ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இறுதிக்கட்ட போரின் போது சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற நடவடிக்கைகளை தடுக்கு சர்வதேச நாடுகள் காத்திரமான முயற்சிகளை எடுக்கவில்லை சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவிலாளர் கல்லம் மக்ரே தெரிவித்துள்ளார். பிபிசி சிங்களசேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியான பல தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு அமைய பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் மேற்குலக நாடுகளுக்கு உண்டு. அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறிழைத்து விட்டது. சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெறுவதைத் சர்வதேசம் தடுக்கத் தவறியதற்கு இரண்டு பிரதான…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்? - சி. சிவமோகன் கேள்வி [ Saturday,31 October 2015, 10:11:16 ] எந்த தவறும் செய்யாத தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று சனிக்கிழமை வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், நான் வன்னி மண்ணில் வாழ்ந்தவன். எமது பிரதேசத்தில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அரசபடைகள் அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி வந்தது. இதற்கு உறுதுணையாக அரச அதிகாரிகளும் அ…
-
- 8 replies
- 1.4k views
-
-
நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள அதேவேளை, இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 கண்காட்சியில் இன்று காலை உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 'பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வென்ற சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எமது அ…
-
- 10 replies
- 1.4k views
-
-
கடந்த 15 ஆம் திகதி 7 நாடுகளின் இராணுவத்தளபதிகள் வன்னிக்கு விஜயம் செய்து தமிழ்மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசபடைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏற்கனவே ஆயுத, நிதி உதவிகளைச் செய்துவருவதும் யாவரும் அறிந்ததே. புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இச்செய்தியின் பின்னர் இந்நாடுகளின் நடவடிக்கைமீது மிகவும் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பல அமைப்புக்களும் மக்களும் இந்நாட்டு அரசுகளுக்கு தங்கள் அதிர்ப்த்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர். பனையால் விழுந்தவனை மாடு ஏறிமிதிப்பதுபோல் இவர்களின் நடவடிக்கை உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771
-
- 0 replies
- 1.4k views
-
-
சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை முன்னெடுக்க மிதவாத தலைவர்களே காரணமாக இருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் அதிலொன்று. அதே நிலைப்பாட்டினையே நாமும் முன்னிறுத்தி மாற்றமின்றி செயற்பட்டு வருகின்றோம். அதனால் விடுதலைப் புலிகள் போன்று கடுமையான நிலைப்பாட்டை நாமும் கொண்டிருப்பதாக கூறுகிறார்களென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (23) யாழ். ஊடக அமையத்தில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம் பெற்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் வேட்பாளர்கள் தம்மை அறிமுகப் படுத்தினார்கள். வேட்பாளர்கள் தமது சுய அறிமுகத்துடனும் தாங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தேர்…
-
- 24 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகரமான திருநெல்வேலி தாக்குதல் (video in) Saturday, July 23, 2011, 0:22கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம…
-
- 2 replies
- 1.4k views
-
-
குடும்பிமலைக் குண்டு வீச்சு புலனாய்வாளர்களின் சதித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இராணுவப் புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் ஆகும். விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்ற…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. சிவிலியன் இலக்குகள் மற்றும் சிவில் காரியாலங்களை இலக்கு வைத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் காரியாலங்கள் மீது அரச படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசியல் பணிமனை ஆகியவற்றின் மீது விமானப்படையினர் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். வன்;னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன் நலன்புரி ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வியூகம் எதுவோ? வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுப் பதில் எத்தகைய முன்னேற்றம் உண்டாகியுள்ளது. அதன் பொருட்டு இந்தியா வழங்கிய நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடைந்ததா? அவர்களது வாழ்வில் விடிவு பிறப்பதற்கான அறிகுறிகள் சிறு கீற்றாகவேனும் தென் படுகின்றதா? இவற்றுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு விஷேட தூதுவர் ஒருவரை இந்திய மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 2 மாதங் களுக்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியத் தரப்பின் விருப்பம், ஏற்பாடு, …
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள தமிழரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழரக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ரொலோவின் சார்பில் சிவசக்த…
-
- 23 replies
- 1.4k views
-
-
தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு BharatiSeptember 11, 2020 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.4k views
-
-
''தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்'' நா. யேகேந்திரநாதன் மேற்கு நாடுகள் கிழக்கு திமோர் தென்சூடான் பேன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தனி நாடு பெற்றுக் கொடுத்துவிடும், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கிழித்து எறியப்பட வேண்டும்.. இது அண்மைக்காலமாக ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி) பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆற்றி வரும் உரைகளின் சாராம்சம். இவரின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தோனேசியாவின் கொடிய அடக்குமுறையிலிருந்து கிழக்குத் தீமோர் விடுதலைப் பெற்றது தவறு, அங்கு அந்த நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் இனவெறி இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக க…
-
- 8 replies
- 1.4k views
-
-
மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல – கௌரி சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது. வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள்.ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”. அன்று அந்தத் தொலைக்காட்சியில் …
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு ஜெனீவா சம்பந்தமாக எப்படி அமையும் என்பது தமிழர்களின் நீண்ட துன்பியல் வரலாற்றில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர உதவுமா என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட சனல் நாலில் முன்னை நாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அவரின் பிரதி செயலாராக இருந்த மேனன், இன்றைய பாதுகாப்பு ஆலோசகரும் காட்டப்படுகிறார்கள். இந்தியா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் பங்கு கூறப்படுகின்றது. அந்தவகையில் சனல் நாலு அந்த போர்குற்ற ஆவணம் இந்திய மக்களை சென்றடைவது எமது மக்களின் அரசியலில் விடிவுக்கு முக்கியமானதாகின்றது. நாளை இரவு 10 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனல் – 4 வெளியிட்ட கொலைக்களம் பகுதி -…
-
- 5 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரங்கள் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி மற்றும் ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து என வண்ணப்படத்துடன் இவை அச்சிடப்பட்டுள்ளன. நாளை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள், என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=145603&category=TamilNews&languag…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் : 08 மே 2011 இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை விடயம் n;தாடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் க்ரீன் கட்சியினால் இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட உள்ளதாக ஐரோப்பிய …
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும், தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் றிச்சர்ட் டிக்சன் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் இலங்கை இனப்படுகொலை குறித்தும், அதனை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டன குறித்தும் கட்டுரை …
-
- 4 replies
- 1.4k views
-
-
துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்;. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார். இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார். சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.! முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் சிலரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் யுகம் நிறைவடைந்த காலமான கிருஸ்து வருடம் 946 முதல் 954 ஆகிய யுகத்தில் அதனை ஆட்சி செய்த 4 ஆவது உதய மன்னருக்கு சொந்தமான பழமைவாய்ந்த கல்வெட்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்த…
-
- 14 replies
- 1.4k views
-
-
புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம் சிவகங்கை: இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவத் தாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணியதால், சிறிலங்க அரசு விடுதலைப் புலிகளை விட அதிக தவறிழைத்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மனிதாபிமான ஒன்று என்றும், அங்குள்ள தமிழர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் செய்யுமாறு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே…? »அத்தார்… உங்களுக்கு நூறு வயசு…! » என்றவாறே சொல்லாமல் கொள்ளாமல் முற்றத்து வாசல்வரை வங்த முகத்தாரை வரவேற்றர் அப்புக்குட்டியர். »ஓமடா… ஓமடா… எப்ப என்ர காலை வாரலாம் எண்டு காத்துக் கிடப்பாய்… இப்ப என்ன நடந்ததெண்டு என்னை நினைச்சுக்கொண்டிருந்ததாக றீல் விடுகிறாய்…? » என்று முகத்தார் அப்புக்குட்டியரை நக்கல் அடித்தார். »அப்ப… அத்தார்… உங்களுக்கு உண்மையாகவே விசயம் தெரியாது போல கிடக்குது… » என்று இழுத்தார் அப்புக்குட்டியர். »என்னடா அப்புக்குட்டி… காலங்காத்தால குண்டைத் தூக்கிப் போடுகிறாய்… ஏதேனும் பிரச்சினையோடா… » என்று அங்கலாய்ந்தார் முகத்தார். »எங்கட பக்கத்து நாட்டுத் தலையாரி அமெரிக்காவில நிக…
-
- 2 replies
- 1.4k views
-
-
79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=89695&category=TamilNews&language=tamil இந்த பிக்கு வெட்டி கொல்லும் அளவுக்கு என்னதான் அப்படி செய்திருப்பார் ...... ?
-
- 23 replies
- 1.4k views
-