ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
33 குடும்பங்களை வெளியேற அறிவுறுத்து உடுப்பிட்டி,ஏப்.9 பருத்தித்துறை, வெளிச்சவீட் டுப் பகுதியில் வசித்துவந்த 33 குடும்பங்களையும் வெளியேறு மாறு படையினர் அறிவுறுத்தியுள் ளனர். அந்த மக்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் படையினர் அவர்களிடம் தெரிவித்துள்ள னர். ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட இம்மக்கள் தற்காலிக குடி யிருப்புக்களை அமைத்து வெளிச்ச வீட்டுப் பகுதியில் வசித்துவந்த னர். uthayan.com
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கியுள்ளதாகவும் நாட்டில் பொறுப்புள்ள ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இதனை உருவாக்கி உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்குச் சென்ற இரு பொதுமக்கள் சிறீலங்கா ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை வேட்டைக்காகச் சென்ற இவர்கள் கிளைமோர் தாக்குதலில் சிக்கிப் பலியாகினனர். இவர்களுடன் சென்ற நாய் காயங்களுடன் வீடு திரும்பியது. நாயில் காயங்களைக் கண்ட உறவினர் வேட்டைக்குச் சென்றவர்கள் பார்ப்பதற்காக நாயையும் கூட்டிக்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேடுதலில் போது வேட்டைக்குச் சென்றவர்கள் உயிரிழந்து சடலங்காளாகக் காணப்பட்டுள்ளனர். அத்துடன் வேட்டைக்குச் சென்ற இரு நாய்களில் ஒன்றும் இறந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் போர் நிறுத்தக் கண்காணிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
“எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையும் சீரழிக்க கங்கணம் கட்டுகிறார்கள்” வடமாகாண அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களே,சுற்றுலாப் பணியகத்தின் இயக்குநர் சபையில் அங்கத்துவம் பெறுகின்ற துறைசார் விற்பன்னர்களே, உயரதிகாரிகளே மற்றும் இங்கே கூடியிருக்கின்ற அமைச்சுக்களின் செயலாளர்களே, திணைக்களத் தலைவர்களே, உத்தியோகத்தர்களே! வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வட மாகாணசபையின் கனவு நனவாகின்ற ஒரு நல்ல நாள் இன்று. 2013ல் வடமாகாணசபை தனது நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து வட பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவாவில் உரிய முயற்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மனித உரிமை காப்பகமும் இது தொடர்பில் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கதான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
திருப்பூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் [படங்கள்] திருப்பூரில் கொட்டும் மழையிலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் சீமான் 7.30 மணியிலிருந்து 9 மணி வரை கடும் மழைக்குள் உரையாற்றினார். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் காணொளிகளும் செய்திகளும் இணைக்கப்படும்…. http://www.meenagam.org/?p=8033
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்! எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன. இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதியின்... முக்கிய கோரிக்கையினை, நிராகரித்தார் சட்டமா அதிபர்! கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு, ஜனாதிபதி முன்வைத்த யோசனையை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்ததாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துளார். அத்துடன், ஜனாதிபதியின் யோசனைக்கு சட்டமா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1214257
-
- 10 replies
- 1.2k views
-
-
யாழ் கன்னியாஸ்த்திரிகளால் பராமரிக்கப்பட்டு வந்த வவுனியா நெல்லுக்குளத்தை சேர்ந்த மனனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கிறார். அவருடைய சடலம் நாச்சிமார் கோயில் தேர்வண்டியருகில் கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இராணுவம் அதிகம் நடமாடுவதாக இப்பகுதி வாசிகள் கூறியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் சில பெண்ணுரிமை இயக்கங்கள் வெளிப்படையாக இது இராணூவத்தின் செயல்தான் என்று கண்டித்திருக்கின்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொலைதொடர்பாக ஆர்ரப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் இது மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட கூட்டுப்பாலியல் வன்புணர்வெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் அளித்துள்ள சாட்சியம் ‘அற்பத்தனமான’ நோக்கம் கொண்டது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “அந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டவர். அவரது கவலைகள் என்னவென்று நாம் அறிவோம். அவரது நோக்கம் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவது தான். அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், எமது கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.” என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர்; தாக்கல் செய்திருந்த மனு இன்று (16) வாபஸ் பெறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் மூவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்ற தடை உத்தரவொன்றை நீதிமன்றம் விதிக்க வேண்டுமென குற்றத் தடுப்புப் பொலிசார் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகவிருந்த போது இவர்கள் மூவருக்கும் எதிராக தம்மால் தாக்கல…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த மாதம் அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர். குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரி வித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர். இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆனி 2, 2013 தமிழினத்தை வேரறுத்து வரும் மகிந்த கும்பலின் உறுப்பினன் நாமல் ராஜபக்சவின் காலில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தமிழ்த்தாய் ஒருத்தி நேற்று விழுந்து அழுத காட்சி அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணிலின் காலில் ஒருதாய் விழந்து அழும் காட்சிஇது சிங்கள காடைகளின் கால்களில் விழுந்தழும் எம் தமிழ்தாய்களின் இந்த நிலைகண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே… http://urumal.com/archives/நெஞ்சு-பொ
-
- 2 replies
- 1.2k views
-
-
இராணுவத்தில் பாரிய மாற்றம் வீரகேசரி நாளேடு இராணுவ கட்டளை தளபதிகள் பலரும் இடம் மாற்றப்பட்ட நிலையில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு; வன்னிப்பகுதிக்கான புதிய பாதுகாப்பு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிப் பகுதியின் தற்போதைய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளர் பிரிவையும் கண்காணித்து வந்த இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெயசூரிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
பூநகரியூடான யாழ்-கொழும்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்-அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க வீரகேசரி இணையம் 11/23/2008 1:09:37 PM - புலிகளிடமிருந்து அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தையும் தென்னிலங்கையையும் இணைக்கும் வீதியைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் அடுத்த கட்டமாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில வெளிநாட்டுசக்திகள், உள்நாட்டில் சிலரை உருவாக்கி வருவதுடன் லிபியாவில் போன்று இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி எடுத்து வருவதாக சிறீலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனநாயக வழிமுறைகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்தஅரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்பதனை அந்த வெளிநாட்டு சக்திகள் நன்கு உணர்ந்துகொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தத் தீய சக்திகள், லிபியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தும்நோக்கில் அந்நாட்டைச் சேர்ந்த சில சக்திகளுக்கு பணத்தை வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த வெளிநாட்டு சக்திகள் ஏற்படுத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி இன்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச்சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது யாழ். குடாவில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள மர்ம மனிதா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சங்கரி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை கிறிஸ் பூதத்திற்கு எதிராக நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவே இந்த திடீர் சந்திப்பு என நம்பப்படுகின்றது.. யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதர்கள் விவகாரத்தைக் கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் ஒன்றின் முன்றலில் தமிழ்க் கட்சிகளின் (ஈ.பி.டி.பி. தவிர்ந்த) பிரதிநிதிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, இந்…
-
- 5 replies
- 1.2k views
-
-
புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்புSEP 09, 2015 | 1:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் அதிகாரியான இவர் முன்னர் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் செயலராக பணியாற்றியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவை நீக்கி விட்டு, பி.எம்.யூ.டி…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் நடவடிக்கைகளை கட்டார் நாட்டில் தடைசெய்யுமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. http://www.thepeninsulaqatar.com/Display_n...00706132220.xml http://www.gulf-times.com/site/topics/arti...mp;parent_id=56
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பிலிபிட்டி கல்மில்லார பிரதேசத்தில் இடம்பெற்ற கைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டு பேர் ஆண்கள் எனவும், இரண்டு பெண்கள் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கிராம மக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைக் குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx
-
- 3 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன் [Friday, 2013-01-04 11:47:38] "நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக வரம்பிற்குள்ளேதான் நடைபெறுகின்றன. அத்துடன் நமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒத்த பல அமைப்புக்கள் ஆரோக்கியமான முறையில் இயங்கிவருகின்றன. எனவே நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அறிதலுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். எனினும் இலங்கை அரசாங்கத்தோடு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நாட்டிற்குள் நின்று செயற்ப…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா உரையில் இடம்பெற்றவை: - கௌரவமான அமைதியையை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படையான சூழ்நிலைக்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் - உண்மையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் அமைதி உருவாக்கப்பட வேண்டும். - அமைதி முயற்சிகளில் உள்ள ஈடுபாட்டினால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டை மகிந்த கூட்டினார். மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. - முன்னைய ஜெனீவாப் பேச்சுக்களுக்கும் யூன் ஓஸ்லோ பேச்சுகளுக்கும் விடுதலைப் புலிகள் வர மறுத்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவில்லை. - தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்க மகிந்த ராஜபக்ச …
-
- 1 reply
- 1.2k views
-
-
டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை [20 - March - 2008] `டாக்டர் சவரக்கத்தி" (டாக்டர் தெலி பிய்ய) என்ற வார்த்தையால் செவ்வாய்க்கிழமை சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் செவ்வாய்காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தொழில் அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கம் நடைபெற்றது. எனினும் அவர்களுக்கிடையிலான வார்த்தைப் பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாதெனவும், அவை ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படாதென்றும் சபாந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழகம் வந்த சிங்கள எம்.பிக்கு எதிர்ப்பு - தாக்குதல் ( 29 படங்கள் ) சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா தமிழகம் வந்தார். சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார். அங்கேயே அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தங்கியிருக்கிறார். இந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். படங்கள் : ஜே.டி.ஆர். நன்றி: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92646
-
- 9 replies
- 1.2k views
-