நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா. என்னென்ன தேவை? நண்டு கால்கள் குறைந்தது 10 ரசப் பொடி - மூன்று டீஸ்பூன் புளி, எலுமிச்சை - தேவையான அளவு பூண்டு - 1 மஞ்சள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்யவும். பின்னர் அம்மிக்கல் அல்லது மத்தில் வைத்து ஓடுகள் உட…
-
- 10 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=XudEBUi4yZc
-
- 0 replies
- 730 views
-
-
தேவையான பொருட்கள் சீனி 250g மா 250g மாஜரின் 250g ரின் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை 4 மே.க பேக்கிங் பவுடர் 1 மே.க. தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும். 3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். 5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி ப…
-
- 5 replies
- 4.3k views
-
-
கோழி பிரியாணி https://www.facebook.com/video/video.php?v=1515999891973575
-
- 2 replies
- 780 views
-
-
தேவையான பொருட்கள்: 2 கப் கோதுமை மாவு. 2 கப் சமொலினா தானிய மாவு. கொழுப்பற்ர மாஜரின். ஒலிவ் ஒயில். சோயா ருபூ. கத்தரிக்காய். கீரை. பெரிய மிளகாய். காளான். உப்பு. உள்ளி. அரைத்த செத்தல் மிளகாய் . http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0
-
- 21 replies
- 6.3k views
-
-
-
வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாட…
-
- 15 replies
- 8.2k views
-
-
தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…
-
- 4 replies
- 2.7k views
-
-
கோழி ரசம்! தேவையானவை: எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கி அரைக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு தக்காளி - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு வரமிளகாய் - 3 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி இடிக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 பல் தாளிக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி …
-
- 1 reply
- 1.7k views
-
-
தேவையானவை க்ரீம் செய்ய: பால் - அரை லிட்டர் கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்) மைதா - 2 தேக்கரண்டி ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி சீனி - 50 கிராம் வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி கடல்பாசி செய்ய: கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்) சீனி - 4 மேசைக்கரண்டி ஃபுட் கலர் - சில துளிகள் வெனிலா எசன்ஸ் - ஒரு துளி கிவி பழம் - ஒன்று செய்முறை க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பேரிச்சம் பழம் - 10 வாழைப்பழம் - 4 - 5 வெல்லம் - அரை கப் கல்கண்டு - கால் கப் உலர்ந்த திராட்சை - 10 சூடம் - சிறிய துண்டு தேன் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி…
-
- 3 replies
- 2.3k views
-
-
இறால் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப் தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் - கால் கப் ஏலக்காய் - 2 சோம்பு - கால் தேக்கரண்டி பட்டை - ஒன்று கிராம்பு - 3 பிரிஞ்சி இலை - பாதி கல் உப்பு - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவு…
-
- 1 reply
- 789 views
-
-
தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 2 குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள…
-
- 0 replies
- 931 views
-
-
தோசைக்கறி. https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg தேவையான பொருட்கள்: --- கத்தரிக்காய் _________________________ 200 கி. --- வெங்காயம் __________________________ 01 பெரிது. --- பச்சைமிளகாய் _______________________ 4 , 5 . --- கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி ____ தேவையான அளவு. --- தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________ 01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.) --- இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் …
-
- 13 replies
- 2.6k views
-
-
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a தேவையான சாமான்கள். --- வறுத்த உளுத்தம் மா _______________ அரை சுண்டு. --- சிவப்பு அரிசி மா ___________________ 1 சுண்டு. --- வறுத்த பயறு ______________________ காற் சுண்டு. --- தேங்காய்ப் பால் ____________________ அரை லிட்டர். --- சீனி _______________________________ 250 கிராம். --- உப்பு ______________________________ தேவையான அளவு. சுமாராக 6 , 8 . பேருக்கு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி ம…
-
- 12 replies
- 2.7k views
-
-
தேவையானவை மட்டன் -1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன் தனியா பொடி - 1ஸ்பூன் வெந்தயம் - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு-1 ஸ்பூன் க.மிளகாய்-3 இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 1ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 1 தனியா - 1 ஸ்பூன் க.மிளகாய்-2 ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும். ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும். கடாய…
-
- 0 replies
- 2.6k views
-
-
தேவையான பொருட்கள் ரவை - 2 கப் தயிர் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 இஞ்சி - 1 துண்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - சிறிது பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணை - சிறிது செய்யும் முறை ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைக் கொட்டி அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனை ரவையில் கொட்டவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். ஊ…
-
- 24 replies
- 3.9k views
-
-
தேவையானவை நண்டு – அரை கிலோ வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் – 3 கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி பால் – கால் கப் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு ப…
-
- 4 replies
- 949 views
-
-
ரைஸ் புடிங் தேவையானவை: அரிசி முக்கால் கப் பால் இரண்டு கப் சர்க்கரை இரண்டே கால் கப் உப்பு கால் டீஸ்பூன் முட்டை ஒன்று நன்றாக அடித்தது உலர்ந்த திராட்சை முக்கால் கப் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் வனிலா எசன்ஸ் அரை டீஸ்பூன் செய்முறை: கடாயில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கி விட்டு மூடி, மிதமான தீயில் இருபது நிமிடம் வேக வைக்கவும். சாதம் நன்றாகக் குழைய வேண்டும். இதனுடன் ஒன்றரை கப்…
-
- 1 reply
- 778 views
-
-
முக்கிய குறிப்பு: இது என்னால் இணைக்கப்படுகிறதே தவிர இந்தச் சமையல் முறைக்கு நான் பொறுப்பல்ல!! தேவையன பொருட்கள் வெள்ளை ரவை - 500 கிராம் பெரிய வெங்காயம் - 3 கேரட் - 1 இஞ்சி - சிறிதளவு பச்சைமிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு எண்ணெய் – தேவையான அளவு நெய் - 3 தேக்கரண்டி தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக்…
-
- 0 replies
- 850 views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டா மா - 2 சுண்டு குளிர்ந்த நீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தயாரிக்கும் முறை: ஆட்டா மாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து குளிர் நீர் விட்டு குழைத்து வைக்க வேண்டும் குழைத்து வைத்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும் வாணலியில் (தாச்சியில்) எண்ணையைக் சூடாக்கி வைத்து; ஏற்கனவே தட்டி வைத்த பூரிகளை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 2 சுண்டு ஆட்டா மாவில் 12 முதல் 14 பூரிகள் வரை தயாரிக்கலாம். பூரியை உருளைக்கிழங்குப் பிரட்டல் கறி, கடலைக் கறி ஆகியவற்றுடன் சாப்பிடலாம். குறிப்பு: பூரி செய்யும் போது சிறிது மைதா மாவு, 1 தேக்கரண்டி ரவையை சேர்த்து செ…
-
- 8 replies
- 1.3k views
-
-
தே.பொருட்கள்: சுறாமீன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 பெரியது பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லித்தழை -சிறிது மஞ்சள்தூள் – 1சிட்டிகை மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு பூண்டுப்பல் -5 இஞ்சி – சிறுத்துண்டு தாளிக்க: கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : *சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும். *வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் ) *பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். *வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும். *கடாயில் எண்ணெய் …
-
- 4 replies
- 1.1k views
-
-
தேவையானப் பொருட்கள் : பிரட்: 1 பாக்கெட் பெரிய வெங்காயம்: பொடியாக நறுக்கியது சிறதளவு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு எண்ணெய்: 1/4 லிட்டர் செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து, அத்துடன் இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். பின் உதிர்த்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி ஆறவிடவும். சூடு ஆறியதும் எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும். பிரட் துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்துவிட்டு அதில் மசால் உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை நான்கைந்தாக போட்டு எண்ணெயில் ப…
-
- 2 replies
- 539 views
-
-
தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%…
-
- 1 reply
- 674 views
-
-
வடித்த சாதம் - 3 கப் வெங்காயம் - 3 தக்காளி - ஒன்று மிளகு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 பூண்டு - 20 பற்கள் உப்பு - அரை மேசைக்கரண்டி கேரட் - 3 எண்ணெய் - அரை கப் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து…
-
- 1 reply
- 784 views
-