ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...operations.html http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...rations_13.html
-
- 0 replies
- 1.4k views
-
-
13 ஆவது திருத்தம் நேரக்குண்டு: விமல் புதன்கிழமை, 07 நவம்பர் 2012 11:25 0 COMMENTS 'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதனை தொடரந்து முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தானது. அது ஒரு நேரக்குண்டு' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52127-13-.html
-
- 0 replies
- 373 views
-
-
யாழில் காய்ச்சலால் அவதியுற்ற இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்தபோது பொறுப்புணர்வற்ற முறையில் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் அம்புலன்ஸ் வண்டி வழங்கவும் மறுப்பு தெரிவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிற்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. பொன்னாலை சமூக செயற்பாட்டாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ந.பொன்ராசாவால் எழுதப்பட்ட அந்த பகிரங்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொன்னாலையில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களாக காய்ச்சல். நேற்று முன்தினம் தொல்புரம் மத்திய மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். நேற்று பிற்பகல் மாவடியில் உள்ள தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இன்று (02) சனிக்கிழமை அவருக…
-
- 0 replies
- 478 views
-
-
13 ஆம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் வழங்குவோம்: மனோ கணேசன் [sunday, 2012-11-11 19:08:28] பதின்மூன்றாம் திருத்தத்திற்கு பதிலாக புதிய பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டம், அமைச்சர் விமல் வீரவன்சவின் சுதந்திர மக்கள் முன்னணியுடனான ஐதேக தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சு ஆகியவை தொடர்பில் இன்று கூடிய, எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகிறது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இவைபற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறியதாவது, வரவு செலவு திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய …
-
- 0 replies
- 428 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707
-
- 0 replies
- 145 views
-
-
ஈழ தேசம் தமிழர்களின் மரபுவழி உரிமையாகும் - சுப.வீரபாண்டியன் ஈழ தேசம் தமிழ் மக்களின் மரபுவழி உரிமை எனவும், பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றார்கள் என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானதெனவும் மூத்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கும் விடுக்கும் வகையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர் உரிமைகள் நசுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஹிம்சை வழியாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிய போதிலும் குறித்த போராட்டங்கள் சிங்கள பேரி…
-
- 0 replies
- 823 views
-
-
09 Jan, 2026 | 05:22 PM (செ.சுபதர்ஷனி) கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விம…
-
- 1 reply
- 212 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின…
-
- 5 replies
- 2.9k views
-
-
கொழும்பு வரை வந்த வான்புலிகள் அரசுக்கு ஏற்படுத்திய புதிய அழுத்தம் 11/2/2008 5:29:25 PM - விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன.தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே …
-
- 0 replies
- 976 views
-
-
தமிழீழம்: தமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்திருந்த காலத்தில் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்…
-
- 2 replies
- 933 views
-
-
கொக்கிளாயில் சிங்களவர் பாரம்பரியமாக வாழவில்லை என்பதை 1965ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து கொக்கிளாயில் தமிழர்களின் கரை வலைப்பாடுகளே உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் சிங்களவர்களே அடாத்தாக கரை வலைப்பாடுகள் அமைத்து தொழில் செய்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தமிழர்களின் கரை வலைப்பாடுகளில் சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று நடைப…
-
- 0 replies
- 215 views
-
-
தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு, தேன் எடுக்கச் சென்ற சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19 வயது) என்ற மாணவன், நேற்று (26) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். நிலாவெளி, கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த இவர், குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில், மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது, மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்த…
-
- 0 replies
- 541 views
-
-
சிகிச்சை பெறும் சி.வியை சந்தித்தார் ராஜித -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வியாழக்கிழமை (07) சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அவசியம் என்ற வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா…
-
- 0 replies
- 234 views
-
-
இ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து? மறைந்த ஆறுமுகன் தொண்டமான் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரான முத்துசிவலிங்கம் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தலைவராக முத்துசிவலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்திற்குள் இது தொடர்பாக இ.தொ.கா இறுதி தீர்மானங்களை எடுக்கவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-கா-தலைவராக-மீண்டும்-ம/
-
- 0 replies
- 800 views
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச இன்று மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.tamilwin.com/politics/01/110622
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதிக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையினாலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ‘மதுபோதை என்ற காலனிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கம்பஹா, ராகம பிரதேசத்தில் நடத்தப்படவுள்ள விழிப்புணர்வூட்டும் எதிர்ப்பு பேரணி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு – பொறளையிலுள்ள கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந…
-
- 0 replies
- 182 views
-
-
யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை
-
- 6 replies
- 799 views
-
-
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம். இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகள் விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ், பான் -கி-மூன் ஆகியோர் செய்த துரோகங்கள் குறித்தும், சார்லஸ் பெட்ரி அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் மே 17 இயக்கத் தோழர்கள் புதிய தலைமுறையில்.... http://www.youtube.com/watch?v=E_5y-heYKMw பகிர்வதன் மூலம் செய்தி சென்றடைய உதவுங்கள்... 2 மாத தோழர் உமர் உழைப்பு தமிழர்களுக்கு சென்று சேரட்டும் - திருமுருகன் காந்தி!
-
- 2 replies
- 865 views
-
-
தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத…
-
- 1 reply
- 338 views
-
-
என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமை…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தினியாவெல பாலித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் உருவான மிகவும் மோசமான, ஊழல் மிக்க அரசாங்கமாக இதனைக் கருத வேண்டும். அத்துடன் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தம்மை கொலை செய்தாலும் பரவாயில்லை. யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ இந்தக் கருத்தை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை விரயமாக்காது, மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடாது. அத்துடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக பெற்றோல் கிடைக்கின்றது. இந்தச் சலுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோர…
-
- 1 reply
- 515 views
-
-
ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் நியமிக்கப்பட வேண்டும் - அலிக் அலுவிஹரே: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அலிக் அலுவிஹரே தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கான சகல தகுதிகளும் சஜித் பிரேமதாஸவிடம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது யோசனை குறித்த எழுத்து மூல கோரிக்கையொன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அலுவிஹரே அனுப்பி வைத்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவர் பொறுப்பிற்கு சஜித் பிரேமதாஸவை நியமிப்பதன் மூலம் கட்சிக்கு வலு சேர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியம…
-
- 0 replies
- 626 views
-
-
காத்திருந்தோரைக் கடந்து சென்ற ஆளுநர் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடமொன்று, இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை …
-
- 0 replies
- 501 views
-
-
(எஸ்.கே.பிரசாத்) முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 2 replies
- 494 views
-