ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவற்றுக்கு சரணாலயங்களை அமைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது, குண்டுகளை வீசுவதுடன் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்து வருகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் இயற்கை வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகளுக்கு சரணாலயங்களையும் தாவரங்களுக்கு பூங்காக்களையும் அமைத்துக் கொடுக்கும் அமைச்சர்கள் வன்னியில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு கூடாரங்களின்றியும் உண்பதற்கு உணவின்றியும், உயிருக்குப் போராடும் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் காட்டாத…
-
- 0 replies
- 1.8k views
-
-
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட…
-
- 0 replies
- 380 views
-
-
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் சிறிலங்காவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை மற்றும் சீ…
-
- 67 replies
- 5.6k views
-
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். ! தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்க…
-
-
- 4 replies
- 292 views
-
-
இந்திய மீனவர்கள் நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்தஇந்திய மீனவர்கள் நால்வரை கடற்படையினர், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து விசைப்படகில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே காங்கேசன்துறை கடற்படையினர்களால் கைதுசெய்யப்பட்டனர். கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற மீனவர்கள் நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படு…
-
- 0 replies
- 203 views
-
-
எம்மை விடவும் மிகவும் மோசமாக "கொவிட் -19" கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளது. மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தேர்தலை நடத்தியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது என கேள்வி எழுப்பும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, தேர்தலை நடத்த 45 தினங்கள் அவகாசம் உள்ளது எனவே ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயக தன்மையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,தேர்தலை நடத்த முடியாத…
-
- 4 replies
- 570 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து வவுனியாவில் பிரார்த்தனை நிகழ்வுகள்! by : Litharsan ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து நினைவு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. வவுனியா, குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனையில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்கள உத்தியோத்தர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதையடுத்து விசேட ஆத்மசாந்தி பிரார்த்தினையும் இடம்பெற்றிருந்தது. இதேவேளை, வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர்…
-
- 9 replies
- 718 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை - 2025 தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2025 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும். தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.ச…
-
- 0 replies
- 186 views
-
-
சந்திரிகாவுக்கு சிறிலங்கா தலைமை நீதிமன்று தண்டத்தொகை விதித்தது [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:11 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்தில் பத்தரமுல்ல பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதுடன் தண்டத்தொகை செலுத்தவும் சந்திரிகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. பத்தரமுல்லவில் 225 ஏக்கர் நிலத்தை ரொணி பீரிஸ் என்பவருக்கு ஒதுக்கீடு செய்ய சந்திரிகாவின் பதவிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகாவின் அதிகார முறைகேட்டின் மூலம் இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளான சுகதபால மெண்டிஸ், ராஜா சேனநாயக்க ஆகிய இருவரும…
-
- 0 replies
- 617 views
-
-
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை Dec 9, 2025 - 08:28 AM வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுதொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அர…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழத்தில் இராணுவப் புலனாய்வாளர் எனக்கூறி மக்களை அச்சுறுத்தும் பேர்வழிகள் November 7, 2012, 7:22 am[views: 108] கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வாளர்களெனத் தெரிவிக்கும் சிலர் விவரங்களைச் சேகரித்து வருவதால் மக்களிடையே பதற்றமானதொரு சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டாவளை பிரதேசத்திலுள்ள புன்னைநீராவி, விசுவமடு, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை ஆகிய இடங்களிலுள்ள குறிப்பிட்ட சில வீடுகளுக்கு கடந்த மூன்று நாள்களாகச் சென்று வரும் சிலர் இராணுவப் புலனாய்வாளர்கள் எனக் கூறிக்கொண்டு அந்தப் பகுதிகளிலுள்ள இளம் குடும்பத்தர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருகின்றனர். அத்துடன் கடந்த போரின் போது உடல் அவயவங்களை இழந…
-
- 0 replies
- 434 views
-
-
புலிகள் புதைத்துவைத்திருந்த குண்டுகள் மீட்பு ரொமேஸ் மதுசங்க வன்னி விமானப்படைத்தளத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பாலம்பிட்டி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருதொகை குண்டுகளை, அப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில், புலிகளின் பதுங்குழிகள் இருந்த இடத்திலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டன என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர். 74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் மூன்று உள்ளிட்ட குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 320 views
-
-
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியை சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்ற வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/சஹ்ரானின்-பயிற்சிக்கூடம/
-
- 1 reply
- 473 views
-
-
09 Jan, 2026 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் அண்மைகாலமாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக வ…
-
-
- 1 reply
- 180 views
-
-
இந்திய தலைவர்களுடனான சந்திப்பின் போது இராணுவ உதவிகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. அத்தோடு, வடக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியா எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. அதே வேளை நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறும் இந்திய தரப்பில் எதுவும் பேசப்படவில்லை. நோர்வே குறித்து அங்கு எதுவும் பேசப்படவில்லை. ஆனால், நோர்வே இது குறித்து இந்தியாவுடன் பலமுறை பேசியுள்து என்பது எமக்குத் தெரியும். அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்பது எனக்கு தெரியாது. அதேவேளை இலங்கiயில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்ள சாதகமான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் நாம் விவாதித்தோம். என ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெர…
-
- 1 reply
- 977 views
-
-
மே மாதம் 2009 ஆண்டு தமிழருக்கு நடந்த அவலம் நீங்கள் அறிந்ததே. ஆனாலும் 40,000 அப்பாவிப் பொது மக்களின் உயிரழிக்கப்பட்ட இத் துயரத் தருணங்களின் விபரங்கள் மேற்கு உலகினருக்கு மிகக் குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன. அண்மையில் ஜக்கிய நாடுகள் சபையினரால் வெளியிடப்பெற்ற அகநிலை அறிக்கையின் மூலம் தமிழருக்கு எதிராக தூண்டப்பட்ட போர்க் குற்றங்கள், இன அழிப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தாலும், இவ்விபரங்கள் சாதாரண மேற்குலக மக்களைப் போய் அடையுமா என்பது சந்தேகமே. இந்நிலையில், வன்னிப்குதியில் ஐ.நா. சபையின் புணாரணப் பணி அதிகாரியாக பணியாற்றிய இங்கிலாந்து நாட்டவரான திரு. பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் வன்னி அவலத்தை உலகுக்கு வெளிக்காட்டும் முகமாக பல-ஊடகப் புத்தக வெளியீட்டுத் திட்டமொன்றை …
-
- 1 reply
- 516 views
-
-
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனி…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி. http://survey.yarl.net/index.php?sid=92519
-
- 33 replies
- 4.8k views
-
-
தமிழன் என்ற போர்வையில் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கொண்டுவருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார். டி.எம்.சுவாமிநாதன் அமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழ் மக்களுக்காக 8 ஆயிரம் மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு குறித்த தொகை செலவளிக்கப்பட்டிருந்தால் இலங்கை தற்போது சிங்கப்பூர் போன்று மாறியிருக்கும் என தெரிவித்தார். இதுமட்டுமன்றி 4 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத்தது போன்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். இவ்வாறு பொய் சொல்வதற்காக காலம்…
-
- 3 replies
- 384 views
-
-
ராஜிதவின் விளக்கமறியல் நீட்டிப்பு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளைவான் தொடர்பான ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக, ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதற்காக, வேறொரு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், இன்று(27) உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழர்களை கொல்ல அரசு தினமும் ரூ. 46 கோடி செலவு! - நாடாளுமன்றில் சுரேஷ் எம்.பி. காட்டம் [08 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:25 மு.ப இலங்கை] இலங்கை அரசு தமிழர்களைக் கொலை செய்வதற்காக ஒரு நாளைக்கு 45 கோடி ரூபா 60 லட்சம் ரூபாவைச் செலவு செய்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தது. "தமிழினத்தைப் பூண்டோடு அழித்தொழித்து கிளிநொச்சியைக் கைப்பற்றித் தனது சிங்கக் கொடியை ஏற்றுவது தான் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம். அங்கு இதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தயங்கமாட்டார்" என்றும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் …
-
- 0 replies
- 577 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]சிறிலங்கா படைத்தரப்பினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் இவ்வூடகம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.[/size] [size=4]இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும், சிறிலங்கா படைத்தரப்பினர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், அ…
-
- 1 reply
- 814 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் ராஜிதவுக்கு பாராட்டு விழா -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 127 பேருக்கும் சுகாதார ஊழியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சருக்கு, நியமனம் பெற்றவர்கள் நேற்று வியாழக்கிழமை (07) பாராட்டு; விழா நடத்தினர். யாழுக்கு விஜயம் செய்த சுகாதார, சுதேச மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது ஊழியர்களால் வழங்கப்பட்ட கௌரவத்தை ஏற்றுக்கொண்டார். இந்த 127 ஊழியர்களும் நீண்ட காலமாக சென்யோன்ஸ் அம்புல…
-
- 0 replies
- 303 views
-