ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருவதாக, கவலை தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ். காலியில் இன்று ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கும் கடற்கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் பல கப்பல்களை கடத்தியுள்ளனர். அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பொருட்டு உலகின் எந்த நா…
-
- 2 replies
- 520 views
-
-
யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளன. தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர். குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளில், சிறிலங்கா கடற்படையினர் 32 முகாம்களைக் கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா கடற்படையினர் 269 ஏக்கர் தனியார் காணிகளையும், 260 ஏக்கர் அரச காணிகளையும் ஆக்கிரமித்து. யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள…
-
- 3 replies
- 634 views
-
-
இந்தியாவுக்கே கொடுங்கள் ; பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை (ஆர்.யசி) வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீடமைப்பு திட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் சீனா முன்னெடுக்கவுள்ள வீடமைப்புத் திட்டத்தை அதே பெறுமதியில் இந்தியா முன்னெடுப்பதாக இந்திய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் எனவே அதனை தாம் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 215 views
-
-
கற்பிட்டியில் சந்தேகத்திற்கிடமான இரு படகுகள் மூழ்கடிப்பு கற்பிட்டி சிலாவத்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா படையினர் சந்தேகத்திடமான இரு படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்து இரு சந்தேகத்திற்கிடமான படகுகளையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர் . எனினும் படகுகள் நிற்காமல் சென்றதையடுத்து கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதனையடுத்து குறித்த இரு படகுகளிலும் இருந்த சந்தேக நபர்கர்கள் கடற் படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதற்கு பதில் தாக்குதல் நடத்திய கடற்படையினர் இரு படகுகளையு…
-
- 0 replies
- 714 views
-
-
ஜப்பான் நாட்டு தொழிலாளர் இருவரின் முறைகேடான நடத்தைக்கு அபராதம் மன்னாரில், ஜப்பான் நாட்டு நிறுவனத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வரும் ஒருவரை துன்புறுத்திய ஜப்பான் நாட்டுப் பிரஜைகள் இருவரை மன்னார் நீதிமன்ற நீதிவான் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் ஜப்பான் நாட்டுப் பிரஜைகள் இருவர் தன்னை துன்புறுத்தி, முறைகேடான விதத்தி தடுத்து வைத்திருந்ததாக சட்டத்தரணிகளினூடாக பாதிக்கப்பட்ட நபர் மன்னார் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் குறித்த இந்த வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 312 views
-
-
திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப…
-
- 11 replies
- 2.9k views
-
-
போர் வெற்றிக்கு யார் காரணம் என்பது படையினருக்குத் தெரியும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாபகூவவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, இராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற தம்பி, போரை வெற்றி கொண்டதாக சொல்லப்படுகிறது. யார் உண்மையில் போரை செய்தார்கள் என்பது படையினருக்குத்தான் தெரியும். 5000 படையினர் உயிரிழந்தனர். 7000 படையினர் ஊனமுற்றுள்ளதுடன் 27000 படையினர் காயமடைந்தனர். இன்று சொல்கின்றார்கள் மீண்டும் இந்த நாடு புலிகளிடம் செல்லுமாம். அனைத்து புலிகளும் ஆட்சியாளரின் ஆடைக்குள்ளே பதுங்கியிருக்கின்றனர். போர்க் குற்றச் செயல் குறித்த மின்சார நாற்காலியில் தண்டனை விதிக்கப்பட்டால் எங்களுக்கே தண்டனை வி…
-
- 3 replies
- 627 views
-
-
டிசெம்பருக்குள் எட்கா குறித்த பேச்சுக்களை முடிக்க இணக்கம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) தொடர்பான பேச்சுக்களை இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் இணங்கியுள்ளது. புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிரிஐ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. “ஆரோக்கியமான வகையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்களை டிசெம்பருக்குள் முடிக்க இரண்டு நாடுகளும் இலக்கை நிர்ணயித்துள்ளன.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/08/06/news/32233
-
- 0 replies
- 461 views
-
-
Published By: T. SARANYA 29 APR, 2023 | 09:14 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வேர்ட் ரீஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தின் விசேட பிரதிநி…
-
- 3 replies
- 700 views
- 1 follower
-
-
-
கொஹண, சவேந்திர சில்வா ஆகியோரை ஐ.நா.விற்கான பதவிகளிலிருந்து வெளியேறுமாறு கோதாபய உத்தரவு Thursday, May 12, 2011, 9:45 சிறீலங்கா ஐ.நா. சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண மற்றும் துணை நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் விரைவில் அங்கிருந்து அகற்றப்படவுள்ளதாக சில நம்பகரமான தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கை வெளிவர முன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கைக்குப் பாதகமான விடயங்கள் குறித்து ஓரளவுக்கேனும் அழுத்தங்களைப் பிரயோகித்து நெகிழ்வுத் தன்மை கொண்டதாக அறிக்கையை வெளிவரச் செய்வதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளமையே அதற்கான காரணம் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் மட்டுமன்றி நியூயோர்க…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
சுகாதார ஊழியர்களுக்கு இரகசிய நியமனம்; டக்ளஸ் வழங்கிவைப்பு யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த சுகாதார ஊழியர்கள் 178 பேருக்கு இன்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வுகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. ஊழியர்களுக்கான நியமனக்கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்துள்ளார். குறித்த 178 சுகாதார ஊழியர்களும் நாளாந்தம் 390 ரூபா சம்பளத்துடன் 7000ஆயிரம் ரூபா வாழ்க்கைப்படியையும் தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் 3வருடங்களாக பெற்று வருகின்றனர். எனினும் மூன்று வருட முடிவில் நிரந்தரநியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படியே இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நியமனம் வ…
-
- 0 replies
- 245 views
-
-
நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2006 இல் வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பசில் ராஜபக்ச. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பசில் ராஜபக்சவிற்காக தனது பதவி விலகலை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேர்வின் சில்வா அவரது மனைவியின் பதவி விலகலைத் தொடர்ந்து முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவினால் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். இந்த பதவி விலகலை தொடர்ந்து துறைமுகங்கள் அதிகார சபையில் தலைவர் பதவிக்கு மேர்வின் சில்வா சில்வா நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் தற்போது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் சீனாவிற்கு சென்…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் : நீயு யோர்க் 16, 2011 மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு! நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கீத் நொயார் கடத்தல் – கோத்தபாயவும் விசாரணை வலையத்துள் கொண்டுவரப்படுவார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… துப்பாக்கியை காட்டி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வாக்குமூலம் பெற அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கீத் நொயார், தெஹிவளை வைத்தியா வீதியில், ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்ட போது, த நேஷன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லலித் அழககோன், அன்றைய ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 477 views
-
-
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கைது! யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https:/…
-
- 0 replies
- 224 views
-
-
[Wednesday March 07 2007 11:00:40 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொண்டர் நிறுவனமான அக்ஸன் பெயிம் அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மரணமான சம்பவம் ஒரு கொலைச் செயல் என, அது குறித்த மரண விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் நீதிமன்றத்தில் நடந்த இது தொடர்பான மரண விசாரணையின் போது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச இந்தத் தீர்ப்பை அறிவித்தார். அத்துடன் இந்த மரணங்கள் குறித்த புலன் விசாரணைகளை பொலிஸார் தாமதமின்றி நடத்த வேண்டும் என்றும், சாட்சிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார…
-
- 8 replies
- 1.7k views
-
-
இந்தியாவுடனான சந்திப்பு கொழும்பிற்கு ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. ஜி.எல்.பீரிஸ் அவர்கள் டெல்லியில் இந்தியாவுடனான பேச்சு தொடர்பில் நம்பிக்கையான வார்த்தைகளை வெளியிடவில்லை. மாறாக இலங்கையினை கீழ்ப்படிந்து போக அனுமதி கொடுத்துவிட்டார். இதுவே சிங்கள இனவாதாதிகளின் கருத்தாக இப்போ உலாவருகின்றது. உண்மையில் இது இனவாதிகளின் கருத்து என பொதுவாக சொல்வதனை விட இதுதான் சிங்கள அரசாங்கத்தின் உட்கருத்தாகும். நேரடியாக எதிர்ப்பினை தெரிவிக்க முடியாத அரசாங்கம் தனது வழமையான நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளது. அதுதான் எல்லோருக்கும் தெரிந்த விடயம்; ஆர்ப்பாட்டம், பிரச்சாரம், கட்டுரை கட்டுரையாக எழுதி மக்களை குழப்புதல் ஆகியவையே. இவற்றை தனது கைப்பொம்மைகளான சிங்கள தேச பாதுகாப்பு இயக்கம், சிஹல உறுமை…
-
- 0 replies
- 785 views
-
-
சிறீலங்காவில் 2005 ஆண்டு நடைபெற்ற சனாதிபதித்தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஐபக்ச வெல்லக் காரணம் என்றும் அதை வைத்ததே தாம் விரும்பிய ரணில் ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்திய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம். முதலில் 2005 இல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம் 2005 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் மாவட்டம் …
-
- 7 replies
- 926 views
-
-
ஈழநாதம் வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட, மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையென்று அது கூறிக் கொள்ளும்வன்னியில் நடந்த தமிழினப் படுகொலை யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை எத்தனை வருடங்கள்தான் சென்றாலும் அந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்கள் பட்ட துன்ப, துயரங்கள், இழந்த உறவுகள், இழக்கப்பட்ட அவயங்கள் இவையனைத்தும் மாறாத வடுக்களாகவும் ஆறாத துயரங்களுமாகவே தொடருகின்றன. வன்னி நிலப்பரப்புக் கூட இன்று மயான பூமியாகவே காட்சியளிக்கிறது. சில இடங்கள் இன்றும் ஜப்பானிய ஹிரோஷிமா நகரத்தையே நமக்கு ஞாகப்படுத்தும். யுத்தத்தின் மூர்க்கம் அங்கு பல அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளது. . இந்த இரு வருட காலத்தில் வன்னித் தமிழ் மக்…
-
- 2 replies
- 682 views
-
-
நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி JAN 05, 2015 | 0:12by கார்வண்ணன்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பொலன்னறுவவில் நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் அவர், தேர்தலில் தோல்வியுற்றால், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல விடமாட்டோம் என்றும், அனைத்துலக விமான நிலையத்தை மூடுவோம் என்றும் எதிரணியினர் கூறிவருவதற்கு பதிலளித்து உரையாற்றினார். “விடுதலைப் புலிகளிடம் இருந்து ஓடாத ஒருவரான நான், சிறிலங்காவை விட்டு ஓடமாட்டேன். தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கா…
-
- 2 replies
- 532 views
-
-
Published By: VISHNU 05 JUN, 2023 | 11:18 AM இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து அவர்களது பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரிடமிருந்து 7 கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை கைதுசெய்ததையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா, கஸ்பேவ, ராகம, வெயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அநுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
விமான நிலைய வீதிகளில் இராணுவம்.. அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளன... தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பாதகமான விதத்தில் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகியிருப்பதை காணமுடிகின்றது. கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் பொலிஸாருடன் இராணுவத்தினரை காணமுடிகின்றது. நகரி;ன் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினரை பயன்படுத்தப்போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானது. விமான நிலைய வீதிகளில் இராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globalt…
-
- 0 replies
- 579 views
-
-
குடியுரிமை வழங்க்பபட்டு பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்! [Monday 2015-01-12 12:00] குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பண…
-
- 10 replies
- 879 views
-