ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
தமிழ்நாட்டு மீனவர் கவலை அவசியம் இல்லாதது - டக்லஸ். தாம் கடலில் பழைய பஸ்களை இறக்கியது போல, இந்தியா செய்துள்ளதாகவும், அதனையே தாம் செய்ததாகவும் கூறும் அமைச்சர், இந்தியா செய்யும் போது மௌனமாக இருக்கும் இந்திய நிபுணர்களும், மீனவரும், நாம் செய்யும் போது, தவறு என்று சொல்வதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை என்கிறார். மேலும், இதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தான் அந்த நடவடிக்கையினை மேற் கொண்டதாகவும், அதனை தொடரும் நோக்கில் இருப்பதாகவும் அமைச்சர் சொல்கிறார். அமெரிக்கா உள்பட 40 நாடுகள் இந்த முறையில் நடவடிக்கை எடுத்துள்ளன என்றும் சொல்கிறார் அமைச்சர். https://www.dailymirror.lk/latest_news/Douglas-slams-Indian-experts-fishermen-for-calling-Sri-Lanka-irres…
-
- 4 replies
- 552 views
- 1 follower
-
-
பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்! By கிருசாயிதன் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் பல்வேறு திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான கைலாயப்பிள்ளை நாகராசா என்பவரின் குடும்பத்திற்கு எட்டு (08) இலட்சம் ரூபாய் பெறுமதில் வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்க்கு இராணுவத்தினர் முன்வந்துள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.இந்நிழ்வில் கல்முனை இராணுவமுகாம் பொறுப்…
-
- 29 replies
- 1.5k views
-
-
கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம் 31 Views மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்ஸுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்ஸில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார். தென்னிலங்கையிலிருந்து 5 பேருந…
-
- 53 replies
- 4.5k views
- 1 follower
-
-
கொரோனா பயணத் தடை – வாழ்வாதார நெருக்கடிக்குள் கிழக்கு மாகாணம் 18 Views இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வடக்கு கிழக்கில் பின்தங்கிய பகுதிகள் மக்கள் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித வருமானமும் இன்றியும் வெளியேற முடியாத நிலையிலும் மிக மோசமான கஸ்ட நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் கூலித்தொழில்செய்வோரும், குடிசை கைத்தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பா…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கையில் புலனாய்வு பணிக்காக மீண்டும் அழைக்கப்படும் முன்னாள் படையினர்! June 18, 2021 நாட்டை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நியமிக்க இலங்கை இராணுவம் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கடந்த 08 ஜூன் 2021 அன்று மேற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு உட்பட்டபிரதேசங்களிலுள்ள காலாட்படை அணிகளுக்குஇரகசிய உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் பணிக்கு மீண்டும் திரும்ப விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களின் தகவல்களை ஜூன் 14க்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னோக்கிச் செல்லும் உத்தி என்ற பெயரில் ச…
-
- 0 replies
- 281 views
-
-
இன-மதவாத அரசியல் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தேரர்கள் வாழவேண்டும் 36 Views தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும்..! இந்நாடு உருப்படும்..! நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை வாழ்த்துவார்கள்..! என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர் இதை போதிக்க தேவையில்லை. …
-
- 1 reply
- 523 views
-
-
கொவிட் – 19க்காக சேகரித்த நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்திய வடக்கு ஆளுனர் June 18, 2021 வடமாகாண அரச உத்தியோகஸ்தர்களிடம் இருந்து கொவிட் -19 க்காக என சேகரிக்கப்பட்ட 2 கோடியே 38 இலட்ச ரூபாய் நிதியினை வடமாகாண ஆளுநர் சேகரிக்கப்பட்ட நோக்கை விட வேறு தேவைகளுக்கு ஒதுக்கி உள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளரான மு.தமிழ்ச்செல்வன் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக எழுப்பிய கேள்வி மூலமே குறித்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய கொவிட் 19 இற்காக திரட்டப்பட்ட 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியில் 30 இலட்சம் ரூபா நிதி தேசிய கொவிட் 19 நிதி…
-
- 0 replies
- 381 views
-
-
மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள் 6 Views மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று கரையொதிங்கியுள்ளது. இன்னும் பல ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன. கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்…
-
- 0 replies
- 317 views
-
-
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18.09.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது. கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்…
-
- 2 replies
- 407 views
-
-
நா.தனுஜா இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது. இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத…
-
- 2 replies
- 702 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம். குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர…
-
- 4 replies
- 687 views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும் 6 Views “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கொழும்பிலுள்ள இந்த…
-
- 14 replies
- 898 views
-
-
புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை மீளவும் தோண்டுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு Sayanolipavan இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஜஸ் போதைப்;பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெள…
-
- 0 replies
- 456 views
-
-
கொழும்பிலிருந்து யாழ். வந்த ரி.ஐ.டி.யினர் மறவன்புலவு சச்சியிடம் 2 மணி நேர விசாரணை June 18, 2021 சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனைக் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினார்கள். தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான கேள்விகளை மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் தொடுத்தனர். அதற்கான பதில்களைப் பதிந்து சென்றுள்ளார்கள். இந்த விசாரணைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது. இதுவரை காலம் சிவசேனை வ…
-
- 2 replies
- 624 views
-
-
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் விடுவிப்பு June 18, 2021 மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால்குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இறால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இங்கு கருத்துவெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ்,மட்டக்களப்பு வாவியில் மீன்வளத்தை அதிகரி…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங் நியமனம்! June 16, 2021 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய உவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/162345/
-
- 4 replies
- 572 views
-
-
முள்ளிவாய்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த 10பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உ…
-
- 0 replies
- 184 views
-
-
’போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பலியாகவேண்டாம்’’ வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் - 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இனந்தெரியாத நபர்களால் இவ்வாறான அழைப்புகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் அதிகமானவை நிலையான தொலைப்பேசிகளுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 321 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை... சிறு பிள்ளையின் கடிதம் போல், பல பிழைகளை கொண்டுள்ளது – கம்மன்பில தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிதி அமைச்சரின் இணக்கப்பாட்டின் படியே எரிபொருள் விலையை அதிகரிக்க முடியும். அமைச்சரவையின் அனுமதி தேவை இல்லை. நான் அமைச்சராக பதவியேற்றது 2020 ஓகஸ்ட் மாதம். 2020 ஜனவரி மாதம் அல்ல என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதில் கைச்சாத்திட்ட நாட…
-
- 0 replies
- 172 views
-
-
முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பரப்பில் அண்மை நாட்களாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டவிரோத தொழிலாளர்களால் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும் கடலில் திருவிழா போன்று வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் இடம்பெறுவதாகவும் திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர். குறிப்பாக தாம் கடலில் இறங்கி தொழில் செய்யவே அச்சப்படுவதாகவும் அங்கு நங்கூரமிட்டு வெளிச்சம் பாய்ச்சி மீன் பிட…
-
- 1 reply
- 278 views
-
-
கொரோனா தொற்றால் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு மிகப்பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால், மீன் வளங்கள் அழிவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கப்பலால் கடல் வளம், சுற்றாடல், மீன் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட கூட முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மீனவர்களின் வாழ்வில் மேலும் பாதிப்பை ஏற்…
-
- 1 reply
- 326 views
-
-
"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இன்று(17.06.2021) மருதங்கேணியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதுடன் பாரம்பரியமாக சிறுதொழிலில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்காத வகையில், பிரதேசத்தின் பெரும்பாலானவர்களின் நலன்களின்…
-
- 0 replies
- 328 views
-
-
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம் நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா,…
-
- 15 replies
- 826 views
-
-
மக்களின் எதிர் பார்ப்பினை, நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.ச…
-
- 5 replies
- 588 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்! நாடு வழமைக்கு திரும்பியதும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. குறித்த தீர்மானம் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதன்படி இலங்கை செயற்படாவிட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாக மீண்டும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிவிவாகர அமைச்சர…
-
- 1 reply
- 252 views
-