ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
தமிழராய்ச்சி குழுவில் வந்த மின்னஞ்சல்: from Raj Suthan <suthan777@yahoo.com> to tamil_araichchi@yahoogroups.com, subject புலத்து தமிழ் ஊடகங்கள் ஏன் சீமான் விடுதலை பற்றி செய்தி வெளியிடவில்லை ? பாய்ந்து பாய்த்து யாரை பற்றியாவது ஏதாவது பிழை கண்டுபிடித்து கட்டு கதை என்றால் உடனடியாக பெரிதாக்கி , ஊகங்களை மட்டுமே வைத்து புலம்புவதில் பெயர் போனவை எங்கள் புலத்து தமிழர்களின் இனைய தளங்களும் ஊடகங்களுமே. அந்நாள் செந்தமிழன் சீமான் விடுதலை ஆன பொது மட்டும் இவர்களின் இணையங்களில் ஒன்றையும் காணோம் ! தமிழரின் தாகம் தமிழீழ தாயக என்பதற்கு முன்பாக நாங்கள் உரத்து கூற வேண்டியது முதலில் "ஒன்றுபடுவோம் தலை நிமிர்வோம் , கொள்கை தமிழீழம் என்றால் பிரிவு எமக்குள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அவசரகால சட்டம் விரைவில் நீக்கப்படும் (ஆர்.யசி) அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது. நாட்டில் தற்போதுள்ள இனவாத முரண்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் வெகு விரைவில் அவசரகால சட்டம் நீக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாட்டில் கடந்த காலங்களில் இருந்து இனவாதக் கலவரங்கள் இடம்பெற சிங்கள பெளத்த இனவாதமே காரணமாகும். தமிழர்கள் நெருக்கடியை சந்திக்கவும் இதுவே காரணமாகும். ஆகவே முதலில் சிங்கள பெளத்த இனவாதத்தை கட்டுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்டம் நீக்கப்படுவது குறித்தும் நாட்டின் தற்போதைய…
-
- 0 replies
- 210 views
-
-
பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இன்று வடக்கிற்கு பயணம்! [Thursday 2014-08-21 07:00] கொழும்பில் நேற்றுடன் முடிந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வையிடவுள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்…
-
- 0 replies
- 173 views
-
-
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை அணைப்பது கடினம். தேர்தலுக்கு கூட எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1307452
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராகுல், இன்று காலை சென்னை ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் 120 'அறிவுஜீவிகளை' (intellectuals) சந்தித்தார். இதில் ஊடக, சட்ட, திரையுலக பிரமுகர்கள் (ராம நாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், நடிகை ராதாவின் மகள் ஆகியோர் உள்பட) கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்…
-
- 1 reply
- 885 views
-
-
சித்தப்பு - மகன் முறுகல் நிலை நீடிக்கின்றது- முறுகல் நிலை நீடிக்கின்றது குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள் வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார். காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி…
-
- 0 replies
- 560 views
-
-
இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மீளப் பெற்ற கோட்டை நீதிமன்றம் By VISHNU 01 NOV, 2022 | 10:03 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இன்று செவ்வாய்க்கிழமை (1) அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு …
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
[வியாழக்கிழமை, 14 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [காவலூர் கவிதன்] 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சி…
-
- 0 replies
- 900 views
-
-
அழுத்கம பேருவளையில நடந்த வன்முறைச் சம்பங்களில மூட்டப்பட்ட நெருப்பு ஆறேல்ல பாருங்கோ... அது இன்னும் புகையுது. புகையிற நெருப்பை நிரந்தரமா அனைக்க சரியான ஒரு நிலைப்பாடட்டயோ சரியான எதிர்வினையையோ ஆற்றாமல் அரசாங்கத்த அசளகரியப்படுத்த விரும்பேல்ல எண்டு சொன்ன, நீதி கெட்ட நாட்டின்ட நீதி அமைச்சர் ஹக்கீம் இப்ப முஸ்லீம் மக்கள தேர்தல் காலத்தில சூடேத்திறாருங்கோ... ஊவாவில அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கப் போறாராம்.. தேர்தலில வெண்டு எடுக்கிற வோட்டோட போய் பேரம் பேசி அரசாங்கத்தில ஒட்டீண்டு இருக்கிறதுக்கு பேர் அதிர்ச்சி வைத்தியமோ??? போங்க சார்... நல்ல நீதி அமைச்சர் தானுங்கோ நீங்கள்.. ஓ.. அப்ப கிழக்கில தேர்தல் காலத்தில முஸ்லீம் தேசியம் பேசீ அங்க உள்ள பெடி – பெட்டையள உசுப்பேத்த…
-
- 0 replies
- 448 views
-
-
யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தி…
-
- 6 replies
- 637 views
- 1 follower
-
-
Jan 3, 2011 / பகுதி: செய்தி / பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும் - சிறீலங்கா அரசின் புதிய சட்டம் சிறீலங்காவில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் காலை வேளையில் பௌத்த மதத்தின் பிரித் ஓதப்படவேண்டும் என சிறீலங்காவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் தினமும் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் பிரித்த ஓதப்படவேண்டும். அதற்காக 20 நிமிடங்கள் தினமும் ஒதுக்கப்படும். 2600 ஆவது சம்புத்தா ஜெயந்தியை முன்னிட்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்கா முழுவதையும் பௌத்த நாடாக மாற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்தில் இது அடுத்த கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 6 replies
- 934 views
-
-
எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …
-
- 8 replies
- 1.8k views
-
-
பல்கலை. மாணவருக்கு இராணுவப் பயிற்சியா? வெகுண்டெழுகிறது மாணவர் ஒன்றியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:24:31| யாழ்ப்பாணம்] பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதற்காக இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்கி பல்கலைக்கழகத்திற்குச் சேர்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்ததை அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கண்டித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஒன்றியம் கொழும்பு மருதானை சியச மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்குவதானது, அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் முதல் கட்ட நடவட…
-
- 0 replies
- 733 views
-
-
- எம்.றொசாந்த், யோ.வித்தியா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, தன்னுடைய நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை அழைக்கவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. அமர்வு முடிவடைந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'கோட்டபய ராஜபக்ஷ, உங்களை சந்திப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினரான மனோகணேசன் ஊடாக தூது விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்ததே, அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனோகணேசனின் தாயாருடை மரண வீட்…
-
- 0 replies
- 404 views
-
-
மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ, எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவக…
-
- 0 replies
- 645 views
-
-
கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ். குற்றச்செயல்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரின் செயலாக இருக்கும் என கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஊகம் வெளியிட்டுள்ளார். இன்று சிங்கள இணையத்தளத்திற்கு பிரபா கணேசன் கொடுத்த நேர்முகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு மார்ச் மாதம் அமைச்சுப்பதவி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஈழநாதம்
-
- 2 replies
- 696 views
-
-
இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் அங்கு புதிதாக அனுமதி பெறும் மாணவர்களை சிரேஷ்ட வகுப்பு மாணவர்கள் பகிடிவதை எனும் பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதி பெற்ற சில மாணவர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். அந்தவகையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் நிலைபற்றி பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். இப்பகிடிவதையால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் பெற்றோர்களிடையே தமது பிள்ளைகளின் கல்வியை விட உயிர்தான் மேல் என்ற நிலையில் உயர்கல்வியை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில் த…
-
- 0 replies
- 396 views
-
-
செயலாளர்களுக்கு ரணிலுடன் தொடர்பு: மஹிந்தானந்தவுக்கு ஆதரவளிக்க வந்த டிலான்,தயாசிறி தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந் திரக் கட்சி ஆகியவற்றின் செயலாளர்கள் இருவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் ஐக்கிய தேசிய கட்சியுடனும் இரகசிய தொடர்புகளைப் பேணுவதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்களான டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர். பிரதமர் ரணில் மற்றும் ஐ.தே. க.வுக்கு ஆதரவான செயலர்கள் இருவரையும் மாற்றவேண்டும். அத்துடன் கட்சி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படும் இருவரை அப்பதவிக…
-
- 0 replies
- 129 views
-
-
The Tamil National Alliance (TNA) today blamed the crime wave in the Jaffna peninsula on the EPDP, an alliance partner of the ruling UPFA, and urged the government to resolve the situation. TNA National List MP M.A.Sumanthiran moved an adjournment motion in Parliament in this regard and said there was a complete breakdown in the law and order situation in the North resulting in murders, kidnappings, extortion and other crimes. Mr.Sumanthiran said the perpetrators had managed to get away in each of these incidents. The situation has been further compounded that even a Government Minister from the area has thought the situation so serious that he himself raised…
-
- 2 replies
- 1.5k views
-
-
நிபுணர் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல – ஐ.நா ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம் செய்தால் அது பயனுள்ளதாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.விசாரணைகளின் போது இலங்கையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 530 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கை! [Thursday 2014-09-25 23:00] இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து ஐ நா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ள…
-
- 0 replies
- 337 views
-
-
வாய்ச்சொல்லில் வீரரடி! ‘புத்த தர்மத்தின் வருகையாலேயே மனிதன் சிந்தித்துச் செயலாற்றினான். உண்மையை உணரும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டான். ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனுடைய செயல்களில் தங்கியுள்ளன’ என்றவாறாக தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. தனது வாழ்த்துச் செய்தியின் மற்றொரு பகுதியாக ‘சகல மனிதர்களும் ஒன்றாக இணையும் சக வாழ்வு உயிரோட்டம் பெற்றது. குரோத மனம் மீது கருணையைப் பாய்ச்சி, உயிரினங்கள் அனைத்தின்மீதும் அளவற்ற அன்புடன் மனித அறிவை மலரச் செய்து, வாழ்க்கையின் விமோசனத்தை அடையும் வழியை உணர்த்திய புத்த பக…
-
- 0 replies
- 350 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 30, ஜனவரி 2011 (22:39 IST) இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ் இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை சென்றார். பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் இன்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘’ தமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், எல்லை தாண்டும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையையும் தீர்ப்பதாக அமையும்’’ என்று கூறினார். nakkheeran
-
- 1 reply
- 578 views
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். இராணுவத்தினரால் வற்புறுத்தி சில மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பிரசன்னத்தினால் அச்சத்துடனேயே மக்கள் சாட்சியமளித்தனர். கரைய்ச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட 35பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23பேர் வருகை தந்து தமது உறவுகள் காணாமல் போன…
-
- 0 replies
- 750 views
-