ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
மைத்திரியின் 'மகப்பேறு' சுகமாக அமையுமா? ப.தெய்வீகன் நல்லாட்சி அரசு பதவியேற்று எதிர்வரும் எட்டாம் திகதியோடு ஒருவருடமாகிறது. கடந்த ஒரு வருடத்தில் நாடு கடந்துவந்த பாதை எத்தகையது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவர். சிங்கள ஆட்சி இயந்திர மாற்றம் எனப்படுவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை 'கொழுக்கட்டை போய், மோதகம் வந்த கதை' போன்றதுதான் என்றாலும், மைத்திரியின் ஆட்சியை வழக்கமான சம்பிரதாய மாற்றமாக பாராது, மஹிந்த ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாத்திரமே கடந்த ஒரு வருட காலத்தின் உண்மையான பரிமாணம் குறித்து ஆழமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த ஒருவருட முடிவில் நாடாளுமன்றத்தை அரசமைப்பு அதிகார அவையாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைப்பதற்கு, நாட்டின் ஜனாதி…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
அமைச்சர் ராஜிதவும் ஆட்களைக் கடத்தியவர் தான்! - என்கிறார் கோத்தபாய தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி காலத்தில் முகமூடி அணிந்த தலையாட்டிகள் எந்த வாகனத்தில் வந்தனர்?. கறுப்பு வாகனங்களிலா, வெள்ளை வாகனங்களிலா? தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினாரே.. அந்த காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன். அந்த காலத்தில் நான் மாத்தளை இராணுவ இணைப்பதிகாரி.. அந்த காலத்தில் மொறிஸ் மைனர் வாகனங்களில் இதனை செய்திருப்பார்கள் போல. நான் இர…
-
- 0 replies
- 343 views
-
-
யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் பெருவாரியாக ஒரே புள்ளியில் ஒருங்கிணைகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், அதற்கு எதிராக விமர்சனங்களும், வியாக்கியானங்களும் பலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த விமர்சனங்களிலும், வியாக்கியானங்களிலும் குறிப்பிட்டளவான நியாயப்பாடுகள் இருந்திருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை முன்வைக்கும் தரப்புக்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட கூடியது. அரசியல் மற்றும் அது சார்பிலான போராட்டக் களங்களில் 'நிராகரிக்க…
-
- 2 replies
- 360 views
-
-
Published By: VISHNU 20 FEB, 2025 | 07:19 PM பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்ப…
-
-
- 4 replies
- 454 views
- 2 followers
-
-
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் பாது…
-
- 0 replies
- 647 views
-
-
கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோத்தாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோத்தாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் அறம் சார்ந்தும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் கொட்டாவ, ருக்மலே தர்ம விஜயாலோக்க விகாரையில் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை…
-
- 0 replies
- 251 views
-
-
2025 இல் இலங்கையின் ஏற்றுமதி வலுவான ஆரம்பத்தில்! 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.334 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டின் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அதேநேரம் இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10.3% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. ஜனவரி 2025 இல் பொருட்கள் ஏற்றுமதி செயல்திறன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இருந்தது, இது ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 3.51% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிக்கின்றது. ஆடை மற்றும் ஜவுளி, தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வைரங்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், மசாலா பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் ஏற்ற…
-
- 0 replies
- 265 views
-
-
சிவனொளிப்பாத மலையில் சந்தேகத்துக்கு இடமான பொருள். கொத்மலையில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணம் Wednesday, 07 May 2008 மலையகத்தின் மஸ்கெலிய நல்லத்தண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவனொளிப்பாத மலையுச்சியில் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்ததாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பொதியில் வயர்களும் மின்கலங்களும் காணப்பட்டதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார். இந்த மலை சிவனொளிபாத மலை என்ற பெயரில் இந்துக்களின் புனித பிரதேசமாக பேணப்பட்டு வந்தது. சிவன் நடனமாடும் போது இமயமலையில் ஒரு காலையும் சிவனொளிப்பாத நிலையில் ஒரு காலையும் வைத்ததாகவும் அந்த காலின் அச்சு இன்னமும் இருப்பத…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி: கேள்விக்குறியாகிறதா தகவலறியும் உரிமை சட்டம்? ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னணியில், இலங்கையில் தகவலறியும் உரிமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமை…
-
- 0 replies
- 911 views
- 1 follower
-
-
கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல் - தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு கடிதம் 07 Mar, 2025 | 01:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ள சம்பவம் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களை மனங்களை நோகடிக்கச் செய்துள்ளதாக தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளரும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளருமான அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் கொழும்பு றோயல் கல்லூரி அதிபரு…
-
-
- 3 replies
- 329 views
-
-
-
அரசாங்கம் பலவந்தமாக மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு ஆதரளிக்கவில்லை என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காணி அபகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸூம் இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும்எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகள…
-
- 8 replies
- 1k views
-
-
மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் மண் அகற்றப்பட்டது வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த மயில் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது. மயில் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக அங்கிருந்த நீச்சல் தடாகம் மண் கொண்டு மூடப்பட்டது. அதனையடுத்து, குறித்த நீச்சல் தடாகத்தில் தங்க கட்டிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வாய்வழி கதைகள் பரவியிருந்தன. அதற்கமைய, கொழும்பு க…
-
- 0 replies
- 387 views
-
-
கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தா…
-
- 23 replies
- 2.2k views
-
-
16 MAR, 2025 | 10:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெ…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணையையும் மூடிமறைக்க முயற்சி வீரகேசரி நாளேடு 5/19/2008 9:41:22 AM - மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை மூடிமறைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணைகளையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களினதும் அதேவேளை பொலிஸாரினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சியென்ற ரீதியில் எமது கடப்பாடாகும். இதற்காக மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து தொடர் போராட்டங்களை நடத்த கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரள்வோம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒத்து…
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]பௌத்தம் பற்றிய மாற்றுக் கருத்துடைய பிக்கு ஒருவர் சிறிலங்காவில் பெளத்த பிக்குகள் தலைமையிலான அடிப்படைவாதிகள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் உள்ள பத்தேகம நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. புதிய பௌத்த சித்தாந்த உபதேசத்துக்காக பத்தேகமவுக்கு சென்றபோதே பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற பௌத்த அடிப்படைவாதிகளால் இவர் தாக்கப்பட்டுள்ளார். இவருடன் கூடச் சென்ற பாதுகாவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முன்னர் வண.பிரிதுவ சிறி தம்ம தேரோ என்று அழைக்கப்பட்டவரும் தற்போது சிறி சம்தபத்ர என்று அழைக்கப்படுபவருமான பெல்லந்தோட்ட சிறிசாந்தகம் ஆசிரமத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவே தாக்கப்பட்டுள்ளார். இவர் பௌத்த …
-
- 0 replies
- 420 views
-
-
யாழில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், ஏ.ரீ.எம். இயந்திரத்தை மோதித்தள்ளிய பஸ்:படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில்; மாணவனின் நிலைமை கவலைக்கிடம்! 2016-02-03 20:52:12 (பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பாரிய வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை மோதி விட்டு அருகிலிருந்த தனியார் வங்கியின் தானியங்கி (ஏ.ரி.எம்) இயந்திரத்துக்கு ப…
-
- 0 replies
- 369 views
-
-
26 Mar, 2025 | 04:56 PM கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி படகுகளில் முதலை மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதிகளில் முதலைகள் உலாவி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எ…
-
-
- 3 replies
- 298 views
-
-
ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் உத்தரவு Saturday, 24 May 2008 ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய அடையாள அட்டையை பிணையாக வைப்பது சட்டவிரோதமான செயல் என பிரதமர் தெரிவித்துள்ளார். அது 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும், அடையாள அட்டையை பிணையாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]மதுபோதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.[/size] [size=4]இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெல்லவ பொலிஸ் பிரிவில் ஒரு பொலிஸ் சார்ஜனும் கான்ஸ்டபிளும் குடிபோதையில் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து குருநாகல் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பொது மகன் ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.[/size] [size=4]இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி வைத்தியர் ஒருவரை அனுப்பி சோதனை நடத்தியுள்ளார். சோதனையில் அவர்கள் குடிபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் நேற்றைய தினம் குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த…
-
- 1 reply
- 500 views
-
-
சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலுக்கு துணைபோகப்போவது இல்லை [ Wednesday,10 February 2016, 03:10:24 ] எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்குமாறு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பிற்குள் காணப்படும் உட்கட்சி மோதலை தீர்த்துக்கொள்ளும் பட்சத்தில் நேரஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வு வழங்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஐ…
-
- 0 replies
- 344 views
-
-
ராஜித்த சேனாரத்தனவின் கட்டளைப்படியே பொய்யுரைத்தோம் - வெள்ளைவான் கடத்தல்காரர்கள் பொலீஸிடம் வாக்குமூலம் அண்மையில் இடம்பெற்ற ஜானாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கோத்தாவின் வெள்ளைவான் கொலைக்குழுவினைச் சேர்ந்த இருவர் சாட்சியமளித்திருந்தார்கள். அதனடிப்படையில் பலநூறு அப்பாவிகளைத் தாம் கடத்திக் கொன்றதாகவும், பிரபாகரனிடமிருந்து தாம் கொள்ளையடித்த பெருமளவு தங்கம் மற்றும் பெருமளவு வெளிநாட்டுப் பணத்தை கோத்தா எங்கே ஒளித்துவைத்திருக்கிறார் என்பது தமக்குத் தெரிந்திருந்தது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அவர்கள் அன்று வெளியிட்டிருந்தார்கள். தற்போது கோத்தா ஆட்சிப்பீடம் ஏறியுள்ள நிலையில், இவ்வா…
-
- 0 replies
- 456 views
-
-
பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு! காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் உடலில் 11 இடங்களில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய நந்த குமார் சிவானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறையில் அண்மையில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். h…
-
- 1 reply
- 480 views
-