் பெறுமதி 30,910,000 ரூபாவாகும். (மூன்று கோடியே ஒன்பது லட்சத்து பத்தாயிரம்) அது 2009ம் ஆண்டு இறுதியில் (இருநூற்றி நாற்பத்தி ஒரு கோடியே மூன்று லட்சத்து நாற்பத்தி ஆறாயிம்) 2,41,346,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த நான்கு வருடங்களில் ஜனாதிபதிக்கு 2,379,436,000 ரூபாய் பெறுமதியான வாகனத் தொகுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாகன தொகுதிக்காக வழங்க…
-
- 0 replies
- 498 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கமைவாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை சேகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டுக்கான மனி…
-
- 0 replies
- 215 views
-
-
ரணிலை, பதவி விலகுமாறு வலியுறுத்தி... நாளை எதிர்ப்பு நாளாக பிரகடனம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு அருகில் உள்ள நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது போல பதில் ஜனாதிபதி ர…
-
- 0 replies
- 250 views
-
-
2020 ஆம் ஆண்டு சு.க.வின் தனி ஆட்சி : மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனி ஒருபோதும் குடும்ப அரசியல் உருவாவதற்கு இடமில்லை. எனது தலைமையின் பின்னர் எனது குடும்பத்தில் ஒருவரும் கட்சியை ஆக்கிரமிக்கப்போவதில்லை. 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை விமர்சிக்க நினைப்பவர்களுக்கு இப்போது எனது கொள்கையும், நான் சர்வதேச தலைமைகளுடன் கொண்டுள்ள உறவும் என்னவென்று விளங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்…
-
- 0 replies
- 232 views
-
-
கோட்டாபயவை விட ரணிலுக்கே சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி (எம்.மனோசித்ரா) மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. எனவே பாராளுமன்றத்தைக் கலைக்குமாறும் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றது முதலே ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதற்கமையவே காலி முகத்திடல் ஆர்ப்பாட்…
-
- 2 replies
- 272 views
-
-
புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போதுஇ ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றுஇ தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்துஇ ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் குழுவில் அங்கம் பெறும்…
-
- 5 replies
- 1.9k views
-
-
இது ஒரு பழைய கடிதம். 2009 இன் ஆரம்பத்தில் வன்னிப் படுகொலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஈழத்தமிழர் படும் துயர் கண்டு வெதும்பிய சீகிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேசியத் தலைவரின் மகனுக்கு வரைந்த மடல். இதில் பல விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. ஆனாலும் அவரது நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது .....நீங்களும் படித்துப் பாருங்கள். சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம் (2009) சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருகோணமலை மாணவர் படுகொலை குறித்த விசாரணகைள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதனால் விசாரணைகளை தொடர்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அண்மைய சட்ட திருத்தங்களின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வழக்கு விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகத…
-
- 1 reply
- 203 views
-
-
மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டல் ஆரம்பமாகின்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 07:07:09| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்றிறன் அற்று உள்ளது என்ற கருத்தை“பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ்” என்ற இணையத்தளத்தில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா. சபை செயற்றிறன் அற்றுள்ளது என்ற தனது கருத்திற்கு ஆதாரமாக, இலங்கையில் நடந்த யுத்தத்தை அவர் முன்வைக்கின்றார். இலங்கை அரசு வன்னியில் யுத்தம் நடத்திய போது தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்றபோது அந்த மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதற்கு மேலாக இலங்கையில் நீண்ட காலமாக இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந…
-
- 6 replies
- 2.6k views
-