ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142912 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,…
-
- 4 replies
- 820 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறையிலுள்ள அதன் பிராந்திய அலுவலகங்களிலும் பார்வையிட முடியும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாகக் கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் மூலமாகப் பெறப்பட்டு, பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காணாம…
-
- 0 replies
- 397 views
-
-
பொத்துவில் ஊறணி மக்களின் காணி விரைவில் கிடைக்கும்: கருணா அம்மான் (காரைதீவு நிருபர் சகா) பொத்துவில் 60ஆம் கட்டை ஊறணி மக்களின் நீண்டகால பிரச்சினையான தாம் குடியிருந்த காணிகள் மிக விரைவில் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு நேற்று அங்கு விஜயம் செய்த பிரதமரின் மட்டு.அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) மக்கள் மத்தியில் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊறணி 60ஆம் கட்டை காணிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக கருணா அம்மான் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் இ.வ.கமலராஜன் ம…
-
- 3 replies
- 456 views
-
-
இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! “எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று(26) தெரிவித்தார். வரவு செலவுக் கூட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகாவலி அபிவிருத்தி நடவடிக்கைகள் இராணுவத்தினருக்கு ஒத்த மாதிரியே இருக்கின்றன. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வவுனியா, முல்லைத்தீவில் 10 சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. வனவளங்கள் …
-
- 3 replies
- 706 views
-
-
சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/94876
-
- 52 replies
- 6.2k views
-
-
ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் (23.11.2020) முன்னிலையாகி அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் வழங்கினார். சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு தொடர்பான முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கையில், சிறீலங்கா ஹிறா பவுண்டேஷன் இலங்கை அரசாங்கத்தில் சமூக சேவை திணைக்களத்திலே உத்தியோகபூர்வமாக 1993 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், இந்த அமைப்பு இந்த நேரம் வரையிலும் யாராலும் ரத்து செய்யப்படவில்லை எனவும், இந்த அமைப்பை பாராளுமன்றத்தில் கூட்டிணைத்து ஏனைய அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்வதற்கு மு…
-
- 3 replies
- 586 views
-
-
மாவீரர் நாளையடுத்து தமிழர் தாயகத்தில் பாதுகாப்பு தீவிரம்: மூலை முடுக்கெல்லாம் படைகள் குவிப்பு.! மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வழமைக்கு மாறாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மூலைமுடுக்கெல்லாம் அரச படைகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் நாளை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொதுவெளியில் நடத்த அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்தக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடக்கு, கிழக்கில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பல்வேறு பகுதிகளிலும் ஏற…
-
- 1 reply
- 773 views
-
-
இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். மேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பி…
-
- 2 replies
- 543 views
-
-
முல்லைத்தீவு துணுக்காய் ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதியாகும். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139364/IMG_1868.jpg இந்த நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கும் பொலிஸார் தடை விதித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் நினைவேந்தல் நடத்தினால் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் அஞ்சலி நிகழ்வை கூட விட்…
-
- 0 replies
- 336 views
-
-
மாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும் -கே.எல்.ரி. யுதாஜித்போரிலே கொல்லப்பட்ட வீரர்கள், அஞ்சலிக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருதரப்பினராலும் அங்கிகரிக்கப்படுவதே நாகரிகமடைந்த எல்லா உலக நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது. இந்த அடிப்படையில் மாவீரர் தினத்துக்கான அஞ்சலி நிகழ்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பிலான தடைவிதிப்பு விடயங்கள் குறித்து கருத்து வெளியிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,http://static2.tamilmirror.lk/assets/uploads/image_7…
-
- 1 reply
- 1k views
-
-
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இந்த நாட்டின் நற் பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். போர்ச்சூழலில்கூட எங்களுடைய ஊடகவியலாளர்கள…
-
- 0 replies
- 257 views
-
-
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு தடை by : Dhackshala பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பங்கள் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, இன்றைய தினத்திற்கு கட்டளைக்காக வழக்கு திகதியிடப்பட்டது. அதன்…
-
- 0 replies
- 340 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்துவைப்பு யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கியின் அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் மின்கல ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், ஏகெட் திட்டத்தின் நிதிப் பணிப்பாளர் க.கனகரட்ணம்…
-
- 1 reply
- 451 views
-
-
எத்தனை தடைகளை அரசு விதித்தாலும் தமிழர்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது - தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக கோரிக்கை எத்தனை தடைக்கட்டளையை அரசு விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது எனவும், மக்கள் தமது இல்லங்களில் மாலை 6.05 ற்கு நினைவு கூறுமாறு, தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு மாவீரர் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் , வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடியிருந்தனர். குறித்த கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.…
-
- 0 replies
- 416 views
-
-
பொறுப்புக் கூற அரசு மறுத்தால் விளைவுகள் விபரீதமாகும் - பாராளுமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை.! 2009-ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து பதினொரு வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தான்தோன்றித்தனமாக அரசாங்கம் பின்வாங்க முடியாதென பாராளுமன்றில் இன்று பேசிய சுமந்திரன் எச்சரித்தார். சர்வதேச ஒப்பந்தங்களும், உறுதிமொழிகளும் குறித்த காலத்தில் பதவியிலிருக்கும் அரசாங்கங்களுக்கு மாத்திரம் செல்லுப்படியானவையல்ல. அவை அரசொன்றிற்குச் சொந்தமானவை. ஆகவே, இலங்கை அரசென்ற வகையில் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கும் உறுதிமொழிகளை ஆட்சியிலிருக்கும் எந்தவொரு அரசாங்கமும் தட்டிக்கழிக்க முடியாது. அவற்றை பூர்த்தி செ…
-
- 3 replies
- 548 views
-
-
இறையாண்மை என்பது பெரும்பான்மைக்கு மாத்திரம் சொந்தமானதல்ல
-
- 0 replies
- 360 views
-
-
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு சர்வதேச ரீதியாக எந்தவொருப் பிரச்சினையும் ஏற்படாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தால்தான் நாடு கடந்த காலங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அவர்கள் அன்று இணை அனுசரணை வழங்கினார்கள். இது உலகிலேயே எங்கும் நட…
-
- 1 reply
- 590 views
-
-
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது . றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும். அஸீம் கிலாப்தீன் அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமது தேசியத்தலைமை றிஷாத்பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். முன்னாள்…
-
- 2 replies
- 933 views
-
-
வடக்கில் மாவீரர்நாள்; தெற்கில் பிக்குகளுக்கு விசாரணை – கொதிக்கிறது சிங்கள ராவய! நாட்டை அழித்த புலிகளின் மாவீரர் தினத்தை வடக்கில் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு அறிக்கைக்காக பௌத்த பிக்குவிடம் 24 மணித்தியாலத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவு அறிக்கை பெறுகிறது. இந்த நாட்டில் ஒரே சட்டமா நடைமுறையில் உள்ளது என கேட்க விரும்புகிறோம். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது சிங்கள ராவய அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெஹிவளையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ” நாட்டை வழிநடத்தும் தவறான விடயங்களைச் சுட்டிக் காட்டுவது பிக்குகளின் கடமை. அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்களை அடக்கப் பார்க்கிறார்கள். ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறார்கள். ஆனா…
-
- 1 reply
- 421 views
-
-
மாவீரர்களுக்காய் வீடுகளில் 06.05கு தீபச்சுடரேற்றுவோம் – தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை! எத்தனை தடைகளை அரசு விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது. கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.5 மணிக்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என்று ணதமிழ் தேசிய கட்சிகள் கூட்டடாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் (25) வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடியிருந்தனர். குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்ட கோரிக்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.…
-
- 0 replies
- 485 views
-
-
“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன் யாழ் நீதிமன்றில் மன்றுரைத்திருந்தார். இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு, மீம்ஸ்கள் மற்றும் ரைட்டப்கள் மூலமாக இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் கூட பிரசாத் பெர்னாண்டோக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையன அரச சட்டவாதி, “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ் பொலிஸ் …
-
- 1 reply
- 942 views
-
-
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.11.2020) மட்டக்களப்பிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஏறாவூர் புன்னக்குடா தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கான இடத்தினை பார்வையிட்டதுடன் வாழைச்சேனை காகிதாலைக்கும் சென்று பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ள குடி நீர் விநியோக திட்டம் தொடர்பாகவம் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். மேற்படி அமைச்சினால் பாரிய புடவை நூல் உற்பத்தி கைத்தொழில் பேட்டை ஒன்றினை 600 மில்லியன் யூ.எஸ் டொலர் செலவில் நிர்மாணித்து அதற்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் (3050) மூவாயிரந்து ஐம்பது மில்லியன் ரூபா செலவில் செங்கலடி எல…
-
- 1 reply
- 446 views
-
-
எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்து…
-
- 23 replies
- 2.4k views
- 1 follower
-
-
மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம் http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-696x387-1.jpg மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டள…
-
- 1 reply
- 647 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது என சபையில் ஆவேசமாக தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர. மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சட்டத்தை மதிக்கும், சட்டத…
-
- 3 replies
- 760 views
-