ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
இலங்கை அரசாங்கத்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், எதற்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளையே நிலைகுலைய வைத்துள்ளது என பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய “still- Counting the Dead” என்ற ஆங்கில நூல், “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலை கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார். இந்நூல் வெளியிட்டு விழாவில் நூலாசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்: இலங்கையில் போர் முட…
-
- 8 replies
- 2.7k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவர்களின் மோதல் சம்பவத்தில் காயமுற்று சிகிச்சை பெறும் சிங்கள மாணவனை ஞானசார தேரர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது பலவந்தமாக சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்ற சம்பவம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் மாணவர்களுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதன்போது காயமுற்ற மாணவர் ஒருவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை ஊதிப் பெருப்பிக்கும் வகையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கள மாணவர்கள் ஒன்றியம் கடந்த சில நாட்களாக இனவாதக் கருத்துக்களை கடுமையாக வெளியிட்டு வந்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மாலை…
-
- 1 reply
- 438 views
-
-
அரச திணைக்கள ஊழல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்! மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள், பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச்சரிதவியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர். மேலும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கை பிரச்சனை: சொதப்பும் அதிகாரிகள்-ராமதாஸ் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2008, 10:55 டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால் இதை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற குழுவில் இடம் பெற்ற ராமதாஸ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் தன்னுடைய வேலைத்திட்டம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிமை கோரியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலங்களில் யுத்தத்திற்கு பாரியளவு பணம் செலவிடும் போது கூட, இதற்கு முதலில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷ கூறினார். தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ. உபுல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைக் கூறியிருந்தார். அந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மிகவும் அக்கறை செலுத்தியதாகவும், அதை மிகத் தௌிவாக கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 352 views
-
-
தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை முத்துக்குமார் சம்பந்தன் டிசெம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய சக்திகளின் கோபத்தை நன்றாகவே கிளறிவிட்டிருக்கிறது. இதற்கான எதிர்வினைகள் புலம்பெயர் இணையத்தளங்களில் அதிகமாக வந்தன. உள்ளூர் பத்திரிகைகளில் ஆதரவாகவும், எதிராகவும் பல கட்டுரைகள் பதிவாகியிருக்கின்றன. அரசியல்கட்சிகள் என்றவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதற்கு பலத்த கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் 'அது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தேயொழிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது கருத்தல்ல' எனக் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சம்பந்…
-
- 4 replies
- 619 views
-
-
-
சீருடையுடன் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த இராணுவச் சிப்பாய்க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவச் சிப்பாயை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதவான் ருவான்திக்கா மாரபன உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் ரனசேவா இராணுவ முகாமிற்கு அருகாமையில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். 20 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவச் சிப்பாய், நீண்டகாலமாக சீருடையில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=73007&category=TamilNews&language=…
-
- 1 reply
- 217 views
-
-
கஞ்சாவுடன் பூசாரி கைது -செல்வநாயகம் கபிலன் இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டது. 26 வயதுடைய பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர். இது இவ்வாறு இருக்க, அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை ம…
-
- 12 replies
- 755 views
-
-
வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு! நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது. https://newuthayan.com/வாக்களிக்கும்-நேரம்-அதிக/
-
- 2 replies
- 473 views
-
-
2013-01-03 உறவினரான இளம் பெண் ஒருவரை இரகசியமான முறையில் வீடியோ படமெடுத்துவிட்டு அதனை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக கோரிய குடும்ஸ்தரொருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கணினி பயிற்சி நிலையமொன்றினை நடத்தி வரும் குடும்பஸ்தரொருவர் புத்தளத்திலுள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு அண்மையில் சென்றுள்ளார். அங்கு அந்த வீட்டு உரிமையாளரின் மகளது அறைக்குள் வீடியோ கமராவினை வைத்து இவர் படம் பிடித்துள்ளார். இதனை வெளியே காண்பிக்கப்போவதாக மிரட்டி குறித்த நபர் 10 இலட்சம் ரூபா கப்பத்தினை குறித்த யுவதியி…
-
- 0 replies
- 537 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நினைவு கூரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவுச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன் நாட்டு கடவுச்சீட்டு இருந்துள்ளது. சந்தேகத்தின் காரணமாக அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர்களிடம் இரண்டு அகதி கடவுச்சீட்டுகள் க…
-
- 0 replies
- 486 views
-
-
கண்டுகொள்ளாத இந்தியா, கால் பதிக்கும் சீனா கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவான அலையை கிளர்ந்தெழச் செய்ததில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்கூட டெல்லியில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களின்பால் அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு வந்திருக்கிறார். அதோடு ஊர் ஊராகப் போய் தமிழ் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் செய்யும் பிரசாரமும், அந்தந்த ஏரியாக்களில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறது. முதல் தடவையாக கடந்த 28_ம் தேதி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் பரபரப்புடன் நடந…
-
- 2 replies
- 2.4k views
-
-
தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கத்தோலிக்க ஆயர் குழுவிடம் வேண்டுகோள் 11 ஜனவரி 2013 வன்னியில் இறுதிப்போரின் போது காணாமல்போன எமது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எமக்குத் தெரியப்படுத்துங்கள் என நேற்று வன்னிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் குழுவிடம் கண்ணீர் மல்கியவாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர் முல்லைத்தீவுப் பகுதி பெற்றோர். ஆயர்களை சூழ்ந்துகொண்ட அவர்கள் கதறி அழுதவாறு கைகளை ஏந்திவிடுத்த இந்தக் கோரிக்கை அங்கு சென்றிருந்த ஆயர்களின் மனங்களையும் நெகிழவைத்தது. வன்னி மக்களின் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக இலங்கை ஆயர் மன்றத்தின் தலைவர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 10 ஆயர்களைக் கொண்ட குழு அங்கு பயணத்தை ம…
-
- 0 replies
- 307 views
-
-
போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…
-
- 7 replies
- 2.2k views
-
-
25 வயதுக்கு குறைந்தவர்கள் பணிபெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லத் தடை 25 வயதுக்கும் குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு பணிபெண்களாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயது குறைந்தபட்டசம் 25க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அறிவிவித்துள்ளது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் எனவும் உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள…
-
- 5 replies
- 574 views
-
-
இந்திய அரசு காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பது வர்த்தக தேவைகளுக்கே; இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம் கூறுகிறார் காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக தேவைகளுக்காகவே இந்திய அரசால் புனர் நிர்மாணம் செய்து கொடுக்கப் படுகின்றது. இதன் இரண்டாம் கட்டப் புனர்நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று இந்தியத் துணைத் தூதர் பி.மகாலிங்கம் தெரிவித்தார். இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசு புனரமைத்து வருகின்றது. இந்தத் துறைமுகம் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்தத்தக்க வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. முதற் கட்டமாகத் துறைமுகப் பகுதியில் மூழ்கியிருந்த பழைய கப்பல்கள…
-
- 0 replies
- 315 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திபடுத்த படைவீரர் நினைவுத் தூபிகள் அகற்றப்படுகின்றன – மஹிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திபடுத்தும் நோக்கில் படைவீரர் நினைவுத் தூபிகள் அகற்றப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் மாலிகாபிட்டி பகுதியில் எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மாலிகபிட்டியவிற்கு அருகாமையில் அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபி அகற்றப்பட உள்ளதாகத் தமக்க தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 400 views
-
-
காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம் இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இ…
-
- 12 replies
- 1.7k views
-
-
வன்னியில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வா என்று நீ பொங்கி எழுந்தாயே. ஆனால் இங்கு நடப்பதே வேறு. உன்னை யார் மதித்தார்கள். உன் சொல்லை யார் கேட்டார்கள். விளைவு, 08.01.2009 இலும் தொடர்கிறது. இன அழிப்புச் சிறீலங்கா அரச பயங்கரவாதம். இந்தக் கழந்தைக்காக யாரும் இரக்கம் பாட்ட வேண்டாம். தேவையில்லை. ஏன் என்றால் இது தமிழ்க் குழந்தை தமிழ் பேசும் தாயின் வயிற்றில் உருவான குழந்தை. தட்டிக் கேட்க எந்த நாதியும் அற்ற, நாடும் அற்ற, சொந்த நாடற்றவனின் குழந்தை. நாயாய் பிறந்தாலும் பிறவுங்கள் ஆனால் நாடற்றவனாய் பிறவாதீர்கள். http://www.tamilseythi.com/literature/poem...2009-01-11.html - ஈழத்திலிருந்து....
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்.செயலகத்தில் புதிய கட்டடத்தை திறக்க வருகிறார் பிரதமர் . யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 4 மாடிக்கட்டடத்தின் கட்டு மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக் கட்டடம் எதிர்வரும்…
-
- 0 replies
- 304 views
-
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று தெரிவு.? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் இருந்து மூவர் தெரிவுசெய்ய…
-
- 0 replies
- 361 views
-
-
இங்கிலாந்தில் மணப்பெண் தேடும் யாழ்ப்பாண இளவரசர்.... இண்டைக்கு இரவு 10:30க்கு BBC 3 யில் நேரடி நிகழ்ச்சி..... எல்லா பத்திரிகைகளிலும் உள்ளது... LondonPaperஇல் விலாவரியாக உள்ளது..... பின்குறிப்பு.. இந்த செய்தி... ''முக்கியத்துவம்'' கருதி ஊர் புதினத்தில் இணைக்கபட்டுள்ளது..
-
- 12 replies
- 3.7k views
-
-
யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவிப்பு யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன் இராணுவத்தின் எண்ணிக்கையும் குறைக்கப்படமாட்டாதென யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அவர், 2010ஆம் ஆண்டு வரை பலாலி உயர் பாதுகாப்பு வலயம், 11,269 ஏக்கர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அதன் பின்னர், அரசாங்கத…
-
- 1 reply
- 453 views
-