ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ராஜ துரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயா , ஜோர்ஜ் மாஸ்டர்களுக்கு எதிராக நடவடிக்கை - கோத்தபாய: பயங்கரவாதத்திற்கு உதவியமை மற்றும் ராஜதுரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விடுதலைப்புலிகளின் மொழிபெயர்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்படும் குமாரன் பஞ்சரத்தினம், புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உயர்மட்ட பிரதிநிதிகள் என படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உறுதுணை வழங்கியமை, கொலைகள் தொடர்பான தகவல்களை மறைத்தல், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்தையடுத்து, இலங்கை தொடர்பான ஜப்பான் கருத்து நிலைப்பாட்டை இலங்கைத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கும் நோக்குடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி இன்று திடீரென கொழும்புக்கு விஜயம் செய்கின்றார். கொழும்பில் மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் அவர், இங்கு இலங்கை ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்த பின்னர் செவ்வாயன்று மாலையே ஜப்பான் திரும்புவார் எனத் தெரிகிறது. விசேட தூதுவர் அகாஷி இன்று முதல் சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து சில பணிகளை மேற்கொள்ள முன்னர் திட்டமிட்டிருந்தார். வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
அம்பாந்தொட்ட, மத்தளவில் உள்ள மகிந்த இராஜபக்ஸ விமான நிலையத்துக்கு, வாரம் இரு முறை, ரஸ்யாவில் இருந்து நேரடி பட்டய பயணிகள் விமான சேவையை (charted flights) ரஸ்ய அரச விமான சேவையான ரெட் விங்க்ஸ் நடத்த தீர்மானித்துள்ளது. 28/12/2022 முதல் இச்சேவை ஆரம்பமாகிறது. ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மூன்றாவது நேரடி விமான சேவை இதுவாகும். https://www.newswire.lk/2022/12/26/russias-red-wings-to-commence-charter-flights-to-mattala-airport/
-
- 25 replies
- 1.3k views
-
-
மீண்டும் அதே அபத்தம்! [ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ] வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது. 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகம…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த பல வருடங்களுக்கு பிறகு கற்பனையில் தொடரூந்து விடும் இலங்கை தேசிய பயங்கரவாதி மஹிந்த. தற்போது வடபகுதி மக்களுக்கான போக்குவரத்து பாதையாக 1.கப்பல்- இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை 2.விமானம்-இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை 3.தரை போக்குவரத்து- 2002-2006 வரை மக்களுக்கு வரப்பிரசாதம். ஆனால் டகளஸ்,அரசுக்கு வருமான இழப்பு. தற்போது சிங்கள பயங்கரவாத அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தரைப்பாதையை திறக்க விருப்பமில்லை. ஏனென்றால் செலவு குறைவானது. மக்களே வாகனங்களை வாங்கலாம். அதை செய்ய முயலாமல் தொடரூந்து சேவை ஆரம்பிபதில் பல சந்தேகம் உண்டு. 4.தொடரூந்து சேவை- 20 வருடங்களாக இல்லை, தண்டவாளமும் இல்லை. இதை வைத்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து பெருந்தொகையான பணம் இனாமாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - எமது படைவீரர்களுடன் இணைந்து மிக விரைவில் நாடு முழுவதும் சமாதானத்தையும் மக்களின் நல்வாழ்வுக்குமான வழியையும் ஏற்படுத்துவேன். கிழக்கை மீட்டு அப்பகுதி மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த பெருமை எமது படையினரையே சாரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முதல் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரையான கால எல்லை, படையினருக்கான மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தேசிய படை நினைவுக் கொடியின் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் இறைமையையும் சுயாதிபத…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்தது . அதன் தொடர்ச்சியாக , இன்றும் மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் கூடினார்கள் , கூடிய அவர்கள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இட ஆயத்தமானார்கள் . அதற்காக போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக காவல்துறை அவர்கள் மீது கடும் தடியடியை பிரயோகித்தது அதில் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர் கார்த்தி என்பவர் படுகாயம் அடைந்து ராயபேட்டை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் . சிதம்பரம் வீட்டை மட்டும் இல்லாமல் , சாஸ்திரி பவனையும் ஒரு மாணவர் குழு முற்றுகை இட்டது . அதிகபடியான விவரங்களை எதிர்நோக்கி உள்ளோம் .http://www.dinaithal.com/index.php?optio…
-
- 1 reply
- 1.3k views
-
-
டக்ளஸின் கோரிக்கையை நிராகரித்தார் பாலு இலங்கைக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்காக இந்திய கப்பல்களை வழங்க வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிராகரித்து விட்டார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு இலங்கைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் யார் மூலம் அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்கினால் அந்நாட்டு இராணுவத்திடம் தான் வழங்கியாக வேண்டும். அந்த இராணுவம் தான் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே, உணவுப் பொரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களைப் பிரிக்க அரங்கேற்றப்படும் படுகொலைகள் இன்போதமிழின் இவ்வார செய்தி ஆய்வு - தாயகத்திலிருந்து கபிலன் வரலாறு காணாத அவலங்களை தமிழ்மக்களுக்குக் கொடுக்கின்ற வன்னிப் பெரும் போர் நாளுக்கு நாள் மூர்க்கமடைந்து வருகிறது. இந்தப் போர் இப்போது சுமார் 800 ச.கி மீற்றருக்கும் உட்பட்ட குறுகிய சுற்றுவட்டமொன்றுக்குள் குறுகி நிற்கிறது. இந்தநிலையில் குறிக்கப்பட்ட புள்ளியை நோக்கி ஒன்று குவிக்கப்பட்ட தாக்குதல்களை அரசபடைகள் ஆரம்பித்திருப்பதால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டிசம்பர் 20ம் திகதிக்குப் பின்னர் வன்னிக் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதோடு- பொதுமக்கள் பெரும் உயிரிழப்புகள…
-
- 3 replies
- 1.3k views
-
-
கஸ்டத்தை எதிர்நோக்கி உள்ள மிஹின் லங்கா விமான சேவையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக விமான சேவை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். அதேவேளை மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹேமலால் தல்கஸ்வத்த, இலங்கை பூமிபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சரத் சில்வா, விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, ஸந்தன லியபட்டபெந்தி, நிதியமைச்சின் சார்பில் கலாநிதி சமரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்…
-
- 8 replies
- 1.3k views
-
-
26 APR, 2025 | 08:00 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) வெளியிடப்பட்டன. 2024ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர். 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/213032
-
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-
-
புதன்கிழமை, அக்டோபர் 20, 2010 விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா என்பதை விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆஜராக உள்ளார். ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தீர்ப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
Why, the New LTTE Leader Kumaran Padmanathan (KP) Represent the Sri Lankan Government as the Spokesperson? So through lack of awareness, lack of concern or simply because it suites a particular argument to hold on to power, President Mahinda Rajapaksa and his brother Defence Secretary Gotabaya Rajapaksa, is misleading the general public in Sri Lanka by allowing Kumaran Padmanathan to be their spokesperson. They used all available means, printed media, electronic media and the public meetings to mislead the educated and the un-educated people saying that the “dead” LTTE bogy is trying to raise its head again, but use the present LTTE leader to mislead the people. The …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ” “சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்ற கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அமைப்பு ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதை சாட்சியங்கள் கூறும் ” என்று எழுதியிருந்தார். இதில் அவர் பயன்படுத்திய…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியற்ற விதத்தில் உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் தமது எல்லைகளை மீறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தேடுதல் மற்றும் கைது செய்தல் என்பன பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். கிழக்கில், விடுதலைப் புலிகள் தோல்வி கண்டதனால் தெற்கில் தாக்குதலை நடத்துகின்றனர்.…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களை அடையாளம் தெரியாத குழுவினர் கடத்தி பணம் பறிப்பதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட புதிதாக திருமணமான கணவனை மீட்க கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த மே 26 ஆம் நாளன்று புதிதாக திருமணமான கிளிநொச்சியைச் சேர்ந்த இருதயசாமி பிரான்சிஸ் (வயது 34) என்பவரை அடையாளம் தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளனர். அவருக்கு பெப்ரவரியில் திருமணம் நடந்ததாகவும் கனடா செல்ல இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா செல்வதற்கு சில நாட்கள் முன்பாக தனது மனைவியுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் விடுதி ஒன்றில் அவர் …
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து இங்கிலாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலேயே வெளிநாட்டில் கூடி பேசுவதாக தமிழரசுக் கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
அலிஸ்டயர் பர்ட் கருத்துக்கு இலங்கை அரசு கவலை இலங்கை தொடர்பான ஆவணப்படமொன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பின், தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பிரஜைகைளை வேண்டுமென்ற இலக்கு வைப்பதாக மேற்படி வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதியாக மறுப்பதை,தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவனத்திற்கொள்ளாதமை குறித்து அரசாங்கம் கவலைகொண்டுள்ளது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நண்பர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் அல்லாமல், 3 தசாப்தகால யுத்தத்தில் இழந்தவற்றை மீள ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்கம் மற்றும் …
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
26/05/2009, 15:40 ] சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் ஆர்வம் “தற்போது சிறிலங்காவில் உறுதியான அமைதி உள்ளதால், இந்தியாவின் 32 பெரிய நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளன”, என்று ஏற்றுமதி அபவிருத்தி மற்றும் சர்வதேச வணிகத்தின் அமைச்சர், ஜி.எல். பெய்றிஸ், இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கைகடல் எல்லையில் மீன்பிடித்த தமிழ் நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் கருணாநீதி ஆவேசம்
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இன்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்.தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்தும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் இடம்பெறும் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும், மட்டு. அம்பாறை மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று மட்டக்களப்பு நகரம், வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிகுடி பகுதியில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதேநேரம் பாடசாலைகள், அரச, அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள் வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. இதேவேளை வாழைச்சேனை கறுவாக்கேணியில் நேற்றுக் காலை இனந்தெரியாத சில இளைஞர்களால் லொறி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு பல்குழல் ஏவுகணை குண்டுத் தாக்குதல் நடாத்த 100 சிங்களவர் வேலையற்றவர்கள் ஆகின்றார்கள் எழுதியவர் சாத்வீகன் Tuesday, 09 January 2007 இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை பன்மடங்காக அதிகரித்து வருவதால் நாடு தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதுகாப்புச் செலவீனம் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் 2008ம் ஆண்டு பாதுகாப்பு் செலவீனம் 143.46 பில்லியன் ரூப…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பைத் தடை செய்ய சிறிலங்கா தீவிர முயற்சி [புதன்கிழமை, 16 மே 2007, 19:22 ஈழம்] [சி.கனகரத்தினம்] அமெரிக்கா வாசிங்ரனில் இயங்கும் இன்ரல்சட் செய்மதி ஊடாக புலிகளின் குரல் வானொலிச் சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதனை எதிர்த்து சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. இம்முறைப்பாடு தெரிவிக்கப்படு முன்னர் சிறிலங்கா தூதரகத்தின் மூலம் இன்ரல்சட் நிறுவனத்திற்கு புலிகளின் வானொலிச் சேவையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் இவ்வோண்டுகோளை அலட்சியப்படுத்தி விட்டு அது தனது சேவையைத் தொடர்ந்தும் நடத்தி வந்தது. இன்ரல்சட் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்மதி மூலம் புலிகள் சட்டவிரோதமாக ஒலிபரப்புச் சேவை நடத்தி வருகின்றனர் எனவும் அதற்கு இட…
-
- 0 replies
- 1.3k views
-