ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
Aug 22, 2011 / பகுதி: செய்தி / யாழ். தீவுப்பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சிங்கள மீனவக் குடியேற்றம்! யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தெற்கின் கவனம் திரும்பியுள்ள நிலையில் உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் தொடர்கின்றது. அதேவேளை நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்…
-
- 3 replies
- 951 views
-
-
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை 862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0…
-
- 0 replies
- 389 views
-
-
December 20, 2018 மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இன்று அவர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 338 views
-
-
Posted on : 2007-06-19 கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை தலைநகர் கொழும்பின் தங்குமிட விடுதிகளில் இருந்து அதிகாலை வேளையில் படையினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், அந்தக் கட் டாயத்தின்போது தாங்கமுடியாத பெரும் மன உளைச்சலுக் கும், அசௌகரியத்துக்கும், நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் ஆளானார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரச அதி காரவர்க்கத்தின் அந்த அறிவிலித்தனமான செயற்பாட்டின் பெறு பேறாக, தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த அதிர்வலைகள், அந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் சாதக மான புதிய நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதா…
-
- 0 replies
- 831 views
-
-
தற்போதைய அரசியலிலும், ஊடகங்களிலும் நேர்மை இல்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் சிறுபான்மையினரின் உரிமையை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamil.srilankamirror.com/news/item/2286-2015-04-20-15-41-37
-
- 2 replies
- 530 views
-
-
சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்திற்கு கல்லெறிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர் என கொக்குவில் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொக்குவில் பிரதேசத்தில் நேற்று இரவு 8.30மணியளவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. அதனை அவதானித்த மக்கள் சிலர் மின்னொளிகளைக் கொண்டு தேடியபோது மதிலில் இருந்து மர்ம மனிதனொருவன் பாய்ந்து ஓடியுள்ளான். ஓடியவன் நேராக வீதியில் நின்ற சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்தினுடாகச் சென்று மறைந்திருக்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர். இதனால் குறித்த பேருந்து அங்கிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த நாள் "கரும்புலிகள் நாள்": சு.ப.தமிழ்ச்செல்வன் [வியாழக்கிழமை, 5 யூலை 2007, 15:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த மிக முக்கியமான ஒருநாள் "கரும்புலிகள் நாள்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் சந்திரன் நினைவு சிறுவர் பூங்கா திறப்பு நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய சிறப்புரை: எமது குழந்தைகள் சிரித்து வாழவேண்டும். மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை கொடுத்த அந்த உன்னதமானவர்களின் இந்த நாளில் நாம் இந்தப் பூங்காவை திறந்து…
-
- 5 replies
- 2k views
-
-
பிரபாகரனை நேட்டோ படைகள் காப்பாற்ற முயற்சி செய்தபோது இந்தியா தடுத்ததாம் என்கிறார் டலஸ்! பிரசுரித்தவர்: NILAA September 7, 2011 இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான் வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான் நேட்டோவின் கனவு பலிக்காது போனதாக வும் அவர் கூறியுள்ளார். தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை இராணுவத்தின…
-
- 19 replies
- 1.9k views
-
-
ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சாந்த பண்டார சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு நேற்று தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடும்போது, சாந்த பண்டார புதிய உறுப்பினராக பதவி…
-
- 0 replies
- 671 views
-
-
ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன் நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது அது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.கே. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா வன்னி இன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது. இதில் விசேடமாக, அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட…
-
- 9 replies
- 663 views
-
-
முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நேற்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் கூறினார். ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்ற…
-
- 0 replies
- 466 views
-
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை. வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் கடற்பரப்பை அண்டிவாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எவ்வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை. இதேவேளை, நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்…
-
- 9 replies
- 729 views
-
-
ஞாயிறு 22-07-2007 23:40 மணி தமிழீழம் [சிறீதரன்] மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இதுவரை 4 ஆயிரத்திற்கு மேல் படுகொலை - கஜேந்திரன் மகிந்த ராஜபக்ச அவர்கள் சனாதிபதியாக பதவியேற்ற பின்னர் "மகிந்த சிந்தனை"யின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையினுள் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் தமிழ் மக்கள் மீது அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து நடை முறைப்படுத்தி வருகின்றார். அதன் பிரகாரம் தமது திட்டத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடிய தமிழ் தேசிய ஆதரவாளர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் கல்விமான்கள் என தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது வரையில் 4000 திற்கும் அதிகமானவர்களை கொலை செய்து 1000 திற்கு…
-
- 0 replies
- 642 views
-
-
சிறிலங்காவில் கொலைக்களம் எனும் சனல் 4 காணொளிக்கு எதிராக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட லைஸ் அக்ரே அபோன் காணொளியில் எதுவுமே இல்லை என சர்வதேச நெருக்கடிகள் குழு விமர்சித்துள்ளது. . சனல்4 காணொளியில் குறிப்பிடபப்ட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொய் என நிரூபிப்பதற்கு பதிலாக வேறுவகையான பிரச்சினைகலை புகுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக புலிகளைப்பற்றி அவர்களின் பயங்கரவாத செயல்களைப்பற்றியே கூடுதலாக விபரித்துள்ளார்கள். . சனல்4 காணொளியிலும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுக்களான வைத்தியசாலைகள் மீது எறிகனைத்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள், சிவிலியன்கள் கொல்லப்பட்டமை, கேணல் ரமேஸ் மற்றும் இசைப்பிரியா ஆகியோரை ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
நல்லாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கும் நல்லாட்சியை விரும்புவோருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார். புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் பிழையான வழிகளில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் நல்லாட்சியை தடுக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…
-
- 1 reply
- 447 views
-
-
தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு ஆகிய இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்…
-
- 3 replies
- 839 views
-
-
( எம்.நியூட்டன் ) யாழ்ப்பாணம், மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் மீது நேற்று புதன்கிழமை (10) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற இருவரை பொலிஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இ…
-
- 1 reply
- 334 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2007இ 20:58 ஈழம் சி.கனகரத்தினம் ஆட்சேர்ப்பில் சிறிலங்கா இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது என்றும் இதற்காக முன்னைய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: சிறிலங்கா இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்காக ஜூலை 1 ஆம் நாள் 7,500 பேருக்கான தேர்வை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நடத்தியது. இராணுவத்தினரின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் மொத்தம் 1,800 பேர்தான் சேர்க்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தெரிவுக்குப் பின்னர் தெரிவு செய்யும் விதிமுறைகள் இலகுவாக்கப்பட்டன. சிங்க ரெஜிமெண்ட்டுக்கு கேகாலை பகுதியிலிருந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
[Monday, 2011-09-26 08:30:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு புலிகளது முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் எவ்வாறு தமக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
January 26, 2019 முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் முன்னிஜலையாகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தநிலையிலேயே, இவ்வாறு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட…
-
- 6 replies
- 703 views
-
-
மலையக தமிழ் அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலை [05 - August - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்தவாரம் வெளியேறியதையடுத்து கொழும்பு அரசியலில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அமைச்சர் பதவியைத் துறந்த இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானையும் பிரதியமைச்சர் பதவிக்களைத் துறந்த அவரது நான்கு சகாக்களையும் மீண்டும் பதவிகளை ஏற்கச் செய்து அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற அதேவேளை, இ.தொ.கா.வின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து திட்டவட்டமாக எதையும் கூறமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்…
-
- 0 replies
- 806 views
-
-
சிறிலங்காவின் செயலால் பிளவுபட்டிருக்கும் பொது நலவாய நாடுகள். இவ்வாறு கூறியவுடன் சிறிலங்காவிற்கு அவ்வளவு பலமா என யோசிக்ககூடும்.இருக்கலாம் ஏனென்றால் நடப்பு தசாப்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையினை செய்துவிட்டு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு போல தன்பாட்டில் குஜாலாக படுத்திருக்கின்றது சிறிலங்கா. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட பல சக்திவாய்ந்தவர்களினால் கூட அசைக்க முடியாத மன்னனாக உள்ளார் மஹிந்த. அண்மைக்காலமாக பொது நலவாய நாடுகளின் செயற்பாட்டிலும் மேற்குலகிற்கு எதிரான செயற்பாட்டினால் இந்த கட்டமைப்பிற்குள்ளும் பிளவு ஏற்படத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொது நலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளில் நிலவுகின்ற மனித உரிமை மீறல்கள் தான். பொது நலவாய நாடுகளில் கனடா, அவுஸ…
-
- 0 replies
- 606 views
-
-
"இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்" என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த ஜோதிடர் இலங்கை கடற்படையில் கடமையாற்றியவர் என்பதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைச் சிப்பாய் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். …
-
- 2 replies
- 369 views
-
-
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி. பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமிற்க்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வக…
-
- 0 replies
- 285 views
-
-
அரசுடன் இணைந்து செல்வதுதான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன.இந்த நிலைப்பாடு அந்த அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்தவை என்பதால் அதனை தமிழ் மக்களின் கொள்கையயன எவரும் பொதுமைப்படுத்தி விட முடியாது.இருந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றிருப்போர் அத்தகையதோர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், அவர்கள் அதுபற்றித் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறித்துரைத்துள்ளனரா என்பது பற்றி ஆராய வேண்டும். எது எவ்வாறாயினும் இலங்கை அரசுகளுடன் அல்லது ஆட்சியாளர்களுடன் இணங்கிப் போவதென்ற நிலைப்பாடுகளை பின்நோக்கிப் பார்க்கும்போது, அது தமிழ் மக்களுக்குப் பாதமாக இருந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும். அந்தளவுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஏதோவொரு வகை…
-
- 0 replies
- 278 views
-