ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
(நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 630 views
-
-
பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் போரின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என, சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ரஜீவ் காந்தி பற்றி மணிசங்கர் ஐயர் எழுதியுள்ள நூல் பற்றி ஆய்வுக் கூட்டத்திற்கு இந்தியத் தலைநகர் டெல்லி சென்றுள்ள சந்திரிக்கா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். அத்துடன், அதிபர் மகிந்த ராஜபக்ச தன்டைய அறிவுரையைக் கேட்க மறுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இது தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகவும் கூறினார். 1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வுக்கும், தனது இரண்டு முறை ஆட்சிக் காலத்த…
-
- 7 replies
- 999 views
-
-
வெளிநாடுகளில் பணியாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களின் நிதியே அரசாங்கத்தின் பிரதான வருமானமாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் நிதியினால் கிடைக்கின்ற வருமானம் மாத்திரமே தற்போது அரசாங்கத்தின் பிரதான வருமானமாக காணப்படுகிறது. எனினும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/54476
-
- 1 reply
- 326 views
-
-
தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக கடமையாற்ற தனக்கு அனுபவம் இருப்பதாக யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதவி தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=135406
-
- 2 replies
- 1.1k views
-
-
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…
-
- 2 replies
- 824 views
-
-
பிரணாப் முகர்ஜி சிரிலங்காவுக்கு அறிவுரை - புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை மக்களை மீட்பதற்க்காக பயன்படுத்துங்கள். அவரது கருத்துக்களில் சில... * புலிகளின் இந்த யுத்த நிறுத்த அழைப்பு, ஆயுதக்களைவுக்கான விருப்பமாகவும் இருக்கலாம். * இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிரிலங்கா சண்டையை இடைநிறுத்தலாம். * உடனடியாக மாட்டுப் பட்டிருக்கும் மக்களை "பாதுகாப்பான" வேறு இடத்திற்க்கு கொண்டு செல்வதற்க்கான திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசாங்கம் சிரி லங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொ(ல்)ள்கிறது. "தமிழா, நீ சரணடை இல்லையெண்டால் செத்துப் போ" எண்ட ஒரே விடயத்த வேறு வேறு வாக்கியங்களில் சொல்லும் இந்தியாவின் கெட்டிதனத்துக்கு நிகர் இந்தியாவேதான். எல்லாம் அந்த "தேர்தல்" என்ற நாலு எழுத்து …
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் அண்மையில் லண்டன் வந்திருந்தார். அப்போது அவர் பிபிசி உலக சேவையின் அலுவலகத்துக்கும் விஜயம் செய்திருந்தார். அம்பாறை மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் அவருடன் கூட வந்திருந்தார். இலங்கையின் போருக்கு பின்னரான நிலைமைகள், தமிழர் அபிலாஷைகளுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், மற்றும் அங்கிருக்கும் ஏனைய பல விடயங்கள் குறித்து இங்கு சம்பந்தன் தமிழோசைக்கு ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். தமிழோசையின் ஆசிரியர் மணிவண்ணனுக்கு இரா. சம்பந்தன் அவர்கள் வழங்கிய அந்தச் செவ்வியின் முழுமையான வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவத்திருப்பதாவது.. கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இராணுவமயமா…
-
- 0 replies
- 403 views
-
-
ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனை ஜனாதிபதி சந்தித்தார் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/13603
-
- 0 replies
- 278 views
-
-
யாழ் குடாவில் கலாசார சீரழிவு உச்சக்கட்டத்தில் - பெற்றோர் கவலை யாழ் குடாநாட்டில் கலாசார சீரழிவு என்றுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் உள்ளதாகவும், இதனால் தாம் தமது பிள்ளைகளை யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க அஞ்சுவதாகவும், குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்திருக்கவும் அவர்களை வீதியில் நடமாட அனுமதிப்பதற்கும் தாம் அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சிறீலங்கா படையினரின் அச்சுறுத்தல்கள், மறுபுறம் தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் என்பனவற்றுடன் அண்மையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் சில சமூக விரோதிகளின் தொல்லை என தமக்கான நெருக்கடிகள் அதிகரித்து செல்லவதாக பெற்றோர் கூறினர். இதனால் பிள்ளைகள் கல்வி கற்றலுக்குரிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை (22) அமைதி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் இனவாத செயற்பாடகளைக் கண்டித்தே குறித்த பேரணி நடைபெற்றுள்ளது. ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிஜதிகள் பொதுமக்கள் இணைந்து அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். குறித்த பேரணியில் தமிழ்த் தேசியகச் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/125469?ref=home
-
- 1 reply
- 365 views
-
-
மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை. இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19-ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார…
-
- 0 replies
- 506 views
-
-
போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது 25 மார்ச் 2013 - ரொபர்ட் ஒ பிளேக் நிரந்தர சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, போர் குற்றங்களை செய்தவர்களை தண்டனை வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனை நீர்த்து போக செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்த குற்றச்சாட்டை நிராக…
-
- 0 replies
- 303 views
-
-
புலம்பெயர் தமிழரின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு முன்னால் துவண்டுபோன இந்திய, சிங்களத்தின் கூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் - தமிழ்நெட் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்குவதில் எற்பட்டு வரும் தோல்வியினால் அடைந்த விரக்தியும், அடக்கப்படும் இனத்துக்குச் சார்பாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் அநுதாப அலையும், வீறுகொண்டெழுந்து நிற்கும் புலம் பெயர் தமிழரின் போராட்ட உணர்வும், நெருங்கிவரும் இந்தியத் தேர்தலும் இன அழிப்புப் போரின் நண்பர்களான இந்தியாவையும் சிறிலங்காவையும் வேறு மாற்றுவழிகள் மூலம் தமது இலக்கினை அடைய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. புலம்பெயர் தமிழரையும், இந்தியப் பொதுஜனத்தையும் ஏமாற்றும் நோக்கில் சிங்கப்பூரிலும், க…
-
- 2 replies
- 1.6k views
-
-
கொழும்பு: தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குகளை புறக்கணிக்கப்போவதாக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துறைமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் சமரவிக்ரமே கூறுகையில், இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுகளும், சுற்றுலா பயணிகளும் தமிழகத்தில் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. எனவே தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குளை புறக்கணிக்க துறைமுக தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தில் பதாகைகளையும் துறைமுக தொழிலாளர்கள் வைத்துள்ளனர். Dinamalar
-
- 2 replies
- 986 views
-
-
ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றில் காணப்படும் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை உருவாக்கும் முறை மற்றும் பாராளுமன்றம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். இதற்கு மேலதிகமாக தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்தே, செஹான் சேமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். http://g…
-
- 0 replies
- 245 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறிலங்கா படையினர் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிந்தியடைந்து தேசியமட்டத்தில் முன்னணி வகிக்கும் மாணவர்களின் தரநிலையைவெளியிடுவதில் சிறுபான்மையினருக்கு இலங்கை அரசுதுரோகமிழைத்துள்ளது. இது தமிழ் மொழி மாணவர்களுக்குப்பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில்வெளியிடப்பட்டிருந்தன. இந்தப் பெறுபேறுகள் வெளியாகியசில மணி நேரங்களுள் சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளின்தேசிய மட்ட நிலைகளும் வெளியிடப்பட்டு, அவர்களுக்குஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும் அலரிமாளிகையில்வைத்து கௌரவமும் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளின் தேசியமட்டத்திலான தர நிலைகள் இன்னமும்வெளியிடப்படவில்லை. இந்தப் பாரபட்சம் எதற்காக என தமிழ்கல்வி மான்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…
-
- 2 replies
- 937 views
-
-
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போர் முற்றுகைக்குள் பாரிய மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உலர் உணவு சேகரிக்கும் செயற்பாடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
போரில் நடந்த பொதுமக்கள் உயிரிழப்புக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு--இலங்கை ராணுவ நீதிமன்றம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஏப்ரல், 2013 - 16:50 ஜிஎம்டி போரில் பொதுமக்களின் அவலம்-- " ராணுவம் பொறுப்பல்ல, விடுதலைப்புலிகளே பொறுப்பு" - ராணுவம் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது. ராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்க…
-
- 1 reply
- 493 views
-
-
அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு “ அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே…
-
- 2 replies
- 443 views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்கள…
-
- 4 replies
- 897 views
- 1 follower
-
-