ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
கருணா அம்மானின் பிணை மனு நிராகரிப்பு கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரன் பிணை மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்த நிலையில், குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14164
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. உட்பட உலகநாடுகளின் குரலுக்கு இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும், மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர் கழகத்தின் தலைவருமான மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவதற்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். உண்மையில் அது சரியான கூற்று. அரசாங்கம் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தினசரி இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கையினால் மக்கள் செத்துமடிவதும், காயப்படுவதும் நடத்துகொண்டிருக்கின்றன. இதை…
-
- 0 replies
- 474 views
-
-
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க சேலத்தில் கூடிய பெரியார் திராவிடர் கழக செயற்குழு முடிவு செய்துள்ளது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசையும், அதை நியாயப்படுத்தும் தி.மு.க.வையும், தமிழர்கள் தோற் கடிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு 29.3.2009 ஞாயிறு பகல் 11 மணியளவில் சேலம் நேஷனல் ஓட்டல் அரங்கில் கழகப் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் 150 பேர் திரண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டைகர் பாலன் வரவேற்புரை யாற்றியதைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை முஸ்லிம்களை... தமது நாட்டிற்கு, வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களுக்கான இறுதிக் கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 429 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி காவல்துறை பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளரும் காவல்துறை சுப்பிரீன்டருமான எம்.ஜமால்தீன் இன்று அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 480 views
-
-
இந்தியக்குழுவினரிடம் குறை கூறவேண்டாம்; மக்களை இடைமறித்த யோகேஸ்வரி! — 11/04/2013 at 4:13 pm | no comments யாழ்., அரியாலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் தரமற்றவையாக உள்ளதாகவும் கூரைகளினூடாக மழை நீர் ஒழுகுவதால் வீட்டுக்குள் குடை பிடித்துக்கொண்டே வாழ வேண்டிய நிர்க்கதியான நிலை காணப்படுவதாகவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரியாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.அரியாலைக்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் குறை நிறைகள் குறித்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாவது, “ நீங்கள் கட்டித்தந்த வீடுகளின் அத்திவாரங்களிலும் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்திவார வெடிப்புகளுக…
-
- 2 replies
- 540 views
-
-
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (17.12.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடக்கு கால்நடை அமைச்சு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், போசணை மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடும் தகர் என்ற பெயரில் ஆடு வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்க…
-
- 1 reply
- 454 views
-
-
வலி. வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட வீதிகள் பாதசாரிகளே செல்ல முடியாத நிலையில் உள்ளபோது இராணுவத்தினரின் பிடியில் உள்ள பகுதிகளிற்கு காப்பெற் வீதி போடப்படுவதாக மீளக்குடியமர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பலாலி கிழக்கு வாழ் மக்கள் தெரிவிக்கையில், வலி. வடக்கின் பலாலிப் பிரதேசத்தில் இருந்து 1990களில் விரட்டப்பட்ட நாம் எமது சொந்தக் கிராமங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலடிவைத்தோம். அன்று தொட்டு இன்றுவரையில் அங்கிருந்த இராணுவ எச்சங்களை அகற்றி பற்றைகள், கல்லுகள் அகற்றி வாழ்வாதார நிலங்களை பண்படுத்தி எடுப்பதில் காலம் கடந்து விட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி நகர்வதானால் அதள பாதாளங்களாக காணப்படும் எமது பகுதி வீதிகளை சீர் செய்த…
-
- 3 replies
- 698 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதி மீதான தாக்குதல் நடைவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அனைத்துலக ரீதியாக அதிகரித்து வரும் அழுத்தங்களைத் தொடர்ந்து குறுகிய கால தாக்குதல் தவிர்ப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும், அமெரிக்காவும் இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. அதேவேளையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது த…
-
- 0 replies
- 770 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு நாராஹேன்பிட்ட பகுதியில் வைத்து நடராஜா ரவிராஜ் இனந்தெரியாத நபர்களினால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்…
-
- 9 replies
- 654 views
-
-
நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் – க.வி.விக்னேஸ்வரன் J 57 Views நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த …
-
- 1 reply
- 570 views
-
-
A four member delegation of Tamil National Alliance (TNA) headed by its Leader R Sampanthan on Wednesday met Indian National Security Adviser M K Narayanan in Delhi on the invitation of the Indian Central Government. The delegation, apprised Narayanan about the current sri Lanka Army offensive in Vanni, Northern Sri Lanka and the risk of life to more than 250,000 civilians in the 'No fire zone' or 'safe zone' as it is refered invariably More News will follow Full Report courtesy:TamilNational.Com
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மற்றுமொரு தமிழ் இளைஞன் மீது சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ABC´s 7.30 செய்திக்கு அழைப்பை ஏற்படுத்தி இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார். குமார் குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினர…
-
- 0 replies
- 482 views
-
-
கிண்ணியா மாஞ்சோலைப் பகுதிக்கு பயணத்தடை Digital News Team திருகோணமலை கிண்ணியாவிலுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு பகுதிக்கு இன்று(11) பயணத்தடை விதிக்கப் பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றாளர்கள் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேச வதிவாளர்களுக்கு விரைவான அன்டிஜென் சோதனைகள் மற்றும் பிசிஆர் சோதனைகளை நடத்த மூன்று குழுக்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Thinakkural.lk
-
- 0 replies
- 490 views
-
-
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத்தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்.தாவடிப் பகுதியில் பொதுமக்களையும், முன்னாள் போராளிகளையும் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி இருந்தார். குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதியில் நிற்பதைக் அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்…
-
- 1 reply
- 549 views
-
-
சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சாணக்கியனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “எனக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவுகளை அறிவித்திருந்தார்கள். …
-
- 0 replies
- 480 views
-
-
இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்க…
-
- 16 replies
- 3.1k views
-
-
கொழும்பு ரோயல் கல்லூரியில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொழும்பு ரோயல் கல்லூரியில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், கொழும்பு மற்றும் ஒரு சில பகுதிகளில் இயங்கும் புகழ்பெற்ற பாடசாலைகளில் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இதன்போது, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர்களை இணை…
-
- 0 replies
- 189 views
-
-
சர்வதேச பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் அரசாங்கத்தின் தார்மீக கடமை என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) "நீதிக்காக எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பை உறுதிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும்" என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென்ற வாக்குறுதி அளிக்கப்பட்டே மக்கள் ஆணை பெறப்பட்டது. அரசியலமைப்பு சபையிலும் அம்முறைமை மாற்றத்துக்கு இணக…
-
- 1 reply
- 456 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியு…
-
- 7 replies
- 5.3k views
-
-
ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து சுவிஸ் பாராட்டு இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்படுத்தப்பட்ட சாதகமான படிமுறைகளை சுவிட்ஸர்லாந்து வரவேற்று ள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி பூபிஸ் லொய்ட்காட் தெரிவித்துள்ளார். டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுவரை இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின், ம…
-
- 0 replies
- 238 views
-
-
The government Defense Ministry intelligence service is scanning all external independent web Medias and systematically blocking the ones they consider undesirables to be accessed by the Sri Lankans. The latest victim of the government’s paranoid gagging is the www.tamilnation.org website. The website provides wealth of information about historical accounts of the Tamil struggle and it is a reference source for many researchers to unearth documentary evidence for their work. The www.tamilnation.org is claimed to be run by the veteran Tamil nationalist Nadesan Sathyendra. The website justifies the LTTE struggle on the grounds that it has gained legitimacy due to …
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் படம் பிடிக்கும் புலனாய்வாளர்கள் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கமராவுடன் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கள் தெரிவித்தனர். வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர். தமது காணாமல் போன பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் தர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரி இத் தொடர் உண்ணாவிரதப் போராட்…
-
- 0 replies
- 463 views
-
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் அவரை கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்ப…
-
- 0 replies
- 390 views
-
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை : அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 5/7/2009 1:40:35 PM - இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத…
-
- 0 replies
- 510 views
-