Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சிப் பகுதியில் இரவு வேளைகளில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கரடிப் போக்குச் சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடைப்பட்ட ஏ9 வீதிப் பகுதி யில் இரவில் கூடும் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் அந்த வீதியால் இரவு நேரத்தில் பயணிப்போர் அச்சத்துடனேயே செல்வதாகக் கூறப்படுகின்றது. இந்த ஏ9 வீதிப் பகுதி தற்போது மக்கள் வசிக்கும் வீடுகள் அற்ற உடைந்த கட்டடங் களும் பற்றைகளும் வயல் வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. வீதியும் இடை யிடையே குன்றும் குழிகளைக் கொண்டதுமாக உள்ளதுடன் இரவில் வீதி விளக்குகள் இன்றி இருள் மண்டிக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வீதியில் இரவில் கூடும் இளைஞர் குழு வீதியால் துவிச்சக்கர வண்டி, உந…

  2. 16000 இலங்கை அகதிச் சிறுவாகள் நாடற்றவர்களாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சிறுவர் சிறுமியருக்கு எந்தவொரு நாட்டினதும் குடியுரிமை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்திய அகதி முகாம்களில் பிறந்த சிறுவர் சிறுமியர் பிறந்து ஒராண்டு காலத்திற்குள், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மூன்று தசாப்த காலத்தில் 24000 சிறுவர் சிறுமியர்கள் பிறந்துள்ள போதிலும், 8000 சிறுவர் சிறுமியர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய சிறுவர் சிறுமியர்கள் பற்றிய விபரங்களை பதிந்து அவர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஈழ அகதி புனர்வாழ்வு அமைப்பு கோரியுள்ளது. முன்ன…

    • 2 replies
    • 430 views
  3. யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வருகை போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டு வருட திட்டமொன்றை அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்தார். இத்திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா ($140,000) வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீளவும் பெறமுடியாத சிதைவடையும் நிலையிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட மட்பாண்டங்கள், பித்தளை மற்றும் செப்பு …

    • 0 replies
    • 400 views
  4. பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம் கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1341143

  5. மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச ஆணைக்குழு அவசியம் ` இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்போது குரல் எழுப்பியிருப்பவர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகாரத் துணை அமைச்சகத் தூதுவர் ரிச்சர்ட் பௌச்சர் ஆவார். இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்பதற்கும் விசாரிப்பதற்கும் சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைக்கு அமெரிக்காவின் முழு ஆதரவை ரிச்சர்ட் பௌச்சர் வெளியிட்டிருக்கின்றார். சட்ட ரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக…

  6. கட்டுநாயக்கா மீதான முதலாவது தாக்குதல் வழக்கில் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமறு கொழும்பு மேல் நீதிமன்றம் மூவருக்கு நேற்று புதன்கிழமை அழைப்பாணை பிறப்பித்தது. புலிகளால் 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வழக்கின் எதிரிகள் ஐவரில் ரட்ணசிங்கம் புஸ்பகுமார், விக்டர் அல்பிரட் டொமினிக், சுப்பிரமணியம் தவராசசிங்கம், நாகேந்திரம் நாகேந்திரகுமார் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்தாவது எதிரியான த. ஜெயலெட்சுமி தலைமறைவாகியிருக்கிறார் …

    • 1 reply
    • 1.7k views
  7. அணிசேர நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பல இலங்கை குறித்து ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு 22 நாடுகள் ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஐநா நிபுணர் குழு அறிக்கையை தோல்வியடையச் செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8386:----22---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  8. ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி FEB 17, 2015 | 12:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுவது செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா இன்னமும் உறுதியாக உள்ளது. சிறிலங்காவில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மை கண்டறியப்படுவது, நல்லிணக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.…

  9. விஸ்வமடுவில் கிடந்த 35 ஆயிரம் சடலங்கள் – மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் FEB 23, 2015 | 0:21by புதினப்பணிமனைin செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே எனக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே. போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு எ…

  10. வடக்கிலும் பெருந்தொகை ஆயுதங்கள் நேற்றுப் படையினரால் மீட்பு [Friday, 2011-07-15 17:07:11] கொக்காவில், வன்னிவிளாங்குளம், உடையார் கட்டுகுளம் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான ஆட்லறிகளையும் வெடிப்பொருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 120 மி.மி. மோட்டார் குண்டுகள் 1555, 12.7 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 27,000 தோட்டாக்கள், 7.52 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 15,000 ஆகியனவும் இவற்றில் அடங்கும். நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின்போது, 81 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் 54, 86 பௌண்டர் குண்டுகள் 3000, 130 மி.மீ ஏவுகருவிகள், ஆகியன கைப்பற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல கூறினார். …

  11. மைத்திரி, கோத்தா கொலைச் சதி நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை கொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, ட்ரோன் கமரா உள்ளிட்ட அதி விஷேட வசதிகளைக் கொண்ட வாகனம் ஒன்றினைப் பெற்று அதனை இரகசியமாக பயன்படுத்தியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநா…

  12. நாளை சென்னை வரும் ஹிலாரி கிளிங்டன் முதல்வர் ஜயலலிதாவை சந்திப்பார். இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் பற்றி பேசுவார். அதில் இலங்கைப் போரில் நடந்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதால், அதற்கு எதிராக பன்னாட்டு விசாரணையை நடத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என்று முதல்வர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான செய்திகள் வருமாறு; டெல்லி வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை மதியம் சென்னை வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசுவதும் உறுதியாகியுள்ளது. . நாளை காலை டெல்லியில் இருந்து சி…

  13. தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், உலக தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறையில் தற்போது உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதன் ஊடாக இலங்கையின் அரசியலில் நீண்டகால நலனை எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமை முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. எனினும் தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந…

  14. புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்ற 2180 கோடி ரூபா செலவு [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 01:31 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஏழு கப்பல்களின் சிதைவுகள் உள்ள போதும் அவற்றில் ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றவே உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்ற இந்தியா 2180 கோடி ரூபாவை செலவிடவுள்ளது. ஆனால் ஏழு கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்படுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சீ டான்சர் என்ற கப்பல் உள்ளடக்…

  15. குடாநாட்டில் பாடசாலைகள் முழு அளவில் இயங்கின குடாநாட்டில் நேற்றுப் பாடசாலைகள் முழு அளவில் இயங்கின. அனேகமாக நூறு வீத மாணவர்கள் பாடசாலை களுக்குச் சமுகமளித்தனர். கடந்த பதினொரு நாள்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பு போராட்டத்தைக் கைவிட்டு பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசா லைகளுக்குச் சென்றனர். மாணவர்கள் மூவர் இரவு வேளையில் கடத்திப் பட்டமை, மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக் கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாட சாலை மாணவர்கள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டுவந்தனர். இந்தப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற் காலிகமாக நிறுத்துவதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை மூலம் அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் பகிஷ்கரிப்பு போராட் டத்தைக் கைவிட்டு, பாடசாலைகளுக்கு நேற்று முழு எண்…

  16. நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில் news மன்னார் பொது விளை யாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப் பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த நீர்த்தாங்கி சிறு சிறு துண்டு களாக உடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கின்றது.அத்துடன் இதன் சிமெந்து மேற்பூச்சுக்கள் க…

  17. இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச குறித்த கட்சியிலேயே எதிர்வரும் பொதுதேர்தலில் களமிறங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னமாக கங்காரு உள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்து இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்த போது தற்போதைக்கு மயில் அல்லது புறா சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்த…

    • 3 replies
    • 1.2k views
  18. இலங்கை அர­சி­ய­லில் உல­கப் பிர­சித்தி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரி­யாக உரு­வெ­டுத்­த­வர் ஜே.ஆர் ஜெய­வர்த்­தன. இவர் ஒரு முழு­நேர அர­சி­யல்­வாதி. தனது மூளைப்­ப­லத்­தால், உள்நாட்டு அர­சி­யல், பிராந்­திய அர­சி­யல், பன்­னாட்டு அர­சி­யல் என எல்லா மட்­டங்­க­ளி­லும் தனது ஆளு­மை­யைச் செலுத்­தி­ய­வர். உயர் கல்வி, உயர் சாதி மதிப்பு, பண பலம் என எல்­லாம் கிடைக்­கப் பெற்ற நபர். அவ­ரி­ட­முள்ள மிக முக்­கி­ய­மான விட­யம் அல்­லது மற்­ற­வர்­கள் விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம் அவ­ரி­டம் நூறு ரூபா கூட ஊழல் இல்­லா­ததே. இந்த நப­ரு­டன் ஒப்­பி­டக்­கூ­டிய ஒரு தமி­ழரோ, முஸ்­லிமோ இல்லை. இந்­த ஊழல் விட­யத்­தில் மிக­வும் கண்ணி­ய­மான ஒரு­வ­ராக இன்­று…

  19. அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்! எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும்.ஆகவே இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1352882

  20. கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…

  21. நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம். http://www.dailymirror.lk/67415/president-s-brother-injured-in-attack

  22. சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள் இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு வரவுள்ளன. நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்கள், வரும் 7ஆம் நாள் வரை இங்கு தரித்து நிற்கும். ‘சிஜிஎஸ் சமர்’ மற்றும் ‘சிஜிஎஸ் ஆர்யமான்’ ஆகிய ரோந்துக் கப்பல்களே கொழும்பு வரவுள்ளன. இந்தக் கப்பல்கள் காலி துறைமுகத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவில் இந்திய, சிறிலங்கா மாலைதீவு கடலோரக் காவல் படைகள் கடந்த 25 ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை ‘டோஸ்ரி’ என்ற கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டிருந்தன. இதில் பங்கேற்ற …

  23. பாதீட்டை திருத்தம் செய்யுமாறு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.. யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமைத்தில் இன்று மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த முன்னணியின் பிரதிநிதிகள், வெளிநாடு சென்று படித்து வந்தால் தான் யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றி தெரியவரு…

  24. 27 OCT, 2023 | 09:41 PM ( எம்.நியூட்டன்) யாழ் மாவட்டத்தில் எத்தனை மதுபான சாலைகள் உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்தார். மதுவரி திணைக்களத்தின் செயற்பாடுகள் செயலற்று இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஞன் இராமதாதன் உடுப்பிட்டியில் சட்டவிரோதமாக வீடு ஒன்றில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட…

  25. 19 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/04/09/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

    • 0 replies
    • 380 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.