Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘கொடூர ஆட்சியை முடிப்பதற்கு அம்மணியே முக்கிய பங்கு வகித்தார்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…

  2. உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்களின் உன்னத பணியை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் கருப்பொருள் ‘கொடையாளர்களுக்கு நன்றி’ என்பதாகும். தேசிய இரத்த கொடையாளர் விழா இன்று (14) காலை 10.00 மணிக்கு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303724

  3. ‘கொத்­தணி குண்டு’ சாச­னத்தில் இலங்கை கைச்­சாத்­தி­ட­வில்லை கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி கொண்­டு­ வ­ரப்­பட்ட கொத்­தணி ஆயுத விவ­காரம் குறித்த சாச­னத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்தி­டவில்லை. இந்தச் சட்­டமானது 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திக­தியே அமு­லுக்கு வந்­தது என்று காணாமல் ­போனோர் தொடர்­பான முறைப் பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பர­ண­கம தெரி­வித்­தி­ருக்­கிறார். இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசேன் வெளியிட்ட வெளியிட்ட இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்­கையில் கொத்­த­ணிக்­கு…

    • 1 reply
    • 640 views
  4. ‘கொலையாளிகளின் பணம் வேண்டாம்’ “எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று, இவ்வாண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறையில், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், திரு…

  5. ‘கொல்ல வருபவன் பைத்தியக்காரன்’ “தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, இந்த அரசாங்கத்தினால், குறைக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக”, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள், கத்தியுடன் ஒருவர் நுழைவதற்கு முயன்றுள்ளார். அந்த விவகாரம் தொடர்பில், கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ”தாய் நாட்டை மீட்டெடுத்த எனக்கு, இந்த அரசாங்கத்தினால், அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. என்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்…

  6. ‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்! பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1286308

    • 5 replies
    • 431 views
  7. ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டக்காரர்களுக்கு... புதிய இடத்தினை, ஒதுக்கி கொடுப்பதாக... ஜனாதிபதி தெரிவிப்பு. போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/12…

    • 1 reply
    • 219 views
  8. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவரால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுடன் ஒரே சாப்பாடு மேசையில் கோட்டா அமர்ந்திருந்தாலும், மஹிந்தவின் ஆட்சியின் போது, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிறந்த எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபயவே என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-எமக்கு-ச…

  9. ‘கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை அவர் பேச்சை நாம் கேட்க’ – ஞானசாரர் முல்லைத்தீவு, செம்மலையில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை இனவாதமாக சித்தரிக்க, சிலர் முற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார். மேலும் தாம் கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதற்கு, கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்கள் மத்தியில் பிழையான புரிதலை ஏற்படுத்த சிலர் முற்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே முல்லைத்தீவு விவகாரம் அமைந்திருந்தது. முல்லைத்தீவு …

    • 3 replies
    • 709 views
  10. ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம்... மீண்டும், வாக்குமூலம் பெற்ற CID! ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மே 9 தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். முன்னதாக,போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் போராட்டத்தளத்தில் உள்ள பல நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தமது சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் வழங்கியதாகவும் அன்றைய தினம் பிரசன்னமாகிய நபர்களை தெளிவாகக…

  11. ‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... இருவர் கைது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே இவர்கள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1282355

  12. ‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்! ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் கூடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளவர்ககள் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மில்லியன் பேரை இன்றைய தினம் அங்கு அழைக்க முயற்சித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …

  13. ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம்…

  14. கோத்­தா முகாம், திரு­ம­லையில் நடை­பெற்ற முன்­னைய படு­கொ­லைகள் தெஹி­வ­ளை­யி­லி­ருந்து கடத்­தப்­பட்டு காணாமல்போயுள்ள மாணவர் விவகாரம் ஆகி­ய­வற்றின் உண்­மைகள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மாயின் புதிய அர­சாங்­க­மா­னது இவற்றை மீள் பரிசீலனை செய்து உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். என யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரிவித்தார். திரு­கோ­ண­மலை இர­க­சிய கடற்­படை முகாம் சம்பந்­த­மா­கவும் முன்­னைய படு­கொ­லைகள் தொடர்­பா­கவும் பாராளுமன்றத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரி­வித்த கருத்­து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் இயங்கி வந்­த­தாகக் க…

  15. ‘கோத்தா இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ Nov 12, 2019 | 1:30by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘ ‘கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான எந்த ஆவணங்களையும் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை. அதிபர், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் முன்னதாக …

  16. விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: சிறிலங்காவில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' [‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka] என்ற நூல் தொடர்பாக, இது வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 'திவயின' என்ற சிங்கள நாளிதழின் ஊடகவியலாளரான சி.ஏ..சந்திரபிறேம எழுதியுள்ள 'கோத்தாவின் போர்‘ என்ற இந்த நூல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..ஏ. சுமந்திரன், சிறி…

    • 1 reply
    • 1.6k views
  17. ‘கௌரவ பதவியே சின்னையாவுக்கு வழங்கினோம்’ சிவ நிரோஷினி “கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி பதவி வகித…

    • 2 replies
    • 457 views
  18. ‘சகயின்’ கப்பல் மீள எடுக்கப்பட்டது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, திருகோணமலை துறைமுகத்தை அண்பித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ‘சகயின்’ என்ற கப்பல், இலங்கை கடற்படையின் தொழில் நிபுணத்துவத்தின் கீழ், மீளவும் எடுக்கப்பட்டுள்ளது என கடற்படை அறிவித்துள்ளது. பிரித்தானியாவுக்குச் சொந்தமான மேற்படி ‘சகயின்’ என்ற கப்பல் 75 வருடங்களுக்குப் பின்னர், மீள எடுப்பதற்கு, இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவுக்கு முடிந்துள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது. 138 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றியிறக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. அது தனது முதலாவது சேவையை 1924 ஆம் ஆண்டு டிசெம்பர் மா…

  19. ‘சகல மாகாண ஆளுநர்களின்அதிகாரங்களை குறை’ எனினும், மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பதையிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடமாகாண சபையோ, எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அந்த அதிகாரமானது, ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த யோசனை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், “ஆளுநர் என்ற வசனத்தின் மூலமாக, மிதமிஞ்சிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி என்பதனால், விசாலமான அதிகாரங்கள் அவரு…

  20. ஆர்.மகேஸ்வரி / 2020 மார்ச் 04 , மு.ப. 12:10 - 0 - 24 பழைய பெட்டிகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க எனும் பெரும் ரயில், பழைய எஞ்ஜினால் இன்னமும் இழுக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனரெனத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஆகவேதான், அந்த ரயிலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியெனும் பெட்டிகளுடன், சஜித் எனும் புதிய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், பழைய ரயிலில் காணப்படும் சில குறைப்பாடுகளால், தேரர்க…

  21. கனகராசா சரவணன் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே 1,437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ”25 க்கு மேற்பட்ட உடல்கள் நாளாந்தம் வந்த வண்ணமிருக்கிறது. ஆகையால், இனிவரும் நாள்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந…

    • 1 reply
    • 414 views
  22. ‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ -நடராசா கிருஷ்ணகுமார் “சட்டத்துக்கு முற்றிலும் முரணாக, பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (24), கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு, ஐந்து இலட்சத்து 20 ஆயிரத்து 650 ரூபாயை, அன்னதான மண்டபம் அமைக்க, அன்பளிப்பாக வழங்கியது. இது, சங்கத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இத…

  23. நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி, எதுவும் தெரியாது என எவரும் கூறமுடியாது எனவும் குறிப்பாக இந்த விடயத்தில் பெண்கள் ஒரு படி முன்னேறி, சட்டப் பாதுகாப்பு அறிவுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார். இதனால் மட்டக்களப்பிலுள்ள இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு அறிவூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் குறித்து, இன்று (26) அவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடை…

    • 0 replies
    • 525 views
  24. ‘சட்டத்தரணியான எனது மாணவன் துரைராஜசிங்கம் பல விடயங்களை அறியாதிருப்பதும், என்னை தவறாக சித்தரிக்க முயல்வதும் அவருக்கு அழகல்ல’ வாரத்துக்கொரு கேள்வி – இவ் வாரக் கேள்வி இதோ…. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….. கேள்வி :- சேர்! உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம். பதில் :- ஏட்டிக்குப் போட்டியாக பதில்கள் இறுத்து பத்திரிகைகளுக்கு நல்ல தீனியைப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும். அதனால் நான் பொதுவாகத் தக்க, முக்கிய காரணங்கள் இருந்தாலே அன்றி இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில…

    • 11 replies
    • 720 views
  25.  ‘சட்டத்தின் பிரகாரமே அம்மான் கைதானார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, அரசாங்கம், நேற்று அறிவித்தது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்னவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.