ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
அநுராதபுரம் சிறை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்! [ பிரசுரித்த திகதி : 2011-02-05 06:48:47 AM GMT ] அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதிகள் அனைவரும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலை நீரிழ் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்தார். இதன்படி போகம்பர வாரியபொல கொழும்பு புதிய மகசின் வெலிக்கடை மற்றும் பல்லேகலை ஆகிய சிறைச்சாலைகளுக்கு 1200 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். tamilulakam.com
-
- 0 replies
- 854 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தம்மிடம் தெளிவுபடுத்தியிருப்பதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று தெரிவித்திருக்கின்றனர். பி.பி.சி. தமிழோசையுடனான பிரத்தியேக பேட்டியின்போது கருத்து வெளியிட்ட இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோவினூர் ஓமர்ஸன், நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் இதனைத் தம்மிடம் தெரிவித்ததாக இன்று கூறினார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதி கூறிய தமிழ்செல்வன் புலிகளின் இந்த உறுதிப்பாட…
-
- 0 replies
- 780 views
-
-
வைகோவின் மனு ஏற்பு தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பு சரிதான் என மத்திய தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அத்துடன் தன்னையும் விடுதலைப்புலிகள் தரப்பாக வாதாட அனுமதிக்குமாறு இம் மனுவில் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைகோ வழக்குக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. http://www.valampurii.com/online/v…
-
- 0 replies
- 569 views
-
-
தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய (ஆர்.யசி) வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர்…
-
- 2 replies
- 751 views
-
-
விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சரணடையக்கோருகின்றனர் படையினர் பாதுகாப்பு, புனர்வாழ்வு தரப்படும் என அறிவிப்பு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சரண் அடையுமாறு பலாலி பாதுகாப்பு நட வடிக்கைத் தலைமையகம் கேட்டுள்ளது. தலைமையகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டு தடைசெய் யப்பட்டுள்ள இயக்கமொன்றில் இணைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த உண்மையை உணர்ந்து 24பேர் இதுவரை சரண் அடைந்துள்ளனர். எந்தவொரு இராணுவ முகாமிலோ, யாழ். சிவில் ஒருங்கிணைப்பு அலுவலகத்திலோ, பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலோ சரணடை…
-
- 7 replies
- 1.7k views
-
-
அனோமாவின் நேர்த்திக்கடன் - சிக்கல்களை எதிர்நோக்கும் மஹிந்த வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:07 தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவினால் யாழ பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெபிலித்தே தேவாலயத்தில் செய்யப்பட்ட நேர்த்திக்கடனால், தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருதுவதாக லங்கா நிவ்ஷ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அங்கு பூஜை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. கதிர்காம முருகன் வல்லியை மணம் முடிப்பதற்காக இலங்கை வந்த வேளையில், கெபிலித்த தேவாலயத்திலேயே வாழ்ந்து வந்ததாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் இனத்தின் காவல்நாய்களாகவே இருக்க விரும்புகின்றோம்:- வடமாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக மனதளவில் கூட நான் எண்ணியிருக்கவில்லை. எம்மை ஆயுத போராட்ட குழுக்களென அவர் அடையாளப்படுத்த முற்பட்டமையாலேயே எம்மிடம் அவ்வாறான 13 உறுப்பினர்கள் உள்ளதாக கூறியிருந்தேன் என கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். தெளிவுபடுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் சில சிங்கள ஊடகங்களும், அரசசார்பு தமிழ் ஊடகங்கள் சிலவும் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நான் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக் நம்பிக்கையில்லா தீர…
-
- 7 replies
- 613 views
-
-
கல்முனை மாநகர சபைக்காக வேட்புமனு தாக்கலுக்கு இடைக்கால தடை! எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதை தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏ.எம்.மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை (19) வரை அமுலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனுவில் பிரதிவாதிக…
-
- 0 replies
- 155 views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு இங்கு இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் பொது பல சேனா கொரியாவில் தொழில் புரியும் எமது இளைஞர்கள் உயிரை பணயம் வைத்தே தொழில் செய்கின்றனர். இத்தொழில்களுக்கு கொரியர்களே செல்வதில்லை என்றும் தெரிவித்தது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மத்திய கிழக்கு, கொரியா மற்றும் இத்தாலி அவுஸ்திரேலியா என வெளிநாடுகளில் பெருந்தொகை இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களுக்கு இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக…
-
- 0 replies
- 434 views
-
-
Saturday, March 5th, 2011 | Posted by thaynilam திங்கள் மூதல் மீண்டும் குமுதினிப் படகு சேவையில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட குமுதினிப் படகு மீண்டும் திங்கட்கிழமை முதல் யாழ் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் மிக நீண்டகாலமாக கடல் வழி போக்குவரத்துச் சேவைகள் குமுதினிப்படகு மூலமே நடைபெற்றுவந்து குமுதினிப் படகு பழுதடைந்த காரணத்தினால் சில காலம் இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட குமுதினிப்படகு நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இப்படகு சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Short URL: http://thaynilam.com/tamil/?p=3451
-
- 0 replies
- 925 views
-
-
புலிகளை அழித்துவிட்டோம் எனக் கொண்டாடிய அரசு இன்று புலம்பெயர் தமிழர்களை புலிகளாகச் சித்திரித்து தமது இனவாத அரசியலை மேற்கொள்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்கும் செயற்பாட்டுக்கு வடக்கு மாகாணசபை இடம்கொடுக்காமையினாலேயே அரசு எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. - இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமது குற்றங்களை மறைக்கவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பையும் மீறி வடக்கில் அரசு ஆக்கிரமிப்பினை மேற்கொள்கின்றது. வடக்கு மாகாணசபை மீதான அரசின் குற்றச்குற்றச்சாட்டினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே வடக்கு மாகாண …
-
- 0 replies
- 517 views
-
-
உண்ணாவிரத யாழ் முஸ்லிம்களின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதா..?? யாழ்ப்பாணத்தில் வசதிகளற்ற நிலையில் மீளக்குடியேறிய தமக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த சில நாட்களாக யாழ் - பொம்மைவெளியில் பகுதியில் உண்ணாவிரதம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், தமிழ் அரசாங்க அதிகாரிகளினால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மேற்கொண்ட இந்த பேராட்டம் யாழ் முஸ்லிம் பிரமுகர்கள் என தம்மை அழைத்துக்கொள்ளும் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கும், தமிழ் அரசாங்க அதிகாரிகளுக்கும் வால் பிடிக்கும் சில யாழ்ப்பாண…
-
- 0 replies
- 949 views
-
-
தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி!! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 413 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை குறித்து பா.ஜ.க.தலைவர்களுடன் மன்மோகன் சிங் ஆராய்வு. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஜஸ்வந்சிங், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர், வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டதா…
-
- 0 replies
- 859 views
-
-
எங்களைப் பிரிக்க வேண்டாம் ஒரே இடத்தில் குடியேற்றுங்கள் நாங்கள் காலா காலமாக வாழ்ந்து வந்த மீரியபெத்த தோட்டத்தைஒரு புதிய பாதுகாப்பான இடத்தில் அமைத்து மீரியபெத்த தோட்டத் தில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றவேண்டும். தயவு செய்து மீரியபெத்த தோட்டத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த எங்களை பிரித்துவிடவேண்டாம் என்று மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டமக்கள் மன்றாட்டமாககோரிக்கைவிடுக்கின்றனர். பாதுகாப்பான இடங்களில் எங்களுக்கு வீடுகளை பெற்றுத் தாருங்கள். மீரியபெத்ததோட்டத்தில் இருந்தமகாமுனிகோயில்,விளையாட்டுமைதானம் உள்ளிட்டஅனைத்தும் எமக்கு…
-
- 1 reply
- 614 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி மற்றொருவர் காயம். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6:30மணியளவில் காவலரணில் இருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீடொன்றினுள் இருந்தே கைத்துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இதன்போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று மாலை 7:45மணியளவில் வவுனியா மறவன்குளம் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் பட…
-
- 0 replies
- 593 views
-
-
ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்னும் எண்ணம் ஏற்படுமளவிற்கு யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் வெகுவாக பாதிப்படைந்து விட்டார்கள். ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் வாழமுடியாது. அதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான …
-
- 0 replies
- 238 views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புதொடர்ந்தும் இயங்குகின்றது - அமெரிக்கா Published By: RAJEEBAN 28 FEB, 2023 | 10:21 AM விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழீழவிடுதலைப்புலிகள்தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்காதெரிவித்துள்ளது. அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம்குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 இல்இலங்கை அரசாங்கத்தால்இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின்சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும…
-
- 11 replies
- 980 views
- 1 follower
-
-
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இன்று முதல் வாசிப்புக்காக சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதி மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் மத்திய வங்கியால் தற்போது நிறுவப்பட்டுள்ள நாணய சட்டச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட துணை விடயங்களுக்காக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய சட்டமூலத்தின்படி, மத்திய வங்கியின் சுயாட்சி எல்லா நேரங்களிலும் மதிக்கப்படும் மற்றும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அல்லது ஆளும் குழு மற்றும் நாணயக் கொள்கை சபையின் ஏனைய உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியின…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
காலியில் நடைபெற்ற அபிவிருத்தி சபை 2007 ஆண்டிற்கான இன்றைய மூன்றாவது அமர்வில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது. மகிந்த சிந்தனையின் கீழ் வரும் பத்து ஆண்டுகளுக்கான அபிவிருத்திக்கான 09 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 4.5 பில்லியன் டொலர்களை வழங்க உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. இந் நிதி பெருந் தெருக்கள்,அனல் மின் நிலையம், துறைமுகம் போன்றவற்றின் அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய கலாநிதி சரத் அமுனுகம இலங்கையல் சமாதானம் வரும் வரை அபிவிருதிகளை தள்ளிப் போட முடியதெனவும், அபிவிருத்திகள் மிக விரைவில் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகளையும் உலக நாடுகளையும் சேர்ந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
'விளையாட்டு'க்காக இந்தியாவுடன் சண்டை பிடிக்கும் இலங்கையும் 'தடவி'க் கொடுத்துச் சமாளிக்கும் இந்தியாவும் [Thursday, 2011-04-14 12:11:22] இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவ பயிற்சிகளுக்காக மே 5 ஆம் திகதிக்கு முன் திரும்பிவர வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு உத்தரவிடுமாறு இலங்கை கிரிக்கெட் சபையை தான் அறிவுறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கை அணி மே 10 ஆம் திகதி இங்கிலாந்துக்குப் புறப்படவுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டிகள் மே 28 …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவுப் பணியகத்திலும் பணியாற்றும் இவர், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவே, இங்கு வந்துள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக அவர், சிறிலங்கா அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற மாரி யமாஷிடா, சி…
-
- 0 replies
- 140 views
-
-
புலிகளை ஒழித்த முப்படையினரால் எலிகளை ஒழிக்க முடியாது திண்டாட்டம்: பலம்வாய்ந்த செயலணி முக்கியம் என்கிறது அரச தமிழ்ப் பத்திரிகை [Wednesday, 2011-04-20 03:35:54] புலிகளை ஒழித்த இலங்கையின் முப்படையினரால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் எலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கையின் அரச தமிழ் பத்திரிகையான தினகரன் இன்று கவலை தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.அது மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் நாட்டில் உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி, எமது தேசிய பொருளாதாரத்தை சின்னாபின்னப்படுத்துவ தற்கு எடுத்த முயற்சிகளைப் போன்று, இன்று எங்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கு வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான பணம் சேமிப்பில் உள்ளதாக ஸ்ரீ லங்கா பிரதமர் தெரிவித்து உள்ளார். அதே நேரம் இங்கே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வருமானம் இல்லாமல் நுண்கடன் போன்ற வழிகளை நாடி பின்னர் தற்கொலை செய்யும் நிலைக்கும் போகிறார்கள். இந்த வங்கியில் உள்ள பணத்தை எப்படி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்? பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டில் இடும் சாத்தியம் இருந்தாலே சேமிப்பில் வைத்தவர்கள் பணத்தை எடுத்து தருவார்கள். ஆகவே இவ்வாறாக, பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை என்று அடையாளம் காண யாழ் களம் உதவுமா?
-
- 6 replies
- 1.3k views
-
-
பெப்ரவரி 7, 2007 வரையிலான சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள், காணமற்போனமை தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு விடுத்த இறுதி அறிக்கை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 49 பேர் கடத்தப்பட்டு காணமற் போயுள்ளனர், 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் தவிர்ந்து) இடம் பெற்ற சம்பவங்கள் Latest Report of Disappearances, Abductions, Killings in South (LeN-2007Feb12,3.45pm) Civil Monitoring Ccmmission had release the latest report of Extra Judicial Killings, Abductions and Disappearances in South. This list is up dated last February 07th, 2007. 12 Killed, 49 Abducted-Disappeared, 14…
-
- 2 replies
- 1.9k views
-