நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? தேவையான பொருட்கள்: கருவாடு - 10 துண்டுகள் பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக…
-
- 11 replies
- 4.4k views
-
-
"நாங்கெல்லாம் எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டோம்ல" என வீட்டில வசனம் பேசிட்டு இருக்கிற ஆளு நான். எத்தனை தான் துணிவாக இருந்தாலும், பெரிய ரௌடி போல கதை பேசிட்டு திரிந்தாலும்; பாகற்காய்க்கு பயந்து ஓடிய காலம் உண்டு. அதிலும் சின்ன வயதில், அடிக்கடி கனடாவில் இருந்து எங்களை பார்க்க ஒஸ்திரேலியாவிற்கு வரும் பெரியம்மா என்றாலே பயம் தான். சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. இனி இந்த பாகற்காயை வைத்து நான் பண்ணிய வீரகாவியத்தை பார்க்கலாம்: தேவையானவை: பாகற்காய் 1 வெங்காயம் 1 மிளகாய் 2 தேசிக்காய் புளி …
-
- 10 replies
- 4.4k views
-
-
தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள் அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். ``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே! ரபடி தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர் சர்க்கரை - 80 கிராம் (அல…
-
- 7 replies
- 4.4k views
-
-
லண்டன் வற்றல் குழம்பு தேவையானப் பொருட்கள் பீன்ஸ் - 8 சின்ன கத்தரிக்காய் - 5 பெரிய வெங்காயம் - 3 வாழைக்காய் - 1 செளசெள - ஒன்று வெந்தயம் - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி புளி தண்ணீர் - 2 கப் கசகசா - 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அளவாக உப்பு - அளவாக எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பால் - ஒரு கப் கடுகு - ஒரு தேக்கரண்டி இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம் கத்தரிக்காய், பீன்ஸை, வாழைக்காய், செளசெள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெர…
-
- 16 replies
- 4.4k views
-
-
வனிலா ஐஸ்கிறீம் தேவையானப் பொருட்கள் கட்டிப்பால் - 1/4 கப் பால்மா - 1/2 கப் தண்ணீர் - 3/4 கப் வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி செய்முறை கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும். பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும். பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக…
-
- 5 replies
- 4.4k views
-
-
காடை முட்டை குழம்பு கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காடை முட்டை - 20 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 2 (அரைத்தது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் …
-
- 11 replies
- 4.4k views
-
-
இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…
-
- 9 replies
- 4.3k views
-
-
தேவையான பொருட்கள் சீனி 250g மா 250g மாஜரின் 250g ரின் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை 4 மே.க பேக்கிங் பவுடர் 1 மே.க. தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும். 3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். 5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி ப…
-
- 5 replies
- 4.3k views
-
-
பல விதமான நாசி கோரிங் செய்யும் பழக்கத்தில் நானே உருவாக்கிய செய்முறை இது. சுவையாகவும், அதே சமயம் இலகுவில் சமைக்க கூடியதாகவும் இருக்கும். இனி செய்முறை: தேவையான பொருட்கள்: சாதம் 1 கப் வெள்ளை பூண்டு + இஞ்சி விழுது 1 மே.க அரைத்த செத்தல் மிளகாய் விழுது / Hot Chilli Paste 1 மே.க ஸ்ப்ரிங் ஒனியன் 1/4 கப் [நறுக்கியது] நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 [சின்னது] முட்டை பொரியல் [தோசை தட்டில் போட்டு எடுத்து சிறிதாக வெட்டி எடுக்கவும்] சோய் சோஸ் 1 மே.க உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1. சட்டியில் எண்ணையை சூடாக்கி வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2. பூண்டு+ இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3. பின்னர் மிளகாய் விழுதையும்,…
-
- 11 replies
- 4.3k views
-
-
சைவ மீன் குழம்பு ( புரட்டாசி மாத ஸ்பெசல் ) தேவையான பொருட்கள் சைவ மீன் செய்ய தட்டை பயறு / காராமணி 1 கப் பூண்டு 7 பற்கள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா 1/2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு வேர்கடலை எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு மீன் குழம்பு செய்ய சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது ) பூண்டு 20 பற்கள் ( விழுதாக அரைத்தது ) புளி - எலுமிச்சைபழ அளவு ( சுடு தண்ணீரில் ஊற வைக்கவும் ) பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கியது ) மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி தேங்காய் பால் 1 கப் சாம்பார் தூள் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி …
-
- 7 replies
- 4.3k views
-
-
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வக…
-
- 3 replies
- 4.3k views
-
-
Please like and share this video also subscribe to my channel to support. Thanks
-
- 42 replies
- 4.3k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. தேவையான பொருட்கள்: சிவப்புபச்சை அரிசி - 1 பேணி நீர் - 2 பேணி தேங்காய் பால் - 1 பேணி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. அரிசியை கழுவி 2 பேணி நீரில் அவியவிடவும். 2. அரிசி அரைவாசி அவிந்ததும் பாலையும் உப்பையும் சேர்த்து நன்றாக காய…
-
- 12 replies
- 4.3k views
-
-
கொத்து ரொட்டி இது இலங்கையில் பிரபலமான உணவு.அசைவம், சைவம் இரு வகைகளிலும் செய்வார்கள். தேவையானப் பொருட்கள் ரொட்டிக்கு: =========== கோதுமை மா/மைதா மா - 3 கப் பட்டர்மில்க் - 1/2 கப் உப்பு பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி பிரட்டலுக்கு: ============= உருளைக்கிழங்கு - 3 சிறியது தக்காளி - 2 சிறியது வெட்டிய கோஸ்,கரட் கலவை - 1 கப் வெட்டிய காலிஃபிளவர் - 1/2 கப் ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப் அவித்த கடலை - 1 கப் வெங்காயம் - 1 பெரியது உள்ளி - 15 பல்லுகள் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1" துண்டு கராம்பு - 4 ஏலம் - 3 கறுவா - 2" துண்டு கடுகு பெரிய சீரகம் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சாம்பார் தூள் - 1 தேக்க…
-
- 3 replies
- 4.3k views
-
-
காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி? எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்) மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு வினிகர் - 1/2 கப் உப்பு - தேவை…
-
- 20 replies
- 4.3k views
-
-
தேவைபடும் பொருட்கள்: கரட் 200 கிராம் தக்காளிப்ழம் 2 வெள்ளரிகாய் 1 குடை மிளகாய் 1 எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி மல்லி இலை (நறுக்கியது ) 1 மேசை கரண்டி உப்பு கடுகு அரைப்பு சிறிதளவு செய்முறை :கரட்டை துருவவும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும் மிளகாயை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும் சாப்பிடப் போகும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிளறி சுவைக்கவும்!! நன்றி சமையல் குறிப்பு புத்தகம்!! பி.கு- உடல் ஆரொக்கியதிற்கும்,கண் பார்வை சக்தி அதிகரிபதிற்கும் மிகவும் நல்ல உணவு இந்த கரட் சலாட்!! அப்ப நான் வரட்டா!!
-
- 13 replies
- 4.2k views
-
-
கரட் சட்ணி இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன்பேர்வழி என்று சுட்டது தேவையான சாமான்கள் : கரட் கால் கிலோ . செத்தல் மிளகாய் 6 . பழப் புளி (தேவையான அளவு ). கறிவேப்பமிலை 1 நெட்டு . வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி . கொத்த மல்லி 2 கரண்டி . தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) . கடுகு , உளுந்து அரைக் கரண்டி . எண்ணை கால் ரம்ளர் . ** கரண்டி = தேக்கரண்டி . செய்மறை: ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் . கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை …
-
- 30 replies
- 4.2k views
-
-
மிகவும் சிம்பிளான முட்டை இல்லாத கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம். இங்கு அடுப்பிலேயே எப்படி எக்லெஸ் கேக் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப் சர்க்கரை பொடி - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள்…
-
- 2 replies
- 4.2k views
-
-
நெருப்புக்கோழி முட்டைக்கு இங்கிலாந்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. பறவைகளிலேயே நெருப்புக் கோழியின் முட்டைதான் மிகவும் பெரியது. ஒரு கோழி முட்டையைக் காட்டிலும் 24 மடங்கு பெரியது நெருப்புக் கோழி முட்டை. அரை அடி உயரம், ஒன்றரை அடி சுற்றளவு கொண்ட இந்த முட்டை சுமார் 2 கிலோ எடை கொண்டது. இதன் விலை 19.95 பவுண்டுகள்; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய். இந்த முட்டையின் ஆம்லெட் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். ஒரு நெருப்புக் கோழி முட்டையில் 15 பேருக்கு ஆம்லெட் தயாரிக்கலாம். கோழி, வாத்து முட்டையைக் காட்டிலும் இதற்கு ருசி அதிகம் என்பதால், குழந்தைகள் இதனை ஒரு பிடி பிடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முட்டையை அவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். இதனை டிரில்லிங் மிஷினால் துளைத்…
-
- 5 replies
- 4.2k views
-
-
சிக்கன் கறி. தேவையான பொருட்கள். *1 கிலோ கோழி இறைச்சி *3 பெரிய வெங்காயம் *5 பல் பூண்டு *2தக்காளிப்பழம் *1 மேசைக்கரண்டி மிளகாத்தூள் *1 தேக்கரண்டி மசலாத்தூள் *3 தேக்கரண்டி தயிர் *இஞ்சி சிறியதுண்டு *தேவையான அளவு எண்ணெய் *தேவையான அளவு உப்பு. செய்முறை. கோழியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ளவும். தயிரைக் நன்றாக கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். பின்பு அதனுடன், அரைத்த இஞ்சி பூண்டையும் சேர்த்து வதைக்கிக் கொள்ளவும். பின் கோழி இறைச்சி, தயி…
-
- 1 reply
- 4.2k views
-
-
இந்த பிட்டு பற்றிய சமையல் குறிப்பை முன்னர் யாழில் இணைத்தெனா தெரியவில்லை?? இந்த செய்முறை 2 பேருக்கு போதுமானது. 250 கிராம் Couscous ஐ எடுத்து எடுத்து உங்கள் சுவைக்கேற்ப உப்பை கலந்து பின் மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் பரவிவிடுங்கள். நன்கு கொதித்த சுடு நீரை பாத்திரத்தில் Couscous இனை மூடி, ஒரு சென்ரி மீற்றர் உயரத்திற்கு சேருங்கள். பாத்திரத்தை இறுக்கமாக மூடி 5 - 6 நிமிடங்கள் வையுங்கள். இப்போது Couscous சுடு நீரில் வெந்து நீங்கள் இட்டதை போல் 3 மடங்கிற்கு வந்திருக்கும். அவிந்த Couscous இற்கு துருவிய தேங்காய்/ உலர்ந்த தேங்காய் துருவலை கலந்து அப்படியே கறி/ கூட்டு/ பொரியல் போன்றவற்றுடன் உண்ணலாம். அல்லது புட்டு அவிக்கும் க…
-
- 4 replies
- 4.2k views
-
-
இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…
-
- 9 replies
- 4.2k views
-
-
தமிழ்நாட்டில் காரக்குழம்பு என்றாலே அது முருங்கைக்காய் காரக் குழம்பு தான். அந்த குழம்பை அனைத்து வீடுகளிலும் பண்டிகையின் போது செய்வார்கள். அத்தகைய முருங்கைக்காய் காரக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]முருங்கைகாய் - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் புளி கரைசல் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் வாணலியை அடுப்பில் வைத்து …
-
- 3 replies
- 4.2k views
-
-
இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….? June 19, 20151:29 pm இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும். ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு. ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்…
-
- 29 replies
- 4.2k views
-
-
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்: (2 - பேருக்கு) இன்ஜி - 1/2 விரல் நீளம் பூண்டு - 1 பல்லு பச்சைமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு புளி - 1 துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி கருவேப்பில்லை - 5 இலைகள் கடுகு - 1/2 தேக்கரண்டி சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமைக்கும் முறைகள்: வாணலியை அடுப்பில் வைக்கவும். எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும். இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும். ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியி…
-
- 5 replies
- 4.2k views
-