Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால், குண்டுகள் வெடிக்குமென மக்களை படையினர் அச்சுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டமைப்பிற்கான வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் நோக்கில், படையினர் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இத்தகைய பயமுறுத்தல்கள் காரணமாக சாதாரண பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 407 views
  2. மட்டக்களப்பிலிருந்து காலிவரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர். காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, குறித்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், இப்பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்…

  3. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளன – சுமந்திரன் குற்றச்சாட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இரா.சம்பந்தனினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஓர் வரைபு என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றினை பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் இந்நிலையில் வேறு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு ரெலோவும் புளொட்டும் அனுப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எ…

  4. மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் வவுனியா பொலிசார் கண்டுபிடிப்பு வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையின் ரயில் நிலைய வீதிச் சந்தியில் உள்ள மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் ஒன்றினை வவுனியா பொலிசார் இன்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளார்கள். இந்தச் சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் கடையொன்றிலேயே இந்தச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு எதிரில் படையினரின் காவலரண் ஒன்று அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தக் கடையில் இருந்த ஒருவர் நெளுக்குளத்தில் வசித்து வரும் சிவகுமார் என்பவரின் மூன்றாவது மகளாகிய 18 வயதுடைய சுகியந்தி என்ற இளம்பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்ததாகவ…

  5. வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார். இதன்போதே பாராளுமன்ற உறுப்பினரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின…

    • 2 replies
    • 373 views
  6. மன்னார் பிரதேசசபை தவிசாளாின் பதவிநீக்கம் -அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. September 14, 2021 மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் பாவனையில் இருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்க…

  7. சேரமான் 23/09/2009, 22:50 தடுப்புமுகாம் மக்களை விடுவிக்காமல் மகிந்த அரசு பிடிவாதமாக உள்ளது. நெதர்லாந்து தெரிவிப்பு இன்று (23.09.2009) புதன்மதியம் 2மணியிலிருந்து 4மணிவரை நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன்விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான நெதர்லோப் அம்மையாரைச் சந்தித்து நெதர்லாந்தின் பலஇடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை இவ்அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு உரையாடினர். இதன்ப…

  8. கூட்டமைப்பு வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது : September 22, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பம…

  9. புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு…

  10. இலங்கையிலும் மியன்மாரிலும் உள்ள பௌத்தர்கள் இனவாத வன்முறைகளை நிறுத்த வேண்டும் என திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். திபேத்திய பௌத்த ஆலயத்தில் பக்தர்களுக்கு போதனைகளை வழங்கும் முதல் நாள் நிகழ்வில் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏற்கனவே மியன்மாரில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன. இலங்கை மற்றும் மியன்மார் பௌத்த துறவிகள் பயங்கரவாதிகளாக கருதப்படுவது மிகவும் வருத்தமானது. பௌத்த துறவிகள் புனிதத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மதம் மீது நம்பிக்கை வையுங்கள். அதேபால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளியுங்கள். இது பல்வேறு மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கொண்டு வரும் என்றார். திபேத்திய ஆன்மீ…

  11. ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 593 views
  12. பாடசாலைகளுக்கிடையிலான தேசிய போட்டியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி! [saturday, 2013-10-05 14:11:01] நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற…

  13. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே அறியமுடியுமெனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசியை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 சதவீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர். அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 சத வீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றார். கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற…

  14. எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதற்கான நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அடுத்த வாரம் விலகுகிறார். மாத்தளையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் இதனை உறுதிப்படுத்தினார். அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவே பதவியைத் துறப்பதாகவும் அவர் தெரிவித்தார். ‘எதிர்வரும் 20ஆம் நாள் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க உள்ளேன்' என்றார் பசில். நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்த பின்னர் தான் தனது பதவியை விட்டு விலகுவேன். அதன் பின்னர் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்…

    • 0 replies
    • 377 views
  15. வன்னி மக்களை பண்டிவிரிச்சானுக்கு அனுப்ப முடிவு : உறவினர்கள் கவலை வீரகேசரி இணையம் 11/2/2009 12:39:22 PM - நானாட்டான் சிறுக்கண்டல் நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களில் 09 குடும்பத்தைச் சேர்ந்த 38 பேர் வரை பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப இருப்பதாக மன்னாரில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கையில், "வன்னிப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளியில் எடுப்பதற்கு இவர்களது உறவினர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, அகதிகளில் சிலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சொந்த இடங்க…

  16. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது - ஹக்கீம் 21 அக்டோபர் 2013 மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நிர்ப்பந்தம், இந்த நாடு எதிர்நோக்கிய மிக மோசமான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட சிலரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமை முடக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படுவதனை தடுக்க அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத…

  17. “18 அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவர்” அரசாங்கத்திலுள்ள 18 அமைச்சர்கள், செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஒன்றிணைந்த எதிரணியில் இணையவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இன்று (6) தெரிவித்தார். நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதைத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-அமைச்சர்கள்-ஒன்றிணைந்த-எதிரணியில்-இணைவர்/175-200102

    • 5 replies
    • 566 views
  18. துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பருத்­தித்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வட­ம­ராட்சி கிழக்கு - மணல்காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட விவ­கா­ர­மா­னது, பொலிஸார் அதி­கா­ரத்தை அள­வுக்­க­தி­க­மாக பயன்­ப­டுத்­தி­யதன் எதி­ரொலி என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார். இதனால் துப்­பாக்கிச் சூட்டை நடாத்­தி­ய­தாக கூறப்­படும் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ரையும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரையும…

  19. வெள்ளத்தில்... மூழ்கியது, நல்லூர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1248863

  20. முன் நாள் னாடுகளின் பிரதமர்கள், தலைவர்கள் ஆகியோர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய விஐபி க்களின் கிளப்பான CLUB DE MADRID எனும் அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினராக சந்திரிக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்பெயின் இல் நடந்த பொதுக்கூட்டத்திலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பலவருடங்களாக இயக்குனராக வருவதற்கு பலமுயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா அவரது ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கபட்டதால் தெரிவில் உள்ளடங்க்கவில்லை.http://www.eelanatham.net/news/important

  21. November 3, 2013 தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான வீடியோ ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 31-10-2013 அன்று வெளியிட்டுள்ளது. இவ் வீடியோகாட்சி இசைப்பிரியா யுத்தம் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவோ, காணாமல்போகவோ இல்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. கைதியாக உள்ள ஒரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இர…

  22. மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். https://www.dailymirror.lk/breaking_news/Mano-Ganesan-contracts-COVID-19/108-224976 விரைவில் நலம் பெற வேண்டும்.

  23. தமிழகம் முழுவதும் பிரபாரகன் போஸ்டர்கள் ஈழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக விடுதலைப் புலிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டின் மாவீரர் தின நிகழ்ச்சிகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மாவீரர் தின நிகழ்ச்சி நடத்தப்படுவது தொடர்பாக நகரின் பல இடங்களில் பிரபாகரன் படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல பிரபாகரனை வாழ்த்தி தமிழகத்தின் பல பக…

  24. லண்டன்: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க கூடாது என்று, உண்ணாவிரதம் இருக்கும் லண்டன் வாழ் இலங்கை தமிழர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ள கூடாது என வலியுறுத்தி லண்டனில், இலங்கை தமிழர் பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை முதல் பிரதமர் டேவிட் கேமரன் வீட்டின் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடும் குளிர் மற்றும் மழை காரணமாக அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்து தமிழின உணர்வாளர்கள், பரமேஸ்வரனை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வடுத்தனர். ஆனாலும், பரமேஸ்வரன் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்…

    • 2 replies
    • 548 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.