ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெறுவதற்கு மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மனு ஒன்று நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் சட்டத்தரணியான சிறிகலா குரு கிருஷ்ணகுமார் என்பவரே இந்த மனுவைத் தாக்கல் செய்தார் என்று இந்தியச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் இந்திய அரசமைப்பில் எந்தவித மாற்றமும் செய் யப்படாமல் கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தமிழக மீனவர்கள் அங்கு தங்கி மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. h…
-
- 0 replies
- 907 views
-
-
மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமிய பொருhதா அபிவிருத்தப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (24நடைபெற்றது. இந்நிலையில் இப்புதய பஸ் தப்பு நிலையம் நிமாணிக்கப்பட்டு; பிரதேசம் தமது கிராமத்தி;குச் சொந்தமானது எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் பட்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருது பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிதேச…
-
- 1 reply
- 494 views
-
-
தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு – கூட்டமைப்பு கேள்வி! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக ”Batticallo Campus’ இனை…
-
- 3 replies
- 407 views
-
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் …
-
- 11 replies
- 421 views
- 1 follower
-
-
அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம் வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=2873
-
- 0 replies
- 870 views
-
-
பி.கு: இதன் பூரணத்துவம் திருப்தியாக இல்லை. வேறு ஆதராங்கள் இருந்தால் இணைத்துவிடலாம்.
-
- 2 replies
- 731 views
-
-
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தற்போது ஸ்ரீலங்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வரை 43 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், ஸ்ரீலங்காவில், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இத்தாலி உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 6000க்கும் அதிகமானோர் வீடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
-
- 2 replies
- 339 views
-
-
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம் September 13, 2025 மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர். அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (…
-
- 0 replies
- 75 views
-
-
சிறீலங்கா பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுஜித் மானவடு இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெஸ்பேவவில் நேற்றுமுன்தினம் காலையில், இவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமானப் பணியொன்றை மேற்பார்வையிடுவதற்காக சென்றவேளை தலையில் மரக்குற்றியொன்று விழுந்து மேஜர் ஜெனரல் சுஜித் மானவடு படுகாயமடைந்தார். படுகாயமடைந்த சுஜித் மானவடு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே மூன்று மணிநேர நரம்பியல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து இன்று காலை மரணமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளா…
-
- 1 reply
- 401 views
-
-
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு – அவர்களில் இருவர் வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் இருவர் வைத்தியர்கள் என சுகாதார தரப்பு செய்திகள் தெரிவித்தது. அதில் மேலும் சிலர் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-4/
-
- 1 reply
- 575 views
-
-
மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு: நான்கு ஈ.பி.டி.பி.யினர் உட்பட ஏழு பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 07:26 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிடிக்கின்றது. இச்சம்பவத்தில் ஏழு கைதிகள் படுகாயமடைந்து அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவு
-
- 1 reply
- 1k views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையில் தாமதமின்றி உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வைத்து, இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷை சந்தித்த வேளையில் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.[/size] [size=4]நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் யுத்ததுக்கு பின்னரான நிலைமைகள் குறித்து ஜீ.எல்.பீரிஷ் பான் கீ மூனிடம் விளக்கமளித்துள்ளார்.இதன் போது ,பான் கீ மூன், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மேற்கொள்கின்ற முன்னெடுப்புகள் தொடர்பில் அ…
-
- 0 replies
- 353 views
-
-
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் ப…
-
- 2 replies
- 172 views
- 1 follower
-
-
இதுவரை 15 சடலங்கள் மீட்பு மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 12 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/172514/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-#sthash.zOqmm47I.dpuf அரநாயக்க அகோரம்... 18-05-2016 10:29 AM Comments - 0 Views - 33 அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் ப…
-
- 1 reply
- 457 views
-
-
பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை! கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்க…
-
- 0 replies
- 122 views
-
-
வன்னியிலிருந்து கடந்த புதன்கிழமை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரம் தொடர்ந்தும் ஓமந்தை சோதனைச் சாவடியிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சியிலும் தமது பணிகளைத் தொடரும் என சங்கத்தின் பேச்சாளர் அலெக்சாண்ட்ரா மதிஜேவிக் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ நாம் தொடர்ந்தும் கிளிநொச்சியில் தங்கியிருப்போம். இந்தத் தீர்மானத்தினை எமக்குள்ள உரிமையின் மூலமும், அரசாங்கத்துடனான உடன்பாட்டின் மூலம்; எடுத்துள்ளோம். தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை நடுநிலையாக மேற்கொள்வோம்” என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு…
-
- 0 replies
- 701 views
-
-
[size=4]அண்மையில் வெளியிடப்பட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலில் அதன் ஆசிரியரான பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவிலிருந்து வெளியேறிய பெண்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அதன் விபரமாவது, சிறிலங்காவிலிருந்து பிரித்தானியாவில் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்துள்ள கிழக்கு இலண்டனில் வதிகின்ற தமிழ்ப் பெண்மணி ஒருவரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். சில சட்டவாளர்கள், மதகுருமார்கள் போன்றோரால் இந்த நேர்காணல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. குறித்த தமிழ்ப் பெண்ணின் உண்மையான பெயரைக் கூட நான் அறியவில்லை. ஆனாலும் நான் இங்கு அவரை மணிமொழி என அழைக்கிறேன். இப்பெண் தனது தாயாரிடமோ அல்லது கணவனிடமோ ஒருபோதும் கூறாத சம்ப…
-
- 2 replies
- 498 views
-
-
வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள் கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது. தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். http://www.virakes…
-
- 25 replies
- 2k views
-
-
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும். இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரட…
-
-
- 5 replies
- 381 views
- 1 follower
-
-
'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்: அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான். வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் …
-
- 3 replies
- 1.6k views
-
-
3 ஆம் திகதிக்குள் வட. மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி பணிப்பு வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது நோக்கில் அவர்களுடைய காணிகளை இனம்காணும் செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறுவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே ஜனதிபதி உரிய அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிகளை …
-
- 0 replies
- 311 views
-
-
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு! adminNovember 7, 2025 தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண காவற்துறைனர் குறித்த மூவரையும் கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு…
-
- 1 reply
- 159 views
-
-
யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்! adminNovember 18, 2025 கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 115 views
-
-
லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாபெரும் அமைதிவழிப் போராட்டம் சிறீலங்கா அரச வான் படையினர் வன்னியில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் லண்டன் நகரிலுள்ள பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாபெரும் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4:00 மணிமுதல் இரவு 7:00 மணிவரை நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதால் அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத…
-
- 0 replies
- 763 views
-
-
வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம் வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி : முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா? பதில் அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வே…
-
- 0 replies
- 352 views
-