Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் வைத்தியசாலை? வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அக்கராயன் வைத்தியசாலை இடம்பெற்ற வைத்திய சேவைகளில் சிலவற்றை ஸ்கந்தபுரம் ஆயுள்வேத மற்றும் பொது கட்டடங்களுக்கு மாற்றுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 529 views
  2. 08 Dec, 2025 | 04:59 PM டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் திங்கட்கிழமை (08) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்…

  3. திருகோணமலை உப்புவெளி தேவநகர் சுனாமி வீடமைப்பு தொகுதிக்கு அருகில் இளைஞர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 25 வயதான தர்மராசா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை 5.20 அளவில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கண்டி பிரதான வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக வைத்தியசாலையின் நிர்வாக செயலாளர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். கண்டி வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட நிபுணத்துவ வைத்தியர் சின்னத்த…

  4. [size=3]இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணையை எதிர்க்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.[/size] [11/6/2012 ] [cmr news bulletin ] [size=2]இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக அரசாங்கம் சமர்ப்பித்த அரசியல் குற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களும் ஆதரமற்றவையென்பதால், அதனை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்ப்பதென எதிர்க்கட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் ஜே.வி.பியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாள…

  5. ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின் நிலைப்பாடு எப்படியான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பற்றி லங்காசிறி 24இன் செவ்வியில் ஆராயப்பட்டுள்ளது. மேலும் தமிழர் அரசியலில் ஐ.நா சபையின் பங்களிப்பு சரியானதாக இருக்கின்றதா? தமிழர் அரசியல் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு பிரான்சஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும…

    • 4 replies
    • 488 views
  6. மட்டகளப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காவற்துறையின் பாதுகாப்பில் இருந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் அல்லது கொல்லப்பட்டும் வருவதனை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்பேசும் மக்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்பு துண்டுப் பிரசுரம் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றிற்கு தபால் மூலம் அனுப…

  7. சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக பல பில்லியன் ரூபாய்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் கடனாக பெற்றுள்ளமை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப் பெற்றுள்ளதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைநகரை மையமாகக் கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கு அமைய, ஜனவரி-ஏப்ரல் காலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாய் மாத்திரமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெரைட் ரிசர்ச்சின் அறிக்கைக்கு அமைய, இலங்கை அரசு, உள்நா…

  8. மணலாறு சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:41 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அளம்பில் செம்மலை மக்கள் குடியிருப்புக்ளை இலக்கு வைத்து படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலின் போது மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் செம்மலை, அளம்பில் கடற்கரை பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் காரணமாக கரை வலைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்;குதலால் முல்லைப்…

    • 0 replies
    • 469 views
  9. மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.! ஜனவரி 09, 2026 இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்…

  10. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். முகாம் தாக்கி …

    • 9 replies
    • 2.5k views
  11. மினி சூறாவளி... புத்தளம், மாரவிலப் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி வீசியமையால், சுமார் 6 வீடுகள் சேதமாகின. மரங்கள் பல முறிந்து விழுந்தமையால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன், கூரைகள் பலவும் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளமையைப் படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/175905/ம-ன-ச-ற-வள-#sthash.TSKiI9sY.dpuf

  12. இலங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது…” என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன. ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் ந…

  13. [size=5]ஐ.நா நிபுணர்குழு அறிக்கைக்கு ஏற்பட்ட கதி உள்ளக அறிக்கைக்கும் ஏற்படுமா?[/size] முத்துக்குமார் வருமா? வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்த ஐ.நா உள்ளக அறிக்கை வெளிவந்துவிட்டது. அதில் 29 பக்கங்கள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டாலும் புலம்பெயர் நாடுகளில் அதுவும் கசிந்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரத்தின் சூத்திரத்தாரி விஜய் நம்பியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. போரில் இந்தியாவின் பங்கினை மறைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம். போர்க்காலத்தில் ஐ.நா தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிவிட்டது. குறிப்பாக செயலகத்தின் செயற்பாட்டு முகவர்கள், இலங்கையில் செயற்பட்ட ஐ.நா உறுப்பினர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா மனித உரிமைக் கவுன்சில்…

  14. ஐரோப்பாவை ஆட்டங்காண வைத்திருக்கும் ஐஎஸ். தீவிரவாத அமைப்பு, தமது அடுத்த இலக்காக ஆசிய நாடுகள் என அறிவித்து இரு நாட்களுக்கு முன்னர் பங்களாதேசில் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தாக்குதல் நடாத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவையும் அந்த அமைப்பு சேர்த்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்பாக தாம் விழிப்புடன் இருப்பதாகவும், இதற்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், கட்டுநாயக்கா விமானநிலையத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு பா…

  15. யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம் யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும். இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந…

  16. அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக்குழுவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் நேற்று மாலை கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப…

  17. வீரகேசரி நாளேடு - இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படுமானால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அது உதவியாக இருக்கும். எனவே, எந்தவித இராணுவ உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கக் கூடாது. அத்துடன் இந்திய அரசாங்கம் எம்மீதான தடையை நீக்கு எமது இயக்கத்தை அங்கீகரிக்க வேண்டும். என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட போதும் புலிகளான நாம் எப்போதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவேயுள்ளோம். இன்றும் நாம் யுத்த நிறுத்தத்தைத் தொடரவே விரும்புகின்றோம் என்றும் அவர் சொன்னார். தமிழகத்திலிருந்த வெளிவரும் தமிழோசை நாழிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே…

  18. சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த முயற்சி மீண்டுமொருமுறை தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியாக சிறீலங்கா தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருவதை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வொசிங்டனில் உ…

    • 4 replies
    • 909 views
  19. கிளிநொச்சியில் சட்டவிரோத கருகலைப்பு குற்றச்சாட்டில் தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல். கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிசை நிலையம் இன்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிசை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியுடன் 25 வயது இளைஞன் ஒருவா் பாலியல்உறவு கொண்டுள்ளார் இதன் மூலம் குறித்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளார் இதனையடுத்து சிறுமியின் தந்தை சிறு…

  20. இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர், ‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. உங்களது வாக்கு…

  21. வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்'-யாழில் ஜே.வி.பி துண்டுப்பிரசுரம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்' என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று வெள்ளிக்கிழமை , யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார். 'மஹிந்த அரசைப் போன்று மைத்திரி – விக்கிரமசிங்க கூட்டரசும், வற் சுமையை மக்கள் மீது திணிக்கிறது' எனக் குறிப்பிடப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரங்களில், 'மோசடி வற்', 'மக்களுக்கு …

    • 1 reply
    • 272 views
  22. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுவித்த பின்னர் இங்கு 300 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் அறிவூட்டும் நிகழ்வொன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: கிழக்கு மாகாணத்தை தமிழீ…

  23. போக்குவரத்து விதிமுறையை மீறிய பெண்ணுக்கு அதிகூடிய தண்டம் போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை தடுக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, ஆறு குற்ற…

  24. ஜனாதிபதியின் கோரிக்கை புறக்கணிப்பு : அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி அமைப்பதற்கான பத்திரமானது, அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு முதல்வரையும் அதில் உள்ளீர்க்க வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை புறக்கணித்தே அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வட…

    • 1 reply
    • 298 views
  25. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவுபடுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.