ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது. இனப்படுகொலை செய்த ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும்! என ஒற்றைக் குரலில் பெரும் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள் தமிழக மாணவர்கள். வழக்கமாக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி இந்த முறை எடுபடவில்லை. தங்களுக்குத் தாங்களே ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு மேலும் உத்வேகத்துடன் போராடுகிறார்கள் மாணவர்கள். கடந்த 8-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்…
-
- 0 replies
- 612 views
-
-
வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பரிசீலிக்க குழு நியமனம் வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்கா…
-
- 0 replies
- 355 views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-
-
யுத்தத்தின் பின்னர் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு By General 2013-03-25 09:11:38 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தற்போது இலங்கையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். கொழும்பு நகரை பொறுத்தவரையில், வேலைக்கு போகும் பெண்களும் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரே இந்த பழக்கத்துக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 322 views
-
-
யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருகின்றனர்:- 29 மார்ச் 2013 சின்னச் சிங்கப்பூர் ஆக மாற்றும் ஜனாதிபதியின் கூற்றும் காற்றில் பறந்தது. யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமையே அதற்கு காரணமென கூறப்படுகின்றது. குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த கணிசமான மக்கள் தீவகப் பகுதிகளிலேயே விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டிருந்தனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பல குடும்பங்கள் கூட மீண்டும் வன்னிக்கோ அல்லது யாழ்.குடாநாட்டினுள்ளோ நகர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. போதிய போக…
-
- 0 replies
- 475 views
-
-
யாழில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் இந்த ரோந்து, இரவு 9 மணியையும் தாண்டி செய்யப்பட்டு வருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/187480/ய-ழ-ல-வ-…
-
- 1 reply
- 343 views
-
-
முல்லைத் தீவின் இறுதிக்கட்ட பகுதியில் கடும் போர் புரிந்துவரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடும் போர் இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும், அதில் 20 சதுர மைல் பரப்பளவை, பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. இறுதிக்கட்ட பகுதிகளான புதுக்குடியிருப்பு, இரணப்பாலை ஆகிய இடங்களில், கடுமையான போர் புரிந்து வரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா கூறி இருக்கிறார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் லக்னோ நகரில் நடைபெற்ற உலக கணித அறிவுப் போட்டியில் கிழக்கு மாகாணப் பாடசாலையான திருகோணமலை ஸ்ரீ கோணஸ்வரா இந்து கல்லூரி மாணவர்கள் 6 பதக்கங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் எட்டு மாணவர்கள் கலந்துகொண்டு இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பிய மாணவர்களுக்கு திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என் விஜேந்திரன் தலைமையில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டது. http://thuliyam.com/?p=50903
-
- 1 reply
- 353 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் 9.3.2009அன்று தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரை: கொளத்தூர் மணி, சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது இந்தியாவின் இறையாண்மை கெட்டுவிட்டது என்று சொல்வதில்லை. நீங்கள் பத்திரிகையில் அப்படி படித்திருக்க முடியாது. வழக்கு போடுகிற காவல்துறையும், தமிழக அரசும் அப்படி இணைத்துப் போடுகிறதே தவிர காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது அன்னை சோனியா காந்தியை இழிவுப் படுத்திவிட்டார்கள். ராஜீவ் காந்தி மரணத்தை கொச்சைப் படுத்தி விட்டார்கள் என்று தான் சொல்லுகிறார்கள். சட்டத்திலே சோனியா காந்தியை இழிவுபடுத்தியதாலே ஒரு தேசிய பாதுகாப்போ, பிரிவினை தடை சட்டப்படியோ வழக்குப் போட முடியாது. அதுபோலத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்களுக்கான காணிப்பங்கீடு தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் போராட்டம் வெடித்தது. மக்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார். "காணியில்லாமல் 30 வருடங்களாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றார்'' என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர். முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்…
-
- 2 replies
- 609 views
-
-
140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது திருகோணமலை சினக்குடா பகுதியில் 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கல்முனை பகுதிக்கு கடத்த முற்பட்ட போதே பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14367
-
- 0 replies
- 241 views
-
-
“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை” Wednesday, Apr 10, 2013 10:58 am . இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்புக்கு கூறப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிகள் உட்பட்டோர் பலர் சந்தித்து உ…
-
- 0 replies
- 444 views
-
-
பிரித்தானியாவில் தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்ட காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வகையில் பிரித்தானிய காவல்துறையினர் நேற்றிரவு செயற்பட்டதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினர். இவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பாட்டாளர்கள் சாதகமாகவும் பரிசீலித்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பிரித்தானிய அரசாங்கம் காவ…
-
- 2 replies
- 884 views
-
-
எக்காரணத்தைக் கொண்டும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை இராணுவத்தினர் விட்டுக்கொடுக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் மக்களை மீள்குடியேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை அதிகாரிகளின் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற அமைப்பு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது. குறித்த அமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போர் வீரர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர இவ்வாறு…
-
- 2 replies
- 349 views
-
-
இறுதி யுத்தத்தின் கதவுகள் இன்று திறக்கபட்டது http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL182666 ரூட்டர்ஸ்
-
- 2 replies
- 2k views
-
-
றோவின் நிகழ்சிநிரலில் பிபிசி தமிழோசை: புலிகளின் குரல் பிபிசி தமிழோசையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இந்தியாவுடனான பேச்சுக்கள் தொடர்பிலே ஒரு நேர்காணல் கண்டிருந்தது. அதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவும், கோபமாகவும், ஆவேசமாகவும் தமிழ் மக்கள் கொல்லப்படுதல், பாதிக்கப்படுதல் தொடர்பிலே தெரிவித்திருந்தார். இதில் சில சிண்டு முடிதல்களை திட்டமிட்டு பிபிசி கைக்கூலி ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்க…
-
- 11 replies
- 3.1k views
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த பிக்குகளுமே காரணம். மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும். உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள…
-
- 5 replies
- 451 views
-
-
மஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் பிரதமர் ரணில் தெரிவிப்பு; சீன ஜனாதிபதி அழுத்தம் பிரயோகிக்கவில்லையா எனவும் மஹிந்தவிடம் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு சீன ஜனாதிபதி தனக்கு அழுத்தம் பிரயோகத்தார் எனவும் சட்டவிரோதமான முறையிலேயே சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறைமுக ஒப்பந்தத்தை கைவிடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபை யில் திட்டவட்டமாக அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த மாதம் சீனாவிற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறைமுகத்தை நல்லது எ…
-
- 0 replies
- 257 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் என். வேதநாயகம் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதுயுதீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த குடியேற்றத்திற்காக ஒட்டுசுட்டான் வீதி, குமுழமுனை, குழா முறிப்பு, சிலாவத்தை தியோநகர் ஆகிய ஐந்து இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/66896-50-----.html
-
- 2 replies
- 625 views
-
-
தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று முல்லைத்தீவில் நேற்று(13) நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது வீட்டுத் திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்தியாவில் பிறந்தவர் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களை இலங்கைப் பிறப்புப் பதிவிற்கு மாற்றுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது, “கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் சுமார் …
-
- 0 replies
- 273 views
-
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தை வென்றெடுப்போம்.... எண்டு ஜெயலலிதா சொன்னவவாம்........ http://www.asiantribune.com/?q=node/17187
-
- 3 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியில் சுமார் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்கின்றனர்: கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் By General 2013-05-17 11:18:13 கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உ…
-
- 3 replies
- 414 views
-
-
உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்து உள்ளதாக சில இனையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் தெரி…
-
- 0 replies
- 349 views
-
-
யாரும் கண்டுகொள்ளாத பரிதாபம்..! :கொட்டும் மழையிலும் கடும் குளிருடன் காரிருளில் தொடர்ந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியிலும் காரிருளில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றிரவு முழுவதும் மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் எவரும் நேரில் சென்று பார்வையிடவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள், நீராகாரம் எதுவுமின்றி தமக்கு நீதி வேண்டி சாகும் வரை உண்ணாவிரதத்தில் நேற்று(23) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளனர். நேற்று இரவு போராட்டக்காரார்கள் அமர்ந்…
-
- 0 replies
- 337 views
-
-
சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர். சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்…
-
- 0 replies
- 1.3k views
-