ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார். ஆனால், வடக்கு முஸ்லிம்களை அரசு பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். ரிஷாத் குழுவினர் அரசிலிருந்து வெளியேறியமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசின் பிரசார செயற்பாடுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று திங்கட்கிழமை எதிரணிப் பக்கம் தாவியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு க…
-
- 0 replies
- 456 views
-
-
அரசியல் பிரவேசம் குறித்து மௌனம் கலைந்தார் குமார் சங்கக்கார! அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவத்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களை மிகவும் கரிசனையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எனது அ…
-
- 0 replies
- 363 views
-
-
பார்வதி அம்மாளின் புனித சாம்பலை பத்திரமாக வைத்திருக்கிறேன்: சீமான் இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், கடந்த 2010 இதே மே 18ஆம் தேதி மதுரைய…
-
- 0 replies
- 805 views
-
-
வடபகுதி மக்களை எவராவது அச்சறுத்தி வாக்களிக்காமல்செய்யும் பட்சத்தில் முழு தேர்தலும் இரத்துச்செய்யப்படும் எனதேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். அவர் ஆங்கில பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளதாவதுஇராணுவத்தின் அராஜகம் காரணமாக வடபகுதி மக்கள்தேர்தலை பகிஸ்கரிக்க தயாராகின்றார்கள் என்பது குறித்த எந்தவிபரங்களையும் வடமாகாணத்தின் உதவி தேர்தல்ஆணையாளர்கள் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை. இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான்கருதவில்லை,எனினும் வடபகுதி நிலைமை தென்பகுதியைவிட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும், வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும்செல்லலாம்,ஆனால் வடக்கில் எனது உத்தியோகத்தர்கள் கூடபடையினரிடம் அனுமதிபெறவேண்டும். நாட்டி…
-
- 0 replies
- 429 views
-
-
யாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் …
-
- 0 replies
- 290 views
-
-
இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா - பீ.பீ.சி உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ்சள்…
-
- 1 reply
- 1k views
-
-
கொக்குவில் வன்முறை; இருவருக்கு விளக்கமறியல் கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது. கொக்குவில், தாவடி மற்றும் இணுவில் என கடந்த புதன்கிழமை மாலை அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. எனினும் கொக்குவில் பிரம்படி லேனில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது. அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் இடம்பெற்ற விசாரணைகள…
-
- 0 replies
- 478 views
-
-
கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுக்கவில்லை-துரைரட்ணசிங்கம் திருகோணமலையில் பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து திருகோணமலை ஆனந்தபுரி, தேவநகர் ஆகிய பகுதிகளில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போது சந்தேகத்தின் பேரில் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டு உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் நேற்றையதினமே விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய…
-
- 0 replies
- 596 views
-
-
மனிக்பாம் முகாமில் இருக்கும் மக்களை கைவேலி, கோம்பாவில் பகுதிக்கு மாற்ற திட்டம் • Friday, May 27, 2011, 20:30 • சிறீலங்கா, தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள 9 கிராம சேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 1887 குடும்பங்களைச் சேர்ந்த 5930 பேரை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட கைவேலி மற்றும் கோம்பாவில் பகுதிகளில் தற்காலிகமாகக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் குடும்பங்கள் தற்போது மனிக்பாம் முகாமில் இருக்கின்றன. இவர்களது பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்…
-
- 0 replies
- 500 views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”சிறிலங்கா இராணுவத்தில் தற்போதுள்ளவர்களில் 40 வீதமானோர், 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாவர். போர் முடிந்த பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு ‘நீர…
-
- 0 replies
- 243 views
-
-
வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv
-
- 13 replies
- 4.1k views
-
-
சனல் 4 ஐ.நா மன்றில் வெளியிடவிருக்கும் ஒரு மணி நேர போர்க்குற்ற ஒளிப்பதிவு 2009 மே மாதத்தில் சிங்களப் பயங்கரவாத ஆக்கிரமிப்பாள்ர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்க்குற்றங்கள் அடங்கிய ஒரு மணிநேர ஒளிப்படமொன்றை சனல் 4 ஐ.நா மன்றில் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியிடவிருக்கிறது. அதேநேரத்தில் தனது செய்திப் பிரிவிலும் இதே ஒளிநாடாவை மக்களின் பார்வைக்கும் ஒளிபரப்பவிருக்கிறது. தான் இதுவரை பார்த்த போர்க்குற்ற சாட்ச்சியங்களிலேயே மிகவும் கொடூரமானதும், பயங்கரமானதுமான காட்சிகளை சிங்கள ராணுவத்தினர் தமது கைதிகளுக்குச் செய்தத்தை தமது கைய்யடக்கத் தொலை பேசியில் பதிவு செய்து வெற்றிக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள். இவற்றில் சிலவே தமது கைக்கு எட்டியுள்ளதாக இந் நாடாவை ஒருங்கமைத்த தொகுப்பாளர் கூறுகிற…
-
- 0 replies
- 776 views
-
-
வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் இணைந்து கடந்த இரண்டாம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி திட்டித் தீர்த்துள்ளார். ஜேர்மனி, இத்தாலி, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களின் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் மிக சொற்பமான மக்களே கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது.இவ் ஆர…
-
- 1 reply
- 817 views
-
-
மனைவியோடு....அமெரிக்கா வந்தடைந்தார், பசில் ராஜபக்ச! லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்ச…
-
- 4 replies
- 3.6k views
-
-
ராஜபக்ச மீதான... ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு, ஒத்துழைப்பு: ரணில் விக்ரமசிங்க பரபரப்பு பேட்டி. கொழும்பு: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 27 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும், 8 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சேனல், என்டிடிவிக்கு, ரனில் விக்ரமசிங…
-
- 3 replies
- 918 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு (எம்.சி.நஜிமுதீன்) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வைபவம் பல்கலைக்கழக உபவேந்தரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் ஈழக்கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக, தமிழ் மக்களை அடிப்படைவாதத்திற்கு ஈர்ப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வே பொங்கு தமிழ் நிகழ்வாகும். எனவே அதன் தூபி திறப்பு விழா நிகழ்வின்போது யாழ். பல்கலைக்கழகத்திற…
-
- 0 replies
- 636 views
-
-
[சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…
-
- 11 replies
- 1.7k views
-
-
Tuesday, June 14, 2011, 8:33 இலங்கைக்கான பிரிட்டனின் துணைத்தூதர் மார்க்கூடிங் யாழ்ப்பாணத்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இந்த விஜயத்தின் போது தெல் லிப்பழை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பழை, கொல்லன் கலட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடி யேற்றப்பட்ட மக்களை இவர் சந்தித்து அவர்களின் நிலைமை தொடர்பாக நேரில் பார்த்து அறிந்துகொண்டார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி களின் தற்போதைய நிலை மற்றும் சமூகத்துடனான அவரிகளின் ஒருங்கிணைவு என்பன குறித்து இந்த விஜயத்தின் போது மார்க்கூடிங் அவதானித்தார்.இதன் போது பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.…
-
- 0 replies
- 364 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். அதில் சிங்கள மக்களும் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களை முஸ்லிம்களோ முஸ்லிம்களை தமிழர்களோ விட்டுவிட்டு கிழக்கில் நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் உரையா…
-
- 10 replies
- 739 views
-
-
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடு ; அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன் அழைப்பு 05 Jul, 2023 | 09:54 AM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையின்படி சைவவழிப…
-
- 0 replies
- 253 views
-
-
-
- 0 replies
- 685 views
-
-
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது சீனா JAN 27, 2015 | 10:47by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஊடகங்களின் மூலம் சிறிலங்காவுக்கு சீனா அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 1.4 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவுக்கு அவசியமானது, சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது. சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 612 views
-
-
வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங…
-
- 1 reply
- 169 views
- 1 follower
-
-
தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம் [10 - April - 2007] * சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில் - பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் - சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிக…
-
- 1 reply
- 816 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்…
-
- 8 replies
- 824 views
-