ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
(ஆர்.ராம்) வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார். எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர். இந்நிலையில் ஐந்து கட்சிகளின் தல…
-
- 1 reply
- 429 views
-
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை Sunday, January 19, 2025 செய்திகள் (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை தி…
-
-
- 17 replies
- 965 views
- 2 followers
-
-
சிறிலங்கா கடற்படை நடத்திய தாக்குதலில் யாழ். குருநகர் கடற்பரப்பில் கடல் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 705 views
-
-
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா இதுவரை அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவினால் நேற்றையதினம் -25-0512- பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சரத் பொன்சேகா முன்னாள் இராணுவ தளபதி, எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தயாசிறி ஜெயசேகர கோரிக்ககைவிடுத்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 622 views
-
-
எனக்கல்ல, நாட்டுக்கே சேவை செய்கின்றீர்கள்: மைத்திரி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காகத் தனது செயற்றிறன் மற்றும் ஆற்றல் என்பன, சேவை மூப்பினைவிடப் பெறுமதி வாய்ந்தவையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நீங்கள் சேவையாற்றுவது எனக்கு அன்றி, நாட்டுக்கே என்பதை நிதமும் மனதில் நிறுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில். நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் நிருவகிக்கும் பிரதான மத்திய நிலையமாக …
-
- 0 replies
- 396 views
-
-
முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் குடியிருப்பு மீதும் கடல் தொழிலாளர் துறைகளின் மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம். ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்…
-
- 12 replies
- 1.5k views
-
-
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் ! இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை. உண்மையில்லாமல் தானாக கை கால் முளைத்து அந்த செய்தி உலாவரவில்…
-
- 4 replies
- 545 views
-
-
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் ந…
-
- 1 reply
- 283 views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ள போதிலும் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென ஏ.எவ்.பி.செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரை கிழக்கில் 212001 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்களில் திருகோணமலையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் உள்ளனர். 2006இல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் அவர்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் அரச கட்டடம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். கிழக்கு தற்போது அரசின் கைகளில் உள்ள போதிலும் கடந்த 10 மாதகாலமாக இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதுடன் மனிதாபிமான அமைப்புகளில் தங்கி வாழுகின்றனர். சம்பூர் …
-
- 0 replies
- 929 views
-
-
இலங்கை அமைச்சருக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் - நிகழ்ச்சியை கைவிட்டு நாடு திரும்பினார் 07 ஜூன் 2012 கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே ச…
-
- 0 replies
- 692 views
-
-
மீண்டும் அமைச்சராகிறார் டக்ளஸ் தேவானந்தா இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார்.பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன், 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்கிறது. இந்த அமைச்சரவையில் 2 தமிழர்கள் உள்ளடங்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் ஆறுமுகன் தொண்டமானிற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிற்கு எந்த ஒரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படுவதற்கான செய்திகள் வெளிவரா விட்டாலும் பிரதி அமைச்சு பதவி வழங்கலாம் என அரசியல் வட்டாராத்தில் எதிர்பார்க்கப் படுகிறது.கிழக்கு, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்து…
-
- 0 replies
- 401 views
-
-
வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்! வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது. அத்துடன் இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் தளர்த்திய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர…
-
- 0 replies
- 455 views
-
-
முல்லைத்தீவு- திருமுறிகண்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலத்தை விடுவிக்க வலியுறுத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் சுமார் 163 குடும்பங்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட படையினருக்கான ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 117குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், 46குடும்பங்கள் வவுனியா முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றாமல், கொக்காவில் பக…
-
- 0 replies
- 419 views
-
-
Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 07:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் இயற்றப்படும். அடுத்த தேர்தல் வரை இது இழுபறியில் இருக்காது வெகுவிரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
குப்பை லொறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த ரணில் வீரகேசரி இணையம் 5/7/2008 10:55:35 PM - அதியுயர் பாதுகாப்பு வலயமான தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான குப்பை லொறிகளை கண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விரு குப்பை லொறிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்று அங்கு காவல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரித்த ரணில், அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியாவிடின் தன்னிட…
-
- 0 replies
- 1.7k views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதன் பின்னர் ஹ…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கு பகுதியை வதிவிடமாக கொண்ட புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிகிச்சைக்கு சென்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாகவும் அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பில் புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக தீர்வுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய புற்றுநோயால் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
[size=3][size=4]சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்ற சூழலில் இந்தியாவுடனான நெருக்கம் குறைந்து வருகிறது. இதைச்சரி செய்வதற்கும் இலங்கையின் போக்கு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தவுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார்.இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா வெட்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தான் அவரது பயணம் இடம்பெற்றிருந்தது.[/size] [size=4]பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியா இணங்கியிருந்தது.[/size] [size=4]கடைசியாக அதிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது இந்தியா.[/size] [size=4]அதேவேளை சீனாவுக்கு அதிகளவு திட்டங்களை தாரைவார்ப்பது தொடர…
-
- 0 replies
- 490 views
-
-
6 Mar, 2025 | 03:16 PM பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்ப…
-
-
- 2 replies
- 217 views
-
-
பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப…
-
- 0 replies
- 145 views
-
-
சண்டே ரைம்ஸ் சிரேஸ்ட ஊடகவியலாளர் கிறிஸ்தோபர் கமலேந்திரனை கடந்த இரு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர். சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பல்வேறு பட்ட துறைகளில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆவார். இந் நிலையில் இவரது அடையாள அட்டை வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 654 views
-
-
தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்! வவுனியா, குருமண்காட்டு சந்தியில் நேற்று தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை, வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு …
-
-
- 2 replies
- 307 views
-
-
போரினால் ஏற்பட்ட வடுக்களைச் சீராக்க ஒஸ்திரியாவின் உதவி அவசியம் : ஜனாதிபதி வேண்டுகோள் போரினால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் சீராக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் சக வாழ்வையும் மேம்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி, ஒத்தாசை மிக அவசியமானதாகும். அந்தவகையில் இலங்கையின் நட்பு நாடான ஒஸ்திரியா எமக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்திரிய ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பிஸ்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்திரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதிய…
-
- 1 reply
- 223 views
-
-
இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை! [Thursday 2025-04-24 05:00] http://seithy.com/siteadmin/upload/gun-240425-seithy.jpg இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://seithy.com/listAllNews.php?newsID=332400&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 206 views
-