ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
தாயும் மகளும் அடித்துக் கொலை : ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அடி…
-
- 0 replies
- 476 views
-
-
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடியவேளையில் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்ததீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் மு…
-
- 0 replies
- 366 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 1.7k views
-
-
காணாமல்போனோர் குறித்த உபகுழுக் கூட்டம் புதன்கிழமை இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தின் 27ஆவது அறையில் உபகுழுக் கூட்டம் ஒன்று நடை பெறவுள்ளது. அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதி ரான சர்வதேச இயக்கம் என்ற அமைப்பு நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதி களும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இலங்கையிலிருந்து ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். …
-
- 0 replies
- 219 views
-
-
முஹம்மது நபியென கூறி மீண்டும் கேளி சித்திரம் வரைந்துள்ள “ஷார்லி ஹெப்டோ” பத்திரிக்கைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து, பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதராவார். முஹம்மது நபியவர்களின் வழிகாட்டல்களை உலகின் 125 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர். முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசிப்பதுடன், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முஹம்மத் நபியின் வழிகாட்டல்களை செயல்படுத்தும் வகையில் அவருடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் முழுமையாக மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றது. தமது வாழ்வின் அனை…
-
- 0 replies
- 357 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தி.மு.க. வினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியை வரலாறு குற்றம் சுமத்தும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. விதியின் சதியா? மதியின் பிழையா எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைப் போர் தானாகவே ஓயும்வரை பிரச்சினையை காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான் முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு ச…
-
- 1 reply
- 1k views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும்-பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, ஒழிக்க ப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓக்லாந்து நகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,ரணில் “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கை அரசின் நாடகம்: வைகோ . Friday, 30 January, 2009 04:21 PM . சென்னை, ஜன.30: இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வரும் இலங்கை அரசு உலக நாடுகளை ஏமாற்று வதற்காக 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் என்று அறிவித்து மோசடி நாடகத்தை நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். . இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முல்லைத்தீவில் "பாதுகாப்பான பகுதி' என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி, அந்தப் பகுதிக்குச் சென்ற தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேரை சிங்கள இராணுவம் தாக்கிக்கொன்றது. அதனை அடுத்து, அரசின் நலம்புரி மன்றங்களில் தஞ்சம் புகுந்த தமிழர்களுள், இளைஞர்கள் பிரித்து எடுக்கப்பட்டு, காடுகளுக்கு வாகனங்களில் ஏற்ற…
-
- 0 replies
- 440 views
-
-
சிறிதரன் எம்.பி. நான்காம் மாடிக்கு அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக தெரிவித்த வெடிபொருள் மற்றும் இறுவட்டு தொடர்பிலேயே மேலதிக விசாரணைக்கு சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்ககோரும் அழைப்பாணைக் கடிதம் சிங்களமொழி மூலமே தமக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சிறிதரன் தெரிவித்தார். எனினும் அன்றைய தினம் அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படவுள்ள கண்டன உண்ணாவிரதப் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லர…
-
- 1 reply
- 1k views
-
-
ஊடகவியலாளர் பரான் சவுகரலிக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நவிபிள்ளை கோரிக்கை சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேக பாதுகாப்பு வழங்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பரான் சவுகரலி கடந்த 15ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்யப் போவதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதி வசம்? இலங்கை மன்றக் கல்லுாரியில் நேற்றைய தினம் போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கான வீடு மற்றும் காணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும்போது ஜனாதிபதியால் கூறப்பட்ட விடயங்களின் மூலம் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைச்சை ஜனாதிபதி தனது நிர்வாகத்திற்கு கொண்டுவரவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நேற்றைய தினம் ஜனாதிபதி கதிர்காமத்திற்கு சென்றிருந்ததாகவும் அங்கே கம்உதாவ மணிக்கூட்டு கோபுரம் அருகே இருக்கும் பிரபல சோதிடரை சந்தித்ததாகவும் அவர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் அரசில் சில மாற்றத்தை …
-
- 0 replies
- 211 views
-
-
போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 759 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது. முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட் 19ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட் 19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண…
-
- 0 replies
- 492 views
-
-
-றிப்தி அலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்தே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். அத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேட சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலாக மகஜரொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பன்றி இறைச்சியினால் சமைக்கப்பட்ட கறிகள்இ ஏனைய கறிகளுடன் கலந்த…
-
- 2 replies
- 568 views
-
-
இன்று மலேசியா தலைநகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர். தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல்துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்ல வேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையின் அராஜகத்தால் இரு தரப்ப…
-
- 0 replies
- 529 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 265 views
-
-
ஈழத்தின் மனிதகுலத்திற்கு எதிராக சிங்கள படைகளால் நடத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பிலும் தமிழ் இன அழிப்பு தொடர்பிலும் முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் "தமிழ் தேசிய மக்கள் முன்னணி"யின் பொதுச்செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்தோடு நாளை ஜக்கிய நாடுகள் சபையின் முன் நடைபெறவுள்ள நீதி கோரிய போராட்டத்திற்கு அனைவரும் வருகைதருமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19303:2013-03-03-11-54-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 512 views
-
-
கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/185187/க-ள-ந-ச-ச-ய-ல-கட-கள-இழந-த-ர-க-க-நட-டஈட-
-
- 1 reply
- 182 views
-
-
சிறிலங்கா மீதான அமெரிக்கப் பிரேரணையின் இறுதி வரைவு கடுமையானதாக இருக்கும்! - சுமந்திரன் கருத்து!! ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு வலுவானதாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீதான பிரேரணையின் நகல் அமெரிக்காவால் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்கு…
-
- 0 replies
- 498 views
-
-
தவராசாவை நீக்குமாறு கடிதம்? வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. எனினும் இந்தச் செய்தி குறித்து கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தொ…
-
- 4 replies
- 428 views
-
-
அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும் " மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அமரர். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 3 கிலோமீற்றர் காபட் இடப்பட்டது. எனினும், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்க…
-
- 0 replies
- 352 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம். ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? போரென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள், புலிகளை ஒடுக்கவேண்டும், சீமான், திருமாவளவனைக் கைது செய்யவேண்டும், புலி ஆதரவாளரான கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும்…
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். பிபிசி சந்தேசியவின் சரோஜ் பத்திரனவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் அமைப்புக்கள் விடுதலைப்புலிகளுடன் கைகோர்த்துச் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் இறுதி வடிவம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இலங்கையினால், அது கு…
-
- 1 reply
- 632 views
-
-
இராணுவ புரட்சியென்ற தினேஸின் கருத்தை நியாயப்படுத்துகிறார் மகிந்த இராணுவப் புரட்சி தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து இராணுவத்தை எந்த வகையிலும் அகௌரவப்படுத்துவதன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். கேகாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாட்டில் இன்று பொலிஸ் ஆட்சியுள்ளது. இதுபோன்ற நிருவாகம் உள்ள உலக நாடுகள் எல்லாவற்றிலும் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுள்ளது. இது இலங்கையிலும் ஏற்படலாம் என்றே அவர் கூறியுள்ளார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறி…
-
- 0 replies
- 227 views
-