ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
கனடா வாழ் தமிழர்க்கு ஒரு வேண்டுகோள். இன்றைய வன்னி நிலை தொடர்பில் நடக்கவிருக்கும் கூட்டத்துக்கு சமூகமளித்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். Meeting regarding Sri Lanka Crisis with Dr. Ruby Dhalla Dear Friends, I wanted to take this opportunity to touch base in regards to the ongoing crisis in Sri Lanka. I will be meeting with some constituents and community members and would be interested in also hearing your views on this issue as you have expressed interest in the past. I look forward to seeing you at the meeting which will take place on Sunday March 8th, 2009 at 3:30pm at the Durga Temple located at 1808 Drew Road, in Mississauga. …
-
- 0 replies
- 1.2k views
-
-
கருணாநிதியின் அரசியல் நாடகம் தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில் 'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் இருந்து யாழ்குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள். யாழ் குடாநாட்டிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து தருவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்தி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது தற்போது தமிழ் நாட்டில் உள்ள துறை முகத்தில் தரித்துள்ள கப்பலில் 10 000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் இந்த கப்பல் காங்கேசந்துறை துறைமுகத்தை சென்றடையும் என ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. www.pathivu.com
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பி.பி.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அளவையில் அதிகாலை ரயில் விபத்தில் தந்தையும் மகளும் பலி [23 - April - 2007] -கே.பி.மோகன்- அளவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு செல்வதற்காக ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தையும் மகளுமே ரயிலில் மோதி இறந்துள்ளதாக அளவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் நிமல் பண்டார தெரிவித்தார். டானியல் வேதமாணிக்கம் (வயது 61) நிலந்தி ரொஷானி வேதமாணிக்கம் (வயது 35) ஆகிய இருவருமே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருவரும் அலுவலக தேவையொன்றுக்காக வீட்டிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்டு ரயில் பாதை வழியாக அளவை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரில் ரயில் வண்டியொன்று வருவதை அவதானித்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
செவ்வாய் 11-12-2007 00:56 மணி தமிழீழம் [சிறீதரன்] பாகிஸ்தான் சிறீலங்காவிற்கான உதவியை நீடித்துள்ளது பாகிஸ்தான் நேற்று சிறீலங்காவின் இறைமை தாம் மதிப்பதாகவும் அதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் முகமதியன் சொம்றோ கருத்து தெரிவிக்கையில் பாகிஸ்தானும் இதனையொத்த பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் இருநாடுகளும் இதனை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா” போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/11/இந்து-சமயத்துக்கு-எதிரான.html
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஒரு இலட்சம் பேரைக் கொண்ட படையணி .... புதன்கிழமை, 09 பிப்ரவரி 2011 06:22 ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தி அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கியதான ஒரு இலட்சம் பேரைக் கொண்ட படையணி ஒன்று தயாராகிறது. இந்தப் படையணியை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச நேற்று ஆரம்பித்து வைத்தார். இந்த ஆரம்ப வைப நிகழ்வு சஜித் பிரேமதாசவின் நாராஹேன்பிட்டிய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தப் படையணிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவராக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கமம். சங்கமம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
ரணில், மங்கள கூறிய ஆட்சிக்கவிழ்ப்பு எப்போது? சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசை கவிழ்தது விட்டு புதிய ஆட்சியை அமைப்போம் என ரணிலும் மங்களவும் தெரிவித்துள்ளனர். இது நடக்கக்கூடியதா? எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிற்குப்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டபோது ஆட்சிக்கவிழ்ப்பின் நியாயத்தன்மையை குறிப்பிட்டனர். இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுத்துவது. நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்திசெய்வது. அதற்கான வழிமுறைகளைக்காண்பது தமது புதிய அணியின் குறிக்கோள் என மங்கள தெரிவித்தார். இவர்களது நோக்கம் ஆட்சியைக்கவிழ்ப்பது ஒன்றேதான்.இந்த நாட்டைக்கட்டியெழுப்ப அவர்களிடம் எந்தத்திட்மும் இல்லை.நீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு : சிங்கள இராணுவம் தெரிவிப்பு [படங்கள் இணைப்பு] வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. முழுமையாக உள்ளூர் தயாரிப்பில் புலிகளினால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்க்கிக் கப்பல் சுமார் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் உடையது என தெரிவிக்கப்படுகிறது. இறுதிச் சமர் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் கடற்பரப்பில், கடலுக்கடியில் இக்கப்பல் பாதுகாப்பாக நிறுத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சோமவன்ச அமரசிங்கவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது (படங்கள் இணைப்பு) மறைந்த முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிக்க வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸாருக்கு குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸ கட்சி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதேவேளை சோமவன்ச அமரசிங்கவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்லி செலுத்தி வருகின்றனர். http://www.virakesari.lk/article/7655
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்து சமயத்தில் ஆகமங்கள் வேதநூல்கள். கிறிஸ்தவத்தில் புனித விவிலியம். இஸ்லாத்தில் திருக்குர்ஆன். இவற்றை படிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படலாம்; மோட்சமும் பெறலாம். ஆனால், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி. வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் விடுத்த அறி க்கையை வாசிக்காதவர்கள் மோட்சம் பெறுவது கடினமே. அந்தளவிற்கு அவரின் அறிக்கை அறம் தழுவியது. நீதியின்பாற்பட்டது. நேர்மையை எடுத்துக் காட்டுவது. நெஞ்சுரத்தை வெளிப்படுத்துவது. நேர்மையானவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் போக்கிரித்தனத்துக்கு தலைசாய்க்க மாட்டான் என்பதை இடித்துரைப்பது. ஆகையால், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த அந்த அறிக்கையை அனைவரும் வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு மற்றவர…
-
- 6 replies
- 1.2k views
-
-
கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் காலி பூஸாவுக்கும், மஹர சிறைச்சாலைக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் மிகவும் இரகசியமான முறையில்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6077.html
-
- 2 replies
- 1.2k views
-
-
பெண்களுடன் சேட்டை புரிய முனைந்த இராணுவத்தினரைக் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது :நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள இளம் பெண்களிடம் 4 இராணுவத்தினர் சேட்டை விட முயன்றுள்ளனர். உடனடியாக அப் பெண்கள் 3 இராணுவத்தினரை தமது வீட்டுனுள் அடைது வைத்துள்ளதுடன் அவர்கள் பயனித்த துவிச்சக்கரவண்டியையும் பறிமுதல் செய்தனர். மற்றைய இராணுவத்தினரை அனுப்பி உங்கள் இராணுவ பொறுப்பாளரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த இராணுவ பொறுப்பாளரை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர். http://www.tamilthai.com/?p=26098
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது In இலங்கை July 26, 2019 3:58 pm GMT 0 Comments 1028 by : Litharsan இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான…
-
- 6 replies
- 1.2k views
-
-
முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர் - இலங்கை அகதிகள் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/6/2008 7:40:52 PM - இலங்கையில் இருந்து இராமேஸ்வரம் வந்தடைந்த அகதிகளில் ஒருவர் முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுவதாகக் கூறி விசனம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 8 பெண்கள் 14 குழந்தைகள் உட்பட 40 அகதிகள் மன்னாரிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்துள்ளனர். விசாரணைகளையடுத்து இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் அமலன் (வயது22) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் நள்ளிரவு வேளைகளில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்திச் செல்கின்றனர். பின்னர் இவர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அணியணியாய் திரண்டு சிங்களத்தின் முகத்திரையை ஜெனிவாவில் கிழிப்போம் அலைகடலென பொங்கி வாருங்கள். http://youtu.be/y3G-1cPPnL4 http://www.eeladhesa...ndex.php?option
-
- 7 replies
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 00:25 பி.எம்.முர்ஷிதீன் EXCLUSIVE புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார். புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
மகாராணியுடன் விருந்தை முடித்து கில்டன் கோட்டல் திரும்ப உள்ள மனித மிருகம் ராசபக்சேவை வரவேற்க திரண்டுள்ள புலத்துப் புலிகள் படையின் ஒரு பகுதியினர் கில்டன் விடுதி நோக்கி மீண்டும் புறப்பட்டுள்ளார்கள். மல்வுறோ கவுசிற்கு முன்பு கூடி தமிழர்களது எழுச்சிமிகு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் சமநேரத்தில் விருந்து நிகழ்வை முடித்து விடுதிக்கு திரும்பும் போது விடுதி முன்பாகவும் திரண்டு தமிழர்களது விடுதலை வேட்கையினை வெளிப்படுத்துவதற்கு புலத்துப் புலிப்படையின் ஒரு பகுதியினர் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். http://www.eeladhesa...=6202&Itemid=53http://www.eeladhesa...=6201&Itemid=53 ஈழதேசம் இணையம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்! கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். கோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்த சம…
-
- 13 replies
- 1.2k views
-
-
தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம். இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம். இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம்: இலங்கை வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 12:31 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா கூறுகையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், பிரபாகரனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுத்துள்ள கோரிக்கை குறித்து இலங்கை சாதகமாக பரிசீலிக்கும். பிரபாகரனை கைது செய்த பின்னர் இந்தியாவிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அதை பரிசீலிப்போம். இந்தியாவில் ஒரு கொலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் எதிர்த்துள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. பாதுகாப்புச் சபையின் மொத்த உறுப்பினர் நாடுகளான பதினைந்து நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவையாகவும், மேலும் பத்து நாடுகள் இரண்டு வருட உறுப்புரிமை அடிப்படையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளாகவும் உள்ளன. இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் நிபுண…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-