ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
விமான நிலையத்தில் தடையை மீறி தப்பிச்சென்ற காரினால் பரபரப்பு! தடுக்கமுயன்ற சிப்பாய் மோதுண்டு மரணம். கட்டுநாயக்க விமானநிலையத்துக்குச் செல்லும் பாதையில் கார் ஒன்று சோதனைக்குத் தரிக்காமல் தப்பிச்சென்றிருக்கிறது. அதனை மறிக்க முற்பட்ட விமானப் படைச்சிப்பாய் அந்தக் காரினால் மோதுண்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. தப்பிச்சென்ற காரின் சாரதியைப் பொலிஸார் தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் விமானநிலைய வீதியில் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சிப்பாய் வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறிக்க முற்பட்டார். அப்போது கார் அவரை மோதிவிட்டு வேகமாகச் சென்று மறைந்துள்ளது. மோதுண்ட சிப்பாய் உயிரிழந்தார். தப்பிச் சென்ற கார் பின்னர் மொற கொட…
-
- 1 reply
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 09:11 AM கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
சனி, 30 ஏப்ரல் 2011 02:22 .அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்…
-
- 4 replies
- 1.6k views
-
-
தேர்தலைக் கண்காணிக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் சிலர் சிறீலங்கா விரைவு!! தேர்தல் நிலைமைகளை அவதானிப்பதற்காக இந்தியாவின் புலனாய்வு பிரிவினர் சிலர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய புலனாய்வு பிரிவின் தகவல் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த புலனாய்வாளர்கள் புடவை வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் போன்ற வேடங்களில் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கள நிலவரங்களை உடனுக்குடன் இந்தியாவுக்கு அறியப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ்வாறான புலனாய்பு பிரிவினரை இந்தியா அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்…
-
- 0 replies
- 409 views
-
-
யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் - வேலன் சுவாமிகள் Published By: T. Saranya 22 Apr, 2023 | 11:36 AM யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தம…
-
- 0 replies
- 652 views
-
-
May 7, 2011 / பகுதி: செய்தி / இலங்கையை நீக்க வேண்டும்: ஐநா கிளையில் மலேசியத் தமிழர்கள் மனு ஐநா சபை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில், அந்நாட்டு தமிழர்கள் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் உள்ள 130 தொண்டு நிறுவனங்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும், ஐநா நிபுணர் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மலேசியப் போலீஸாரின் கடுமையான…
-
- 0 replies
- 545 views
-
-
பொலிஸாருக்கு எதிராக- 40 முறைப்பாடுகள்!! பொலிஸாருக்கு எதிராக இவ் வருடத்தில் இது வரையில் 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று வடமாகாண தேசிய பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகளிற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் அத்தமீறிய செயற்பாடுகள் பற்றி பயமின்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் மீது பொலிஸார் செயற்படாமை, பொலிஸார் பொது மக்களை தாக்குதல் , துன்புறுத்தல் அதிகார துஸ்பிரயோகம் செய்தல், பக்கச் சார்பாக ந…
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ, 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்றும் கூறியுள்ளார். ஆனால், 'மீண்டும் நான் கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மகிந்த ராஜபக்ஷ த…
-
- 0 replies
- 391 views
-
-
கரை ஒதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்! புத்தளம் கடற்கரையில் காலாவதியான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள் கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துக் கழிவுப் பொருட்கள் ஆபத்தை தரக்கூடியவையா என்பது தொடர்பாக பிரதேச மக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருட்களில், காலாவதியான மருந்துப் பொருட்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசி வகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த சில நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அ…
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கைத்தீவின் கிழக்குப் பிராந்தியம் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது என்ற அரசின் தம்பட்டம் ஒருமாயை என்பதை சர்வதேச சமூகம் விளங்கத்தொடங்கிவிட்டது. அண்மையில் மட்டக்களப்பில் அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த ‘புனர்வாழ்வு’ மாநாட்டில் பங்குபற்றச் சென்ற அனைத்துலக பிரதிநிதிகள் கிழக்கின் உண்மையான களயதார்த்தத்தை கண்கூடாக கண்டு திரும்பிய அதேசமயம் அரசின் ‘விடுவிக்கப்பட்ட கிழக்கு’ எனும் பரப்புரை பாழாய்போனது தென்னிலங்கையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சரின் கருத்துப்படி தலைநகரைவிட்டு வெளியே செல்லும் போது தமக்கு அறிவிக்கும் இராஜதந்திர வழமையை மேற்படி நாட்டு தூதர்கள் மீறியுள்ளனர…
-
- 0 replies
- 926 views
-
-
'ஹம்பாந்தோட்டை 2018' பிரசாரத்திற்காக பிரித்தானிய நிறுவனத்திற்கு 26 கோடி ரூபா 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை ஹம்பாந்தோட்டையில் நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான பிரசார நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய நிறுவனமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் 24 லட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 26 கோடி ரூபா) செலுத்தியதாக தெரிய வருகிறது. ஹம்பாந்தோட்டை 2018 ஏற்பாட்டுக் குழுவினர் கடந்தவருடம் Pmplegacy எனும் பிரித்தானிய நிறுவனத்தை இத்திட்டத்திற்கான பிரதான ஆலோசகராகவும் திட்டமுகாமையாளராகவும் நியமித்திருந்தது. ஹம்பாந்தோட்டையில் இப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கான விளக்க ஆவணங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்பக் கொடுப்பனவாக 24 லட்சம் டொலர்களை ஹம்பாந்தோட்டை 2018 ஏற்பாட்டுக்குழு…
-
- 2 replies
- 768 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது? DEC 28, 2014 | 2:42 சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்;தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தல…
-
- 0 replies
- 361 views
-
-
வெலிக்கடையில் 21 கைதிகள் மயக்கம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 21 பேர் நேற்றிரவுவரை மயக்கமுற்றுள்ளனர். இரண்டு பிரதான கோரிக்கைளை முன்வைத்து இன்று நான்காவது நாளாகவும் 42 இளைஞர்கள் உணவு, மற்றும் நீர் அருந்தாது உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
- 3 replies
- 1.1k views
-
-
நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். உரிமைக்கு குரலும் உறவுக்குக் கரமும் கொடுக்கும் எமது இணக்க அரசியல் ஊடாக, மக்களின் தேவைகள் இனம்காணப்பட்டு அவற்றுக்கு உரிய முறையில் தீர்வுகாணும் அதேவேளை, நீடித்த நிலையான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே நோக்கமாகுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். மானிப்பாய் கலாசார மண்;டபத்தில் நேற்று (04) வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 4 replies
- 560 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=124260&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 629 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் அரசாங்கத்தில் பங்காளி கட்சிகளாக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளோ, பிரதி அமைச்சுக்களோ இல்லாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கண்டியில் விடுத்த அழைப்பை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அவருக்கு ஆதரவு வழங்க இவ்விரு கட்சிகளும் தீர்…
-
- 1 reply
- 637 views
-
-
கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் மஹிந்தவின் மூத்த அமைச்சர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான…
-
- 9 replies
- 2.2k views
-
-
வான் தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறியுள்ளது: இக்பால் அத்தாஸ் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 14:21 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறிவிட்டது என்று பிரபல இராணுவ விமர்சகர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உலகின் பிரபல சஞ்சிகையான ஜேன் இதழின் சிறிலங்காவிற்கான முகவரும், பிரபல இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ், கட்டுநாயக்க மீதான தாக்குதல் குறித்து பி.பி.சி ஆங்கில சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு தசாப்தங்களாக தரை கடல் போர் அரங்குகளில் மாத்திரமே இடம்பெற்று வ…
-
- 1 reply
- 737 views
-
-
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பதிவிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட்டதும் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. “அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டுப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தற்போது வெளியிடும் கருத்துக்களினூடாக இந்த விடயத்தை ஓ…
-
- 8 replies
- 1k views
-
-
விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்? [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப…
-
- 0 replies
- 775 views
-
-
-
- 24 replies
- 2.4k views
- 1 follower
-
-
குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது. கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகிய நீர்க்காகம் -9 கூட்டுப் பயிற்சி நாளை நிறைவடையவுள்ளது. நாளை குச்சவெளியில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகையில், சிறிலங்காவின் 2500 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும், பங்களாதேஷ். சீனா, இந்தோனேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துருக்கி, சாம்பியா, ஆகிய நாடுகளின் படையினரும் பங்கேற்கவுள்ளனர். சிறப்பு நடவடிக்கைப் படைகளின் போரிடு…
-
- 0 replies
- 481 views
-
-
பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை. பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார். -Pathivu-
-
- 2 replies
- 1.4k views
-
-
'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்' 19 ஜூன் 2011 மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெய…
-
- 2 replies
- 741 views
-
-
தலவாக்கலையில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததனால் 300 குடும்பங்கள் இடப்பெயர்வு October 3, 2018 தலவாக்கலை காவல்துறைப் பிரிவுகுட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கன மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக மலைப்பகுதியின் அடிவாரத்தில் வசித்த சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், பாடசாலை ஒன்றிலும்…
-
- 0 replies
- 485 views
-