ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது என பரந்தன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் பரந்தன் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00மணிக்கு நிறைவு பெற்றது. இப்பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்…
-
- 4 replies
- 466 views
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் 12 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் திருத்தப்பட உள்ளன என சிறிலங்கா பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. செப்ரெம்பர் மாதம் 10 ஆம் நாள் வரையில் இரு கட்டங்களாக அது தொடரும். இந்தப் பணிக்கு என நாடு முழுவதும் 12 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். மதிப்பீட்டுப் பணிகளின் தொடக்க கட்டத்தில் கலை மற்றும் வர்த்தக பாடங்களுக்கான விடைத்தாள்களே யாழ்ப்பாணத்தில் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. திருத்தவேண்டிய விடைத்தாள்கள் எல்லாம் நே…
-
- 0 replies
- 420 views
-
-
பொருத்து வீடா? கல் வீடா? மக்களின் விருப்பை அறிந்த பின்னர் அதை நடைமுறைப்படுத்த ரணில் உறுதி பொருத்து வீடா? கல் வீடா? இதில் மக்களின் விருப்பு எது என்பதை கண்டறிந்து அதற்கு அமைவாக வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து கூறினார். இதன் போது பொருத்து வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வரும் அமைச்சர் சுவாமிநாதனும் இருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் ஆராயப்பட்டது. ‘மக்கள் பிரதிநிதிகளின் சம்…
-
- 0 replies
- 291 views
-
-
சிறிலங்கா தரைப்படை புலனாய்வுத்துறையின் தளபதியாக இருந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர மேஜர் ஜெனரலாகத் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நான்காவது ஈழப் போரில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புக்காக அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். கெய்டிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா அமைதிப் படையின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தவர் அமல் கருணாசேகர. காலாட்படையின் மிகச் சிறப்பான தளபதியாக அங்கு அவர் பணியாற்றினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், பிரபாகரன் மற்றும் புலிகளின் ஏனைய தலைவர்களின் மறைவிடங்கள் மீது வான்படையினர் மேற்கொண்ட தாக…
-
- 0 replies
- 426 views
-
-
“பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்” 'அதிகாரத்தில் இருந்த சிலர், மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு, நேற்று பிற்பகல், கென்பரா நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும…
-
- 0 replies
- 298 views
-
-
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்... அஜித் ரோஹணவுக்கு கொரோனா! சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அவரது உடல்நிலை தொடர்பாக கவலையடையத் தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1235995
-
- 0 replies
- 357 views
-
-
அம்பாறை, மகாஓயா பிரதான வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு எந்தவொரு திட்டமும் முன்வைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட ரக்டர் மற்றும் லொறிகளை வீதிக்கு எடுத்து வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உகண பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.sankathi24.com/news/33286/64//d,fullart.aspx
-
- 0 replies
- 423 views
-
-
15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்று…
-
- 0 replies
- 239 views
-
-
சிறிலங்கா அரசின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் கைது செய்யப்பட்ட கனடிய நாட்டு குடிமகனான தமிழர் ஒருவர் கடந்த ஐந்து மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 472 views
-
-
தெற்கில் கடல் கொந்தளிப்பு தென்மாகாணத்தின் பல பிரதேசங்களில், இன்று (05) காலை, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ள அதேவேளை, சில பிரதேசங்களில் காலி வீதியை நோக்கி, கடல்நீர் பாய்ந்ததால், மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். கஹாவ சந்தியிலிருந்து காலி, ஹிக்கடுவ, கொட்டகமுவ பாலம் வரையான காலி வீதிக்குள், கடல் நீர் பாய்ந்ததாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கஹாவ, கொடகம, தெல்வத்த, பெரேலிய மற்றும் தொட்டகமுவ போன்ற பிரதேசங்களில், மழைக்காலங்களில் இவ்வாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், கடல் நீர் காலி வீதியை நோக்கிப் பாயும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/தெ…
-
- 0 replies
- 266 views
-
-
கொக்குவில் இந்து மயானத்தில், மின் தகன மேடை அமைக்க தீர்மானம் கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நல்லூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோம்பயன் மணல் மயானத்தில் மாத்திரமே மின் தகன மேடை உள்ளது.…
-
- 0 replies
- 248 views
-
-
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்மாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 422 views
-
-
அரசியல் கைதிகளுக்கு... கொலை அச்சுறுத்தல், விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240551
-
- 0 replies
- 198 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது. போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்திருக்கின்றன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெனிக் பாம் முகாமின் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்துக்குச் செல்ல முயற்சித்த முகாம் வாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு படையினர் முற்பட்டபோது ஆத்திரமடைந்த முகாம் வாசிகள் படையினரைத் தாக்கியதாக ஐ.நா. வின் அறிக்…
-
- 5 replies
- 789 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயத்தை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். ஞானசார தேரரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுமென கூறியிருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்படையினராலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறியுள்ளதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கை கடற்படையினர் தவறுதலால் நடந்தவொன்று என உஸ்வெட்டகேயாவ கடற்படை முகாமினர் கூறியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை இராணுவத்தளபதி மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்…
-
- 1 reply
- 365 views
-
-
ஈழ ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? – பொன்னிலா கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை. திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
-சுமித்தி தங்கராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா, எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா றம்பைக்குளம் கருமாரி அம்மன் கோவிலிருந்து ஆரம்பித்துள்ளார். இது பற்றி தம்பிராசா கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொள்ள வேண்டும், அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவி…
-
- 0 replies
- 377 views
-
-
முதல்வரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுகள் மீதும் சுயாதீன விசாரணை வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி நம்பிக்கை முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பி டப்படும் அனைத்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானது மான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அணியின் ஊடகப் பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் வெளியிட்ட பத்தி…
-
- 3 replies
- 387 views
-
-
இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இன் கீழ் பொருந்தும், 27 சர்வதேச நியமங்களைச் செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இன்று பயணத்தை முடித்து கொண்டது. இந்த நியமங்கள், இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அரசாங்கத்தின் பி…
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கை சென்றிருந்த இந்திய எம். பிக்கள் தூதுக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.கருணாநிதி நேற்று மாலை வர வேற்றார். நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையை அங்கு வைத்து முதல்வரிடம் கையளித்தனர்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் பேசும் போதுபருவ மழை ஆரம்பமாகும் முன்னர் அகதிகளை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதாகவும் முதல்வர் மு.கருணாநிதி கூறினார். தமது ஆட்சியினை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள், தமிழீழ மக்களின் போராட்டத்தினை எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் பாவிப்பது ஒரு தொடர்கதை. ஆனால் இந்த வருடம் தாயகமண்ணில் தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
போராட்டத்திற்கான தடை கண்டிக்கப்பட வேண்டியது – சர்வதேச மன்னிப்புச் சபை 11 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற உத்தரவு கண்டிக்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவானது அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மூடி மறைக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மாற்றுக் கொள்கையாள…
-
- 0 replies
- 415 views
-
-
விக்கி நன்றி அறிக்கை வெளியீடு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, எனதினியதமிழ்நெஞ்சங்களே! அண்மையில்நடந்தவைகனவாகக்கடந்துவிட்டாலும், அவற்றின்தாற்பரியங்கள்சிலமேலோங்கிநிற்கின்றன. முதலாவதாகஎன்வாழ்க்கைக்குஒருஅர்த்தத்தைஅளித்துள்ளீர்கள். “கொழும்பில்இருந்துவந்தஇவருக்குமக்கள்பலம்இல்லை”என்றவர்கள்யாவரும்உங்கள்அன்பின்நிமித்தம்திகைத்துநிற்கின்றார்கள். உங்கள்உணர்வுகளின்வேகம்கண்டுமிரண்டுள்ளார்கள். என்னைக்காணவந்தவர்கள்சேர்க்கப்பட்டவர்கள்அல்ல. உணர்வுமேலீட்டால்சேர்ந்தவர்கள்என்பதைஉலகறிச்செய்துள்ளீர்கள். …
-
- 0 replies
- 491 views
-
-
வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ ‘பெப்சி’, ‘கொக்கோ கோலா’ போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற வடமாகாண விவசாய கமநல கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ ‘பெப்சி’ மற்றும் கொக்கோகோலா’ போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. …
-
- 5 replies
- 680 views
-
-
அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம் ஏமாற்றங்களுடனும் அவலங்களுடனும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நீடித்துக் கொண்டிருக்கின்றது. காணாமல்போனோரைப் பொறுத்தவரையில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந் தது என்பது கூட தெரியாமல் அவர்களது உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போனோரின் உறவினர்கள் பொருளாதாரப் பிரச்சினை, பாதுகாப்பு பிரச்சினை, சமூகப் பிரச்சினை என்பவற் றினால் பாதிக்கப்பட்டுள் ளனர். தமது காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே இந்த மக்கள் அழுத்தங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றனர் அரச…
-
- 0 replies
- 257 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்- மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன். கடந்தகாலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு ள்ளேன். விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவ…
-
- 0 replies
- 173 views
-