Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.போதனாவில் 62 பேருக்கு நிரந்தர நியமனம் October 8, 2021 யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. குறித்த நியமன கடிதங்கள் சுகாதார உதவியாளர்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2021/166996

  2. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் October 8, 2021 இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளை சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அவற்றை தடுக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் ப…

    • 2 replies
    • 425 views
  3. (நா.தனுஜா) இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/60698/thumb_world_bank.jpg இருப்பினும் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக நடுத்தரகால மதிப்பீடுகள் மந்தகரமான நிலையில் காணப்படுவதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியப்பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைவரம், கொவிட் - 19 தொற்றுப்பரவலுக்கு முன்னராக காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்களுக…

  4. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வின்போத…

  5. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது எனவும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்துள்ளதுடன், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற விசேட குழுவில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது. பாராளுமன்ற …

  6. பல மில்லியன்கள் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம் - மக்கள் விசனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் முடியும் முன்னரே வீதி முற்றாக தேசமடைந்து சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியானது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பொது மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்ய…

  7. வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு 14 கோடி – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செ…

  8. திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜரான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த தினம் வௌியான பெண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த தினம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெண்டோரா ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜ…

    • 0 replies
    • 190 views
  9. இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? ; எதிர்க்கட்சி கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தேசிய ரீதியில் எந்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வாக்குறுதியளித்துள்ளதா? இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? என பிரதான எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. எனினும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை சபையில் ஆளுந்தரப்பினர் முன்வைக்கவில்லை. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஒ…

    • 1 reply
    • 270 views
  10. யாழில்... பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள், பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு! ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். அத்துடன் தாளையடி…

    • 5 replies
    • 469 views
  11. LTTE இன்... புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர், சென்னையில் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்…

    • 6 replies
    • 861 views
  12. இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க... அமெரிக்கா உதவி இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார். https://athavannews.com/2021/1243548 #####…

    • 1 reply
    • 539 views
  13. எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1243591

    • 1 reply
    • 260 views
  14. பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமை…

  15. இறுதிக் கட்டத்தில் தலைவரை அழைத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா! அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இறுதி யுத்தக் காலத்தில் யுத்தத்தை நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்ததாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்து செல்ல முயற்சித…

  16. முல்லைத்தீவு நகர கடற்கரையில்... இராணுவத்தினரால், சிரமதானப் பணி முன்னெடுப்பு முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி, இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நகர கடற்கரையானது தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் சூழப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற கழிவுகளும் சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வந்து சேர்க்கும் கழிவுகளும் இவ்வாறு முல்லைத்தீவு நகர கடற்கரையின் அழகை சீரழித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே இராணுவத்தினர் இந்த பணியினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பிரதேச சபை தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243646

  17. நாமல் ராஜபக்சவிற்கு... புதிய பதவி! இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. https://athavannews.com/2021/1243515

  18. நாட்டில் முதன் முறையாக... பெண்கள் மூவர், பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு! நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1243520

  19. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பையும் வாக்கெடுப்பையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1243552

  20. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே அறியமுடியுமெனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசியை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 சதவீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர். அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 சத வீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றார். கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற…

  21. 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வட மாகாணத்திற்கு 20 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது - சார்ள்ஸ் நிர்மலநாதன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரையில் 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதிசேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே பொருளாதாரம் வீழ்ச…

  22. இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இன் கீழ் பொருந்தும், 27 சர்வதேச நியமங்களைச் செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இன்று பயணத்தை முடித்து கொண்டது. இந்த நியமங்கள், இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அரசாங்கத்தின் பி…

  23. காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை – தமிழிசை செளந்தர்ராஜன் காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா்.பன்னெடுங்காலத்துக்கு முன்பு காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்து, பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், அதை மீண்டும் செயற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காரைக்காலில் இருந்து இலங்…

  24. 45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்! October 6, 2021 மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்ப…

  25. அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை... யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன் சபையில் வலியுறுத்து! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.