நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கையுக்கு கிளவுஸ், சவரம் செய்யப்பட்ட முகம், அழுக்கில்லாத நேர்த்தியான உடை ,காட்டு கத்தல்கள் இல்லாத அமைதியான சேவை .. அதனாலதான் வெள்ளைக்காரிகளும் விரும்புகின்றனரோ? மனிதனுக்கு தேவை முதலில் சுத்தம் சுத்தம் சுத்தம்... தரம் எங்கிருந்தாலும் பாராட்டியே ஆகவேண்டும்... ஸ்ரீலங்காவின் தெருவோர கொத்துரொட்டி!
-
- 3 replies
- 1.4k views
-
-
சிக்கன் கருவேப்பிலை ப்ரை சிக்கன்- அரை கிலோ கருவேப்பிலை -2 கொத்து வர மிளகாய் – 5. மிளகு -1 ஸ்பூன் கடலை பருப்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு. பூண்டு – சிறிது அளவு. உப்பு -தேவையான அளவு. எண்ணெய் -தேவையான அளவு. கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன். முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும். வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவ…
-
- 2 replies
- 773 views
-
-
கொங்கு நாட்டு கோழி குழம்பு நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வதக்கி அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 5-6 மிளகாய் - 6-7 மிளகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் …
-
- 0 replies
- 682 views
-
-
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.சமீப காலமா…
-
- 0 replies
- 479 views
-
-
-
- 10 replies
- 678 views
-
-
குடல் – ஒன்று வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 பச்சைமிளகாய் – 4 பூண்டு – 8 பல் இஞ்சி – அரை இன்ச் அளவு சோம்பு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி தேங்காய் – அரை மூடி புளி – பாக்களவு எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை – ஒன்று கிராம்பு – ஒன்று இலை – சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெ…
-
- 10 replies
- 7.2k views
-
-
குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 1 துண்டு கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1…
-
- 0 replies
- 536 views
-
-
வாழைப்பூ வடை தேவையானவை : வாழைப்பூ - சிறியது ஒன்று கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு இஞ்சி - ஒரு சிறுத் துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரித்தெடுக கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந…
-
- 25 replies
- 4.1k views
-
-
யாழ்ப்பாணத்து மீன் குழம்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள்.ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும். மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள் வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம் உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம் கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4 யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு உப்பு – தேவையான அளவு பழப்புளிக் கரைசல் – 1 கப் தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒ…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
மரக்கறி/மீன் ரொட்டி 500 கிராம் வெள்ளை கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய் 4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின் நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பி…
-
- 20 replies
- 4.7k views
-
-
தேவையான பொருட்கள் : கூந்தள் மீன் - ஒரு கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 8 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும். 2.மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியி…
-
- 0 replies
- 589 views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் ஊறவைக்க சிக்கன் 300 கிராம் ( எலும்பில்லாத நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ள வேண்டும் ) தயிர் 4 மேஜைகரண்டி ( புளிக்காதது ) உப்புத்தூள் கொஞ்சம் மிளகு தூள் 5 சிட்டிகை தாளிக்க எண்ணெய் 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை 1 கொத்து வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது ) சீரகம் 1/4 தேக்கரண்டி சில்லி கார்லிக் சாஸ் செய்ய வரமிளகாய் 5 பூண்டு பற்கள் 5 ( நன்றாக நசுக்கியது ) எலுமிச்சை பழச்சாறு 1 மேஜைக்கரண்டி சர்க்கரை 1/4 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் 30 மில்லி கொத்தமல்லி இலைகள் கொஞ்ச தூவி விட செய்முறை 1. தயிர், உப்பு, மிளகு தூள் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். 2. சிக்கனை க…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 655 views
-
-
இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்
-
- 8 replies
- 3.9k views
-
-
யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா! ஆசியாவில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வீடியோக்களில் ஒன்று, நிஷா மதுலிகாவின் சமையல் குறிப்பு பற்றிய வீடியோ. பல மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இவரது சமையல் வீடியோக்களைப் பார்த்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் சந்தா செலுத்தி இவர் தரும் சமையல் குறிப்புகளை பார்த்துவருகிறார்கள். நிஷாவின் சிறப்பு... பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சைவ உணவு ரெசிப்பிக்களை மட்டுமே பதிவிடுவது! டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் வசிக்கிறார் நிஷா. ‘’என் கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். அதிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2007-ம் ஆண்டில் ஒரு பிளாக் ஆரம்பித்து, நான் சிறப்பாகச் செய்வதாக நினைத்த சில சமையல்களின் செய்…
-
- 0 replies
- 795 views
-
-
அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்... தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 200 கிராம் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொ…
-
- 0 replies
- 688 views
-
-
-
கத்தரிக்காய் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 200 கிராம் கத்தரிக்காய் - கால் கிலோ மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன் லவங்கம் - 4 நெய் - 3 டீஸ்பூன் பட்டை - சிறு துண்டு ஏலக்காய் - 3 பிரியாணி இலை - 1 வெங்காயம் - 1 தக்காளி - 2 தயிர் - 1 கரண்டி நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கத்தரிக்காயில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் குழைத்துப் பூசி அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதம் வேகவிட்டு, வடித்துக் கொள்ளவும். குக்கரில் நெய்ய…
-
- 2 replies
- 2.1k views
-
-
மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…
-
- 9 replies
- 4.7k views
-
-
-
- 22 replies
- 3.1k views
-
-
ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒன்னரை கப் நறுக்கிய பலாக்காய் - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 1 தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா - ஒன்னரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 புதினா இலைகள் - 15 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைக்க: முந்திரி - 8 பட்டை - ஒரு இஞ்ச் துண்டு கிராம்பு - 2 பூண்டு - 8 பல் இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு தாளிக்க: எண்ணெய்/நெய் - 5 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 ஏலக்காய் - 2 சீரகம் - 2 டீஸ்பூன் செய்முறை: பாஸ்மதி …
-
- 1 reply
- 676 views
-
-
மசால் வடை மசால் வடை இது பெரும்பாலும் காலை உணவுகளான பொங்கல்... பூரி ...இட்லி..... வகைகளோடு இணைத்து வழங்கபடுவது.... தேவையானப் பொருட்கள்: கடலைப்பருப்பு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 அல்லது 3 காய்ந்த மிளகாய் - 1 இஞ்சி - ஒரு சிறுத்துண்டு கறிவேப்பிலை - சிறிது தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - பொரிப்பதற்கு செய்முறை: கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப…
-
- 5 replies
- 2.2k views
-
-
பருத்திப்பால் வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்! மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….? June 19, 20151:29 pm இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும். ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு. ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்…
-
- 29 replies
- 4.2k views
-