ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும்: போஸ்ரன் குளோப் தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்ரன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம்: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் பிரிவினைவாத இயக்கமான தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
திங்கள் முதல் வெள்ளிவரை ஓமந்தை சோதனைச்சாவடி திறக்கப்படும் ஓமந்தை தாண்டிக்குளம் சோதனைச்சாவடி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கள் கிழமை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனைச்சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டவிடி விக்னட்டி தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள சூனியப் பிரதேசத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றுவதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த டவிடி விக்னட்டி, வவுனியாவிலிருந்து புலிகளின் கட்டுப்பா…
-
- 1 reply
- 1.4k views
-
-
சனிக்கிழமை, 24, ஜூலை 2010 (9:31 IST) இலங்கைக்கு தைரியத்தை கொடுத்தது யார்? வைகோ இலங்கை ராணுவத்தினர் தாக்கி மீனவர் படுகொலையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை ராணுவத்தினர் தாக்கி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை இறந்துள்ளனர். இதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசை ஒரு முறை கூட மத்திய அரசு கண்டித்ததில்லை. மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல, முதல்வர் கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இலங்கை போரில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு யார் தைரியத்தை கொடுத்தது? இத…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை [07 - January - 2009] வ.திருநாவுக்கரசு தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை "கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கை…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் கொள்கைகளை சுமந்து வரும் பாடல் .... வெங்காயம் திரைப்படத்தில் தேசிய தலைவரின் கொள்கைகளை சுமந்து வரும் பாடல் .... http://youtu.be/aVit0DerdSk http://www.eeladhesa...php?option=com_
-
- 5 replies
- 1.4k views
-
-
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’இலங்கை பிரச்சனை குறித்து ஐ.நா.சபை விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கி விட்டது. வருகிற 15-ந்தேதிக்குள் இந்த விசாரணை குழுவிற்கு தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் யார் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். முள்ளிவாய்க்கால் போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஈழ தமிழர்கள் பலர் தமிழ் நாட்டுக்கு தப்பி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அணுகி அவர்களிடமிருந்து புகார்களையும், ஆவணங்களையும் திரட்டி ஐ.நா.விசாரணை குழுவிற்கு அனுப்ப வேண்டியது கடமை. புகார் செய்தால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சக்கூடாது. யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் வராது. அனு…
-
- 0 replies
- 1.4k views
-
-
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா. மேலும் படிக்க http://vinavu.wordpress.com
-
- 0 replies
- 1.4k views
-
-
மாதத்தில் குறைந்தது 50 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் [செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 18:30 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று யாழ். மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் செய்யும் முறைப்பாட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் கொலையும் ஆட்கடத்தலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. அண்மையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என அடைக்கலம் தேடி தங்ளிடம் வந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது http://www.eelampage.com/?cn=30047
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் 7 வயதுச் சிறுவனை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை செய்ய வேண்டும் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு ஐ நா பாதுகாப்பு சபையில் நடந்தது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் 29 அவை Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 12 அவை Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom. …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸர்லாந்து நாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சுவிஸ் வருமாறு சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருப்பதாக கொழும்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிரித்தானியா செல்வதாகத் தெரிவித்தே அவர் பயணித்ததாகவும் ஆனாலும் சுவிஸ் சென்ற விடயம் தமக்குத் தெரியாது என்று கூட்டமைப்பின் இள நிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவ…
-
- 5 replies
- 1.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இளைஞர்கள் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவச படுகிறார்களோ..??
-
- 10 replies
- 1.4k views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் கரும்புலி வீரர்? வெள்ளி, 14 ஜனவரி 2011 21:52 கடந்த ஒகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து அடைந்த இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர் என்று பெரிதும் சந்தேகிக்கப்படுகின்றது. கனேடிய புலனாய்வாளர்கள் இச்சந்தேகநபர்களுக்கு எதிராக அங்கு நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்கள். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் மாறாக மீனவர் என்றும் இச்சந்தேகநபர்களில் ஒருவர் இந்நீதிமன்றத்துக்கு தெரிவித்து உள்ளார். இருப்பினும் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வந்திருக்கின்றார் என்பதை…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாகர்கோவிலில் படையினரின் ரோந்து அணி மீது தாக்குதல் இருவர் பலி! இருவர் காயம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறீலங்காப் படையினரின் ரோந்து அணி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை நேற்றிரவு 9.15 மணியளவில் வடபோர்முனையில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியினர் நடத்திய அச்சொட்டான எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் சேதங்களுக்கு உள்ளாகியது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் பட…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது. சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்படுகின்றது. புத்தூர் வாதரவத்தை வீதியில் புத்தூர் தகரம்பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கு பக்கத்தில் வீதியின் அருகே அமைந்துள்ள நினைவுத்தூபி ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் புத்தூர் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட படுகொலையில் 09 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அம்மக்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அப்பகுதி மக்களினால் அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் தூபி இன்று இராணுவத்தினரால் இடிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு தேவையான கற்களை பெறுவதற்காக இத்தூபி இடிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளைமோர் தாக்குதலில் முக்கிய கருணா துணைப்படை உறுப்பினர் படுகாயம் ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் நாவலடி ஓட்டுமாவடி காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளை சிற்றூர்தி கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது. இதன்போது இவ் வெள்ளை சிற்றூர்தியில் சென்ற ஏழு கருணாகுழு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கருணாகுழு முக்கிய உறுப்பினரான சின்னத்தம்பி என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாழைச் சேனை காவல்துறையினரின் தகவலின்படி வாழைச்சேனை பகுதியில் இருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த அனைவரையும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
First Published : 14 May 2009 01:43:49 AM IST Last Updated : 14 May 2009 03:09:32 AM IST புது தில்லி, மே 13: தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன. டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209. சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இலங்கை தமிழருக்காக டி.வி. நடிகர், நடிகைகள் 9-ந்தேதி உண்ணாவிரதம் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.டி.வி.நடிகர் சங்க தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தில் டெலிவிஷன் நடிகர், நடிகை கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையொட்டி படப்பிடிப்பு நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் …
-
- 5 replies
- 1.4k views
-
-
வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம ஐ நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:43:00 யுஆ புஆவுஸ ஜஎசையமநளயசi.டமஸ சகல தரப்பிரனதும் யோசனைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இனப்பிரச்சினைகு தீர்வு காணும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளிற்க்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பன்கி மூனை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பதற்கும் எடுக்கப்படும் அரசியல் தீர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐ.நா செயலாளருக்கு விளக்கியுள்ளார் மேலும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் அதிகளவில் இடம்பெறுகின்றது. அதனை ஒழிப்பதற்கு மக்கள் பலம் எனக்கு வேண்டும். ஆனால் நான் அரசியல்வாதியல்ல என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் திரமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, ‘அன்பினால் ஞாலப்பண்பினை ஓங்கச் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னிடம் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுள் ஆலயம் தொடர்பான விக்கிர அமைப்பில் முறைப்பாடுகளும் நிதி தொடர்பான பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதை விட யாழ்ப்பாணத்தில் 29ஆயிரம் பெண்கள் யுத்தம் மற்றும…
-
- 1 reply
- 1.4k views
-