ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு UAE விதித்துள்ள தடை கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், தென் ஆபிரிக்கா மற்றும் வியட்நாம் உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேடமாக டெல்டா வகை வைரஸ் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 379 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரி சலுகையை அரசியல் தீர்விற்கு பயன்படுத்த வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற மாத்திரம் பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கோ.ராஜ்குமார்…
-
- 0 replies
- 241 views
-
-
சபையை இழந்தது யானை: மொட்டு மலர்ந்தது ஒலுமுதீன் கியாஸ் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று (2) முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்க…
-
- 0 replies
- 392 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும். தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டை பிற தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்க…
-
- 17 replies
- 750 views
-
-
கப்பல் விபத்தினால்... பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, டக்ளஸ் தேவானந்தாவினால்.. உபகரணங்கள் வழங்கி வைப்பு! எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய, தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://athavanne…
-
- 8 replies
- 760 views
-
-
தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த முன்னாள் போராளியின் மகன்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார். குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண …
-
- 1 reply
- 319 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின்... சில விதிகளை, மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும். …
-
- 0 replies
- 335 views
-
-
மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு! அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக இருந்த நிலையில், குறித்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226066
-
- 0 replies
- 479 views
-
-
குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற…
-
- 0 replies
- 397 views
-
-
மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1958ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் பின்னர் இலங்கை விமானப்படைக்கு 1983இல் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012), விமான நிலையத்தின் ஓடுபாதை உருவாக்கப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டதா…
-
- 0 replies
- 346 views
-
-
கிளிநொச்சி கண்டாவளை உமையாள்புரம் பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பிரதேசம் ஆனையிறவு கடல்நீரேரிக்கு அருகில் உள்ள கிராமம் இதன் காரணமாக கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் உவராக காணப்படுகிறது. உவராக காணப்படும் பிரதேசத்தின் அளவு அதிகரித்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் இதனை விரைவுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள் கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெர…
-
- 0 replies
- 311 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியிருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநி…
-
- 0 replies
- 295 views
-
-
மன்னார் பேசாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடற்கரையை அண்டிய கரவலைப்பாடு பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்காக அவ்விடத்துக்கு வருகை தந்திருந்தபொழுது அங்கு எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இது குறித்து தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் தென் பகுதியிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் அதிக மீனவ சமூகம் கொண்ட பேசாலை பகுதியில் இவர்களுக்கு உரிமையான கரவலைப்பாட்டு பகுதிக்கு அண்டிய பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது இவ் மீனவ சமூகத்துக்கு தெரிய வந்தது. இதை அறிந்த பேசாலை மீனவ சமூகம் இவ் இறால் பண்ணை இவ்விடத்தில் அமையுமானால் கரவலையை நம்பி வாழும் மீனவ சமூகத்துக்கு இது ப…
-
- 0 replies
- 456 views
-
-
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் 22 Views இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 330 views
-
-
இந்தியாவின்... பகையினை, சம்பாதிக்ககூடிய நிலையினையே... தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு! இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளது. வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக இந்தியாவி…
-
- 5 replies
- 348 views
-
-
குரங்கின் கையில் பூமாலை போல் மட்டக்களப்பு - சாணக்கியன் கவலை! மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த …
-
- 0 replies
- 499 views
-
-
செந்திலின் தலையீட்டால் இரத்தினபுரி த.ம.விக்கு புதிய காணி இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர். …
-
- 0 replies
- 907 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு (சி.எல்.சிசில்) யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டுக்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டமைக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த மூன்று ஆண்டுகள் யாழில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வரும் இவர், சூரினாம் நாட்டிற்கு தூதராக மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட…
-
- 0 replies
- 246 views
-
-
திஸ்ஸமஹாராமவில்... பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை, சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்! திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்…
-
- 8 replies
- 927 views
-
-
கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான் July 1, 2021 Share 2 Views வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் போதுமான கவனத்தினை யார…
-
- 0 replies
- 437 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் July 1, 2021 Share 24 Views விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப் பட்டசெங்லடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவருக்கு எதிரான சாட்சிகளை இல்லாமல் செய்யும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் உட்பட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், காணி ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி தகவல் (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்கிழமை இவ்வாறு 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். இவ்வாறு சொத்து மதிப்பிற்கும் அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும், இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாரிய பொருளாதார நெருக்கடியை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எ…
-
- 5 replies
- 663 views
-
-
என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். அவரை ஆனந்தபவனிற்கு அழைத்து சென்று இரண்டு தோசையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் நேற்று திங்கடகிழமை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான…
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கை விமானங்கள்... துருக்கியில், தரையிறங்கத் தடை! இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களாதேஷ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து நிலம்…
-
- 0 replies
- 365 views
-
-
யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2021/1225580
-
- 30 replies
- 2k views
-