ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு! மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்…
-
- 33 replies
- 4.9k views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எ திர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112520-2014-05-30-13…
-
- 3 replies
- 789 views
-
-
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாண முயலவேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வானது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கமானது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்திருந்தும் கூட அதற்கு தீர்வுகாண இதயசுத்தியான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. இதனால் யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 239 views
-
-
உகண்டாவில்... எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி. உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம். இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் ச…
-
- 0 replies
- 357 views
-
-
இன்று வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதே போன்று பிரதம…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)
-
- 13 replies
- 603 views
-
-
இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் விசாரிக்க நீதிமன்றம் அவசியம் - அமெரிக்கப் பல்கலைக்கழகம் வலியுறுத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:19:56| யாழ்ப்பாணம்] இலங்கை தொடர்பில் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் வா´ங்க னைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள இனத்தின் ஆதிக்கத்தில் இருக்காமல் தனித்த உரிமைகளுடன் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சூழல் இலங்கையில் இது வரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இது இலங்கையில் மீண்டும் இன முறுகல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள தாகப்பல்கலைக்கழகத்தின்அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இ…
-
- 0 replies
- 481 views
-
-
வடக்கு முதலமைச்சர் சிறந்தவர்களை அமைச்சர்களாக்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறந்ததாக தேர்வு செய்ய தவறி விட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடந்த வருடத்திற்காக எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம்…
-
- 0 replies
- 358 views
-
-
Oct 4, 2010 / பகுதி: செய்தி / ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் - அமெரிக்கா இலங்கை தொழில் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சலுகைத் திட்டத்தை வென்றெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இல…
-
- 2 replies
- 848 views
-
-
இலங்கை நிலைமை கவலை தருகின்றது; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் கூறுகின்றன news இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. தென்னிலங்கையில் அளுத்க மவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யஇக்கி, "மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். அத்துடன், நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை'' என்று வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்துத…
-
- 3 replies
- 542 views
-
-
அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன. அருகில…
-
- 16 replies
- 1.8k views
-
-
இராணுவ முக்கியத்துவம் பெறும் கேப்பாபுலவு படை தலைமையகம்…. நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு சென்றார். உலங்கு வானூர்தி மூலம் அங்கு சென்ற நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறாப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்ப்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அறிய முடிகிறது. http://globaltamilnews.net/2018/62477/
-
- 0 replies
- 372 views
-
-
கோட்டா கோ கமயிலிருந்த... எஞ்சிய, கூடாரங்களும் அகற்றம்! கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன. எ…
-
- 3 replies
- 656 views
-
-
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை இரு நாட்களில் கொழும்பு கொண்டு செல்ல திட்டம் http://meenakam.com/?p=11088 தாய்லாந்தில் ஏதிலிகளாக UNHCR இல் பதிவு செய்திருந்த தமிழர்களை கனடிய மற்றும் சிறீலங்கா போலீஸார் கைது செய்துவருகின்றனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 25 பேரை இரு நாட்களில் சிறீலங்கா கொண்டுசெல்லதிட்டமிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தாய்லாந்திலுள்ள தமிழர்களை கனடா மற்றும் சிறீலங்கா போலீஸார் தாய்லாந்து போலீஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து வருகின்றனர். அவர்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் உட்பட பெண்கள் குழந்தைகளும் உண்டு. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கைப்பேசி பாவித்தமைக்கு கொடுமையான தண்டனைக்கு இப்பொழுது உள்ளாக்கப்பட்டுள்ளனர். இரு சதுர அடி இடத்தில் …
-
- 0 replies
- 485 views
-
-
குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர் வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போதே, இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். நினைவிடத்தை அமைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினரைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 2 replies
- 585 views
-
-
10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்! அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார். இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
Jaffna Public Library Comes Under Attack, Again * Presidential Secretariat Allegedly Involved By Dinouk Colombage Pandemonium reigned in Jaffna when the Public Library was stormed by hundreds of unarmed assailants on October 23. Hundreds of people in over 30 buses stormed the library at about 7 pm, says retired Municipal Council Commissioner C.V.K Sivagnanam in a letter to President Rajapaksa, dated October 27. The Sunday Leader sought clarification from TNA M.P. Suresh Premachandran. He corroborated the story as written in the letter by Sivagnanam to the President to be accurate. When questioned on the identity of the assailants he claimed tha…
-
- 1 reply
- 898 views
-
-
பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி வீதம் அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பெறுமதி-சேர்-வரி-இன்று-முதல்-அதிகரிப்பு/175-303368
-
- 0 replies
- 273 views
-
-
சிங்கப்பூர் தமிழ் முரசில் இருந்து -உயிர் பிழைக்க உயிரே பணயம் http://tamilmurasu.asia1.com.sg/25-06-2006...6/TM25PG8-9.pdf http://www.tamilnaatham.com/pdf_files/tami..._2006_06_25.pdf
-
- 0 replies
- 1.7k views
-
-
பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இரட்டைவேடம்! - அரசாங்கத்தைச் சாடுகிறார் தயான் ஜெயதிலக [Wednesday 2014-07-23 07:00] பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இலங்கை அரசாங்கம் முரண்பாடாக நடந்து கொள்வதாக ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக, இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்க…
-
- 0 replies
- 586 views
-
-
ஸ்ரீல.சு.க. வினரை இணைத்து மக்கள் சேவைக்கான செயற்திட்டம் ஆரம்பம் : ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (15) பிற்பகல் ஜன…
-
- 0 replies
- 330 views
-
-
யாழ்.பல்கலை மாணவர் கொலை வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். இந்த நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் தி…
-
- 0 replies
- 243 views
-
-
By T. SARANYA 20 SEP, 2022 | 05:02 PM தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திரு…
-
- 0 replies
- 256 views
-